பெண்கள் வாழ சிறந்த நாடு: இந்தியாவுக்கு 141வது இடம்

வாஷிங்டன்:உலகில் பெண்கள் வாழ சிறந்த இடம் எது என்ற கருத்து கணிப்பை அமெரிக்காவைச் சேர்ந்த, “நியூஸ்வீக்’ என்ற நாளிதழ் நடத்தியது.மொத்தம், 165 நாடுகளில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
Continue reading பெண்கள் வாழ சிறந்த நாடு: இந்தியாவுக்கு 141வது இடம்

“2ஜி’ ஒதுக்கீட்டில் அமைச்சரவை முடிவை சிதம்பரத்தால் மாற்றமுடியாது: குர்ஷித்

புதுடில்லி : “2ஜி’ ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் அமைச்சரவை எடுத்த முடிவை, சிதம்பரத்தால் மாற்றியிருக்க முடியாது என்று, மத்திய சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் கூறினார்.
Continue reading “2ஜி’ ஒதுக்கீட்டில் அமைச்சரவை முடிவை சிதம்பரத்தால் மாற்றமுடியாது: குர்ஷித்

சென்னை சொதப்பல் கிங்ஸ்! * டிரினிடாட் அணி அசத்தல் வெற்றி

சென்னை: சாம்பியன்ஸ் லீக் போட்டியில் முன்னணி பேட்ஸ்மேன்கள் சொதப்ப, சென்னை அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
Continue reading சென்னை சொதப்பல் கிங்ஸ்! * டிரினிடாட் அணி அசத்தல் வெற்றி

மனநிலை பாதிக்கப்பட்டதை காரணம் காட்டி விவாகரத்து பெறலாம் : சுப்ரீம் கோர்ட் உத்தரவு

புதுடில்லி : “மனநிலை பாதிக்கப்பட்டதற்கு ஆதாரம் காட்டி, கணவனாக இருந்தாலும், மனைவியாக இருந்தாலும், விவாகரத்து பெற முடியும்’ என, சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது.
Continue reading மனநிலை பாதிக்கப்பட்டதை காரணம் காட்டி விவாகரத்து பெறலாம் : சுப்ரீம் கோர்ட் உத்தரவு

பற்றாக்குறையை போக்க வெளிச்சந்தையிலிருந்து மின்சாரம்:முதல்வர் அதிரடி முடிவு

சென்னை:”தேசிய மின் நிலையங்களில் இருந்து, தமிழகத்துக்கு வழங்கப்படும் மின்சாரத்தின் அளவு குறைந்ததே, கடந்த சில நாட்களாக நிலவும் மின் வெட்டுக்கு காரணம்.

Continue reading பற்றாக்குறையை போக்க வெளிச்சந்தையிலிருந்து மின்சாரம்:முதல்வர் அதிரடி முடிவு

வீடு தேடி வரும் முதியோர்களுக்கான புதிய சேவை:தபால் துறை விரைவில் அறிமுகம்

சென்னை:சென்னையில் முதியோர் வசதிக்காக பணம் பெறுதல், கொடுத்தல் உள்ளிட்ட சேவைகளை, தபால் ஊழியர்கள் வீட்டிற்கே சென்று வழங்கும் புதிய திட்டத்தை, இந்திய தபால் துறை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது.
Continue reading வீடு தேடி வரும் முதியோர்களுக்கான புதிய சேவை:தபால் துறை விரைவில் அறிமுகம்

காந்தியடிகள் 143வது பிறந்த நாள் விழா:தமிழக கவர்னர், முதல்வர் மரியாதை

சென்னை:காந்தியடிகளின் பிறந்த தினமான நேற்று, அவரது சிலைக்கு தமிழக கவர்னர் ரோசையா மற்றும் முதல்வர் ஜெயலலிதா, மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
Continue reading காந்தியடிகள் 143வது பிறந்த நாள் விழா:தமிழக கவர்னர், முதல்வர் மரியாதை

துபாயில் கோலாகலமாக தொடங்கிய 2ம் உலகத் தமிழர் பொருளாதார மாநாடு

துபாய்: துபாயில் இரணடாம் உலகத் தமிழர் பொருளாதார மாநாடு அக்டோபர் 1ம் தேதியான நேற்று தொடங்கியது. 4 ஆம் தேதி வரை இது நடைபெறுகிறது.

Continue reading துபாயில் கோலாகலமாக தொடங்கிய 2ம் உலகத் தமிழர் பொருளாதார மாநாடு

தெலுங்கானா:சோனியாவிடம் அறிக்கை

புதுடெல்லி, அக்.1:ஆந்திர மாநில மக்களை ஆட்டிப் படைத்து வரும் தெலுங்கானா பிரச்சனைக்கு எத்தகைய முடிவு எடுப்பது என்பது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் இன்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் அறிக்கை அளித்தார்.
.
தெலுங்கானா மாநிலத்தை தனி மாநிலமாக பிரிக்க வேண்டும் என்று வலியுறுத்தி அப்பகுதியை சேர்ந்த சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்தார்கள். ரெயில் மறியல், பந்த் என 18வது நாளாக தெலுங்கானா போராட்டம் நடைபெற்று வருகிறது.

இப்பிரச்சனைக்கு தீர்வு காண காங்கிரஸ் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் ஆகியோரின் கருத்துக்களை கேட்டு அறிக்கை அளிக்குமாறு குலாம்நபி ஆசாத்தை காங்கிரஸ் தலைமை கேட்டுக் கொண்டிருந்தது. குலாம் நபி ஆசாத் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மத்திய, மாநில அமைச்சர்கள், சட்டமன்ற நாடாளுமன்ற மற்றும் மேலவை உறுப்பினர்கள் ஆகியோரை சந்தித்து அவர்களின் கருத்துக்களை கேட்டார்.

தெலுங்கானா, ராயலசீமா மற்றும் கடலோர ஆந்திர பிரதேசத்தை சேர்ந்த அனைத்து தரப்பினரிடமும் கருத்து கேட்கப்பட்டது. அந்தந்த பிரதேசத்தை சேர்ந்தவர்கள் தங்கள் பிரதேசம் சார்ந்த நிலையை எடுத்துரைத்ததாக தெரிகிறது. அவர்களின் கருத்துக்களை கடந்த 3 மாதங்களாக கேட்டறிந்த பிறகு விவர அறிக்கை ஒன்றை குலாம் நபி ஆசாத் தயாரித்ததாக தெரிகிறது.

இன்று காலை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்து அவர் இந்த அறிக்கையை அளித்திருக்கிறார்.இதனை தொடர்ந்து தெலுங்கானா பிரச்சனையில் மத்திய அரசு விரைவில் ஒரு முடிவை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

திருச்சி மாநகராட்சி தி.மு.க. மேயர் வேட்பாளர் அறிவிப்பு

தி‌ரு‌ச்‌சி மாநகரா‌ட்‌சி மேய‌ர் ப‌த‌வி‌க்கு விஜயா ஜெயராஜ் போ‌ட்டி‌யிடுவா‌ர் எ‌ன்று ‌தி.மு.க. தலைவ‌ர் கருணா‌நி‌தி இ‌ன்று அ‌றி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

த‌ிரு‌ச்‌சி‌‌ மாநகரா‌ட்‌‌சியுட‌ன் ‌திருவெறு‌ம்பூ‌ர் பேரூரா‌ட்‌சியை இணை‌த்தது செ‌‌ல்லு‌ம் எ‌‌ன்று செ‌ன்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ம் நே‌‌‌ற்று மு‌ன்‌தின‌ம் ‌தீ‌ர்‌ப்ப‌ளி‌த்தது.

இதை‌த் தொட‌ர்‌ந்து திருச்சி மாநகராட்சிக்கு வரு‌ம் 17ஆ‌ம் தேதி தேர்தல் நடை பெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதற்கான வேட்பு மனு தாக்கல் நேற்று தொடங்கியது. மனுதாக்கல் செய்ய 7ஆ‌ம் தேதி கடைசி நாளாகும்.

திருச்சி மாநகராட்சி மேயர் பதவிக்கு அ.தி.மு.க. சார்பில் ஜெயாவு‌ம், ம.தி.மு.க. சா‌ர்‌பி‌ல் டாக்டர் ரொக்கையாவு‌ம் போட்டியிடுகி‌ன்‌றன‌ர்.

இத‌னிடையே தி.மு.க. சார்பில் மேயர் பத‌வி‌க்கு விஜயா ஜெயராஜ் போட்டியிடுவார் என்று அ‌க்க‌ட்‌சி‌த் தலைவர் கருணாநிதி இ‌ன்று அறிவித்‌து‌ள்ளா‌ர்.