சுய தொழில் தொடங்கும் இளைஞர்களுக்கு ரூ. 5 லட்சம் கடன் – தமிழக அரசின் புதிய திட்டம்

சென்னை: வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் புதிதாக தொழில் தொடங்க 15 சதவீத மானியத்துடன் ரூ.5 லட்சம் வரை கடன் வழங்கும் புதிய திட்டம் இந்த நிதியாண்டிலிருந்து செயல்படுத்தப்படுகிறது.

சட்டப் பேரவையில் இத்தகவை ஊரகத் தொழில் துறை அமைச்சர் பொங்கலூர் நா.பழனிச்சாமி புதன்கிழமை தெரிவித்தார்.

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் பேரவையில் நேற்று நடைபெற்றது.

விவாதத்துக்குப் பதிலளித்து பேசிய அமைச்சர் கூறியது:

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு சுய வேலைவாய்ப்பு வழங்கும் வகையிலும், சமுதாயத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள மக்கள் பயன்பெறும் வகையிலும் வேலையில்லா இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் புதிய திட்டம் நடப்பாண்டு முதல் செயல்படுத்தப்பட உள்ளது.

வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உற்பத்தி அல்லது சேவை, வணிகம் சார்ந்த தொழில்களைத் தொடங்க விரும்பினால், அவர்களுக்கு 15 சதவீத மானியத்துடன் அதிகபட்சமாக ரூ.5 லட்சம் வரை வங்கிகள் மூலமாக கடன் உதவி வழங்கப்படும்.

இந்தத் திட்டத்தின் மூலம் ரூ.100 கோடியில் 10 ஆயிரம் பேருக்கு சுய வேலைவாய்ப்பு உருவாக்கப்படும்.

கூடுதலாக 15 தொழில்கள் சேர்ப்பு: தமிழ்நாடு [^] அரசின் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் கொள்கை 2008-ன் படி, மானியம் பெற தகுதியான தொழில்கள் விவரம்:

பாப்கார்ன் மற்றும் ஐஸ்கிரீம் தயாரித்தல், கலப்பு உரம் தயாரித்தல், ஜவுளி ஆலைகள் (நூற்பாலை மற்றும் பின்னலாடை உள்பட), மாவு அரைவு தொழில், உணவு விடுதிகள், சமையல் எண்ணெய் மற்றும் கரைப்பான்கள் உபயோகித்து எண்ணெய் பிரித்தெடுத்தல், அரிசி ஆலை, வெல்லம் தயாரித்தல், போட்டோ எடுத்தல் மற்றும் கலர் போட்டோ தயாரித்தல், ஒளி அச்சு நகல் எடுத்தல், மின் சலவை தொழில், செங்கல் தொழில் (சிமென்ட் ஹாலோ பிளாக், இயந்திரங்கள் மற்றும் நிலக்கரி சாம்பலில் இருந்து தயாரிக்கப்படும் செங்கல் தவிர), காபிக் கொட்டை வறுத்தல் மற்றும் அரைத்தல், கடிகாரம் பழுதுபார்த்தல், ஒளி மற்றும் ஒலி நாடா பதிவு செய்தல் ஆகிய தொழில்கள் மானியம் பெற தகுதியான தொழில்களாக மாற்றியமைக்கப்படும்.

இப்போது இந்தத் தொழில்கள் மானியம் பெற தகுதியற்ற தொழில்களின் பட்டியலில் உள்ளன.

வேலைவாய்ப்பு முகாம்கள்: தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழில் திறன் படைத்தோர் ஆகியோரை ஒருங்கிணைத்து, ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்டத் தொழில் மையங்கள் மூலம் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்படும்.

புதிய நிறுவனங்கள் மானியங்களைப் பெற உற்பத்தி தொடங்கிய நாளிலிருந்து 6 மாதங்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என உள்ளது. சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் சங்கங்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று, இந்த விண்ணப்ப கால அளவு 6 மாதத்திலிருந்து ஓர் ஆண்டாக உயர்த்தப்படும்… என்றார் அமைச்சர்.

