துவக்கப்பள்ளிகளில் உபரி ஆசிரியர்கள்காலிப்பணியிடங்களில் நிரப்ப முடிவு
விருதுநகர்:தமிழகம் முழுவதும் பள்ளிகளில் உபரியாக உள்ள ஆசிரியர்களை, காலிப்பணியிடங்களில் நிரப்ப அரசு முடிவு செய்துள்ளது.
ஒவ்வொரு பள்ளியிலும் உள்ள உபரி ஆசிரியர்களை, காலிப்பணியிடங்களில் நியமனம் செய்ய தொடக்ககல்வித்துறை முடிவு செய்துள்ளது. தனியார் அரசு உதவி பெறும் பள்ளிகளில், உபரியாக உள்ள ஆசிரியர்கள், தனியார் பள்ளிகளில் நியமிக்கப்படவுள்ளனர். அரசு பள்ளிகளில் ஏற்படும் காலிப்பணியிடங்களில், உபரி ஆசிரியர்களே பணி மாறுதல் பெற்று செல்கின்றனர். மேலும் தொடக்க கல்வித்துறை இது போன்ற பணியிடங்களில் அதிக மாணவர்கள் விகிதாச்சாரத்தின் படி பணி மாறுதல் செய்ய முடிவு செய்துள்ளது.
ஓராசிரியர் பள்ளி இல்லை: அனைத்து பள்ளிகளிலும் இரண்டுக்கு மேற்பட்ட ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் ஒருவர் பணிக்கு வரவில்லை என்றாலும், அவரது பணியை, அடுத்த ஆசிரியர் கவனிக்கும் பொருட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அப்படியே மற்றொரு ஆசிரியரும் விடுமுறையில் சென்றால் உபரி ஆசிரியர்களை அந்த பள்ளிக்கு மாற்று பணியாக அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் ஆசிரியர்கள் இல்லை என்ற நிலை இல்லாமல், பள்ளிகள் முழுமையாக இயங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Monday 08 Feb 2010 | கல்வி