மொழி

மொழி – ஒரு நாட்டினுடைய தனி மனிதனுடைய வாழ்வின் முக்கிய அம்சமாக இருக்கிறது.

மொழி இயல்பாக மக்களிடையே வளர வேண்டும், எந்த வகையிலும் திணிக்கப்படக் கூடாது. ஒரு குறிப்பிட்ட மொழியை மகள் விருப்பத்துக்கு மாறாகத் திணிக்க எடுக்கப்படுகிற எந்த முயற்சியும் – மிகுந்த எதிர்ப்புணர்ச்சியை – திணிப்பாளர்கள் எதிர்பார்த்ததறகு முற்றிலும் மாறான பலனைத்தான் தரும்.

மொழி பிரச்சினையைப் பொறுத்தவரை நாம் விட்டுக் கொடுப்பவர்களாகவும் ஒத்துப்பொகிறவர்களாகவும் இருக்க வேண்டும். இல்லையென்றால் குழப்பங்கள்தான் உண்டாகும். ஒத்துப்போகிற மனப்பான்மை வந்துவிட்டால், மொழிப் பிரச்சினையில் மட்டுமல்ல, பழமையையும் – புதுமையையும் இணைக்கின்ற நமது பல முயற்சிகளில் வெற்றி பெறலாம்.

பல்வேறு மொழிகள் – அவற்றைப் பேசும் மக்கள் ஒன்று கலந்து இந்த நாட்டை உருவாக்கி இருக்கிறார்கள். இந்த வளர்ச்சியை எண்ணி நாம் பெருமைப்பட வேண்டும். தாய் மொழியில்லாத பிற மொழிகளை அந்நிய மொழிகள் என்று கருதி வெறுத்தொதுக்காமல், எல்லா மொழிகளும் வளரப் பாடுபட வேண்டும். பன்னெடுங்காலமாக இம்மொழிகள், பரந்த இந்த நாட்டின், வெவ்வேறு உடல் உறுப்புகளைப் போல் வளர்ந்து சிறந்திருக்கின்றன. இன்று இவற்றில் ஒன்றுக்குத் தீமை நேரினும் அது நாட்டின் ஒற்றுமை உணர்வுகே தீங்காய் முடியும்.

வளமுள்ள எந்த மொழிக்கும் எழுத்து, இலக்கியத்தின் உயிர்மூச்சு ஆகும். எனவே ஒரு மொழியின் எழுத்தை மாற்றுவது என்பது அதன் அடிப்படையையே மாற்றுவது என்பதாகும். இதனால் இலக்கியத்திலே தோன்றும் புதிய வடிவங்கள் – மாற்றங்கள் பெரிய இடைவெளியை உண்டாக்கிவிடும். மக்களின் வாழ்வோடு பிணிப்புண்டு கிடக்கின்ற நம்முடைய மொழிகளில் எழுத்தை மாற்றியமைப்பது என்பது கொடிய சித்திரவதையாகும்.

இந்திய நாட்டு வரலாறு இந்திய மக்களின் ஒற்றுமை உணர்வையும் – ஒற்றுமைப் பாட்டையும் உருவாக்குவதற்காகவே பாடுபட்டு வந்திருக்கிறார்கள் என்பதற்கு எடுத்துக்காட்டாக இருக்கிறது. இந்திய நாட்டின் வளமான சூழ்நிலை பல கருத்துக்கள் – பண்பாடுகள் ஒன்று கலக்க ஏற்றதாகவே இருந்து வந்திருக்கிறது.

ஒரு மொழி மற்ற மொழிகளிலும் தொடர்பால் வளர்ச்சியுறுகிறது. தனித்துவம் பெற நினைத்தவுடன், அது தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்கிறது. மற்ற மொழிகளோடு தொடர்பு கொள்ள மறுக்கிறது. இந்த நிலை மொழிக்ககு மட்டுமல்ல- நாட்டுக்கும் பொருந்தும். புதிய கருத்துக்களை ஏற்றுக் கொள்ள மறுத்துத் தனித்தியங்கிய நாடுகள் பின்தங்கி விட்டமை உலக சரித்திரம் எடுத்துக் காட்டுகிறது. மனந்திறந்து பிற நாடுகளோடு கொள்கின்ற தொடர்பாலும் கூட்றவாலுமே நாடுகள் வளர முடியும் – மொழிக்கும் இந்நிலை மற்றும் பொருந்தும்.

தமிழகம், கேரளம், ஆந்திரம் அல்லது மற்ற எந்த மாநிலத்தின் மீதாயினும் சரி; அந்த மாநிலம் திணிப்பு என்று கருதுகிறவகையில், எந்த மொழியையும் திணிக்க நாம் விரும்ப மாட்டேன். சென்னை மாநிலம் ‘எங்களுக்கக கட்டாயிந்தி தேவையில்லை’ என்று கூறுமானால், அவர்கள் தங்கள் பள்ளிகளில் கட்டாய இந்தியை ஏற்கத் தேவையில்லை. ‘கட்டாயம்’ என்ற கருத்தையே நான் நீக்கிட விரும்புகிறேன்.

அரசியல் சாசனைத்தை உருவாக்கிவர்கள், இந்திய மொழிகள் பதினான்கையும் இந்தியாவின் தேசியமொழிகள் ஆக்கி இருக்கிறார்கள். எனவே ஒரு குறிப்பிட்ட மொழி, வேறு ஒரு மொழியைவிட முக்கியத்துவம் உடையது என்று பேச்சுக்கே இடமில்லை. வங்காளி, தமிழ் அல்லது மற்ற எந்த மாநில மொழியாயினும் சரி. இந்தியைப்போலவே அதுவும் ஒரு தேசீய மொழியே ஆகும்.

இன்றைய நிலையில் நமது நிர்வாகம் முழுவதையும் இந்தி மயமாக்குவது என்பது முடியாத காரியம் ஆகும். இந்தியை வளர்க்க அரசாங்கம் போதுமான ஊக்கம் தரவில்லை என்பதனால் அல்ல; போதுமான உதவிகளை, ஒத்துழைப்புகளை, அரசாங்கம் தந்தே வந்திருக்கிறது. என்றாலும், இந்த மாற்றங்களைத் திடீரென்று ஒரு நாளைக் குறிபிட்டு, அந்த நாளில் இருந்து ஆங்கிலம் அடியோடு அகற்றப்பட்டு, அதனிடத்தில் இந்தி அமர்த்தப்பட்டிருக்கிறது என்று சொல்வதன் மூலம் உண்டாக்கிவி முடியாது.

இந்தியாவின் இன்றைய முக்கிய குறிக்கோள் அதனுடைய தொழில் வளர்ச்சி, விஞ்ஞான வளர்ச்சி, பொருளாதார வளர்ச்சி, ஆன்மீக வளர்ச்சி, அறிவு வளர்ச்சி. எனவே நம்முடைய ஒவ்வொரு முயற்சியும் அந்த முக்கிய குறிக்கோளை மனத்திற் கொண்டதாக இருக்க வேண்டும். இந்திக்குக கௌரவம் அளித்து அதை இருட்டறையில் கிடக்கச்செய்வதால் யாருக்கு என்ன லாபம்? இதனால் இந்தியாவின் வளர்ச்சி மட்டுமல்ல, நாட்டின் வளர்ச்சியே தடைப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *