ஸ்ரீ ரமணர்

‘நான்’ என்ற அகந்தை எல்லாச் செயல்களையும் நாமே செய்கிறோம் என்ற தவறான கருத்தை உண்டாக்குகிறது. உண்மையில் நாம் ஒரு கருவியே; கர்த்தா அல்ல. இதை உணர்ந்துவிட்டால் , அகந்தை நம்மிடமிருந்து வெளியேறி விடும்.

எவ்வளவுக்கு எவ்வளவு பணிந்து நடக்கிறோமொ அவ்வளவுக்கவ்வளவு நன்மையுண்டு.

பகவானுக்கு ருசி முக்கியமில்லை. அடியார்களது பக்திதான் முக்கியம்.

நம் மனம் யாரிடம் வசப்படுகிறதோ அவரே சரியான குரு.

பரம்பொருளைத தொடர்ந்து விடாமல் பற்றி நிற்பதே சமாதி எனப்படும்.

புதிய ஆசைகளை வளர்க்காதீர்கள். புதிய வாசனைகளைத் தேடிக் கொள்ளாதீர்கள். அதுவே நீங்கள் செய்திருக்கக்கூடிய தவற்றிலிருந்து மீளுவதற்க்கு உரிய பிரயச்சித்தம் ஆகும்.

பிறப்பும் இறப்பும் வாழ்க்கையின் எல்லைகள். இந்த இரண்டையும் கடந்து நிற்பதே ஆன்மா அதை உணர்ந்தால் இந்த இரண்டுமே பொருள்ளற்றதாக ஆகிவிடும். தன்னை உணர்ந்த மனிதன் – இந்த நிலைகளைக் கடந்துவிடுகிறான. இறப்பு அவனைப் பாதிப்பதில்லை.

ஒரு மனிதன் தனது வாழ்க்கையில் தேடிக்கொள்ளும் நற்பலன்கள் அதிகமாக இருந்தால், அதை ஒட்டி அவனக்கு மரணத்துக்குப் பின் இனிய அனுபவம் ஏற்படுகிறது. கெட்ட பலன்களே அதிகமாக இருந்தால் துன்பம் நிறைந்த அனுபவம் உண்டாகிறது.

நூல்களில் மூன்றுவித தீஷைகள் கூறப்பட்டுள்ளன. ‘ஹஸ்த தீக்ஷை’ என்பது சீடனின் சிரசைத் தொட்டு அருள் புரிதல், ‘சக்ஷதீக்ஷை’ என்பது அருட்பார்வையால் தீக்ஷை அளிப்பது. ‘மானசீக தீக்ஷை என்பது மனதினால் அருள் புரிதல், இவற்றில் மானசீக தீக்ஷையே அனைத்திலும் சிறந்தது”

முயற்சி செய்து மனத்தை எண்ணங்களிலிருந்து விடுவிக்க வேண்டும். அந்த நிலையில் தொடர்ந்து நாம் இருப்போமேயானால் அதுவே நமது சாதனைக்ளுக்கு வழிவகுக்கும்

நம்மால் எதிலும் தனித்து செய்ல்பட முடியவில்லை என்றால் அதற்குக் காரணம் நமது வலிமை அற்ற மனம் தான்.

தவறான செயல்களைச் செய்துவிட்டு, அகந்தையின் காரணமாக அதை மறைத்தல் கூடாது. எனவே குற்றங்களைச் செய்யும் பழக்கத்தை விட்டுவிட்டு நல்ல ஒழுக்கத்துடன் வாழ்ப பழுகுதலே சிறப்பு.

அறிவின் சொரூபமே சச்சிதானந்தம்.

மனம் அடங்கிய ஜகம் மறையும்

மனம் என்பதோ ஆத்ம சொரூபத்திலுள்ள ஓர் அதிசய சக்தி அது சகல நினைவுகளையும் தோற்றுவிக்கிறது. நினைவுகளையெல்லாம் நீக்கிப் பார்க்கின்றபோது தனியாய் மனம் என்று ஒரு பொருள் இல்லை. ஆகையினா நினைவே மனிதன் சொரூபம். நினைவுகளைத் தவிர்த்து ஜகம் என்பது அன்னியமாயில்லை.

மனதின் சொரூபத்தை விசாரித்துக் கொண்டே போனால் மனம் தானாய் முடியம்.

நான், நான் என்று எண்ணிக் கொண்டிருந்தாலும் கூட அவ்விடத்தில் கொண்டு போய்விட்டுவிடும். மனதில் தோன்றும் நினைவுகள் எல்லாவற்றிற்கும் நான் என்னும் நினைவே முதல் நினைவு. இது எழுந்த பிறகே ஏனைய மற்ற நினைவுகள் எழுகின்றன. தன்மை தோன்றிய பிறகே, முன்னிலை படர்க்கைகளை தோன்றிகின்றன. தன்மையின்றி மன்னிலைப் படர்க்கைகள் இரா!

மனம் எப்படி அடங்கும் என்றால் ‘நான்’ யார் என்னும் விசாரனையினாலேயே, நான் யார் என்னும் நினைவு மற்ற நினைவுகளை எல்லாம் ஒழித்து முடிவில் தானும் அழியும். பிறகு சொரூப தரிசனம் உண்டாம்.

எத்தனை எண்ணங்களை எழுப்பினால் என்ன, ஜாக்கிறதையாய் ஒவ்வொரு எண்ணமும் கிளம்பும் போதே இது யாருக்குண்டாயிற்று என்று விசாரித்தால் எனக்கு என்று தோன்றும்.

நினைவே மனிதன் சொரூபம். நான் என்னும் நினைவே மனத்தின் முதல் நினைவு. அதுவே அகங்காரம்.

மனம் அளவிறந்த நினைவுகளால் விரிகின்றபடியால் ஒவ்வொரு நினைவும் அதிபலவீனமாகப் போகின்றது. நினைவுகள் அடங்க, ஏகாக்கிரகத் தன்மையடைந்து அதனால் பலத்தை அடைந்த மனத்திற்கு ஆத்ம விசாரம் சுலபமாய் சித்திக்கும்.

தொன்று தொட்டு வருகின்ற சகல விஷய வாசனைகளும் ஒடுங்கிச் சொரூப மாத்திரமாய் இருக்கமுடியமா, முடியாதா என்கிற சந்தேக நினைவக்கு இடம் கொடாமல் சொரூப தியானத்தை விடாப்பிடியாகப் பிடிக்க வேண்டும். தான் பாபி என்னும் எண்ணத்தையும் அறவே ஒழித்து சொரூப தியானத்தில் ஊக்கமுள்ளவனாயிருந்தால் அவன் நிச்சயம் கடைத்ததேறுவான்.

நல்ல மனம், கெட்ட மனம் என்று இரண்டு மனங்கள் இல்லை. மனம் ஒன்றே. வாசனைகளே சுபமென்றும் அசுபமென்றும் இரண்டுவிதம், மனம் சுபவாசனை வயத்தாய் நிற்கும்போது நல்ல மனம் என்றும், அசுபவாசனை வயத்தாய் நிற்கும்போது கெட்ட மனமென்னும் சொல்லப்படும்.

உலக விஷயங்களிலும், பிறர் காரியங்களிலும் – மனதை விடக்கூடாது. பிறர் எவ்வளுவு கெட்டவர்களாய் இருந்தாலம் அவர்களிடத்தில் துவேஷம் வைக்கலாகாது.

எவ்வளவுக்கெவ்வளவு தாழ்ந்து நடக்கிறோமோ அவ்வளவுக்கவ்வளவு நன்மையுண்டு. மனத்தை அடக்கிக் கொண்டிருந்தால் எங்கேயிருந்தாலும் இருக்கலாம்.

நான் என்கிற நினைவு கிஞ்சித்தும் இல்லாத இடமே சொரூபமாகும். அதுவே மௌனம் எனப்படும். சொரூபமே ஜகம், சொரூபமே நான், சொரூபமே ஈசுவரன், எல்லாம் சிவஸ்வரூபமே.

என்னென்ன நினைவுகள் உற்பத்தியாகின்றனவோ அவற்றை ஒன்றுகூட விடாமல் உற்பத்தி ஸ்தானத்திலேயே நசுக்கிப் போடுவதே வைராக்கியம். வைராக்கியத்துடன் தன்னுள் ஆழ்ந்து மூழ்கி முத்தை அடையலாம்.

எவன் தன்னையே கடவுளாகிய – சொரூபத்தினடத்தில் தியாகம் செய்கிறானோ அவனே சிறந்த பக்திமான்.

குருவின் அருள்பார்வையில் பட்டவர்கள் அவரால் ரக்ஷிக்கப்படுவாரேயன்றி ஒருக்காலும் கைவிடப்படார். எனினும் ஒவ்வொருவருக்ககும் தம் முயற்சியினாலேயே கடவுள் அல்லது கரு காட்டிய வழிப்படி தவறாது நடந்து முக்தியடையவேண்டும்.

முக்தியில் விருப்பமுள்ளவனுக்குத் த்த்துவங்களின் விசாரணை அவசியமே இல்லை. பிரபஞ்சத்தை ஒரு சொப்பனத்தப்போல எண்ணிக் கொள்ள வேண்டும்.

கனவில் மனம் வேறொரு தேகத்தை எடுத்துக்கொள்கிறது. ஜாக்ரம், சொப்பனமிரண்டிலும் நினைவுகளும் நாம ரூபங்ககளும் ஏக காலத்தில் நிகழ்கின்றன.

எல்லா நூல்களிலும் முக்தியடைவதற்கு மனத்தை அடக்க வேண்டுமென்று சொல்லப்பட்டுள்ள படியால் மனோ நிக்ரகமே நூல்களின் முடிவான கருத்து என்றறிந்து கொண்ட பின்பி நூலகளை அளவின்றிப் படிப்பதால் பயனில்லை.

மனம் வெளிவரும்போது துக்கத்தை அனுபவிக்கிறது. உண்மையில் நமது எண்ணங்கள் பூர்த்தியாகும்போதெல்லாம் அது தன்னுடைய யாதஸதனத்திற்குத் திரும்பி ஆத்ம சுகத்தையே அனுபவிக்கிறது.

நிராசையே ஞானம், நிராசை வேறு ஞானம் வேறன்று.

உண்மையில் இரண்டும் ஒன்றே. நிராசை என்பது ஒரு பொருளிலும் மனம் செல்லாமலிருப்பது.

சும்மா இருப்பதற்குத்தான் ஞானதிருஷ்டி என்று பெயர். சும்மாயிருப்பதாவது மனத்தை ஆத்ம சொரூபத்தில் லயிக்கச் செய்வதே அன்றி பிறர் கருத்தறிதல், முக்கால முணர்தல், தூர தேசத்தில் நடப்பனவறிதல் ஆகிய இவை ஞான திருஷ்டியாக மாட்டா.

பந்தத்திலிருக்கும் தான் யாரென்று விசாரித்துத் தன் யதார்த்த சொரூபத்தை தெரிந்து கொள்வதே முக்தி.

உலகத்தில் நாம் எதையும் ஒரு பெயரை வதைத்தோ உருவத்தை கொடுத்தோதான் நினைவில் வைத்துக் கொள்கிறோம். கடவுளை நினைத்துத் தியானம் செய்வதற்கும் இப்படி ஒரு வழி முறை தேவைப்படுகிறது.

வெளியே பார்த்ததும், பேசியும் பழகியும், உணர்ந்தே பழக்கப்பட்ட மனத்தை உள்முகமாகத் திருப்புவது என்பது சாதாரண காரியமல்ல.

அப்படிச் செய்வதற்கு இப்படி ஒரு படிக்கட்டு அவசியமாகிறது.

எல்லா உணவுகளுக்குமே ஒவ்வொரு வகையான பாதிப்பு உண்டு. சில உணவு வகைகள் அமைதியைத் தருகின்றன. வேறு வகை உணவுகள் மந்த நிலையையம், தூக்கத்தையும் உண்டு பண்ணுகின்றன. உணர்ச்சியைத் தூண்டும் மாமிச வகையைச் சார்ந்த ராஜஸ உணவையும், மந்தநிலையையும், சோம்பலையும் தூண்டும் தாமஸ உணவையும், நாம் தவிர்க்க வேண்டும். அமைதியைத் தரும் சாத்வீக உணவே தியானத்துக்கு ஏற்றது.

பிராணயாம்ப் பயிற்சி முடிந்ததும் பழைய நிலைக்குத் திரும்பிவிடும். ஆனால் யோகிகள் படிப்படியாக, இப்படி ஒரு பயிற்சி இல்லாமலே நிரந்தரமாக அமைதியுடன் இருக்கும் நிலையை அடைய விரும்புவார்கள். அதைத்தான் சகஜ சமாதி என்று குறிப்பிடுகிறோம்.

மூச்சு என்பது குதிரையைப் போன்றது. மனம் என்பது அதன் மீது சவாரி செய்து குதிரையைக் கட்டுப்படுத்துவதன் மூலம் சவாரி செய்பவனும் கட்டுப்படுகிறான். இதுவே பிராணயாம்ம். மூச்சின் இலக்கத்தைக் கவனித்துக் கட்டுப்படுத்துவதன் மூலம் மனத்தில் ஓடும் நினைவுகளும் கட்டுபடுகின்றன.

மகிழ்ச்சி என்பது மனிதனுக்குள்ளேயே இருப்பது தானேயன்றி, வெளியேயுள்ள வேறெவ்விதப் புறக்காரணங்களாலும் வருவதன்று.

விதியை வெல்லவும் அதன் பிடியிலிருந்து விலகி நிற்கவும் இரு வழிகளே உண்டு. ஆன்மா விதியால் கட்டுப்படுவதில்லை என அறிதல் ஒரு வழி. இறைவனிடம் முழுமையாகச் சரணாகதி அடைந்து நிற்பது மற்றொருவழி.

நகர்ந்து செல்லும்ம வண்டியில், உறங்கிக் கொண்டு பயணம் செய்யும் பிரயாணிக்கு சலனமோ, அசைவுகளோ எதுவும் தெரியாது. ஏனெனில் அவனது மனம் அறியாமை இருளில் ஒடுங்கிக் கிடக்கிறது.

ந்தியின் கரையைச் சேர முயலும் மனிதன் அந்த நீரின் அலையோட்டங்களால் கரைசேர முயலுவது தடைப்படுவதைப் போல, சம்சாரம் என்னும் ந்தியிலிருந்து ஆத்மஞானம் என்னும் கரையைச் சேர விரும்புபர்கள் உலக இன்பங்களால் தடைபட்டு அதை அடைய முடியாமல் தவிக்கிறார்கள்.

பிறருடைய குற்றங்களைப் பாராமல், குணங்களை மட்டுமே எண்ணிப் பார்க்கும் ஒருவரின் வாழ்நாள் முழுவதும் இனிமையாகவே அமையும்.

கல்லைக் கட்டிக்கொண்டு கடலுக்குள் மூழ்கி முத்தை எடுத்து மகிழ்வதைப்போல, வைராக்கியத்தைக் கொண்டு இதயக்கடலுள் மூழ்கி ஆத்மா என்னும் முத்தை அடைதல் வேண்டும்.

பிறருக்கு நன்மை செய்வதில் ஒருவர் ஈடுபட்டாலே போதும். அவர்களின் இதயத்தில் நன்மை வளரும். நன்மை, அன்பு, கடவுள் ஆகிய எல்லாம் ஒன்றே.

துறவு என்பது அனுபவிக்கப்பட்டாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, எப்போதும் அது இருந்துகொண்டே இருப்பதுதான். வந்து போவதாகத் தோன்றுவது மனத்தின் இயல்புதான்.

விதி என்பதென்ன? இறைவனைச் சரண்டையுங்கள். எல்லாம் நல்லபடி நடக்கும். எனவே எல்லாப் பொறுப்புகளையும் இறைவனிடமே விட்டுவிடுங்கள். பின்னர் விதி உங்களை என்ன செய்யும்?

ஞானி உலகத்தைக் காண்கிறான். அஞ்ஞானி தான் உலகத்தை வெறுக்கிறான்.

காகம் தன் கண்ணின் மூலம் இரண்டு பக்கங்களிலும் பார்வையைச் செலுத்தும். யானைக்கு அதன் தும்பிக்கை, கையாகவும், மூக்காகவும், இருவிதங்களில் பயன்படுகிறது. பாம்பு தன் கண்களின் மூலம் பார்க்கவும் செய்கிறது. ஒலிகளின் மூலம் கேட்கவும் செய்கிறது. இதைப் போல ஞானி என்பவனுக்கு உறக்கம், விழிப்பு, உறக்கத்தில் விழிப்பு நிலை, விழிப்பில் உறக்க நிலை ஆகிய அனைத்தும் ஒன்றுதான்.

ஒருவன் தன்னைப்பற்றி முதலில் அறிந்துகொள்ள வேண்டும், தன்னைப்பற்றியே சரியாகவும், முறையாகவும் அறிந்து கொள்ள முடியாத ஒருவனால், உலகத்தைப் பற்றி அறிந்து கொள்வது முடியாத செயலாகும். அப்படி அறிந்து கொண்டதாக ஒருவன் எண்ணினால் அது, அடிக்கல் நடாமலே சுவர் எழுப்பியதைப் போன்ற செயலாகத்தான் இருக்கும்.

இந்த அருளை பரிபூரண சரணாகதி மூலம் அடையலாம். சரணாகதி சொல்லளவிலேயே நிபந்தனையுடன் கூடியதாகவோ இருக்கக்கூடாது. வழிபாடு என்பது வெறும் சொற்களால் ஆனது அல்ல. அது இதயத்திலிருந்து புறப்பட்டு இதயத்திற்குள்ளே கலந்து விடவேண்டும். இதற்குத்தான் வழிபாடு என்று பெயர். இது தான் அருள்.

எண்ணங்களே மனம்; அந்த எண்ணமயமானதே உலகம். அனைத்தின் மையம் இதயம்.

ராமா என்ற சொல்லில் ரா என்ற எழுத்து ஆன்ம ஸ்வரூபத்தைக் குறிக்கிறது. மா என்ற எழுத்து நான் என்ற ஆணவத்தைக் குறிக்கிறது. ஒருவர் ராமா என்று இடைவிடாது ஜபித்துக் கொண்டேயிருந்தால் மா என்ற எழுத்து ரா என்ற எழுத்தில் ஐக்யமாகி மறைந்து விடுகிறது. ரா என்ற ஸவரூபமே எஞ்சி நிற்கிறது. இந்நிலை ஏற்படும்போது தியானம் செய்யும் முயற்சியும் ஓய்ந்துபோய் தமுத உண்மை நிலையாம் நிரந்தர தியானம் நிலைத்து விடுகிறது.

ஒருவர் முக்தியடைய விரும்பினால் முதலில் நல்ல ஒரு குருவை நாட வேண்டும். இது எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஓர் உண்மை. உள்மனதில் யார் அமைதியை எற்படுத்துகிறார்களோ அவரையே உன் குருவாக்கிக் கொள்.

உடுத்தும் உடையில் மாற்றம் மட்டும் சந்நியாசம் ஆகாது. வீட்டைத் துறப்பதும் சந்நியாசமல்ல. உண்மையில் மனத்திலுள்ள பாசத்தையும் பந்தத்தையும் ஆசையையும் துறப்பதே சந்நியாசமாகும். உலக வாழ்வைத் துறப்பவன் தன் அன்பின் பெருக்கால், உலகையே மூழ்கடிக்கிறான். துறவென்பது உறவைச் சுருக்கிக் கொள்வதல்ல. உலகளவு பரந்து விரிந்தாய் ஆக்கிக் கொளவதே துறவின் லட்சணம்.

உள்ளத்தை தூய்மையாக வைத்துக் கொண்டால் மட்டும் போதும். அதைதான் பணிவு என்றும் நமஸ்காரம் என்றும் சொல்கிறோம். தூய்மையில்லாத உள்ளத்துடன் நமஸ்கரித்தால் அதை ஓர் ஏமாற்றுச்செயல் என்றே சொல்ல வேண்டும். அது ஒரு அபசாரமும் கூட.

ஆனந்தம் அமையியில்தான் பிறக்கிறது. குழப்பமில்லாத மனதில் அமைதி நிலைபெற்று இருக்கும். குழப்பம், கலக்கம் ஆகியவற்றிற்கு மனதில் எழும் எண்ணங்களே காரணம்.

அருளின் உயர்ந்த வடிவம் மொனம். அதுவே மிக உயர்ந்த உபதேசம்.

