சுதந்திரம்

நம்முடைய சுதந்திரத்தின் அடிப்படையும், ஆதாரமும் வெளிநாட்டு உறவுகளில் நமக்குள்ள சுதந்திரத்தைப்பொறுத்து இருகிறது. வெளிநாட்டு உறவுகளில் – நமக்குள்ள சுதந்திரம் நம்முடைய சுதந்திர லட்சியத்துக்குச் சரியான உரைகல் ஆகும்.

எங்கே சுதந்திரம் ஆப்த்துக் குள்ளாகிறதோ, எங்கே சத்தியம் அச்சுறுத்தப்படுகிறதோ, எங்கே ஆக்கிமிப்பு தலை நீட்டுகிறதோ, அங்கே நாம் நடுநிலைமை வகிக்க முடியாத – வகிக்கவும் கூடாது.

சுதந்திரம் – தானாக வரும் பரிசுப்பொருள் அல்ல; போரிட்டுப் பெற வேண்டிய செல்வம் ஆகும்.

பொருளாதார விடுதலை இல்லாமல் அரசியல் சுதந்திரம் இல்லை. சொல்லப் போனால், இல்லாமையால் பட்டினி கிடக்கும் மனிதன் முன், ஏழ்மையில் அவதிப்படும் நாட்டில் ‘சுதந்திரம்’ என்ற பேச்சுக்கே இடமில்லை.

சுதந்திரம் என்பது வெறும் அரசியல் லட்சியமோ புதிய அரசியல் அமைப்போ அதற்கும் மேலான பொருளாதாரத் திட்டமோ கூட அல்ல! சுதந்திரம் என்பது மனித மனத்தையும் சிந்தனையையும் பொறுத்ததாக அமைய வேண்டும். சிந்தனையில் குறுகிய மனப் பான்மை இடம் பெற்று விடக் கூடுமானால், மனதில் பகையும் வெறுப்பும் மிஞ்சிவிடக் கூடுமானால், அங்கே சுதந்திரம் என்பதே இல்லாமல் போய்விடும்.

சுதந்திரம் சமத்துவம், தனிமனித சுதந்திரம், ஆன்ம விடுதலை ஆகியவற்றில் நான் முழு நம்பிக்கை வைத்திருக்கிறேன். நாம் ஜனநாயக முறையோடு பிணைக்கப்பட்டிருக்கிறோம். நம்முடைய லட்சியம் நேர்மையானது. எனவே நாமிதில் நிச்சயமாகப் பின்னடைய மாட்டோம்.

ஆசிய நாடுகள் விழித்தெழுந்து விட்டன. தங்கள் பரம்பரைப் புகழைக் காக்க வீறுகொண்டு நிற்கின்றன. நம்முடைய லட்சியக் கனவுகளின் மேல், தலைமுறை தலைமுறையாக ஆசிய நாடுகள் உருவாக்கி வளர்த்திற்கு – மனிதாபிமானத்தின் மேல் நம்பிக்கை வைப்போம் – உழைப்போம்.

விடுதலை வேட்கை – வெறும் அரசியல் அல்ல; பொருளாதார ஆன்மீக விழைவும் ஆகும். மனித வளர்ச்சியின் லட்சியம் அப்போதுதான் நிறைவேற முடியும்.

தேசீய சர்வ தேசிய விவகாரங்களில் அற நெறியின் அவசியத்தையும் உயர்வையும், உணராத வரையில் நாம் நிலையான சமாதானத்தை அடைய முடியாது.

நம்முடைய குரல் வலிவற்றதாக இருக்கலாம். ஆனால் நம்முடைய குரல் வழங்குகின்ற சேதிகள் வலிவற்றவையல்ல – வளமானவை, பலமிக்க சத்தியத்தின் அடிப்படையில் பிறந்தவை.

வெற்றி கொள்ள முடியாத்தோர் குட்டித் தேவதை சுதந்திரம் என்பது. தனது பக்த கோடிகளில், எண்ணற்ற பேர்களின் சர்வ பரித்தியாகமே அவள் விரும்பிப் பெறுகிற காணிக்ககை.

நழுவிச் செல்லும் ஒரு நண்பனைப்போன்றது சுதந்திரம். அதை அடையத் தருகின்ற விலை அதிகமானது. அதை அடைவதற்கு முன் கடுஞ் சோதனைக்கு வேறு நம்மை அது ஆளாக்குகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *