Category Archives: அரசியல்

பெரியார், அண்ணா போன்றவர்களால் பாரத ரத்னா விருதுக்குத்தான் பெருமை: தமிழருவி மணியன்

சென்னை: பெரியார், அண்ணா போன்றவர்களால் பாரத ரத்னா விருதுக்குத்தான் பெருமை சென்று சேரும். எனவே, கருணாநிதி கூறினார் என்பதற்காக அலட்சியமாக இல்லாமல் மோடி அரசில் தனக்குள்ள செல்வாக்கைப் பயன்படுத்தி ஜெயலலிதா பெரியார், அண்ணா போன்றோருக்கு பாரத ரத்னா விருது கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என கோரிக்கையை முன்வைத்துள்ளார் காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன். இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

வரலாற்றிலேயே மோசமான மனிதர்கள் வரிசையில் ராஜபக்சே, கோத்தபயா, பசில், சோனியா, கருணாநிதி!

சென்னை: வரலாற்றுக் காலம் தொட்டு தற்போதைய காலம் வரையிலான காலகட்டத்தில் மிகவும் மோசமான மனிதர்கள் பட்டியலில் ராஜபக்சே சகோதரர்கள் இடம் பிடித்துள்ளனர். இந்த மோசமான மனிதர்கள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளார் ரஷ்யாவின் ஸ்டாலின். 2வது இடத்தில் ஹிட்லர் இருக்கிறார். ரேங்கர் என்ற இணையதளம் இதுதொடர்பான ஒரு கருத்துக் கணிப்பை நடத்தி வருகிறது. அதில் பலரும் ஆன்லைன் மூலம் வாக்கெடுப்பில் கலந்து கொண்டு வாக்களித்து வருகின்றனர். தற்போதைய நிலவரப்படி இதில் ஸ்டாலின் முதலிடத்திலும், ராஜபக்சே 13வது இடத்திலும் உள்ளனர்.

தமிழர்களை விட ராஜபக்சேவுக்குத்தான் பாஜக தலைவர்கள் விசுவாசமாக உள்ளனர் – நல்லகண்ணு

தூத்துக்குடி: ஈழத் தமிழர் விவகாரத்தில், தமிழர்களை விட ராஜபக்சேவுக்குத்தான் பாஜக தலைவர்கள் விசுவாசமாக உள்ளனர் என்று மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு கூறியுள்ளார். மக்கள் சிவில் உரிமை கழகத்தின் மாநில மாநாடு தூத்துக்குடி நற்செய்தி நடுவம் மையத்தில் வைத்து நடந்தது.

“2ஜி’ ஒதுக்கீட்டில் அமைச்சரவை முடிவை சிதம்பரத்தால் மாற்றமுடியாது: குர்ஷித்

புதுடில்லி : “2ஜி’ ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் அமைச்சரவை எடுத்த முடிவை, சிதம்பரத்தால் மாற்றியிருக்க முடியாது என்று, மத்திய சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் கூறினார்.

காந்தியடிகள் 143வது பிறந்த நாள் விழா:தமிழக கவர்னர், முதல்வர் மரியாதை

சென்னை:காந்தியடிகளின் பிறந்த தினமான நேற்று, அவரது சிலைக்கு தமிழக கவர்னர் ரோசையா மற்றும் முதல்வர் ஜெயலலிதா, மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

தெலுங்கானா:சோனியாவிடம் அறிக்கை

புதுடெல்லி, அக்.1:ஆந்திர மாநில மக்களை ஆட்டிப் படைத்து வரும் தெலுங்கானா பிரச்சனைக்கு எத்தகைய முடிவு எடுப்பது என்பது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் இன்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் அறிக்கை அளித்தார். . தெலுங்கானா மாநிலத்தை தனி மாநிலமாக பிரிக்க வேண்டும் என்று வலியுறுத்தி அப்பகுதியை சேர்ந்த சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்தார்கள். ரெயில் மறியல், பந்த் என 18வது நாளாக தெலுங்கானா போராட்டம் நடைபெற்று வருகிறது.… Read More »

திருச்சி மாநகராட்சி தி.மு.க. மேயர் வேட்பாளர் அறிவிப்பு

தி‌ரு‌ச்‌சி மாநகரா‌ட்‌சி மேய‌ர் ப‌த‌வி‌க்கு விஜயா ஜெயராஜ் போ‌ட்டி‌யிடுவா‌ர் எ‌ன்று ‌தி.மு.க. தலைவ‌ர் கருணா‌நி‌தி இ‌ன்று அ‌றி‌வி‌த்து‌ள்ளா‌ர். த‌ிரு‌ச்‌சி‌‌ மாநகரா‌ட்‌‌சியுட‌ன் ‌திருவெறு‌ம்பூ‌ர் பேரூரா‌ட்‌சியை இணை‌த்தது செ‌‌ல்லு‌ம் எ‌‌ன்று செ‌ன்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ம் நே‌‌‌ற்று மு‌ன்‌தின‌ம் ‌தீ‌ர்‌ப்ப‌ளி‌த்தது. இதை‌த் தொட‌ர்‌ந்து திருச்சி மாநகராட்சிக்கு வரு‌ம் 17ஆ‌ம் தேதி தேர்தல் நடை பெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதற்கான வேட்பு மனு தாக்கல் நேற்று தொடங்கியது. மனுதாக்கல் செய்ய 7ஆ‌ம் தேதி கடைசி நாளாகும். திருச்சி மாநகராட்சி… Read More »

கனிமொழியின் ஜாமீன் மனு மீதான விசாரணையை வருகிற 17 ஆம் தேதிக்கு நீதிமன்றம் மீண்டும் ஒத்திவைத்துள்ளது.

கனிமொழியின் ஜாமீன் மனு மீதான விசாரணை அக்டோபர் 1 ஆம் தேதியன்று (இன்று) நடைபெறும் என்று டெல்லி பாட்டியாலா நீதிமன்ற நீதிபதி ஓ.பி.சைனி அறிவித்திருந்தார். இந்நிலையில்,இன்று ஜாமீன் மனு மீதான இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது கனிமொழி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் மற்றும் சிபிஐ வழக்கறிஞர் ஆகிய இருவருமே விசாரணையை வேறு ஒரு தேதியில் நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதனைத் தொடர்ந்து வருகிற 15 ஆம் தேதி இவர்கள் மீதான குற்றச்சாட்டுகளை சிபிஐ பதிவு… Read More »

சஞ்சீவ் பட் வீட்டில் இரண்டாவது ரெய்டு

ஆமதாபாத்: கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள குஜராத் மாநில ஐ.பி.எஸ்., அதிகாரி சஞ்சீவ் பட் வீட்டில், மாநில போலீசார் கடந்த 24 மணி நேரத்தில் இரண்டாவது முறையாக ரெய்டு நடத்தினர்.

தயாநிதி மீது ஓரிரு நாளில் குற்றப்பத்திரிகை: சுப்ரீம் கோர்ட்டில் சி.பி.ஐ., திட்டவட்டம்

புதுடில்லி : “2ஜி’ ஸ்பெக்ட்ரம் ஊழலில், மத்திய தொலைத்தொடர்புத் துறை முன்னாள் அமைச்சர் தயாநிதிக்கு தொடர்பு இருப்பதற்கான ஆதாரம் கிடைத்துள்ளது.