புத்தர்

புத்தரிடத்திலே எனக்கு மிகுந்த பற்று உண்டு. இதற்கான காரணத்தைக் கூறுவது கடினம் என்றாலும், என்னுடைய இந்தப்பற்று மதச் சார்புடையதல்ல. புத்த சமயக் கொள்களைகள் பல எனக்குப் பிடிப்பதில்லை என்றாலும், புத்தரின் மோனமும் ஏசுவின் சாந்தமும் என்னைக் கவர்ந்தன.

புத்தரின் உயர்ந்த த்த்துவங்களைக் கல்லிலும் செம்பிலும் வடித்து வைத்தவர்கள், இந்திய நாட்டின் சிந்தனை வளர்த்துக்கு, அதன் அடிப்படை லட்சியங்களுக்கு உருவம் தர முயற்சித்திருக்கிறார்கள் என்றே நினைக்கத் தோன்றுகிறது. மலர்ந்த தாமரை மலர்மீது அமர்ந்தபடி, உலகின் ஆசாபாசங்களும் அச்ச உணர்வுகளும் அண்ட முடியாத தூரத்தில், எங்கோ அவர் இருப்பது போல் தோன்றினாலும், அந்த மோன நிலைக்குப் பின்னே நாம இதுவரை அநுபவித்தறியாத, அன்பும், கருணையும் பொங்கிப் பொழிவதைக் காணலாம். அவரின்பாதி மூடிய கண்களைத் தாண்டி வருகிற கருணைச் சுடரொளியால் நம் கனவுகள் புது வடிவம் பெறுகின்றன. காலங்கள் மாறுகின்றன. என்றாலும் புத்த தேவனின் கருணை நம்மைவிட்டு விலகிப்போய்விட்டதாகத் தோன்றவில்லை. அவை நம் காதருகில் ஒலித்துக் கொண்டிருக்கின்றன. துன்பத்தைக் கண்டு ஓடி ஒளியாமல் அவற்றை வெற்றிகரமாகச் சமாளிக்க, – வாழ்வின் உயர்ந்த குறிக்கோளையும், பயனையும் அடைய – அவை நமக்கு உதவுகின்றன.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னே புத்தர் போதித்த அறிவுரைகள், சகிப்புத் தன்மை, தயாள குணம் ஆகியவை முன்பு எப்போதையும் விட இப்போதுதான் மிகவும் அவசியமாகப் படுகின்றன.

அஞ்சாமை, தயாள சிந்தனையை – சகிப்புத் தன்மையை வளர்க்கிறது. புத்தரை நினைக்கிற போதெல்லாம், அவருடைய அன்புள்ளம் – தயாள சிந்தை நம்மை பிரமிக்க வைக்கிறது.

எல்லா நாடுகளுக்கும் செல்லுங்கள், என்னுடைய இந்த உபதேசத்தை எடுத்துச் செல்லுங்கள். எல்லா நதிகளும் கடலில் சங்கமம் ஆவதைப் போல எல்லா சாதிப் பிரிவுகளும் மதத்தில் ஐக்கியமாகின்றன என்பதுதான் புத்தர் தன் சீடர்களுக்குப் போதித்த த்த்துவம் அவரின் இந்த போதனைகள் உலகில் அன்புவளரப் பெருந்துணை புரிந்தன. பகைமையை பகைமையால் வெல்ல முடியாது. பாசத்தால்தான் வெல்ல முடியும். கோபத்தை, அன்பால், தீமையை நன்மையால்தான் போக்க முடியும்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *