Category Archives: உலகம்

பெண்கள் வாழ சிறந்த நாடு: இந்தியாவுக்கு 141வது இடம்

வாஷிங்டன்:உலகில் பெண்கள் வாழ சிறந்த இடம் எது என்ற கருத்து கணிப்பை அமெரிக்காவைச் சேர்ந்த, “நியூஸ்வீக்’ என்ற நாளிதழ் நடத்தியது.மொத்தம், 165 நாடுகளில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

துபாயில் கோலாகலமாக தொடங்கிய 2ம் உலகத் தமிழர் பொருளாதார மாநாடு

துபாய்: துபாயில் இரணடாம் உலகத் தமிழர் பொருளாதார மாநாடு அக்டோபர் 1ம் தேதியான நேற்று தொடங்கியது. 4 ஆம் தேதி வரை இது நடைபெறுகிறது.

அல்கய்டா தளபதி கொலை: அமெரிக்காவில் எச்சரிக்கை

அல்கய்டா இயக்கத்தின் முக்கியத் தளபதி அன்வர் அல் அவ்லகி அமெரிக்காவின் ராக்கெட் தாக்குதலில் பலியானதைத் தொடர்ந்து, அல்காய்தாவின் பழிவாங்கல் தாக்குதல் நடவடிக்கைகள் அமெரிக்காவில் நிகழலாம் என உளவு அமைப்பு எச்சரிக்கை விடுத்தது. இதைத் தொடர்ந்து நியூயார்க்கில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. நியூயார்க் காவல்துறை ஆணையர் ரேமண்ட் கெல்லி, இது குறித்துக் கூறுகையில், அவ்லகிக்கு ஏராளமான அனுதாபிகள் அமெரிக்காவில், குறிப்பாக நியூயார்க் நகரில் இருக்கிறார்கள். இந்தக் காரணத்தால், அவருடைய கொலையைத் தொடர்ந்து அவருடைய ஆதரவாளர்களால் பழிவாங்கல் நடவடிக்கைகள் இங்கே மேற்கொள்ளப்படலாம்… Read More »

உலக நாடுகளுக்கு இலங்கை முன்னுதாரணம்- ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ

குறுகிய காலத்துக்குள் புனர் வாழ்வளிக்கப்பட்ட சுமார் பத்தாயிரம் பேரை சமூகத்துடன் இணைத்துள்ளோம். வடக்கு, கிழக்கு, தெற்கு பேதமின்றி அனைத்து தரப்பினரும் ஒன்று சேரும் தருணம் வந்துள்ளதுடன் அனைத்து நாடுகளுக்கும் முன் உதாரணமாக இலங்கை விளங்குகின்றது என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். புனர்வாழ்வு பெற்றுள்ள முன்னாள் போராளிகளை விடுவிக்கும் நிகழ்வு அலரி மாளிகையில் இன்று இடம்பெற்றபோதே, அவர் இதனைத் தெரிவித்துள்ளார். உலகில் எந்தவொரு நாடுகளிலும் போராளிகள் குறுகிய காலத்தில் பயிற்சி வழங்கி விடுவிக்கப்படவில்லை எனவும் அவர் சுட்டிகாட்டியுள்ளார்.… Read More »

பழிவாங்குவோம்: அமெரிக்காவிடம் பாகிஸ்தான் மிரட்டல்

இஸ்லாமாபாத் : அமெரிக்கா, பாகிஸ்தான் இடையேயான சிக்கலை மேலும் அதிகப்படுத்தும் விதத்தில், ஐ.எஸ்.ஐ., தலைவர் அகமது சுஜா பாஷா, சி.ஐ.ஏ.,தலைவர் டேவிட் பீட்ரசிடம் மிரட்டல் விடுத்த தகவல், தற்போது வெளியாகியுள்ளது.

நெருக்கடியில் சிக்கியுள்ள பாகிஸ்தானுக்கு நேசக்கரம் நீட்டும் சீனா

இஸ்லாமாபாத்: அமெரிக்கா உடனான பாகிஸ்தான் உறவில் விரிசல் விழத் துவங்கியுள்ள நிலையில், ஐ.எஸ்.ஐ., தலைவர் அகமது சுஜா பாஷா, சவுதி அரேபியா சென்றுள்ளார்.

புதிய விசா நடைமுறைகளை அறிவித்தது ஆஸி., அரசு : பல்கலைகளில் மாணவர் சேர்க்கை குறைந்ததால் அதிரடி

மெல்போர்ன் : ஆஸ்திரேலிய அரசு புதிய விசா நடைமுறைகளை அறிவித்துள்ளது. ஆஸ்திரேலியாவில் உள்ள பல்கலைக்கழகங்களில், ஏராளமான வெளிநாட்டு மாணவர்கள் படிக்கின்றனர்.

பேஸ்புக் ‘ வந்தல்லோ; பேஸே மறந்துபோச்சு: போன், மொபைல் அதையெல்லாம் ஒதுக்கிடுங்க!

லண்டன்: பிரிட்டனில் சமீபத்தில் நடந்த ஆய்வு ஒன்றின் மூலம், ஐந்து பிரிட்டன்வாசிகளில் ஒருவருக்கு மேற்பட்டவர்கள்,”பேஸ்புக்’ சமூக வலைத் தளம் மூலமே தங்கள் நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன் தொடர்பில் உள்ளதாகவும், மொபைல்போன் அல்லது வீட்டுத் தொலைபேசியை அதிகமாகப் பயன்படுத்துவதில்லை எனவும் தெரியவந்துள்ளது.

துண்டு துண்டாய் பூமியில் விழப் போகும் நாசா செயற்கைக்கோள்

வாஷிங்டன்: கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் சூரியன் மற்றும் பூமியின் வளிமண்டலத்தை குறித்த தகவல்களை திரட்ட நாசா செலுத்திய செயற்கைக்கோள் இன்னும் ஒரு சில மாதங்களில் துண்டு, துண்டாக பூமியை வந்தடையவிருக்கிறது.