பற்றாக்குறையை போக்க வெளிச்சந்தையிலிருந்து மின்சாரம்:முதல்வர் அதிரடி முடிவு

சென்னை:”தேசிய மின் நிலையங்களில் இருந்து, தமிழகத்துக்கு வழங்கப்படும் மின்சாரத்தின் அளவு குறைந்ததே, கடந்த சில நாட்களாக நிலவும் மின் வெட்டுக்கு காரணம்.

Continue reading பற்றாக்குறையை போக்க வெளிச்சந்தையிலிருந்து மின்சாரம்:முதல்வர் அதிரடி முடிவு

இடைநீக்கம் செய்யப்பட்ட ஐ.பி.எஸ். அதிகாரியிடம் குஜராத் போலீஸார் விசாரணை

ஆமதாபாத், செப். 30: பிரமாணப் பத்திரத்தில் தன்னிடம் வற்புறுத்திக் கையெழுத்துப் பெற்றதாக காவலர் கொடுத்த புகாரின் பேரில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஐ.பி.எஸ். அதிகாரி சஞ்சீவ் பட்டிடம் போலீஸார் விசாரணை நடத்தினர்.

2002, பிப்ரவரி 27-ல் முதல்வர் நரேந்திர மோடி தலைமையில் நடந்த உயர் நிலைக் கூட்டம் குறித்து தன்னை மிரட்டி தவறாக வாக்குமூலம் பெற்றதாக சஞ்சீவ் பட் மீது காவலர் பான்ட் புகார் தெரிவித்திருந்தார்.

இது தொடர்பாக கட்லோடியா காவல் நிலையத்தில், சஞ்சீவ் பட்டுக்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கு குறித்து விசாரிப்பதற்காக அவரை அழைத்திருப்பதாக குஜராத் டி.ஜி.பி. சித்தரஞ்சன் சிங் கூறினார். அவரை கைது செய்யப் போவதில்லை. வாக்குமூலம் மட்டுமே பெறப்படும் என டி.ஜி.பி. தெரிவித்தார்.

2002-ல் சஞ்சீவ் பட்டின் கீழ் காவலர் கே.டி. பான்ட் பணிபுரிந்தார். அவர், சஞ்சீவ் பட்டின் மீது அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருந்ததாவது: கலவரம் குறித்து விசாரிக்க உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டுள்ள நடுநிலையாளர் விசாரணைக்கு வரவுள்ளதாகவும், அவரிடம் குஜராத் கலவரம் குறித்து விசாரித்த சிறப்புப் புலனாய்வுக் குழுவினர் என்னிடம் வற்புறுத்தி வாக்குமூலம் பெற்றதாகத் தெரிவிக்குமாறு சஞ்சீவ் பட் வற்புறுத்தினார். அதற்கு மறுப்புத் தெரிவித்த என்னை சஞ்சீவ் பட் மிரட்டினார்.

மேலும், மாநில காங்கிரஸ் தலைவர் மோத்வாடியாவிடம் என்னை அழைத்துச் சென்றார். அவரும் சஞ்சீவ் பட் கூறியதன்படி நடந்துகொள்ளுமாறு அறிவுறுத்தினார். அதன் பின், வழக்குரைஞரிடம் அழைத்துச் சென்று 2 பிரமாணப் பத்திரத்தில் கையெழுத்துப் பெற்றார் என பான்ட் புகார் கூறியுள்ளார்.

முன்னதாக உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரத்தைத் தாக்கல் செய்த சஞ்சீவ் பட், குஜராத் கலவரத்தில் முதல்வர் நரேந்திர மோடிக்கு பங்கிருப்பதாகவும், இது குறித்து அறிந்த பான்ட்டை சிறப்புப் புலனாய்வு குழுவினர் கைது செய்து மிரட்டியதாகவும் தெரிவித்திருந்தார்.

12 மாநில தேர்தல் கமிஷனர்கள் வருகை : மாநில தேர்தல் கமிஷனர் தகவல்

சென்னை: “”உள்ளாட்சி தேர்தலை பார்வையிடுவதற்கு, 12 மாநில தேர்தல் கமிஷனர்கள் தமிழகத்திற்கு வரவுள்ளனர்,” என மாநில தேர்தல் கமிஷனர் அய்யர் கூறினார்.

Continue reading 12 மாநில தேர்தல் கமிஷனர்கள் வருகை : மாநில தேர்தல் கமிஷனர் தகவல்

திருச்சி தொகுதி இடைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையை தள்ளிவைக்க நடவடிக்கை- பிரவீன் குமார்

ஆனால் அக்டோபர் 17ம் தேதி மற்றும் 19ம் தேதி உள்ளாட்சித் தேர்தல் வாக்குப் பதிவு நடைபெறவுள்ளதால், திருச்சி இடைத்தேர்தல் முடிவு உள்ளாட்சித் தேர்தல் வாக்குப் பதிவில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

Continue reading திருச்சி தொகுதி இடைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையை தள்ளிவைக்க நடவடிக்கை- பிரவீன் குமார்

முதல்கட்டமாக, அக்., 17ல் தேர்தல் நடக்கவுள்ள இடங்கள்:

பேரூராட்சிகள்: ஆணைமலை, கோட்டூர், உதயகுளம், சமத்தூர், சூலிஸ்வரன்பட்டி, வேட்டைக்காரன் புதூர், ஜமீன் ஊத்துக்குளி, கங்கைகொண்டான்,

Continue reading முதல்கட்டமாக, அக்., 17ல் தேர்தல் நடக்கவுள்ள இடங்கள்:

தாராளமாய் செலவு செய்திடும் மாநில அரசுகளுக்கு கிடுக்கிப்பிடி

செலவினங்களை கட்டுப்படுத்தாமல், இஷ்டம் போல செலவிடும் மாநிலங்களுக்கு மத்திய அரசாங்கம் கிடுக்கிப்பிடி போட்டுள்ளது.
Continue reading தாராளமாய் செலவு செய்திடும் மாநில அரசுகளுக்கு கிடுக்கிப்பிடி

2,130 மாணவர்களுக்கு இன்று இலவச “லேப்-டாப்’ கிடைக்கும்

தமிழகம் முழுவதும், பிளஸ் 2 படிக்கும், 2,130 மாணவ, மாணவியருக்கு, இன்று அரசின் இலவச, “லேப்-டாப்’ வழங்கப்படுகிறது.

Continue reading 2,130 மாணவர்களுக்கு இன்று இலவச “லேப்-டாப்’ கிடைக்கும்

கறுப்புப் பண மீட்பில் இந்திய அரசு ஆர்வம் காட்டவில்லை!- ருடால்ப் எல்மர்

டெல்லி: சுவிட்சர்லாந்து உள்ளிட்ட நாடுகளின் வங்கிகளில் பதுக்கப்பட்டுள்ள பல லட்சம் கோடி கறுப்புப் பணத்தை மீட்பதில் இந்திய அரசு போதிய ஆர்வம் காட்டவில்லை என்கிறார், இதுகுறித்த விவரங்களை அதிக அளவில் வெளியிட்டு வரும் ருடால்ப் எல்மர்.
Continue reading கறுப்புப் பண மீட்பில் இந்திய அரசு ஆர்வம் காட்டவில்லை!- ருடால்ப் எல்மர்

ரயில்வே பாதுகாப்புப் படைக்கு கூடுதல் அதிகாரம் : புதிய சட்டம் கொண்டு வருகிறது மத்திய அரசு

புதுடில்லி : ரயில்களில் கிரிமினல் குற்றங்கள் நடக்காமல் தடுக்கும் வகையில், ரயில்வே பாதுகாப்புப் படைக்கு போலீசுக்கு உரிய அதிகாரம் அளிக்க, புதிய சட்டம் கொண்டுவர, ரயில்வே அமைச்சகம் முற்பட்டுள்ளது. இந்தச் சட்டம் பார்லிமென்டின் குளிர்கால கூட்டத்தொடரில் கொண்டு வரப்படும் என, தெரிகிறது.
Continue reading ரயில்வே பாதுகாப்புப் படைக்கு கூடுதல் அதிகாரம் : புதிய சட்டம் கொண்டு வருகிறது மத்திய அரசு

ரயில் கட்டணம் விரைவில் உயருகிறது: இழப்பை சீராக்க வேறு வழியில்லை

புதுடில்லி: நிதி நெருக்கடியை சமாளிக்கவும், பாதுகாப்பு தொடர்பான உள்கட்டமைப்பு வசதியை மேம்படுத்தவும், ரயில்களில் உயர் வகுப்பு கட்டணங்களை உயர்த்துவது குறித்து, ரயில்வே துறை தீவிரமாக பரிசீலித்து வருகிறது.
Continue reading ரயில் கட்டணம் விரைவில் உயருகிறது: இழப்பை சீராக்க வேறு வழியில்லை