ஐன்ஸ்டின்

விஞ்ஞானி மேதை ஐன்ஸ்டின்

இன்று ‘அணுகுண்டு’ என்று சொல்ல அறியாதவர்கள் இல்லை.

அணுகுண்டு தயாரிக்காத வல்லரசு நாடுகள் உலகில் இன்று இல்லை.

இந்தியா அணுகுண்டு வெடித்த பின்பு, உலகம் முழுவதும் அணுகுண்டு பற்றியும், இந்தியா பற்றியும் அதிகமாகப் பேசப்படுகிறது.

இந்தியாவுக்குப் போட்டியாக பாகிஸ்தானும் தமது வல்லமையை உலகம் அறிய வேண்டும் என்பதற்காகவும், இந்தியாவை மிரட்டுவதற்காகவும் அணுகுண்டை வெடித்துக் காட்டியது. இன்று உலகம் முழுவதிலுள்ள மக்கள் அச்சுறுத்துவதற்காகவும், தங்களின் வல்லரசுப் போக்குகளை நிலை நாட்டுவதற்காவும், மனித குலத்தை அழித்தொழிப்பதற்காகவும் அணுகுண்டு ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தப்படுகின்றது.

ஆனால், இந்த அணுகுண்டைக் கண்டுபிடித்தவர், இது போன்ற செயல்களுக்குப் பயன்படுத்தக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தார்.

இரண்டாவது உலக மகாயுத்தம ஆரம்பமாவதற்குரிய அறிகுறிகள் தெரிந்த நேரம்.. அமெரிக்க ஜனாதிபதி ரூஸ்வெல்ட் அந்த விஞ்ஞானியை அழைத்து, “அணுகுண்டு தயாரிக்க வேண்டும். அது உங்களால்தான் முடியும். நீங்கள் அணுகுண்டு தாயரித்துக் கொடுத்தால் அதற்குத் தேவையான உதவிகளையும் பணமும் தரத் தயாராக இருக்கிறேன்” என்றார்.

ரூஸ்வெல்ட் சொன்னதைக் கேட்ட அந்த விஞ்ஞானி சிரித்தார். அவருடைய சிரிப்பின் அர்த்தம் புரியாமல் ரூஸ்வெல்ட் விழித்தார்.

“அறிவியல் கண்டுபிடிப்புகள் மனித குல மேம்பாட்டுக்குப் பயன்பட வேண்டுமே தவிர, மனித குலத்தின் அழிவுக்குப் பயன்படுத்தக்கூடாது” என்று உறுதியாக அந்த விஞ்ஞானி ரூஸ்வெல்டுக்குப் பதில் கூறினார்.

ரூஸ்வெல்ட் வியப்போடு அந்த விஞ்ஞானியைப் பார்த்தார். மீண்டும், “எனது அறிவாற்றலை ஒரு போதும் மனித குலத்தை அழிப்பதறகுப் பயன்படுத்த மாட்டேன்; பணத்திற்காக எனது மூளையை அடகு வைக்க மாட்டேன்” என்று கூறிவிட்டு அந்த விஞ்ஞானி வெளியேறினார்.

ரூஸ்வெல்ட் வேறொரு விஞ்ஞானியை வைத்து அணுகுண்டைத் தயாரித்தார். இரண்டாவது உலக மகாயுத்தம் நடந்தபோது அந்த அணுகுண்டை ஜப்பானில் உள்ள ஹிரோஷிமா, நாகசாகி ஆகிய நகரங்களின் மீது அமெரிக்கா வீசியது. இந்தக் கோரச் சம்பவம் 1945ஆம் ஆண்டு நடந்தது.

ஹிரோஷிமா, நாசாகி நகரங்கள் தரைமட்டமாகின. எங்கு நோக்கினும் மரண ஓலங்கள், இந்தக் கொடுமையின் பாதிப்பிலிருந்து இன்றும் கூட அந்த நகரம் முழுதும் விடுபடவில்லை. அன்று வீசிய அணுகுண்டு கதிர்கள் இன்று பிறக்கும் குழந்தைகளையும் பாதிப்பதாகப் பல விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

ரூஸ்வெல்டின் ஆணைக்கு அடிபணியாத அந்த விஞ்ஞானி தயாரித்ததையும், அந்த அணுகுண்டு ஜப்பான் நகரங்களின் மீது வீசப்பட்டதையும், அதனால் மனித குலம் பாதிக்கப்பட்டதையும் அறிந்து தேம்பித் தேம்பி அழுதார். இந்த சோகத்திலிருந்து விடுபட அவருக்குப் பலகாலம் ஆயிற்று.

அந்த மனிதாபிமானமிக்க விஞ்ஞானி யார்?

அவர்தான் ஐன்ஸ்டின் என்ற விஞ்ஞான மேதை.

இவருடைய “பொருள் சக்தி மாற்றக் கோட்பாட்”டின் அடிப்படையில்தான் அணுகுண்டு தயாரிக்கப்படுகிறது.

அமெரிக்க ஜனாதிபதி ரூஸ்வெல்டின் ஆணைக்கு மறுப்பு தெரிவித்த ஐன்ஸ்டின், இன்று உலகப் புகழ்வாய்ந்த மேதைகளில் ஒருவராக உருவாக்கியது.

விஞ்ஞானிகள், ஆய்வாளர்கள், பேராசிரியர்கள், ஆராய்ச்சி மாணவர்கள் ஆகியோர் மத்தியில் ஐன்ஸ்டினின் தத்துவமும் புகழ்ந்து பேசப்பட்டது. 1921-ஆம் ஆண்டு ஐன்ஸ்டினை நோபல் பரிசு தேடி வந்தது.

உலகின் பல பகுதிகளுக்குச் சென்று வந்த ஐன்ஸ்டின், தமது சொந்த நாடான ஜெர்மனியிலேயே வாழ்வது என்று முடிவு செய்து, அங்கேயே தங்கினார். ஆனால் அப்போது ஜெர்மனியின் அதிபராக இருந்த ஹிட்லர், யூதர்களையும், யூத அறிவாளிகளையும் இழிவாக நடத்துவதைக் கண்டு வருந்தினார்.

இனி நாம் வாழ்வதற்கு ஜெர்மனி ஏற்ற இடமல்ல என்று ஐன்ஸ்டின் முடிவு செய்தார். அதன்பின் அவர் வாழ்க்கை அமெரிக்காவில் தொடர்ந்தது. அங்குள்ள ‘பிரின்ஸ்டன்’ என்ற பல்கலைக்கழகத்தில் ஐன்ஸ்டின் இயற்பியல் பேராசிரியராகப் பணியாற்றினார்.

ஐன்ஸ்டின் மாணவராக இருந்த போதே, அவரது அறிவாற்றலால் கவரப்பட்டு காதலியாக மாறிய மிலா என்ற பெண்ணை அவர் மணந்தார். அவர்களுக்கு இரண்டு குழந்தைகளும் பிறந்தது.

பிள்ளைகள் பெற்ற மிலாவின் போக்கில் மாற்றங்கள் ஏற்பட்டன. உலக மேதையான ஐன்ஸ்டின் உள்ளத்தைப்புரிந்து கொள்ள விரும்பாத அவரது மனைஇ மிலா, ஐன்ஸ்டினை விட்டுப் பிரிந்தார்.

தனக்கு ஒரு துணை வேண்டி, தம் தேவைகளை அறிந்து தாயுள்ளத்தோடு நடந்துகின்ற ஒரு பெண்ணை ஐன்ஸ்டின் தேடினார். அவருடை உறவுக்காரப் பெண்ணான எல்சா என்பவளை ஐன்ஸ்டின் மணந்தார். திருமணமான சிறிது காலத்திலேயே எல்சா மறைந்தார்.

தம் அறிவாற்றலைக் கண்டு காதலித்துத் திருமணம் செய்த மிலாவின் பிரிவும்; தம் உறவுக்காரப் பெண்ணான எல்சாவின் மறைவும் ஐன்ஸ்டினை யோசிக்க வைத்தது. இதுபோன்ற நிகழ்ச்சிகள் தமது எதிர்கால வெற்றிகளுக்குத் தடைக் கற்களாக இருப்பதை நினைத்து ஒரு முடிவுக்கு வந்தார். இனி எஞ்சிய காலத்தைத் தனியாகவே வாழ்ந்து முடிப்பது என்று ஐன்ஸ்டின் உறுதி பூண்டார்.

சுமார் இருபது ஆண்டுகள் மனைவி துணைவியின்றி வாழ்ந்த ஐன்ஸ்டின், 1955 ஏப்ரல் 18-ம் நாள் அமெரிக்காவில் மறைந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *