மக்கள்

பரிசில்களும் – பாராட்டுகளும் நிறையப் பெற்றிருக்கலாம். ஆனால்மக்களின் அன்பையும் அபிமானத்தையும் போல, பெறத்தக்க பெருஞ் செல்வம் வேறு எதுவும் இல்லை.

இல்லாமை மனிதனை எவ்வளவோ தொல்லைக்கு ஆளாக்கி இருக்கிறது. என்றாலும் உட்பகைகளைக் களைந்து ஒருவனை உயர்ந்த மனிதனாகச் செய்வது சிந்தையிலும் செயலிலும் உள்ள ஒப்புரவுதான் – செல்வச்சிறப்பல்ல.

மனித சமுதாயத்தின் நலத்துக்காக, மனிதன் இன்று பாடுபடுகின்ற இடங்கள்தான், வணங்கத்தக்க கோயில்கள், வழிபடத்தக்க குருத்தவாரங்கள், தொழுகைக்குரிய மசூதிகள்.

காலம் கனிந்திருந்து சூழ்நிலையும் சாதகமாக அமைந்திருந்தால் ஒழிய, மிகப் பெரிய காரியங்களில் எந்த மனிதனும் சுலபமாக வெற்றி காண முடியாது.

தன்னுடைய சிந்தனையில், செயலில் உயர்ந்த குறிக்கோள்களால்தான் மனிதன் வளருகிறான்.

பூக்களின் அழகையும் மணத்தையும் உணர்ந்து அநுபவிக்கத் தெரியாமல், பூக்களின் பெயர்களையும், மற்ற விபரங்களையும் மட்டுமே தெரிந்து வைத்திருக்கிற தாவர நூல் ஆசிரியனைப் போல நம் மக்கள், பல காரியங்களில் திறமை உடையவர்களாக இருக்கிறார்கள். ஆனால் அநுபவ ஞானம் இல்லாதவர்களாக இருக்கிறார்கள்.

சாவையும் வெற்றிக்கொள்ளும் மனித மனத்தின் அஞ்சாமை வியக்கத் தக்கதாகும்.

அச்சத்தில் இருந்து விடுபட்ட மனிதனால்தான் உண்மையை உய்த்துணர முடியும். சிந்தையிலும், செயலிலும் ஒழுங்கைக் கடைப் பிடிக்க முடியும்.

எந்த மாற்றமும் பலவந்தமாகத் திணிக்கப்படக் கூடாது. ஒரு நாட்டில் -சமுதாயத்தில், குல முறைகளைத் தலைகீழாக மாற்றியமைக்க நினைப்பது, விரும்பத் தக்கதல்ல – விரைவில் நடைபெறக் கூடியதும் அல்ல.

எளிமை மிக்க சாந்த குணம் மிருக வெறி பிடித்த அரக்க மனம் – அதாவது நன்மை – தீமை ஆகிய இரண்டின் இருப்பிடமாக மனித மனம் இருக்கிறது. தீமையின் ஆதிக்கம் ஒழிந்து நன்மை மிக வேண்டும். அதுதான் மனித சமுதாயத்தின் வளர்ச்சி.

நாம் பல அரசியல் பிரச்சினைகளைப் பற்றிப் பேசுகிறோம். ஆனால் மனிதாபிமானத்தை, மனித ஆற்றலை நாம் நினைத்துப் பார்க்கவே மறந்து விடுகிறோம். இது பெரிய தவறாகும்! என்னதான் பொருளாதாரப் பிரச்சினைகள் வாழ்க்கைப் போராட்டங்கள் இருப்பினும் மனிதன் மனிதன்தான். இத்தகைய மனிதனை விட்டு மனிதாபிமானம் போய்விட்டால் அப்புறம் வாழ்வின் அழகும் பொலிவும் கெட்டு விடும்.

ஒருவர் உணர்ச்சியை மற்றவர் புரிந்து கொண்டு விட்டு கொடுத்தால் தீரக்கூடிய பிரச்சினைகள், சிலசமயங்களில் பெரிய கலவரத்துக்குக் காரணமாகி விடுகின்றன. வெறியுணர்வு மேலோங்கி இருக்கும்போது அறிவுக்கு விட்டுக்கொடுக்கும் மனப்பான்மைக்கும் இடமிருப்பதில்லை.

