தமிழ்தேசம்

தமிழகம் சார்பில் பெண் எம்.பி.,க்கள் 13, எம்.எல்.ஏ.,க்கள் 77: இட ஒதுக்கீட்டால் உயருகிறது
பெண்கள் இடஒதுக்கீடு மசோதா பார்லிமென்டில் நிறைவேறுவதால், தமிழகத்தில் இருந்து லோக்சபா மற்றும் சட்டசபைக்கு பெண்களின் பிரதிநிதித்துவம் பல மடங்கு அதிகரிக்க உள்ளது.

பெண்களுக்கு பார்லிமென்ட் மற்றும் சட்டசபையில் 33 சதவீத இடஒதுக்கீட்டிற்கு வகை செய்யும் மசோதா, தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மசோதாவின்படி, தமிழக சட்டசபையில் தற்போதுள்ள மொத்தம் 234 உறுப்பினர்களில், பெண்கள் 77 முதல் 78 பேர் வரை இடம்பெற வேண்டும். லோக்சபாவில் மொத்தமுள்ள 39 தொகுதிகளில் 13 தொகுதிகள் பெண்களுக்காக ஒதுக்கப்படும்.

தற்போது தமிழகத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட லோக்சபா எம்.பி.,க்களை பொறுத்தவரை, 39 பேரில் ஒருவர் மட்டுமே பெண். தி.மு.க.,வைச் சேர்ந்த ஹெலன் டேவிட்சன் மட்டுமே தற்போது உள்ளார். வரும் காலத்தில் இந்த எண்ணிக்கை 13ஐ தாண்டும். தமிழக சட்டசபையில் மொத்தம் 22 பெண்களே உறுப்பினர்களாக உள்ளனர். இவர்களில் அ.தி.மு.க., சார்பாக, ஜெயலலிதா, இளமதி சுப்பிரமணியன், தேன் மொழி, ராமஜெயம், பதர் சயீது, பிரேமா, சந்திரா ஆகிய ஏழு பேர் இடம்பெற்றுள்ளனர்.

தி.மு.க., சார்பிலும், பூங்கோதை, கீதா ஜீவன், அங்கயற்கண்ணி, சங்கரி நாராயணன், லதா அதியமான், தமிழரசி, ராணி, பிரபாவதி என எட்டு பேர் இடம்பெற்றுள்ளனர். காங்கிரசில் இருந்து யசோதா, காயத்ரிதேவி, ராணி வெங்கடேசன் ஆகிய மூவர் மட்டும் உள்ளனர். இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் பத்மாவதி மட்டுமே இடம்பெற்றுள்ளார். பா.ம.க., சார்பில் கமலாம்பாள் மட்டுமே இடம்பெற்றுள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு தான் 33 சதவீதம் பெண்கள் உள்ளனர். இக்கட்சியைச் சேர்ந்த மொத்தம் ஒன்பது எம்.எல்.ஏ.,க்களில், பாலபாரதி, லீமா ரோஸ், லதா ஆகிய மூன்று பெண் உறுப்பினர்கள் உள்ளனர். ராஜ்யசபாவை பொறுத்தவரை தமிழகத்துக்கு 18 இடங்கள் உள்ளன. இதில், தற்போது மூன்று பேர் பெண்கள் உள்ளனர். தி.மு.க., சார்பில் கனிமொழி, வசந்தி ஸ்டான்லி, காங்கிரஸ் சார்பில் ஜெயந்தி நடராஜன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

பிளஸ் 2 இயற்பியல் தேர்வில், ‘லாகரிதம்’ குளறுபடி : மாணவர்கள் தவிப்பு
கோவை : பிளஸ் 2 இயற்பியல் தேர்வில், தனியார் பள்ளி நிர்வாகம் அளித்த தவறான, “லாகரிதம்’ அட்டவணை காரணமாக, கோவை தனியார் பள்ளியில் தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் தவறான விடை எழுதி மதிப்பெண்களை இழந்தனர்.

தமிழகம் முழுவதும் பிளஸ் 2 பொது தேர்வுகள் நடந்து வருகின்றன. நேற்று இயற்பியல் பாடத் தேர்வு நடந்தது. ஐந்து மதிப்பெண் பகுதியில், 60வது கேள்விக்கு, “லாகரிதம்’ அட்டவணையை பயன்படுத்தி விடை எழுத வேண்டும். தேர்வறைக்குள் மாணவர்கள் தங்கள் சொந்த, “லாகரிதம்’ அட்டவணையை கொண்டு செல்ல தேர்வுத் துறை தடை விதித்துள்ளது. தேர்வு நடத்தும் மையங்களே, மாணவர்களுக்குத் தேவையான, “லாகரிதம்’ அட்டவணையை வழங்க வேண்டும் என்று தேர்வுப் பணியாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி, அனைத்துப் பள்ளிகளிலும் மாணவர்களுக்கு நேற்று, “லாகரிதம்’ அட்டவணை வழங்கப்பட்டது. கோவை தடாகம் ரோட்டில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட, “லாகரிதம்’ அட்டவணையில் எண்கள் தவறாக அச்சிடப்பட்டிருந்தது. இதனால், அட்டவணையை பயன்படுத்தி விடை எழுதிய மாணவர்கள் தவறான விடை எழுதினர்.

இது பற்றி அப்பள்ளியில் தேர்வு எழுதிய மாணவ, மாணவியர் சிலர் கூறியதாவது: எங்களுக்கு பாரதி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, தேர்வு மையமாக அனுமதிக்கப்பட்டுள்ளது.  இயற்பியல் தேர்வில் 60வது எண் கேள்விக்கு விடையளிக்க அப்பள்ளி அளித்த, “லாகரிதம்’ அட்டவணையை பயன்படுத்தினோம். கேள்வியின்படி, “0.00231′ என்ற இலக்கத்துக்கான, “லாகரித’ குறியீடு “3638′ஆக இருக்க வேண்டும். ஆனால், பள்ளி அளித்த அட்டவணையில், “3038′ என குறிப்பிடப்பட்டிருந்தது. “6′ க்குப் பதிலாக, “0′ என தவறாக அச்சிடப்பட்டிருந்தது. இந்த குறியீட்டை பயன்படுத்தி விடை எழுதினோம். தேர்வு முடிந்து எங்கள் சொந்த, “லாகரிதம்’ அட்டவணையை பயன்படுத்தி கணக்கிட்டதில், பள்ளி அளித்த, “லாகரிதம்’ அட்டவணை தவறாக அச்சாகியுள்ளது தெரிந்தது.

இது பற்றி பள்ளி நிர்வாகத்திடம் புகார் செய்ததற்கு, “ஐந்து மதிப்பெண்ணில் இரண்டு மதிப்பெண்கள் தான் போகும்; பரவாயில்லை’ என பதிலளித்தனர். இயற்பியல் பாடத்தில் கணக்கிட கையாளும், “ஸ்டெப்ஸ்’ க்கு மூன்று மதிப்பெண்கள் வரை கிடைக்கும். பள்ளி வழங்கிய தவறான, “லாகரிதம்’ அட்டவணை காரணமாக, மதிப்பெண்களை இழந்துள்ளோம். இப்பள்ளியில் தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களுக்கும், தொழிற்கல்வியில் சேர்வதற்கான, “கட்-ஆப்’ மதிப்பெண் குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பள்ளி செய்த தவறால் எங்கள் எதிர்காலம் பாதிக்கப்படுகிறது. இதற்கு அரசு பொறுப்பேற்று, கேள்வி எண் 60க்கான முழு மதிப்பெண்களையும் வழங்க வேண்டும். இவ்வாறு மாணவர்கள் கூறினர்.

நிகர்நிலை பல்கலைகள் குறித்த பரிந்துரைகள் பகிரங்கம் : சுப்ரீம் கோர்ட் உத்தரவு
புதுடில்லி : “நிகர்நிலைப் பல்கலைகளின் செயல் பாடுகள் குறித்து டாண்டன் கமிட்டி அளித்த பரிந்துரைகளை, இன்டர் நெட்டில் பகிரங்கமாக வெளியிட வேண்டும்’ என, மத்திய அரசுக்கு, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

“நாடு முழுவதும் உள்ள நூற்றுக் கும் மேற்பட்ட நிகர்நிலைப் பல்கலைகளில், 44 பல்கலைகள், நிகர்நிலைப் பல்கலைக்குரிய அந்தஸ்தை பெற தகுதியற்றவை. இவற்றின் அங் கீகாரத்தை ரத்து செய்யலாம்’ என, மத்திய அரசு சார்பில், சுப்ரீம் கோர்ட்டுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. மத்திய அரசின் இந்த பரிந்துரையை நடைமுறைப்படுத்த, கடந்த ஜனவரியில் சுப்ரீம் கோர்ட் இடைக் கால தடை விதித்தது. இந்நிலையில், நிகர்நிலை பல்கலைகள் தொடர்பான வழக்கு, சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் தல்வீர் பண்டாரி, ஏ.கே.பட்நாயக் தலைமையிலான பெஞ்ச் முன், நேற்று விசாரணைக்கு வந்தது.

அரசு சார்பில் தாக்கல் செய்யப் பட்ட கூடுதல் பதில் மனுவில், “இந்த விவகாரம் குறித்து ஆய்வு நடத்திய கமிட்டி, நிகர்நிலைப் பல்கலைகளின் கல்வித் தரம் குறித்து கவலை தெரிவித்துள்ளது. “அங்கீகாரம் ரத்து செய்யப்படுவது தொடர்பான தகவல்கள், தங்களுக்கு முன் கூட்டியே தெரிவிக்கப்படவில்லை என, சில பல்கலைகள் சார்பில் தெரிவிக்கப்பட்ட தகவல் தவறானது. “இது தொடர்பாக 130 நிகர்நிலைப் பல்கலைகளுக்கும் அழைப்பு விடுக் கப்பட்டு, நேரடியாக விவாதம் நடத் தப்பட்டது. இதில், 126 பல்கலைகள் பங்கேற்றன. இது தொடர்பான அனைத்து நிகழ்வுகளும் வீடியோ மூலம் படம் பிடிக்கப்பட்டது’ என, தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறியதாவது: நிகர்நிலைப் பல்கலைகளின் செயல்பாடுகள் குறித்து, டாண்டன் கமிட்டி மற்றும் நடவடிக்கை குழு அளித்த பரிந்துரைகள் அனைத்தையும், மத்திய அரசு, இன்டர்நெட்டில் பகிரங்கமாக வெளியிட வேண்டும். பல்கலை அங்கீகாரத்தை ரத்து செய்வதாக மத்திய அரசு எடுத்துள்ள முடிவுக்கு, சம்பந்தப்பட்ட பல்கலைகள், இரண்டு வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும். 44 நிகர்நிலைப் பல்கலைகள் அங்கீகாரத்தை ரத்து செய்ய விதிக்கப்பட்டுள்ள இடைக் கால தடை, அடுத்த மாதம் 13ம் தேதி வரை நீடிக்கும். இவ்வாறு நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறியுள்ளனர்.

வீடு, கார் கடன் வட்டி வகிதம் 50 புள்ளிகள் வரை அதிகரிப்பு
டெல்லி: ரிசர்வ் வங்கி ரொக்க இருப்பு விகிதத்தை அதிகரித்ததன் விளைவாக ஹெச்டிஎஃப்சி, ஐசிஐசிஐ, கோடாக் மஹிந்தரா உள்ளிட்ட வங்கிகள் கார் மற்றும் வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதத்தை 50 புள்ளிகள் வரை கூட்டியுள்ளன.

தனியார் துறையில் அதிகளவு கடன் வழங்கும் ஐசிஐசிஐ வங்கி தனது கார் கடன் வட்டியை 0.5 சதவீதம் அதிகரித்துள்ளது. அதோடு 8.25 சதவீத வட்டியில் வழங்கி வந்த சிறப்பு வீட்டுக் கடன் திட்டத்தையும் ஐசிஐசிஐ நிறுத்திவிட்டது.

வட்டி உயர்வுக்கான காரணத்தை வங்கிகள் தெரிவிக்க வில்லை என்றாலும், ரிசர்வ் வங்கி வங்கிகளுக்கான ரொக்க இருப்பு விகிதத்தை உயர்த்தியதே இந்த மாற்றத்துக்கு காரணம் என கூறப்படுகிறது.

வங்கிகளுக்கான ரொக்க இருப்பு விகிதத்தை ரிசர்வ் வங்கி 50 புள்ளிகள் அதிகரித்ததன், வாடிக்கையாளர்களின் முதலீட்டில் 5.75 சதவீதம் வரை இருப்பு வைக்க வேண்டிய நிலை வங்கிகளுக்கு ஏற்பட்டுள்ளது.

இதன் விளைவாக, கடன்களுக்கான வட்டி விகிதத்தை வங்கிகள் கூட்டியுள்ளன. புதிய கார் லோன்களுக்கான வட்டி விகிதம் தற்போது 9.75 முதல் 11 சதவீதம் வரை உயரும் என ஐசிஐசிஐ அறிவித்துள்ளது.

தற்போது ஐசிஐசிஐ வங்கி, வீட்டுக்கடன் ரூ.30 லட்சம் வரை 8.75 சதவீதமும், ரூ.30 லட்சம் முதல் 50 லட்சம் வரை 9 சதவீதமும், ரூ.50 லட்சத்துக்கு மேல் 9.5 சதவீத வட்டியிலும் வழங்கி வருகிறது.

கடந்த வெள்ளிக்கிழமை முதல் வழங்கப்படும் புதிய கடன்களுக்கு இந்த வட்டி வகிதத்தில் 25 அடிப்படைப் புள்ளிகள் வரை அதிகரிக்கும்.

அதேபோல், கார் லோன் பிரிவில், 35 மாதங்கள் வரையிலான கடன்களுக்கு 9 முதல் 13 சதவீதமும், 36 முதல் 60 மாத கடனுக்கு 8.75 முதல் 12.5 சதவீதம் வரை வட்டி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே மத்திய பட்ஜெட்டில் வரி உயர்வு காரணமாக கார்கள் விலை உயர்ந்துள்ள நிலையில், வட்டி விகிதமும் அதிகரித்திருப்பது கார் வாங்க திட்டமிட்டுள்ள நடுத்தர சம்பளதாரர்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஐசிஐசிஐ போலவே ஹெச்டிஎஃப்சி, கோடாக் மஹிந்தரா வங்கிகளும் தங்களின் கார் கடன் மீதான வட்டி விகிதங்களை மாற்றி அமைத்துள்ளன.

இந்த மூன்று வங்கிகளிலும் புதிய வட்டி விகிதம் உடனடியாக அமலுக்கு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எஸ்பிஐயும் தனது வட்டி விகிதத்தை திருத்தி அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. வரும் மே அல்லது ஜூன் மாதத்தில் புதிய வட்டி விகிதம் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தி ஹர்ட் லாக்கர்’ படத்துக்கு ஆறு ஆஸ்கர் விருதுகள்
லாஸ் ஏஞ்சல்ஸ் : ஈராக் போர் தொடர்பான திரைக்கதையை அடிப்படையாக கொண்ட “தி ஹர்ட் லாக்கர்’ என்ற படம் ஆறு ஆஸ்கர் விருதுகளை பெற்றுள்ளது. “அவதார்’ படத்துக்கு 3 விருதுகள் கிடைத்துள்ளன.

உலக அளவில் சிறந்த திரைக்கதை, தொழில்நுட்பம், நடிப்பு, இயக்கம் போன்றவற்றை பாராட்டி லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடக்கும் விழாவில் ஆஸ்கர் விருதுகள் வழங்கப்படுகின்றன. நேற்று முன்தினம் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கடந்த ஆண்டுக்கான ஆஸ்கார் விருதுகள் வழங்கும் விழா நடந்தது. அமெரிக்காவின் கலிபோர்னியாவை சேர்ந்த கேத்ரீன் பிகிலோ(58) என்ற பெண் இயக்குனர் தயாரித்த “தி ஹர்ட் லாக்கர்’ என்ற படம் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது. ஈராக் போரின் போது எதிரிகள் வைத்த வெடிகுண்டுகளை அகற்றும் வீரரின் கதையை அடிப்படையாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டது.

சிறந்த திரைப்படம், திரைக்கதை, சிறந்த இயக்குனர், சிறந்த ஒலிகலவை, ஒலி தொகுப்பு, படத்தொகுப்பு ஆகியவற்றுக்காக இந்த படம் ஆறு ஆஸ்கர் விருதுகளை பெற்றுள்ளது. கேத்ரீனின் முன்னாள் கணவர் ஜேம்ஸ் கேமரூன். இவர் இயக்கிய படம் தான் “அவதார்’. இந்த படத்துக்கு மூன்று விருதுகள் கிடைத்துள்ளன. சிறந்த கேமரா, கலை இயக்கம், விஷுவல் எபெக்ட் ஆகியவற்றுக்காக அவதார் படத்துக்கு மூன்று விருதுகள் தரப்பட்டுள்ளன. “தி கிரேசி ஹார்ட்’ படத்தில், கதாநாயகனாக நடித்த ஜெப் ப்ரிட்ஜஸ், சிறந்த நடிகராக தேர்வு செய்யப்பட்டார். சிறந்த நடிகைக்கான விருது “தி பிளைன்ட் சைட்’ படத்தில் நடித்த சான்ட்ரா புல்லக்குக்கு வழங்கப்பட்டது.

பொன்சேகாவின் உண்ணாவிரதம் பற்றி எதுவும் தெரியாது: இலங்கை ராணுவம்
கொழும்பு, மார்ச் 8: இலங்கை ராணுவத்தின் முன்னாள் தலைமைத் தளபதி சரத் பொன்சேகாவின் உண்ணாவிரதம் பற்றி தங்களுக்கு எதுவும் தெரியாது என இலங்கை ராணுவச் செய்தித்தொடர்பாளர் பிரசாத் சமரசிங்க கூறியுள்ளதாக இலங்கைத் தமிழ் இணையதளங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பொன்சேகாவுக்கு 3 வேளை உணவுகளையும் அவரது மனைவி அனோமாவே எடுத்துச் செல்வதால், அவர் உண்ணாவிரதம் இருந்து வருகிறாரா என்பது பற்றி தெரியாது என சமரசிங்க தெரிவித்துள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

பொன்சேகாவுக்கு செல்போன் பயன்படுத்த அனுமதிக்குமாறு உச்ச நீதிமன்றம் எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை.

பால் உற்பத்தியாளர்களுக்கு பரிசளிப்பு, குழந்தைகளுக்கு மடிக்கணிணி: துணைமுதல்வர் வழங்கினார்
பால்வளத்துறை சார்பாக இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், மாநில அளவில் தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களுக்கு அதிகமாக பால் வழங்கிய 10 உறுப்பினர்களுக்கு ரொக்கப்பரிசு, மாநில அளவில் சிறந்த 3 சங்கங்களின் செயலாளர்களுக்கு ஊக்கப் பரிசு மற்றும் சான்றிதழ்கள் ஆகியவற்றை துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

மேலும், பிளஸ்-2 தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று சிறப்பாக தேர்ச்சி பெற்ற 10 ஆவின் ஊழியர்களின் குழந்தைகளுக்கும், தொடக்க பால் உற்பத்தியாளர்கள் சங்கங்களில் பணிபுரியும் பணியாளர்களின் 5 குழந்தைகள், மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியங்களிலிருந்து 16 பால் உற்பத்தியாளர்களின் குழந்தைகள் ஆகிய 31 குழந்தைகளுக்கு மடிக்கணினிகளை துணை முதல் -அமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.

பரிசு பெற்ற பால் உற்பத்தியாளர்கள் முதல்- அமைச்சர் கருணாநிதி மற்றும் துணை முதல்- அமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆகியோருக்கு நன்றி தெவித்தனர். மடிக்கணினிகளை பெற்ற மாணவ- மாணவியர்களின் பெற்றோர்களும் இந்த திட்டம் குழந்தைகளின் கல்வித்திறனை மேலும் ஊக்குவிக்கும் என மகிழ்ச்சியுடன் பாராட்டினார்கள். இதுபோல் ஆவின் ஊழியர்களும், பால் உற்பத்தியாளர்களும் நன்றி தெரிவித்தனர்.

இந்தியத் தர நியம நிறுவனம் (பி.ஐ.எஸ்) சென்னை ஆவின் நிறுவனத்திற்கு சிறப்பான சுற்றுப்புறசூழல் மேலாண்மையை மேற்கொண்டு வருவதன் அடிப்படையில் உலகத்தரத்திற்கான ஐ.எஸ்.ஓ. 14001: 2004 சான்றிதழ் வழங்கியுள்ளது.

இதை தென் பிராந்திய பி.ஐ.எஸ். நிறுவன துணை இயக்குநர் ஜெனரல் கே.அன்பரசு துணை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் இன்று ஆவின் நிறுவனத்திற்கு வழங்கினார்.

நிகழ்ச்சியில், பால்வளத்துறை அமைச்சர் மதிவாணன், தலைமைச்செயலாளர் ஸ்ரீபதி, கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத்துறை செயலாளர் முத்துக்குமாரசாமி, பால்வளத்துறை ஆணையர் மற்றும் ஆவின் நிர்வாக இயக்குனர் அபூர்வ வர்மா, உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

ராணுவ வீரருக்கு 4 ஆண்டு சிறை
மோகா: (பஞ்சாப்) ; பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த சிறுமியை கடத்தி சில்மிஷம் செய்த ராணுவ வீரருக்கு 4 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. பஞ்சாப் பாம்பியாபாய் கிராமத்தில் வசிக்கும் புக்கர்சிங் மகள் வாசுகி ( பெயற் மாற்றப்பட்டுள்ளது) .

இவரை இதே பகுதியை சேர்ந்த ஜஸ்பீர்சிங் ராணுவத்தில் பணியாற்றி விடுமுறைக்கு ஊருக்கு வந்திருந்தார், இவர் கடந்த 2007 ம் ஆண்டில் செப்டம்பர் மாதம் 2 ம் தேதி சிறுமியை கடத்திச்சென்று கற்பழித்துள்ளார். இது தொடர்பான வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்தது. வழக்கை விசாரித்த கோர்ட், ஜஸ்பீர் சிங்கிற்கு 4 ஆண்டு சிறைத்தண்டனையும், 7 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. அபராதம் செலுத்த தவறினால் மேலும் 4 மாதம் கடுங்காவல் சிறைத்தண்டனை அநுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

தே.மு.தி.க., சார்பில் நாளை ஆர்ப்பாட்டம் : விஜயகாந்த் அறிக்கை
சென்னை : “”மின் நிலையத்திற்கு நிலம் கொடுத்தவர்களுக்கு ஆதரவாக அரியலூரில் நாளை (மார்ச் 7)  தே.மு.தி.க., சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்,” என அக்கட்சி தலைவர் விஜயகாந்த் அறிவித் துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

ஜெயங்கொண்டம் அனல் மின் நிலையத்திற்கு நிலம் கொடுத்தவர்களுக்கு உரிய கூடுதல்  இழப்பீடுத் தொகை வழங்கக்கோரியும், அவர்களுக்கு வீட்டுக்கொருவருக்கு வேலை வழங்கக்கோரியும், அரியலூர் பகுதியில் உள்ள சிமென்ட் ஆலைகளில் அந்தப்பகுதியைச் சேர்ந்தவர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்கக்கோரியும், மின்தடையால் மாவட்டம் முழுவதும் உள்ளதொழில் நிறுவனங்கள், மருத்துவமனைகள் பாதிக்கப்படுதை கண்டித்தும், கட்சித் தொண்டர்கள் மீது பொய் வழக்கு போடப்

படுவதை கண்டித்தும் நாளை காலை 10.00 மணிக்கு அரியலூர் கோட்டாட்சியர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

ஆர்ப்பாட்டத்திற்கு ஜெகன் வீரபாண்டியன் தலைமை வகிக்கிறார்.மாவட்ட செயலாளர் ராம ஜெயவேல் முன்னிலை வகிக்கிறார். கட்சி நிர்வாகிகள்,தொண்டர்கள் பங்கேற்கும் படி கேட்டுக் கொள்கிறேன்.  இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

இளைஞர்கள் தனித்திறனை வளர்த்து சமூக முன்னேற்றத்துக்கு வழிவகுக்கலாம்: கலாம்
சென்னை : “”தங்கள் தனித்திறனை வளர்த்து கொள்வதன் மூலம், இளைஞர்கள் சமூக முன்னேற்றத்திற்கு பங்காற்ற முடியும்,” என, முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பேசினார்.

சென்னை எழும்பூர் எத்திராஜ் மகளிர் கல்லூரியில், புதிய கட்டட திறப்பு விழா நேற்று நடந்தது. கட்டடத்தை திறந்துவைத்து, அப்துல் கலாம் பேசியதாவது: கல்லூரி பருவத்திலேயே இளைஞர்கள் தங்கள் எதிர்கால இலக்கை நிர்ணயித்துக் கொள்ள வேண்டும். துறை சார்ந்த புத்தகங்கள், “இன்டர்நெட்’ ஆகியவற்றின் மூலம் அந்த இலக்கை அடைவதற்கான அறிவை பெற வேண்டும். பெற்ற அறிவை செயல்படுத்த கடின உழைப்பும், தடைகளை எதிர்கொள்ளும் மனவலிமையும் தேவை. தீவிரவாதம் இன்று நமக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது. இதை தடுக்க, குடிமக்களுக்கு தேசிய அடையாள அட்டை வழங்குவது, தீவிரவாத தடுப்பு சட்டங்களை கடுமையாக செயல்படுத்துவது உள்ளிட்ட பல நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.

ஒவ்வொரு தனிமனிதனும் சேவை மனப்பான்மை, நேர்மை குணத்துடன் செயல்பட்டால் தான் தீவிரவாதத்தை முற்றிலும் ஒழிக்க முடியும்.இளைஞர்கள், தங்களின் தனித்திறனை கண்டறிந்து அதை வளர்த்துக் கொள்ள வேண்டும். இதன் மூலம், ஆசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள்,தொழில் முனைவோர் என பன்முக திறமைக் கொண்ட சமுதாயத்தை உருவாக்கலாம். நகர்ப்புற கல்லூரி மாணவ, மாணவியர் தங்கள் பகுதிக்கு அருகில் உள்ள கிராமங்களை தத்தெடுத்து, அம்மக்களுக்கு கல்வியறிவு வழங்க வேண்டும். இதன் மூலம், கிராம பொருளாதார முன்னேற்றத்திற்கு அடித்தளம் அமைக்கலாம். இவ்வாறு அப்துல் கலாம் பேசினார். விழாவில், கல்லூரி நிர்வாகக் குழு உறுப்பினர்கள், முதல்வர் தவமணி, ஆசிரியர்கள் மற்றும் மாணவியர் பங்கேற்றனர்.

விழாவில், மாணவியரின் கேள்விகளுக்கு அப்துல் கலாம் அளித்த பதில்கள்:

* இந்தியாவின் நீர்வள ஆதாரம், எரிபொருள் பயன்பாடு பற்றி?

ஏரி, குளம் உள்ளிட்ட நீர்நிலைகளை சரியாக பராமரிப்பது, கால்வாய்களை முறையாக தூர்வாருவது மற்றும் நதிகளை இணைப்பதன் மூலம் நீர்வள ஆதாரத்தை பாதுகாத்துக் கொள்ளலாம். வாகனங்களில் இருந்து வெளியேறும் புகையால் சுற்றுச்சூழல் மாசுப்படுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதை தடுக்க, பெட்ரோல், டீசலுக்கு மாற்றாக, சூரிய எரிசக்தி, “பயோ காஸ்’ போன்றவற்றின் பயன்பாட்டை நடைமுறைப்படுத்த வேண்டும்.

* விண்வெளி துறையில் இந்தியாவின் செயல்பாடு குறித்து?

செவ்வாய் கிரகத்தை ஆராயும் அளவிற்கு இந்திய விண்வெளி துறை முன்னேற் றம் அடைந்துள்ளது. எதிர்காலத்தில் செவ்வாய்க்கு செயற்கை கோள் அனுப்பும் திட்டம் உள்ளது.

* இளைஞர்கள் அரசியலில் சாதிக்க முடியுமா?

நிச்சயம் சாதிக்க முடியும். அதற்கு முதலில், இளைஞர்கள் பொதுவாழ்விற்கு விரும்பி வரவேண்டும். பெண்கள் அரசியலுக்கு வர வேண்டும் என்பதற்காக தான், “பார்லிமென்ட்’டில் அவர்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற முயற்சிகள் நடைபெறுகிறது. பெண்களுக்கு அரசியலுக்கு வர வேண்டும் என்ற எண்ணம், ஈடுபாடு குறைவாக தான் உள்ளது.

* சமச்சீர் கல்வி திட்டம் பற்றி?

நல்ல திட்டம். இதன் மூலம் கிராமப்புற மாணவர்களுக்கும் சிறந்த கல்வி கிடைக்கும்.

* 2020 ல் இந்தியா வல்லரசு ஆகுமா?

தற்போது நாட்டின் ஒட்டு மொத்த பொருளாதார வளர்ச்சி 10 சதவீதமாக உள்ளது. இந்நிலை தொடர்ந்து நீடித்தால், 2020ல் இந்தியா நிச்சயம் வல்லரசாகும். இவ்வாறு அப்துல்கலாம் பதிலளித்தார்.