டாம்கோ திட்டத்தின் கீழ் 200 ஆட்டோக்கள்

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழக (டாம்கோ) திட்டத்தின் கீழ், ஆட்டோ தொழில் கூட்டுறவு சங்கங்களின் மூலமாக சிறுபான்மையின உறுப்பினர்களுக்கு ரூ.2.5 கோடி மதிப்பீட்டில் 200 ஆட்டோக்கள் கொள்முதல் செய்து வழங்கப்படும்.

இந்தத் திட்டம் தாய்கோ வங்கி மூலம் செயல்படுத்தப்படும் என்றும் அறிவித்தார் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி.

Source & Thanks : thatstamil.com

129 comments on “சுய தொழில் தொடங்கும் இளைஞர்களுக்கு ரூ. 5 லட்சம் கடன் – தமிழக அரசின் புதிய திட்டம்
 1. sir naan படித்த பையன் சிறு வயதில் இருந்தே தொழில் செய்ய அசை atharkana ஆலோசனை எங்கு kepadu

 2. சிறு தொழில் துவங்க விரும்புகிரன் அதற்கு பணம் இல்லாததால் லோன் தேவைபடுகிறது , அதற்கு நான் யாரை சந்திக்கணும் என்று கூறுங்கள் நன்றி.

 3. சார். சிறு தொழில் தொடகு வதற்கான தகுதிகள் மற்றும் வலி முறைகள் சொல்லுங்க சார் ப்ளீஸ் ..

 4. சார் சிறு தொழில்கள் தொடங்குவதற்கான வழிமுறைகள் மற்றும் சிறு தொழில் தொடங்க எங்கு லோன் கிடைக்கும்

 5. நான் mba படிக்கிறேன் என்ன தொழில் செய்தல் முன்னேறமுடியும் உதவி செய்யுங்கள்

 6. டியர் சார்
  என் பெயர் முருகேஷ் நன் உணமுற்றவன் நன் நாமக்கலில் வசிக்கிறேன் சிறு தொழில் செய்ய ஆசை தயவு குர்து உதவி செயவும் செல் 08527436816

 7. டியர் சார் யாம் எ டிப்ளோம ஹோல்டர் i வான்ட் ஒன் SMALL பிசினஸ் operchunitie please CONTACT MY MAIL ID

 8. சார் , எனக்கு சிறு தொழில் பற்றிய தகவல்களையும் அதை தொடங்குவதற்கான வழிமுறைகளையும், அதற்கு அரசாங்கம் புரியும் சலுகைகளையும் பற்றி தயவு செய்து கூருமாரு தங்களை மிகவும் பணிவுடன் கேட்டுகொள்கிறேன் . நன்றி .

 9. சுய தொழில் செய்ய விருப்பமுள்ளவர்கள் மற்றும் பண்ணை சார்ந்த தொழில் செய்ய விருப்பமுள்ளவர்கள் மற்றம் இவைகளுக்கு வங்கி கடன் பெற்று பயனடைய விரும்புவோகள் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் – 9786077610

 10. அய்யா சிறு தொழில் தொடங்க கடன் கிடைக்குமா நான் உடல் ஊனமுற்றோர் எனக்கு வழிகாட்டுங்கள்.I DME

 11. சார்,
  எனக்கு மருந்து கடை வைக்க ஆசை
  நீங்கள் எனக்கு உதவ வேண்டும்

 12. dear sir /madam
  thanks for ur information and provided website service . am post graduate. am working asst.professor one of the collage in tamilnadu. coming year am thinking stat the busnicess so you will give me buying loan information where and which place getting sir ,

 13. dear sir /madam
  thanks for ur information and provided website service . am post graduate. am working asst.professor one of the collage in tamilnadu. coming year am thinking stat the busnicess so you will give me buying loan information where and which place getting sir

 14. ஹலோ சார் நான் மிகவும் பிற்படுதபட்டவன் தaavu செய்து கடன் பற்றிய விவரத்தை கோரவும்,

 15. சார் என் பெயர் தர்மராஜ் நான் ELECTRONICS சர்வீஸ் மற்றும் ELECTRONICS சாதனங்கள் விற்பனை கடை துவங்க உள்ளேன்,நான் ITI ELECTRONICS படித்துள்ளேன் எனக்கு சுய தொழில் தொடங்க Loan கிடைக்குமா அதற்கு யாரிடம் அணுக வேண்டும்.

 16. அய்யா வணக்கம்
  நான் சிறிய அளவில் போட்டோ ஸ்டுடியோ வைத்துள்ளேன் அதனை சற்று விரிவு படுத்த எனக்கு கடன் வசதி கிடைக்குமா? அப்படி கிடைக்குமானால் அதனை நான் எங்கு பெறுவது?
  அதற்கான வழிமுறைகள் என்ன?
  மேலும் நான் MBC வகுப்பினை சார்ந்தவன்.
  இதன் அடிப்படையில் எங்கு கடன் வசதி பெற முடியமென விளக்குங்கள்.
  நன்றி

 17. iyya, எனக்கு உற்பத்தி சார்ந்த தொழிலில் அரவம் உண்டு. அனல் என்னிடம் பண வசதி இல்லை.இதற்க்கு லோன் எங்கு கிடைக்கும்.எப்படி பெறுவது என்ற தகவலை தயவு செய்து தாருங்கள்.என் செல் நம்பர் 8940708094

 18. Dear sir/madam
  i want to start a new Printing Press Company. I have been 6 years experienced in these Graphic Designing field. Please reply me how to get a loan from government.
  Thankyou so much.

 19. மாண்பு மிகு ஊரக தொழில் துறை அமைச்சர் ஐயா அவர்களுக்கு முதலில் என்னுடைய நன்றியை தெரிவித்து கொள்கிறேன்
  மாண்பு மிகு அமைச்சர் அய்யா ; அவர்களே நான் ஒரு ஆதி திராவிடர் பறையர் இனத்தை சேர்ந்தவன் எனக்கு டி கப் தொழிலில் மிகுந்த ஆர்வம் உண்டு ஆர்வத்துடன் இருக்கிறேன் ஆனால் தொழில் தொடங்கும் அளவிற்கு என்னிடம் பணவசதியும் இல்லை என்னிடம் இருப்பதோ ஒரு அரசாங்கம் கட்டிகொடுத்த ஒரு வீடு இருக்கிறது வேறு பண வசதியோ அல்லது இடவசதியோ என்னிடம் இல்லை அய்யா அதனால் மாண்பு மிகு அமைச்சர் அய்யாவிடம் நான் மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்வது என்னவென்றால் மாண்புமிகு முதலமைச்சர் புரட்சி தலைவி அம்மா அவர்களின் ஆட்சியில்தான் நான் இந்த என்னுடைய கோரிக்கையை முன் வைக்க ஆசைப்பட்டேன் அதுபோல் ஆட்சி நடக்கிறது ஆட்சி நடப்பது போல் என்னுடைய தொழிலையும் எனக்கு கண்ண்டிப்பாக தருவீர்கள் என்று மிகவும் உறுதியாக இருக்கிறேன் எனக்கு தொழில் செய்வதற்கு வங்கி கடனும் கண்ண்டிப்பாக கிடைக்கும் என்ற எண்ணத்தோடு உறுதியாக என்றும் இருப்பேன் ……இப்படிக்கு .ப .சுரேந்தர்
  எனக்கு வழிகாட்டுங்கள்

 20. சார் நான் சுரேந்தர்
  வணக்கம்
  கண்ணாடி வேலை துபாயில் பார்த்தேன்
  அந்த வேலையீன் விவரம்
  வீடு ஜன்னல் அல்லது கதவு
  கண்ணாடியல் டிசென் பண்ணுவது
  பேர் எழுதுவது இந்த வேலை செய்ய லோன் கிடைக்க
  வலிகூறுங்கள்

 21. ayya nan ilankalai pattathari. enakku paper cup and maligai katai vaikkanu aasai please help 8012435670

 22. i need loan for start computer center.. i’m from tiruppur dt.. what r the procedures & formalities.. will pay for an initial amount? please contact me sir.. 8883108889

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>