தோல்வியைச் சந்திக்க நேருகிறது என்பதற்காக உயர்ந்த நோக்க்கள் தீயவை என்றுசொல்லிவிட முடியாது. தோல்விகள் நமது திறமைக்கான சோதனைகள்தான்.

விளைவுகளைக் கண்டு பயந்து எண்ணங்களை வெளியிடாம் இருப்பது பெரிய தவறாகும். ஏராளமானவர்கள் நமக்கு அன்பு செலுத்த இருக்கிறார்கள் என்ற நினைப்பு. தோல்வியில் – தாழ்வு மனப்பான்மையில் இருந்து, நம்மை விடுவிக்கும் நம்மை எல்லோரும் கைவிட்டு விட்டார்கள் – நாம் தனித்திருக்கிறோம் என்ற எண்ணம் மிக்க் கொடிய துன்பத்தை உண்டாக்கும்.

பிறரைக் குறை கூறுவதும், பிறர் மேல் குற்றம் சாட்டுவதும் சுலபமானது. தோல்வியை ஒப்புக்கொள்வதற்குப் பதிலாக, தோல்விக்குக் காரணம் கண்டு பிடித்து, பொறுப்பைத் தட்டிக் கழிப்பதும், பழியைப் பிறர் மேல் போடுவதும் இவ்வுலக இயற்கை.

ஓர் உயர்ந்த நோக்கத்துக்காக, மரணமே நேரிடினும் அஞ்சாமல் போரிடும் வீரத்தை நான் மதிக்கிறேன். இத்தகைய வீரத்தை மற்றவர்களும் மதித்துப் போற்றுவார்கள் என்றே நம்புகிறேன்.

மனிதனுடைய சிந்தனையும் செயலும் சேரந்து செயல்படும் போது உண்டாகிற இன்பம் பேரின்பம் ஆகும்.

தேசீய பொருளாதார மத இன மற்றும் எந்த விதமான ஆதிக்கமாயிருந்தாலும் சரி, அதை இந்தத் தலைமுறை ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. பலமாகக் கண்டிக்கிறது ஒருவர் மீது மற்றொருவர் ஆதிக்கம் செலுத்துவது தடுக்கப்பட்டாக வேண்டும் என்ற எழுச்சி எங்கும் பரவி இருக்கிறது.

ஒருபிரச்சினைக்குத் தீர்வு காண்பது என்பது – அதை ஒட்டிப் பல பிரச்சினைகள் தோன்ற இடம் அளிப்பதல்ல; இன்னும் சிக்கலான பல பிரச்சினைகள் தோன்றாமல் பார்த்துக் கொள்வதுதான். ஒரு பிரச்சினையைத் தீர்க்க காணும் நிலையான பரிகாரம் ஆகும்!

கலகங்களையும், குழப்பங்களையும் அடக்குவது அரசாங்கத்துக்குரிய கடமைதான். ஆனால் அந்தக் கடைமையை நிறைவேற்றுவதிலே அரசாங்கத்துக்கு நிதானம் வேண்டும். கலகங்களும் குழப்பங்களும் நோய்கள் அல்ல- நோயின் அறிகுறிகள். எனவே நோயைத் தடுக்காமல், நோயின் அறிகுறிகளைக் களைய முயற்சிப்பது வீண் வேலையாகும்.

ஒருநாடு பெற்றுள்ள அரசியல் விழிப்புணர்ச்சியை, அந்நாடு கேட்கும் கேள்விகளிலிருந்து கண்டு கொள்ளலாம். தனக்குத்தானே சரியான கேள்விகள் கேட்டுக்கொள்ளத் தவறியதின் விளைவுதான் – தன்னுடைய முயற்சியிலே அந்த நாடு பெறுகிற தோல்விள்.

அடக்கம் நல்லதுதான். நம்முடைய பண்பாட்டுப் பெருமைக்கு அத்து ஒரு எடுத்துக்காட்டுதான். ஆனால் அந்த அடக்கம் அடிமைத்தனமாக இருக்கக் கூடாது – மனிதன் இயற்கையைக் கட்டுப்படுத்துகிறான். இடியை – மின்னலை – பரவும் தீயை – பொங்கியெழும் நீரூற்றை அடக்கியாளக் கற்றுக கொண்டிருக்கிறான். ஆனால் அவனை அள்ளி விழுங்கும் கோபத்தை அடக்க இன்னும் கற்றுக்கொள்ளவில்லை. இதைக் கற்றுக்கொள்ளாத வரை அவன் முழு மனிதனாக முடியாது.

தன்னுடைய பலவீனத்தை மறைக்க, பெரிய த்த்துவங்களையும், உபதேசங்களையும் செய்ய நினைப்பவன் எல்லாராலும் சந்தேகிக்கப்படுவான்.

தனிமனிதனை அரசாங்கம் தண்டிக்கலாம் – சிறைப்படுத்தலாம்! அந்தத் தனிமனிதன் தண்டனையை – மரணத்தைக்கூடமகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்கிறான். தனிமனிதனை அரசாங்கம் கொல்ல்லாம் – வெல்ல முடியாது. ஒரு மிகப் பெரிய அரசால் தனிமனிதனை வெல்ல முடியவில்லை என்கிற போது – அரசின் சட்ட திட்டங்களை தனிமனித சக்தி வென்று விடுகிறது.

தாழ்த்தப்பட்டு கிடக்கிற மக்களுக்காக எவ்வளவு தியாகம் செய்தாலும் தகும். அடக்கி ஒடுக்கப்பட்டு, சமுதாயத்தின் அடித்தளத்தில் இருப்பவர்களின் சுதந்திரத்தை மதிக்க முடியும்.

சாதாரண மனிதனுடைய மன எழுச்சியின் சின்னமாக இருக்கும் – உலகத்து மூலையின் ஒரு சிறு பகுதியைப் பார்ப்பதைவிட அறிவாலயங்களை – புதிய சிந்தனைகளை உருவாக்கும் மேதைகளைச் சிந்திப்பது பேரின்பம் ஆகும்.

குழந்தைப் பேற்றை மக்கள் பெருக்கத்தைத் தடுக்க வேண்டும். – குறைக்க வேண்டும் என்ற கூறப்படுகிறது. இதை நான் முழுமனதுடன் ஆதரிக்கிறேன். இந்த அறிவை மக்களிடையே பரப்ப வேண்டும். இதை ஏற்றுக் கொள்ளும் அளவுக்கு அவர்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த வேண்டும். வாங்கப் பொருள்கள் இல்லை என்பதைவிட, மக்களிடையே வாங்கும் சக்தி இல்லை என்பதுதான் இன்றைய பிரச்சினையாக இருக்கிறது.

நோயும், வலிவின்மையும், உடலைப் பருக்க விடுவதும் வெறுக்கத் தக்கவையாகும். எளிய உணவு, உடற்பயிற்சி, தூய்மையான காற்று இவற்றால், நம் உடலைப் பாதுகாத்துக்கொள்ள முடியும். இந்திய மக்களில் பெரும்பாலோருக்கு வரும் நோய்களில் அநேகம் தவறான உணவினால் ஏற்படுபவையே!

நம்மில் ஒரு சிலர்தான் ஒருபிடி மண்ணில் உலக்க் காட்சிகளையும், சிறு பூவின் சிரிப்பில் – சுவர்க்கத்தையும் உணரும் பேறுபெற்றவர்களாக இருக்கிறார்கள். இயற்கையின் விசித்திர விநோதங்களை நம்மில் பலாரல் புரிந்து கொள்ள முடியவில்லை. இயற்கையின் கம்பீரத்தை உணர முடியாது போனாலம், மனித குலத்தின் உயர்வுகள், தாழ்வுகள், அது காணும் மகத்தான கனவுகள், லட்சியங்கள், போராட்டங்கள், துயரம் – தோல்விகள்; இவற்றின் மேல் அது கொண்டிருக்கிற அசையாத நம்பிக்கைகள் இவற்றின் மூலமாவது; -இயற்கையின் கம்பீரத்தை உணர்ந்து, வாழ்க்கைத் துயரில் இருந்து விடுபட்டு முன்னேறலாம். அல்லது அழுந்திச் சாகலாம்! ஆனால் பலர் இரண்டையும் செய்யாமல், எந்த வழியைப் பின்பற்றுவது என்றும் தெரியாமல் இருக்கிறார்கள்.

மலைகளும் – ஆறுகளும், நமக்கு வாழ்வ தரும் – காடுகளும், கழனிகளும் மட்டுமல்ல; இந்தியா! பரந்தி இந்த நாடு முழுவதும் பரவிக் கிடக்கும் கோடிக்கணக்கான மக்கள் தொகுதிக்குப் பெயர்தான் – இந்தியா என்பதாகும்.

மனித வாழ்க்கை – என்பது நேர் கோடல்ல! வளைவு நெளிவுகள் நிறைந்த ஒற்றையடிப் பாதை போன்றது. மாறிவரும் இன்றைய உலகில் ஒரு நாட்டில் வாழ்வம் அப்படிதான் இடர்மிகுந்தது – இக்கட்டானது.

மனிதனின் மிகச்சிறந்த உடைமை வாழ்க்கை இத்தகைய உயர்ந்த வாழ்க்கை, அவமானத்திலும், கோழைத்தனத்திலும், கொடுமைகளிலம் அழுந்திக் கழிவதைவிட, மரணதின் கடைசி மூச்சுவரை – என்னுடைய வாழ்வும் உழைப்பும் சக்தியும், உலக நன்மைக்கும் மனிதகுல முன்னேற்றத்திற்கும் செலவாயிற்று என்று சொல்லத்தக்க வகையில் வாழ்வது நல்லது.

என்னுடைய அறிவு நான் எந்த வழியைப் பின்பற்ற வேண்டும் என்பதை பற்றித்தான் எப்போதும் ஆராய்ந்து கொண்டிருக்கிறது. அரசியல் – பொருளாதாரம் – மதம் – இவை எது சம்பந்தப் பட்டவையாயிருந்தாலும் சரி, உபதேசங்கள் எனக்கு எரிச்சலை உண்டாக்குகின்றன.

தனிமனிதனாகட்டும், நாட்டிற்காகட்டும்; வாழ்வு விடுவிக்க முடியாத ஒரு புதிர். சில சமயங்கள், நாட, – வாழ்க்கை இவ்விரண்டில், எது உயர்ந்தது என்று குறிப்பிட்டுச் சொல்வதுகூடக் கடினமானது. ஏனெனில் இரண்டும் ஒன்றுக்கொன்று ஆதாரமாக இருக்கின்றன.

சட்டமும் – போரும் ஒன்றுக்கொன்று எவ்வளவு முரணானவயோ அதைப் போல – ஓரளவுக்கு – சண்டையும் கெடுபிடி யுத்தமும் ஒன்றுக்கொன்று முரணானவை. சட்டம், சுதந்திரத்திற்கும் சமாதானத்திற்கும் முன்னேற்றபாடாகும். சட்டம் சரியாக செயல்பட சுதந்திரமும் சமாதானமும் அவசியம் ஆகும்.

தீமைக்கு அடிபணிவதன் மூலம், அல்லது அதனுடன் ஒத்துப் போவதன் மூலம் சமாதானத்தைப் பெற முடியாது. நம்முடைய நீண்ட சுதந்திரப் போராடத்தின்போது கூட, எந்தச் சமயத்திலும் தீமை என்று கருதிய எதற்கும் நாம் விட்டுக் கொடுக்கவுமில்லை – பணிந்து போகவுமில்லை.

நடைமுறையில் இடர்கள் எவ்வளவு நேரினும் சமாதானம் பின்பற்றத் தகுந்த உயர்ந்த லட்சியமே ஆகும்.

நம் விருபத்திற்கேற்ப உலகத்தை மாற்றி அமைத்துவிட முடியாது. ஆனால் நாம் அடைய விரும்புகிற லட்சியங்கள் நிறைவேறுவதற்கான, சமாதானச் சூழ்நிலையை உருவாக்க உழைப்பதன் மூலம், நமது கடவுகள் நனவாகச் செய்யலாம்.

சமூக அமைப்பில் பரவிக் கிடக்கிற ஏழ்மையம் இல்லாமையும் கம்யூனிஸம் வளரக் காரணமாகின்றன. எனவே இந்த நிலைமைகளை மாற்றி அமைக்காலம் அவற்றை மேலும அழுத்தி வைக்க நினைப்பதன் மூலம் ஒரு பயனும் ஏற்படாது.

கோடிக்கணக்கான மகள் மேற்கத்திய முதலாளித்துவத்தில் பற்று வைத்திருக்கிறார்கள். இன்னும் சில கோடிப்பேர் கம்யூனிஸத்தில் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். ஆனால், இந்த இரண்டிலும் சேராமல், நம்பிக்கையான எதிர்காலத்தையும், நலமான வாழ்க்கையையும் பெற, எல்லா மக்களுடனும் நட்புறவு கொள்ள விரும்பும் மக்களே, இந்த உலகத்தில் கோடி கோடியாக இருக்கிறார்கள்.

சமாதானப் பாதைதான் சரியானது. மிக நீண்ட தெனினும் இறுதியில் எளிதில் அடையத் தகுந்தது. போர் ஒரு மார்க்கமே அல்ல – அதனால் எந்தவித பயனும் உண்டாவதே இல்லை.

உலக மக்கள் எல்லோருக்கும், வாழ்வதற்கும் வளர்வதற்கும், தங்கள் ஆசைக்கனவுகளை நிறைவேற்றிக் கொள்வதற்கும் உரிமை இருக்கிறது. அமைதியான வாழ்வும் பாதுகாப்பைத் தேடிக் கொள்ளவும் அவர்களுக்கு உரிமை இருக்கிறது. அவர்கள் இந்த உரிமைகளை, நட்புறவோடு சமாதான வழிகள் மூலமும், தங்கள் பிரச்சினைகளுக்குப் பரிகாரம் தேடிக்கொள்வதன் மூலமே காப்பாற்றிக்கொள்ள முடியும். ஒவ்வொருவர் கருத்துகளும் கொள்கைகளும் வேறுபடலாம். என்றாலும் ஒருவரின் கொள்கைகளை இன்னொருவர் மேல் திணிக்க முயல்வது எல்லாருக்கும் அழிவையே தேடித் தரும். எனவே வேறுபாடுகளுக்கிடையேயும் ஒற்றுமை உணர்வோடு – சமாதானமாக வாழ்வதற்குரிய ஒரே வழி பகையுணர்வையும் – வன்முறைச செயல்களையும கைவிட்டு விடுவதே ஆகும்.

ஐக்கிய நாடுகள் கழகத்தின் முக்கிய நோக்கம், உலக நாடுகளின் – மக்களின் கூட்டுறவோடு கூடி போரற்ற புது உலகை உண்டாக்குது. போர்த் தளவாடங்களை நிறைய வைத்துக்கொண்டு போர் முழக்கத்தைக் கட்டுப்படுத்தி வைத்திருக்கின்ற உலகத்தை அல்ல. நாடுகளுக்கிடையேயும் உள் நாட்டுக்கள்ளேயும், சமாதான சஞகவாழவின் அடிப்தையின் மீது எழுப்பப்பட்ட சமூக அமைப்புடைய – போருக்கான காரணங்களே அடியோடு அகற்றப்பட்ட ஒரு உலகை உரவாக்குவதாகும்.

போரினால் தனக்கோ, தனது நாட்டிற்கோ எந்தவித நன்மையும் உண்டாகி விடும். என்று எந்த நாடும் மனிதனும் நினைக்க வேண்டாம்! போரால் எல்லையற்ற அழிவுகள் நேரும். உலகம் நிலைகுலைந்து போகும். நாம் போற்றிப் பாதுகாக்கிற கலை -நாகரிகப் பண்பாடுகளுக்குப்பெரிய ஆபத்து வந்து சேரும். நமது ஆத்மாவே அழிந்து போகும்.

பாரத்த்தின் அரும் பெரும புதல்வர்களில் ஒருவரான புத்தர் பலநாறு ஆண்டுகளுக்கு முன்பே சொன்னார்: உண்மையான வெற்றி எதுவென்றால், எதிலே தோற்றவர்கள் என்று எவருமே இல்லாமல், எல்லாரும வெற்றி பெறுகிறார்களோ, அதுதான் உண்மையான – உயர்ந்த வெற்றி’ என்று. எனவே இன்றைய உலகில் சமாதானத்தை நிலை நிறுத்துவதில் நாம் பெறுகிற வெற்றிதான் உண்மையான வெற்றி! அதிலேதான் எவருக்கும் தோல்வியின்றி எல்லோருக்கும் வெற்றி கிட்டுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *