Category Archives: தமிழகம்

செப்டம்பர் 5: கப்பலோட்டிய தமிழன், செக்கிழுத்த செம்மல் வ.உ.சி பிறந்தநாள் சிறப்பு பகிர்வு..

‘கப்பலோட்டிய தமிழன்’வள்ளிநாயகம் உலகநாத சிதம்பரம் பிள்ளை பிறந்த தினம் இன்று. விடுதலைப்போரில் தமிழகம் காலத்துக்கும் உச்சரிக்க வேண்டிய பெயர்களில் முன்னணியில் இருப்பது இவரின் பணிகள். வக்கீல் தொழிலில் பெரும்பொருள் ஈட்டிக்கொண்டு இருந்தார் அவர். குற்றவியல் வழக்குகளில் வ.உ.சி உள்ளே நுழைகிறார் என்றால் நீதிமன்றமே ஆடிப்போகும். எளியவர்களுக்கு இலவசமாக வாதிடுகிற பண்பும் அவரிடம் நிறைந்து இருந்தது.

‘அய்யா.. நான் வ உ சி பேரன்!’

சென்னை: என் தேசம் விடுதலை பெற்று 67 ஆண்டுகள் ஆகிவிட்டன. இதன் மலர்ச்சி வளர்ச்சி என்று மார் தட்டுகிறோமே, இதன் பலனை யார் அனுபவிக்கிறார்கள். இந்தக் கேள்விக்கு பதில்என்ன ?, என்று கேள்வி எழுப்பியுள்ளார் சகாயம் ஐஏஎஸ். மனுக்கண்ணன் தயாரித்து இயக்கியுள்ள அங்குசம் என்ற திரைப்படத்தின் பத்திரிகையாளர் காட்சி நேற்று ஆர்கேவி ஸ்டுடியோவில் நடந்தது. தமிழ்த் தாய் வாழ்த்துடன் ஆரம்பித்த இந்தக் காட்சி, தேசிய கீதம் இசைத்த பிறகு முடிந்தது. படம் முடிந்ததுமே, அங்குசம் படக்குழுவினர் பெருமையுடன்… Read More »

கோ ஆப்டெக்ஸை சீரமைத்த சகாயம் திடீர் இடமாற்றம்

சென்னை: தமிழ்நாட்டில் 9 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். கோ ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக அதை சீரமைத்த சகாயம், வேறு துறைக்கு மாற்றப்பட்டுள்ளார். தமிழக அரசின் தலைமைச் செயலாளர் மோகன் வர்கிஸ் சுங்கத் இதற்கான உத்தரவைப் பிறப்பித்துள்ளார். சகாயம்: கோ-ஆப்டெக்ஸ் நிர்வாக இயக்குனரான யு.சகாயம், இந்திய மருந்து மற்றும் ஹோமியோபதி இயக்குனராக நியமிக்கப்படுகிறார்.