மௌன விரதம் என்பது ஒரு விரதமே. அது தியானத்திற்கு ஓரளவு உதவும். ஆனால் வாயை மட்டும் மூடிக்கொண்டு மனம் அலைபாய்வதில் என்ன பயன்?
சரணாகதி என்பதே வலிமை மிக்கப் பிரார்த்தனை கடவுள் நம்மைப் பற்றிய எல்லா செயல்களுக்கும் பொறுப்பேற்கிறார் என்ற நம்பிக்கை அவசியம். இது முழுமையாக நம்மைக் கடவுளிடம் அர்ப்பணித்து விடுவதில் இருக்கிறது.

நீங்கள் எதை வேண்டுமானாலும் அனுபவிக்கலாம். ஆனால் அதனோடு திருப்தி அடைந்துவிடக்கூடாது. ‘துன்பத்தையோ, இன்பத்தையோ அனுபவித்தது யார் என்று உங்களையே நீங்கள் கேட்டுக்கொள்ள வேண்டும். இன்பம், துன்பம் ஆகிய இரண்டையும் கடக்கும் வரை சாதனையைத் தொடருங்கள் இறுதியில் உண்மை மட்டுமே எஞ்சி நிற்கும்.

கலங்கிய மனதால், காமத்தினால் செய்யப்படுவதெல்லாம் தீய கரும்ம். சாந்தமான தூய மனதுடன் அனைத்தும் நற்கருமம்.

மரணத்திற்கு பிறகு என்ன என்பதற்கு விடை தேட வேண்டாம். நிகழ்காலத்தில் வாழ்வோம். எதிர்காலத்தைப் பற்றிக் கவலைப்படவேண்டாம். எதிர்காலத்தை எதிர்காலமே கவனித்துக் கொள்ளும்.

நீ விரும்புவதை எல்லாம் பகவான் உனக்கு தருவார் என்று நம்பினால், உன்னை அவரிடம் முழுமையாக ஒப்படைத்துவிடு.

உலகம் மெய் என்ற அபிப்பாரய்த்தை விட்டொழிக்காவிட்டால், மனம் எப்பொழுதும் உலகத்தையே நாடி நிற்கும்.

”என்னுடைய மதம் இப்படி” என்று ஒரு மத்த்தின் மீது அபிமானமும் பிற மதங்களின் மீது துவேஷம்ம் கொள்ளச்செய்வது, அகந்தை தான், இதை விட்டொழிக்க வேண்டும்.

பலன் கருதா பக்தி என்பது சாத்யமே. அதற்கு உதாரணமாக பிரஹலாதனுடைய பக்தியையும், நாரதமுனிவரின் பக்தியையும் கூறலாம்.

சராணாகதி என்று பேசுவதெல்லாம் வெல்லத்தில் செய்த பிள்ளையாரைக் கிள்ளி சிறிது வெல்லத்தை எடுத்து, அந்த வெல்லப் பிள்ளையாருக்கே நைவேத்யம் செய்வது போலாகும்.

மூன்றாவது காஷாயம். இது முற்பிறவிகளில் அனுபவித்த புலன் நுகர்ச்சிகள் பற்றிய எண்ணங்களும் ஆசைகளும் ஆகும்.

புத்தி பூர்வமாக அறிந்திருப்பது அதிஞானம். அதாவது உறுதிப் படாத ஞானம் ஆகும். காலம் வரும் போது நீ திட ஞானத்தில் – அதாவது உறுதியற்ற ஞானத்தின் நிலை பெறுவாய். இதுதான் முடிவான உண்மை. தன்னை உணர்ந்திருப்பதே ஞானம் ஆகும்.

கடல் பொங்கினால் அற்ப ஜந்து தலையெடுக்க முடியாது. அதுபோல ஞான வெள்ளம் அற்பமான அகந்தை தோன்றாது.

நீ உன்னை அறிந்துகொள். உலகவினை தன்னாலே நடைபெறும். நடத்துவோன் நடத்துகிறான். நீ சாட்சியாக இரு. நான் என்று கூறிக்கொண்டு எதிலும் முன் நிற்காதே.

உலகம் மெய் என்ற அபிப்ராயத்தை விட்டொழிக்காவிட்டால் மனம் எப்பொழுதும் உலகத்தையே நாடி நிற்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *