ஸ்ரீ ஜயேந்திரர்

நாம் வீட்டில் இறைவனை வணங்கும்போது தெற்கு நோக்கி வணங்கக்கூடாது. அதற்கு தகுந்த மாதிரி படத்தை எந்த திக்கு நோக்கி வேண்டுமானாலும் வைக்கலாம். இறைவனின் படங்களை வைப்பதற்கு திக்கு நியம்ம் கிடையாது.

மாரியம்மன் உட்கார்ந்த நிலையிலும் இருக்கலாம். நின்ற நிலையிலும் இருக்கலாம். அதனால் தோஷம் இல்லை. ஆனால் முறையான பூஜை அவசியம் செய்ய வேண்டும்.

பழைய படங்கள் செல்லரித்து விட்டால் அவற்றை ஜலத்தில் போட்டுவிடவும்.

கோவிலில் கொண்டாடப்படுவது திருவிழா. வீட்டில் கொண்டாடப்படுவது பண்டிகை.

நல்லெண்ணெயை ஊற்றி விளக்கேற்றுவது மிகவும் விசேஷமாகும்.

காலை, மாலை இரண்டு வேளையிலாவது விபூதி அணிய வேண்டும்.

வேலுடன் கூடிய பாலமுருகன் படம் வீடுகளில் இருக்கலாம். ஆனால் முருகன் தலைக்கு மேல் வேலின் நுனி பகுதி இருப்பது போல் படம் அமைதல் கூடாது.

கோபுரத்தின் பிரதான வாயில் மேல் உள்ள கலசம், கோபுரத்தைப் பக்தனுக்குக் காட்டுவதாகும் . தன் மூலமாக சூரிய ஒளி கோயில் கர்ப்பகிரஹகம் வரை செல்லவும் உதவுகிறது.

திருமணத்தில் எதர்மாலை போடுதல், அன்பைப் பரிமாறிக் கொள்வதாக நடைபெறுகிற சடங்காகும்.

கைரேகை சரியாக இருந்தால்தான் கைராசி வரும்.

கடவுளை நம்புவதுதான் சிறந்தது. மனசாட்சி அடிக்கடி மாறிக் கொண்டே இருக்கும். ஆகவே கடவுள் நம்பிக்கையை மாறாமல் பின்பற்றுவது சிறந்தது.

இறைவனின் திருவடியாக கோபுரத்தை நிர்ணயம் செய்துள்ளார்கள். எப்போது கோபுர தரிசனம் செய்தாலும் கோடி புண்ணியம்தான் என்று உபசாரமாகச் சொல்வது வழக்கம்.

தக்ஷிணாமூர்த்தியை, அவருக்கு எதிரே உட்கார்ந்துகொண்டு ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தியே நம என்று அவர் நாமத்தை ஜபிக்க வேண்டும்.

கைகால் கழுவிக் கொண்டு நெற்றி இட்டுக்கொண்டு படிப்பது நல்லது. நீராடியபிறகு செய்வது உத்தம்ம்.

இந்துகளுக்கு அனைத்துக்கிழமைகளும் விசேஷம். அதில் முக்கியமாக சிவனுக்குத் திங்களும், அம்மனுக்கு வெள்ளி, விஷ்ணுவிற்கு சனிக்கிழமை விசேஷமாகிறது. இடையூறின்றி நமது பிரார்த்தனை நிறைவேறுவதற்காக விநாயகரை முதன் முதலில் வழிபட வேண்டும்.

திருமணமான வருஷத்தில் மாமனார் மாமியாரை காசிக்கு அனுப்பக்கூடாது. அடுத்து வரும் ஆண்டில் அனுப்பலாம்.

வாழ்நாளில நாம் நல்ல பணிகளை – அறச்செயல்களைச் செய்தல் நல்ல பலன் கிட்டும். தீமைகள் செய்தால் தீய பலன் கிட்டும். இதுதான் கர்ம்பலன் (தலைவிதி) என்னும் சித்தாந்தம்.

மூலஸ்தானத்தில் பவிதரத்திற்காக அர்ச்சனை செய்யப்படுகிறது. பொது மக்களுக்குப் பக்தி வருவதற்காக உற்சவங்கள் நடைபெறுகின்றன. ஊர்மக்கள் ஒன்று கூடி சமுதாய ஒற்றுமைக்காக தேரோட்டம் ஏற்பட்டது.

இறைவன் யாரையும் எப்போதும் தண்டிப்பதில்லை. மன்னிப்பதுதான் அவர் இயல்பு.

மறுஜென்மம், விதி, வினை இரண்டின் பயனாகத்தான் வருகிறது. அவைகளின் வேகத்தைக் குறைப்பதற்குக் கடவுளை கும்பிடுவதும், நவக்கிரஹங்களைக் கும்பிடுவதும் வழக்கத்தில் உள்ளது. இதை வைத்துத்தான் தலைக்கு வந்தது தலைப்பாகையுடன் போயிற்று என்ற பழமொழியும் வந்தது.

அர்ச்சனை ஈசுவரன் பெயருக்குச் செய்வதுதான் உத்தம்ம். நமக்கு ஏதாவது பிரார்த்தனை இருந்தால் அப்போது மட்டும் நமது பெயரில் செய்யலாம்.

நாம் எல்லாரும் இறைவனின் குழந்தைகள், குழந்தைகள் தெரியாமல் செய்யும் தவறுக்காக தாய் கோபித்துக் கொள்வாளா என்ன? மண்ணைத் தின்னாதே, சேற்றில் விளையாடாதே என்று அம்மா நம்மைத் திட்டுவதும் நம்மீது உள்ள அக்கறையில்தான்.

இறைவனைத் தரிசிப்பதற்கு புறத்தூய்மையைவிட மனத்தூய்மைதான் முக்கியம். கை, கால்களை நன்கு அலம்பிவிட்டு, நெற்றியில் மங்களச் சின்னங்களை இட்டுக்கொண்டு சென்றால் போதும்.

சமையலறையில் ஸ்வாமியை வைத்து வழிபடுதல் உகந்தது அல்ல. தெற்குப் பக்கம் நமஸ்காரம் செய்யாமல் இருக்கும்படிப் பூஜைப் படங்களை வைத்துக் கொள்ளலாம்.

காணிக்கை பிரதானமல்ல. நல்ல நம்பிக்கையோடு பிரார்த்தனை செய்வதுதான் விசேஷம். காணிக்கை செலுத்துவதாக வேண்டிக்கொண்டால் அவசியம் அதைச் செலுத்தியே தீர வேண்டும்.

தனியாக சிவலிங்கம் மாத்திர்ம வைத்துப் பூஜை செய்யக்கூடாது. விநாயகர், சுப்ரமண்யர், அம்பாள் ஆகியவற்றுடன் வைத்துப் பூஜை செய்யலாம்.

கோவிலில் தரிசனம் செய்த பிறகு சிறிது நேரம் அங்கேயே உட்கார்ந்துவிட்டு நேராக வீட்டிற்கு வர வேண்டும். அப்போதுதான் தரிசனம் செய்த பலன் வீட்டிற்குக் கிடைக்கும்.

நம் பரம்பரையான இந்து சமயத்தில் நெற்றியில் விபூதி இடுவது வழக்கம். நாம் வணங்கும் கடவுள்களே நெற்றியில் விபூதி, குங்கும்ம் வைத்திருப்பதால் நாமும் அணிவது அவசியம்.

விபூதியும் குங்குமமும் இறைவனின் பிரசாதங்கள். எனவே இதில் பயப்பட ஒன்றுமே இல்லை. ஆகவே விபூதி, குங்கும்ம் கண்டிப்பாக தரித்துக் கொள்ள வேண்டும்.

மனம் தூய்மையாக இருந்தால் கோயிலுக்குப் போக வேண்டிய அவசியமே இல்லை. ஆனால் கோயிலுக்குச் செல்வதென்றால் குளித்துவிட்டுத்தான் செல்ல வேண்டும்.

கடவுளால் உலகம் படைக்கப்பட்டாலும் ஒவ்வொருவருக்கும் அதிகாங்கள் அளிக்கப்பட்டுள்ளது. அதல் நவக்கிரகங்கள் வேலை ராகுகாலம், எமகண்டம் போன்றவை. அந்த சமயங்களில் மனிதர்கள் சத்காரியங்களில் ஈடுபடக்கூடாது.

அவரவர்கள் வினைப்பயன்தான் சோதனைகளுக்குக் காரணமே தவிர மற்ற எதுவுமே இல்லை.

உலகம் முழுவதும் உள்ள உயர்களும் க்ஷேம்மாக இருக்க வேண்டும் என்பதற்காக இறைவன் பெயருக்கு அர்ச்சனை செய்வது சிறப்பு. பிறந்த நாள் போன்ற நாட்களில் நமது பெயருக்கு அர்ச்சனை செய்யும்போது ஜாதகப் பெயரில்தான் செய்ய வேண்டும்.

கடவுளைக் கும்பிடுவது அவரவர் சுபாவம். நம்பிக்கையைப் பொறுத்தது. நற்செயல்கள் செய்வதே கடவுளை வணங்குவதற்குச் சமம். தாயைத் திட்டினாலும் பிள்ளை இல்லை என்று ஆகுமா? தன்னைக் கும்பிடவில்லை என்று ஆகுமா? தன்னைக் கும்பிடவில்லை என்பதற்காக யாரையும் ஒதுக்கமாட்டார் கடவுள். கருணை உள்ளத்துடன் அவர்களுக்கும் உதவுவார்.

என்றைகுக்கும நம்மை ஆண்டுக்கொண்டே இருப்பதால் ஆண்டவன் என் சொல்லப்படுகிறார்.

தூய்மையான இடத்தில் அமர்ந்து உள்ளத்தை ஒருமுகப்படுத்தி இறைவன் பெயரை ஜபித்தால் முழுபலனும் கிடைக்கும்.

இறைவனைப்பற்றி யாருமே பயப்படத் தேவையில்லை. நமக்கு மிகவும் நெருங்கிய நண்பரைப் போலத்தான் இறைவனை தரிசிக்க வேண்டும். அதனால் இறைவன் மீதான பக்தியை குழந்தைகளிடம் ஏற்படுத்தலாம்.

மணவாழ்க்கையில் புரஷனை வைத்துத்தான் பெண்ணிற்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

மண், மஞ்சளால் செய்த விக்ரகங்கள் நிலையானதாக இருக்காது. அதனால் அவற்றை கடலில் போட்டுவிடவேண்டும். வீட்டில், மண்ணால் செய்த விக்ரகங்கள் என்றால் கிணற்றிலோ, குளத்திலோ போடலாம். அதற்காக இறைவன் திருவுருவத்தைக் கட்டையைக் கொண்டு அடிப்பதோ, மிதித்து உடைப்பதோகூடாது. அவ்வாறு செய்வது மிகவும் பாவம்.

சில பாவபுண்ணியங்கள் செய்பவரைச் சேரும். சில சந்ததியினரைச் சேரும். அது அவரவர் செய்யும் செயல்களைப் பொறுத்தது.

நல்ல கர்மங்கள் நல்ல செயல்களைத் தொடர்ந்து செய்து வாருங்கள். இறைவன் மீது முழு நம்பிக்கை வைத்து தொடர்ந்து நற்செயல்களைப் பக்தியுடன் செய்து வந்தால் பலன் நிச்சயம் கிடைக்கும்.

தாலி மிகவும் மங்கலகரமான பொருளாகும். அதை மாற்ற ஆபரணங்களைப் போலக்கழற்றி எடுத்து மாட்டி வைப்பது சரியல்ல. விசேஷ புண்ணிய காலங்களில் அல்லது தாலி கயிறு நைந்துபோகும் நேரங்களில் வேறு கயிறு மாற்றிக் கொள்ளலாம்.

நமது அனுபவத்தாலும், உணர்வுகளினாலுமே கடவுளை உணர முடியும். அவரவர்களுடைய நம்பிக்கை, கடவுள் விசுவாசம் மூலம் இறைவனைத் தெரிந்து கொள்ளலாம். இறையைப் பற்றி அறநூல்களில் சொல்லப்பட்டுள்ள கருத்துக்களையும், வழிமுறைகளையும் பின்பற்றி, கடவுளை அறிய நம்பிக்கையுடன் முயற்சி செய்தால் நிச்சயம் அவரை உணரலாம்.

மனதில் ஓட்டங்கள் எல்லாம் மெதுவாக ஓயும் நேரம்தான் இரவு. அதனால் தூங்கும் முன்பு உட்கார்ந்து தியானம் செய்யலாம். இதனால் மனதுக்கு அமைதி கிடைக்கும். தூக்கமும் நன்கு வரும்.

மனதுக்கும் உடலுக்கும் சரியான பயிற்சியாக தியானம் அமையும். இவ்வாறு தொடர்ந்து செய்தால், நன்கு பக்குவப்பட்ட நிலையை அடையலாம்.

பூஜை அறையில் இருக்கும் சாமி படங்கள், நல்லவையாக இருக்கும் வரையில் அதற்குப் பூஜைகள் செய்யலாம். ஆனால் படங்கள் கிழிந்தோ, பூச்சிகளால் அரிக்கப்பட்டோ இறைவன் உருவம் முழுவதும் தெரியாமல் இருக்கமானால் அதை வைத்து வழிபடுவது நல்லது அல்ல. இந்த படங்களை வீட்டில் வைத்துக் கொள்ளாமல் அருகில் இருக்கும் கோயில்களில் கொடுத்துவிடலாம்.

ஆலயங்களுக்குச் செல்லும்போடு வேறு விஷயங்களில் மனம் செல்லக்கூடாது. வீண் வம்பு பேசக்கூடாது. யாரையும் திட்டுவதோ, ஒருவரை மற்றவர் புகழ்ந்து வணங்குவதோ கூடாது. பிரசாத்த்தை மரியாதையுடன் எடுத்து வரவேண்டும். கீழே போடக்கூடாது.

இந்த, பூமி, பூமாதேவி என்றும் – பாரதமாதா என்றும் பெண் வர்க்கமாகவே அழைக்கப்பட்டு வருகிறது. பூமிதேவியானவள் பொறுமைக்கு இருப்பிடமானவள்.

எல்லாவித பயிர்களும் உண்டாவதற்கு ஆதாரமானவள். பூமாதேவி இல்லையென்றால் உலகமே இல்லை.

மனிதவர்க்கத்தில் ஆண்- பெண் இரண்டு வகை பூமிதேவி போல் வாழ்க்கையில் ஏற்படக்கூடிய எல்லா வித சுகதுக்கங்களுக்கும் ஆதாரமாக உள்ளது பெண் இனம்.

வாழ்க்கை என்பது ஆண்- பெண் இருவரையும் பொதுவாக்க் கொண்டாலும் பெண்ணின் மூலமாகத்தான் வாழ்க்கை ஒளிவீசுகிறது. ஒரு நல்ல பெண்ணைப் பார்த்தால் கிரஹலக்ஷ்மி வந்து இருக்கிறாள் என்று சொல்வார்கள்.

பூமியைத் தண்ணீர் விட்டு நன்றாக உழுது, பண்படுத்தி பிறகு நெல்லைப் போடுவார்கள். அப்படி நெல்போட்ட பிறகும் நெல் நன்றாக விளைவதற்கு பூமிக்குத்தான் உரமிடுவார்கள்.

ஒரு சமுதாயம் வளரவேண்டுமானால், நெல் போன்ற ஆண்களைக் காட்டிலும் பூமி போன்ற பெண்களுக்குத்தான் அதிக காரியங்கள் செய்ய வேண்டி இருக்கிறது. நெல்வளர்ச்சிக்கு இடையூறாக முளைக்ககூடிய களைகளை பூமியில் இருந்து எடுத்து வெளியே எறிவார்கள். நெல் வளர்வதற்கு பூமிக்குத்தான் அதிக காரியங்கள் நடைபெறுகின்றன. ஆனால் நெல்லுக்கல்ல.

அதுபோல் இந்த மனித சமுதாயத்தில் வாழ்க்கையில் ஏற்படக்கூடிய சுகதுக்கங்களை எல்லாம் பொறுத்துக்கொண்டு பெண் இனம் வாழ்ந்தாலும், அதனால் வரக்கூடிய கௌரவம் குடும்பத் தலைவனுக்கே ஏற்படுகிறது.

ராணுவம் போன்ற பொறுப்புகளைத்தாங்கும் பெண் இனம் சொந்தப்பணிகளையும் வீட்டுப் பணிகளையும் நன்றாகச் செய்தால், அதன் பெருமை – புகழ் எல்லாம் கணவரைச் சேரும். பெண்களையும் புகழ்வார்கள்.

தற்காலத்தில் ஆண்களுக்குச்சம்மாக பெண்கள் இருக்க வேண்டுமென்று எல்லாத்துறையிலும் முயற்சிக்கப்பட்டு வருகிறது. எவ்வளவு சமத்துவம் கொடுத்தாலும் ஆண் இனத்திற்கும் பெண் இனத்திற்கும் இருக்கக்கூடிய சில குணங்களை சில செய்கைகளை யாராலும் மாற்ற முடியாது.

பூமி நன்றாக இல்லாவிட்டால், எந்த விதை போட்டாலும் நன்றாக விளையாது. பூமி நன்றாக இருந்துவிட்டால் விதை சுமாராக இருந்தாலும் பூமிக்கு உரத்தைப் போட்டு ஒருமாதிரியாக பயிர் பண்ணிவிடலாம்.

ஒரு மரத்தினால் யானை போன்ற பொம்மைகள் செய்யப்பட்டிருக்கின்றன. அந்த மரத்தில் யானையும் இருக்கிறது. மரத்தின் தன்மையும் இருக்கிறது.

இரண்யகர்ப்பம் என்ற சொல்லுக்கு தங்கமயமான கருவறை என்று பொருள். அதாவது எல்லா ஜீவராசிகளையும் பிரளய காலத்தில் ஜோதி – வடிவமாக உள்ள இறைவனிடத்தில் லயப்படுத்தி இருப்பதால், அந்த ஜோதி உருவமும் தங்கத்தின் உருவமும் ஒரு வடிவமாக இருப்பதினால் இரண்யகர்ப்பம் என்ற பெயர் உண்டாகிறது.

ஒரு பெரிய நிலைக்கண்ணாடியின் முன்பு நின்று கொண்டு, நாம் நமது உடலுக்கு அலங்காரம் செய்து கொள்கிறோம். கண்ணாடியில் நமது உருவம் நன்றாக இல்லாவிட்டால், நமது உடல் நன்றாக இல்லையென்று எண்ணி மேலும் நம்மை அலங்கரித்துக் கொள்கிறோம். ஆகவே உண்மை வேறு- பிரதிபிம்பம்- நிழ்ல் வேறாகத் தோன்றினாலும் நிழலும் – பிரதிபிம்பமும் உடலைவிட்டுத் தனியாக இருப்பதில்லை.

மனிதன் ஒருவனைத் தவிர மற்றப் பிராணிகள் செய்யக்கூடிய எந்தக் காரியத்திற்கும் புண்யம், பாவம் இரண்டும் பிரதிபலமாக வராது. ஏனென்றால் விசேஷ பகுத்தறிவோடு கூடிய மனிதன் செய்யும் ஒவ்வொரு செய்கைக்கும், புண்ணியம் பாவ பலன் உண்டு.

கலியுகத்தில் பக்தியே உயர்ந்தது என்று – அநேக புராணங்கள் கூறுகின்றன. இந்த நாம பஜனை பக்தியின் மூலம் மனிதன் தன்னை மறந்து, தன் உடலை மறந்து, இறைவன் புகழைபாடும் பொழுது, இறைவன் இவன் மனத்திலே குடிகொண்டு இவனை ஆனந்தப் பரவசத்தில் ஆழ்த்துகிறான்.

பகவானைப் பற்றிச் சொல்லக்கூடிய கீதங்களைப் பாராயணம் செய்தாலே புண்ணியம் கிடைக்கும். ஆனால் பகவத் கீதையைப் பாராயணம் செய்வதோடு நிறுத்திக்கொள்ளாமல், அதில் கூறப்பட்டவற்றைச் செயல் முறைக்கும் கொண்டுவந்தால் முழுப்பலனும் கிட்டும்

ஸர்வ துக்கத்தையும் போக்குவதற்கு சதா ஈச்வரனையே நினைத்தால் மனதுக்கு சாந்தி ஏற்படும் சந்தோஷம் இரண்டுவிதம், ஒன்று பேரின்பம்; மற்றொன்று சிற்றின்பம்.

பகவானுக்கு நாம் ஏதாவது ஒன்றைக் கொடுக்க வேண்டுமானால் அவரிடம் இல்லாத்தைத் கொடுக்க வேண்டும். அவரிடம் இல்லாத்து ஒன்றுமே இல்லை என்று சொல்லிவிடலாம். அவரிடம் இல்லாத பொருள் நம்மிடம் இருக்கும் மனம் ஒன்றுதான். அந்த மனத்தை அவரிடம் அர்ப்பிட்டுவிட வேண்டும்.

மற்ற எல்லா மதங்களிலும் எங்கும் என்றும் நிறைந்த கடவுள் ஒருவரே என்று விதித்திருக்கிறார்கள். ஆனால் ஹிந்து மத்த்தில் பகவான் பல்வேறு ரூபங்களையும் எடுக்கிறார்.

சிவசாரியர்கள் தாம் பகவானைத் தொட்டுப் பூஜை செய்யலாம். மற்றவர்கள் பகவான் எழுந்தருளியிருக்கும் கர்ப்ப கிரஹத்தில் கூட நுழையமுடியாது. நுழையக்கூடாது. எல்லொரும் பகவானைத் தொடக்கூடாது.

அம்பாள் ஆராதனைக்குச் சிறப்பான நாட்கள் செவ்வாய்க்கிழமையும், பௌர்ணமியும் ஆகும். இந் நாட்களில் அம்பாளை ஆராதித்தால் நம்க்குக் கிட்டாத்து ஏதும் இல்லை.

நம் வீட்டுக் குழ்ந்தையை நாம் பாராட்டிச் சீராட்டி வளர்ப்பதென்றால் பிற குழந்தைகளுக்குத் தீங்கு நினைக்கிறோம் என்று பொருள் அல்ல.

நமது குழந்தையை நல்ல முறையில் வளர்ப்பது நமது ஆனந்தத்திற்கும் திருப்திக்கும்தான். அதுபோல் நாம் நமது சமயத்தை வளர்த்தால் நம் வாழ்க்கை உயரும். இறைவன் அருளும் பெருகும்.

சினிமாவுக்குப் போவது ஒரு புறமிருந்தாலும் வாரம் ஒரு முறையாவது கோயிலுக்குச் சென்று வருவதை வழக்கப்படுத்திக்கொள்ள வேண்டும்.

வாரம் ஒரு முறையாவது ஒன்று கூடி இறைவனை வழிபட்டு திருவிளக்குப் பூஜை, சமய வகுப்பு போன்றவற்றை நடத்தி கோயில்களை ஒளிமயமாகச் செய்யவேண்டும். அப்பொழுதுதான் நமது வாழ்க்கையும் ஒளிமயமாகத் திகழும்.

இந்து – சமயம் அடிவேர் பரவிய பழம்பெரும் மரம். அதன் நிழலில் வாழும் மக்கள் சமயப்பற்றுடமும் திடமான பக்தியுடனும் இருந்தால் தான், அதன் பலன் பரம்பரைக்கு கிடைக்கும்.

பொதுவாகப் பற்று, கூடாது என்று நம்முடைய மதம் சொல்லுகிறது. ஆனால் கடவுளின் பற்றைப் பற்றி வெளிச்சம் இருக்கிற இடத்தில் இருக்காது. வெளிச்சம் வந்ததும் அங்குள்ள பொருள்கள் நன்றாகத் தெரியும். ஞானம் உதயமாகிவிட்டால் எல்லா பொருள்களுக்கும் நன்றாகத் தெரியும்.

கடவுளுக்குத் தூக்கமோ கவலையோ, சண்டையோ மனவருத்தமோ ஒன்றுமே கிடையாது. அவருடைய ஸ்வரூபத்தை நாம் பரிபூரணமாக அறிந்து கொள்வதனால் நாமும் அவராகவே ஆகிவிட நினைத்துப் பிறகு அவராகவே ஆகிவிடுவோம். அபடி ஆகிவிட்டால் நமக்கு கஷ்டம் கவலை முதலியவை இருக்காது.

கறபூரம் இருந்தால் மட்டும் போதாது; தீக்குச்சியும் சிறப்பாக அமையவேண்டும். அது போல ஆசிரியர்களும் சிறந்தவர்களாக இருக்கவேண்டும். அப்பொழுதான் கற்பூரமும் பிரகாசிக்கமுடியும். எனவே ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் பெரிய பொறுப்பு இருக்கிறது என்பதை உணர வேண்டும்.

சிலர் தலை நரைத்து உடல் சுருங்கி, கிழவர்களான பிறகும் கூட ஆசையை விடமாட்டேன் என்கிறார்கள். ஆசை மட்டும் பால்யமாகவே இருக்கிறது.

கோவில் என்பது தனிமனிதனின் சொத்தல்ல. தேசத்தின் சொத்து. தேசத்துரோகம் எவ்வளவு பெரிய குற்றமோ, அதைவிடப் பெரிய குற்றம் தெய்வத்தினுடைய பொருள்களில் கைவைப்பது.

குரங்கு தன் குட்டியை மடியில் வைத்துக் கொண்டு மரத்திலிருந்து மரம் தாவும் போது குட்டி குரங்கைப் பலமாகப் பிடித்துக் கொள்கிறது. இதற்குத்தான் குரங்குபிட என்று பெயர். ஈச்வரன் மீது நாம் கொள்ளும் பக்தி குரங்குப் பிடியாக இருக்கவேண்டும்.

நம் மனம் ஆடாமல் அசையாமல் ஒரு பொருளைப் பற்றியும் நினைக்காமலிருந்தால், நாம் நம்முடைய உண்மையான ஆனந்த ஸ்வரூபத்தைப் பார்த்து அனுபவிக்க முடியும்.

நம் மதங்களை நம் மன நிம்மதிக்காக, நம் பொழுதை நலமாக்க, நம் சாந்திக்காக ஏற்ப்பட்டவைகளாகும். நம்பிக்கை கொண்டு, த்த்துவம் தெரிந்து செயற்பட்டு நல்வழியைச் சம்பாதித்துக் கொள்ள வேண்டியது நம் கடமையாகும்.

கிளிக்கு நாம் எவ்விதம் பேசுவதற்கு கற்றுக் கொடுக்கிறோமோ அவ்விதமே பேசுகிறது. அதேபோல்க் குழந்தைகளை நாம் எப்படி பழக்குறோமோ அவ்விதமே அந்தக் குழந்தைகள் விளங்கும்.

கடலில் திமிங்கலம் போன்ற கொடுமையான பிராணிகளும், பவளம், முத்து, போன்ற உத்தமமான இர்த்தினங்களும், இருக்கின்றன. இதே போல் நம் மனத்தில் காமம், க்ரோதம் போன்ற தீய குணங்களும் பிறருக்கு உதவி செய்ய வேண்டும் என்பது போன்ற நல்ல குணங்களும் இருக்கின்றன.

விவாஹம் என்பது ஒரு தாம்பத்திய வாழ்க்கை. கணவன் மனைவி இவ்விருவரும் மனம் ஒத்து அன்புடன் பிரியத்துடன், தர்மகாரியங்கள் செய்து தார்மிகப் பிரஜைகளைத் தேசத்துக்குக் கொடுப்பதாக ஏற்பட்டதே தவிர, வியாபாரம் மாதரி பணத்தையோ பொருளையோ பற்றிப் பேரம் பேசிப் செய்யப்படும் ஒரு வியாபாரக் கேந்திரம் அல்ல.

எப்படியாவது இறைவனிடம் நம் மனத்தைச் செலுத்த வேண்டும். பக்தி செய்ய வேண்டும். இல்லையேல் நமஸகாரமாவது செய்ய வேண்டும். நமஸ்காரம் மிகவும் உயர்ந்தது.

வீரமும் சூழ்ச்சியும் தற்காலிக வெற்றிதேடும் உயாங்கள். ஆனால் நிலையான அழிவில்லாத வெற்றிக்குத் தர்ம்மே முழு முக்கிய சாதனமாக அமைகிறது.

பாரதக்கதையை நோக்கும்போது வீரமும், சூழ்ச்சியும், மற்றும் எத்தனையோ நிறைந்திருந்தாலும், தர்மத்தை அடிப்படையாக்க் கொண்டுதான் வெற்றி கிட்டியிருக்கிறதே தவிர, வீரத்தால்மு சூழ்ச்சியாலும் மட்டும் அல்ல.

சுந்தர்ர் இறைவனிடம் பொன்னும் பொருளும் கேட்டுப் பெற்றதோடு மேலான அருளையும் கேட்டுப்பெற்றார். சுந்தர்ர் கேட்டதையெல்லாம் இறைவனும் அருளினார். ஆனால் நாம் கேட்பதை எல்லாம் இறைவன் அருளுவதில்லை. இறைவன் கொடுத்ததை யெல்லாம சுந்தர்ர உலக மக்களுக்காக வழங்கினார். அதனால் இறைவனும் கொடுத்தார்.

பகவானை அடைவதற்கு இரண்டு வழிகள் உண்டு. ஒன்று கடவுளிடம் பக்தி செய்வது. மற்றொன்று கடமையைச் செய்வது. மற்ற மத்த்தினர்கள் பகவானிடம் பக்தி செலுத்தினால் தான் மோக்ஷம் கிட்டும் என்கின்றனர்.

ஹரிசந்திரன் மனைவியை இழந்தான். மகனை இழந்தான். நாட்டை இழந்தான். ஆனால் ஒன்றை மட்டும் இழக்கவில்ல்லை. அந்த ஒன்றுதான் அவன் எப்பொழுதும் எந்த நிலையிலும் கடைபிடித்து வந்த சத்யம் என்ற தர்ம்ம்.

எந்த நாகரிக பரம்பரையும், நிதானம், தயை, தானம் ஆகியவற்றோடு சத்யம், பிறர் பொருள் விரும்பாமை, அஹிம்சை ஆகியவற்றைப் பிரதானமாக்க் கொண்டிருந்தால்தான் மதிப்புப் பெற்றிருக்கும்.

ஜோதிட சாஸ்திரம் புராணங்களில் விரிவாகக் கூறப்பட்டுள்ளது. ஒரே ஒரு புராணத்தை மட்டும் ஆயுள் முழுவதும் படிக்கலாம். அதில் எவ்வளவு விஷயங்கள் அடங்கியுள்ளன.

எழுத எழுதப் பேனாவில் மை குறைந்து போகிறது. ஆனால் எழுத எழுத எழுதபவனுடைய புத்திமட்டும் குறைவதே இல்லை. மேன்மேலும் வளர்ந்து கொண்டிருக்கிறது.

வாலி, ராவணன், ய்யாதி என்ற மன்னர்கள் காம்ம் என்ற குணத்தால் கஷ்டப்பட்டு அழிந்தார்கள். கோபம் என்ற குணத்தினால் துர்வாஸர் போன்ற மகரிஷிகள் கஷ்டப்பட்டனர்.

காசியில் கங்கையில் ஸ்நானம் செந்தால் பாவம் போகும். மிகவும் புனிதமான க்ஷேத்திரம் காசி. அதேபோல முக்கியமான ஊர்கள் பல உள்ளன. அயோத்தி இராமன் அவதரித்த இடம். அங்கு நாம் இறந்தால் மோட்சம் கிட்டும்.

கரும்பின் ரசம் இனிப்பு. ஆனால் கரும்மைக் கடிக்கும்போது பல் வலிக்கிறது. துன்பம் ஏற்படுகிறது. கரும்பைப் போல மனது என்பதை உணர்த்தத்தான் கரும்பு எனக் கூறுவதுண்டு.

வெளியில் ஒரு காரியத்தை முன்னிட்டுச் செல்லும்போது போகிறேன் என்று சொல்லக்கூடாது. போய்விட்டு வருகிறேன் என்றே சொல்ல வேண்டும்.

மூன்றாவதாக நமக்கு வேண்டியவர் குரு. அவரது அனுக்ரஹம் நமக்கு கிடைக்காவிட்டால் வாழ்க்கை பயனில்லாமல் போய்விடும். நம்மையும் நம்முடைய ஆன்மாவையும் மேம்படுத்துபவர் குரு.

நம்முடைய சொந்தப்பிரச்சினைகளிலிருந்து நாட்டுப்பிரச்சினை வரை எது வந்தாலும் படபடக்காமல், அமைதியாக பொறுமையோடு நன்கு சிந்தித்து நமக்கு இறைவன் கொடுத்திருக்கிற அறிவைப்பயன்படுத்தித் தீர்வு காண வேண்டும்.

நாம் எந்த ஒரு செயலைச் செய்தாலும் அதை நம்பிக்கையுடனும் சிரத்தையுடனும், முயற்சியுடனும் செய்ய வேண்டும். சிறிது காலம் செய்துவிட்டு அந்தச் செயல்பலன் அளிக்கவில்லையே என்று முயற்சியைக் கைவிடக்கூடாது.

நல்ல காரியத்தில் எவ்வளவுக்கு எவ்வளவு நம்பிக்கையுடனும், சிரத்தையுடனும் முயற்சி செய்து வருகிறோமோ அவ்வளவுக்கு அவ்வளவு அதனுடைய பலன் தானாகவே நம்மை வந்தடையும். பரீச்சையில் தோல்வி அடைந்து விட்டோமே என்று ஏங்காமல் முயற்சியுடன் நன்றாகப் படித்துவந்தால் வெற்றி நமதே!

காலையில் எழுந்தவுடம் ஒவ்வொரு மனிதனும் கைகள் இரண்டையும் தேய்த்துப் பழக வேண்டும். இப்படிக் கையைத் தேய்ப்பதும் பழையன நீங்கிப் புதுமையை முழுமையாகப் பார்க்கவேண்டும் என்பதற்கு அடையாளமாகும்.

கோயில் சொத்துக்கள் நம்மிடம் இருந்தாலும் சரி, கோவில் சொத்துக்களின் வருமானம் வந்தாலும் சரி, அவற்றைக் கோவில்களில் ஒப்படைத்து விடுங்கள்.

பகவானிடம் எப்பொழுதும் பக்தி செய்ய முடியாவிட்டாலும் விசேக்ஷ காலங்களில் பக்தி செலுத்தினால் பாவங்கள் மன்னிக்கப்படும்.

ஈசுவரனிடம் குரங்குப் பிடியாகப் பக்தி கொண்டால் ஒரு சிறிதும் தீங்கு நேராமல் குட்டியைக் குரங்கு எடுத்துச் செல்வது போலப் பக்தர்களை பகவான் காப்பாற்றுவார்.

நாட்டின் எதிர்காலம், இளைஞர்களின் கையில் இருக்கிறது. இளைஞர்கள் ஒழுக்கமும், சீலமும், நற்பண்பும் நன்னடத்தையும் உடையவர்களாக விளங்கினால் சமுதாயம் சிறப்படையும். அதற்கு அவர்கள் பெற்ற கல்வி முழுமை பெற்றதாக இருக்கவேண்டும்.

கோயிலில் வழிபடும் போது வழங்கப்படும் விபூதி, குங்கமுப் பிரசாதங்களை ஒவ்வொருவரும் அணிந்து கொள்ள வேண்டும். சிலர் அணிந்து கொண்டு மீதமுள்ளதை கோயிலில் , எங்காவது வைத்துவிட்டுப் போகிறார்கள். அது கூடாது. மீதமுள்ள பிராசாதங்களை வீட்டுக்கு கொண்டு சென்றால் வீடும் சுபிக்ஷம் பெறும்.

கணவன் தன்மனைவி விஷயத்தில் செய்ய வேண்டிய கடமையைச் செய்யாமல் விட்டிருக்கலாம். அதற்காக மனைவி தன் கணவனுக்குச் செய்ய வேண்டிய கடமைகளில் தவறக்கூடாது.

நமது நாடு புனிதமான நாடு. காசி முதல் ராமேஸ்வரம் வரையில் உள்ள எந்த ஊரை எடுத்துக்கொண்டாலும் ஒவ்வொரு ஊரும் இறைவனின் தொடர்போடும், புனிதமான ந்திகளின் தொடர்போடுத், பவித்திரமான மலைகளின் தொடர்போடும் பவித்திரமான மலைகளின் தொடர்போடும் – திவ்வியமான க்ஷேத்திரங்களின் தொடர்போடும் விளங்குகின்றன. இப்படியாகப் புனிததத்துக்குப் புனிதம் சேர்க்கின்றன பாரதநாடு.

ஒரு குளத்தின் கரையில் அநேக தென்னைமரங்கள் இருக்கின்றன. குளத்தில் ஜனங்கள் முழுகும் பொழுதோ அல்லது கையால் உளையும் பொழுதோ அந்தக் குளத்தின் ஜலம் அசைந்து ஆடுகிறது. அந்த ஜலத்தின் அசைவுக்கு ஏற்றவாறு அந்தத் தென்னைமரங்கள் ஆடுவது போல் ஜலத்தில் தென்படும்.

ஆனால் அந்த மரங்கள் ஒன்றும் அவ்வாறு ஆடுவதில்லை. அவைகள் பூமியிலேயே ஸ்திரமாகத்தான் இருக்கின்றன. அதேபோல் ஆகாயத்தில் சந்திரன் பிரகாசிக்கிறான் அந்தக் குளத்தில் அந்தச் சந்திரனின் பிரதி பிம்பம் விழுகிறது.

குளத்திலுள்ள ஜலம் அசையும் பொழுது சந்திரன் ஆடுவதுபோல் நமக்குப் புலப்படும். உண்மையில் சந்திரன் ஒன்றும் ஆடுவதில்லை. ஆனால் ஆடுவது போல் தெரிகிறது? அறியாதவர்கள், சிறுவர்கள் இவர்கள் சந்திர்ன ஆடுகிறது மரம் ஆடுகிறது என்றே கூறுவார்கள்.

ஒவ்வொரு மனிதனும் தூங்கும்போது பரமாத்ம நிலையை அடைந்து வருகிறான். அறியாமை கூடவே இருப்பதினால் அதை உணரும் சக்தி நமக்கு இல்லை. நன்றாகத் தூங்குகையில் எல்லா உறுப்புகளும் அடங்கி ஒடுங்கி வேலை செய்யாமல் இருக்கின்றன.

ஆன்மாவும் அந்தச் சமயத்தில் ஒளியுடனும் ஆனந்த்த்துடனும் இருக்கிறது. தூங்கி எழுந்தவுடன் அறியாமை இருப்பதினால் நான் நன்றாகத் தூங்கினேன். அனந்தமாகத் தூங்கினேன். ஆனால் எனக்கு ஒன்றுமே தெரியாது என்று சொல்கிறோம்.

நம்முடைய உடை அழுக்காய் இருக்கிறதென்று சலவையாளரிடம் போடுகிறோம். அவர்களோ (உவர் மண் முதலியவற்றால்) இன்னும் நன்றாய் அழுக்கு ஏற்றிப் பிற்பாடுதான் அதைச் சுத்தப்படுத்தி நம்மிடம் கொடுக்கிறார்கள். அதுபோல அறியாமையை அகற்றுவதற்கு அறியாமையினால் படைக்கப்பட்ட காரியங்களைச் செய்கிறோம்.

ஒரு மரப்பலகையில் நாற்காலி செய்கிறோம். மண்ணில் பானை செய்கிறோம். பாலில் தயில் உருவாகிறது. இதிலிருந்து பாலின் சக்தி தயிரிலும் – குடம் பண்ணும் சக்தி மண்ணிலும் நாற்காலி செய்யும் சக்தி மரத்திலும் இருக்கிறது என்று தெரிந்து கொள்கிறோம். அப்படி இல்லாவிட்டால் மண்ணிலிருந்து நாற்காலியும் மரத்திலிருந்து குடமும் பண்ணும் சக்தி இருக்க வேண்டும்;அது ஒருக்காலும் இருக்காது. இருப்பதில்லை. ஆகவே காரியத்தின் சக்தி காரணத்தில், அவயகதமாக வெளிப்படையாகத் தெரியாமல் இருக்கத்தான் இருக்கும்.

பத்துப் பதினைந்து வருடங்களுக்கு முன் இருந்ததை விட இப்பொழுது பக்தி மக்களிடையே நிறையத் தென்படுகிறது.ஆனாலும், ஜனங்களுக்குக் கஷ்டங்களும் வியாதிகளும் நிறையவே இருக்கின்றன. இவை நிறைய வரவரப் பக்தியும் மேன்மேலும் வளர்கிறது.இவ்விதம் பக்தி நம்மிடம் வளர்ந்ததும் கூட, துக்கங்களும் வியாதிகளும் அதிகமாக வருவதற்குக் காரணங்கள் என்ன?

ஓரளவுக்கு நமக்குக் கடவுள் பக்தி இருந்த போதிலும், பேராசையும், ஒழுக்கமின்மையும், கட்டுக் கோப்பின்மையும், சுயநலமும் நம்முடைய வாழ்க்கையைப் பிடித்துக்கொண்டுவிட்டன. நமக்கு எவ்வளவு வந்தாலும் , போதும் என்ற திருப்தி நம் மனதில் ஏற்படுவதில்லை. அவ்வளவு பேராசை!

பிறருடைய இன்பதுன்பங்களை நம்முடையவையாக எண்ணிப் பழக வேண்டும்.

நமது உள்ளம் கண்ணாடி போன்றது. கண்ணாடியில் நமது பிரதிப்பிம்பம் தெரிய வேண்டுமென்றால் ரசம் பூசுகின்றோம். அதே போல் நம் உள்ளக்கண்ணாடியில் இறைவனது பிரதிப்பிம்பம் தெரியவேண்டும் என்றால், தூய்மை ஒழுக்கம் என்ற ரசக் கலவையைப் பூச வேண்டும்.

வேதங்களும், தர்ம சாஸ்திரங்களும், இறையுணர்வை ஏற்படுத்திப் பக்தி பண்ணும் முறையைப் போதிக்கின்றன. திருப்பாவையும் திருவொம்பாவையும் இன்னும் சிறப்பாகப் பளிங்கென எடுத்துக் காட்டுகின்றன. இவை சமய வேற்றுமையைக் களைந்து பாமரமக்களும் பக்தியுணர்வு பெற்றுக் கோவிலுக்குப் போகும் முறையையும் பக்தி செலுத்த வேண்டிய பாங்கினையும் எடுத்துரைக்கின்றன.

வைகறையில் துயில் எழுந்து திருப்பாவையும் திருவெம்பாவையும் ஓதி இறைவனை வழிபட்டால் தூய்மை தானாகவே உள்ளத்தை நிறைக்கும். உள்ளக் கண்ணாடியில் இறைவன் நிரந்தர வாசம் செய்து, ஆரா அமுதனாக – ஆனந்தக் கூத்தனாக நலம் சொரிவான்.

பகவான் ஸ்ரீ ராமசந்திர மூர்த்திக்குப் பல பேர் சேவை செய்தார்கள். லக்ஷ்மணன், பரதன், சுக்ரீவன் போன்ற பலர் சேவை செய்தார்கள். அவர்கள் செய்த தொண்டுகளைவிட மிகுந்த தொண்டு செய்தவர் ஆஞ்சநேயர்.

வாழ்க்கையில் நல்ல நிலையை அடைய வேண்டுமென்றால் ஆஞ்சநேயரை உதாரணமாக எடுத்துக்கொள்ளவேண்டும். இப்படி தொண்டினால் சிறந்தவன் ஆஞ்சநேயன்.

ஆஞ்சநேயன் எத்தனையோ பலமுள்ளவனாக இருந்தாலும் இறைவனிடம் வரும்போது கைகட்டித்தலைவணங்கி நிற்பான். அவன் பக்த ஆஞ்சநேயன். தனியாக வரும் போது வீர ஆஞ்சநேயனாகத் தோற்றம் அளிப்பான். அவ்வளவு பெரிய வீரனாக இருந்தும், இறைவனிடம் வரும்பொழுது என்ன வினயம் என்ன அடக்கம், அத்த அடக்கத்தைக் கற்றுக் கொண்டால் நாம் நல்லபடி வாழலாம். நாட்டின் வளர்ச்சியையும் பேணலாம்.

எனவே, ‘கடவுளர் பலர் இல்லை; அவருடைய அருள்தன் பலவகையிலும் நமக்குக் கிட்டுகிற்து’ என்று பொருள் கொள்ள வேண்டும். விநாயகர் ரூபமாகவும் பெருமாள் ரூபமாகவும் சிவன் ரூபமாகவும் அம்பாள் ரூபமாகவும் நாம் இறையருளைப் பல வகையிலே பெறுகிறோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *