இந்தியப் பெண்மணிகள்

இந்தியப் பெண்மணிகள்

1. இந்தியப் பெண்கள் 1

இந்தியாவிலுள்ள என் தாயினத்தையும் என் சகோதரிகளையும் பற்றி மற்றொரு இனத்தைச சார்ந்த பெண்களிடம் பேசப் போகிறேன். நீங்களும் எனக்குத் தாயையும் சகோதரிகளையையும் போன்றவர்களே, துரதிர்ஷ்டவசமாக சமீபகாலத்தில் எங்கள் நாட்டுப் பெண்களைச் சபிப்பவர்களையே நான் அதிகம் காண்கிறேன். என்றாலும் அவர்களை வாழ்த்தவும் சிலர் இருக்கவே செய்கிறார்கள்.

முதலில் இந்தியாவின் கடந்தகால வரலாற்றைச் சற்று பார்ப்போம். அங்கே தனித்துவம் வாய்ந்த ஒன்றை நாம்காண்கிறோம். அமெரிக்கர்களாகிய நீங்களும், இந்துக்களாகியநாங்களும், ஐஸ்லாந்தைச் சேர்ந்த இந்தப் பெண்மணியும் (மிசஸ் ஸிக்ரிட் மேக்னுஸன்) ஆரியர்கள் என்ற பொது மூதாதையரின் சந்ததியினரே என்ற செய்தி உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். எங்கெல்லாம் ஆரியர்கள் சென்றார்களோ அங்கெல்லாம் மூன்று கருத்துக்களைக் காணலாம்; கிராம சமுதாயம், பெண்ணுரிமை, மற்றும் இன்பகரமான மதம்.

முதல் கருத்து கிராம சமுதாயங்களின் அமைப்பு இதுபற்றி வட நாடுகள் சம்பந்தமான விஷயங்களை இப்போதுதான் மிசஸ் புல் கூறினார். நிலம் சொந்தமாக இருந்த ஒவ்வொருவனும் தனக்குத்தானே தலைவனாக இருந்தான். நாம் தற்போது உலகில் காணும் இது எல்லா அரசியல் அமைப்புகளும் அந்த கிராம அமைப்புகளின் பரிணாமமே. ஆரியர்கள் பல்வேறு நாடுகளுக்குச் சென்று குடியேறியபோது ஒரு குறிப்பிட்ட சூழ்நிலைகள் ஒருவிதமான அமைப்புகளை உருவாக்கின; வேறு சூழ்நிலைகள் வேறுவிதமான அமைப்புகளை உருவாக்கின.

ஆரியர்களின் அடுத்த கருத்து பெண்கள் சுதந்திரம் பண்டைய நாட்களில் ஆணைப்போல் பெண்ணுக்கும் சம இடம் அளிக்கப்படுவதை ஆரிய இலக்கியங்களில் மட்டுமே காண்கிறோம்; வேறு எந்த இலக்கியங்களிலும் அத்தகைய நிலையைக் காண முடியாது.

வேதங்களைப் பார்ப்போம். அது உலகின் மிகப் பழைய இலக்கியம்; உங்களுக்கும் எங்களுக்கும் பொது முன்னோரால் தொகுக்கப்பட்டது. அது இந்தியாவில் எழுதப்படவில்லை; ஒருவேளை பால்டிக் கடற்கரை நாடுகளிலோ அல்லது மத்திய ஆசியாவிலோ எழுதப் பட்டிருக்கலாம். எங்கேயென்று யாருக்கும் சரியாகத் தெரியாது.

வேதங்களின் மிகப் பழைய தகுதி பாடல்களால் ஆனது. ஆசிரியர்கள் தாங்கள் வழிபட்ட தேவர்களை இதப் பாடல்களால் போற்றனார்கள். god என்ற வார்த்தையைப் பயன்படுத்துவது அவ்வளவு சரியல்ல; இதற்குரிய சமஸ்கிருத வார்த்தையின் பொருள் ‘ஒளி பொருந்தியவர்’ என்பதாகும். இந்தப் பாடல்கள் அக்கினி, சூரியன், வருணன் போன்ற பல்வேறு தேவர்கள் மீது பாடப்பட்டது. ‘இன்ன தெய்வத்தின் மீது இன்ன ரிஷி இயற்றிய பாடல்’ என்பதாக அவற்றின் தலைப்பு காணப்படுகிறது.

பத்தாம் அத்தியாயத்தில் வருகின்ற பாடல் சற்று வித்தியாசமானது – அதை இயற்றியவர் ஒரு பெண்ரிஷி; தேவர்கள் அனைவருக்கும் ஆதாரமான ஒரே கடவுளின் மீது இந்தப்பாடல் பாடப்பட்டுள்ளது. மற்ற பாடல்கள் எல்லாம் யாரோ ஒருவர் ஒரு குறிப்பிட்ட தெய்வத்தின் மீது பாடுவதுபோல் அமைந்துள்ளன. ஆனால் இங்கு ஒரு திருப்பத்தைக் காண்கிறோம். கடவுள் (தேவி வடிவில்) தமக்குத்தாமே பேசிக் கொள்வதுபோல் இந்தப்பாடல்கள் உள்ளன. ‘நான்’ என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது; ‘பிரபஞ்சத்தின் தலைவி நானே.

பெண்களின் செயலாக வேதங்களில் முதன்முதலாக நாம் காண்பது இதுவே. போகப்போக பெண்கள் இன்னும் முக்கியபங்கு வகிப்பதைக் காண்கிறோம்; அவர்கள் புரோகிதர்களாகக்கூடச் செயல்படுகிறார்கள். பெண்கள் புரோகிதர்களாக இருக்கக்கூடாது என்று மறைமுகமாக வேனும் சுட்டிக் காட்டக்கூடிய எந்தப் பகுதியும் வேதங்களில் இல்லை. சொல்லப்போனால், பெண்கள் புரோகிதர்களாகச் செயல்படுவதைப் பல இடங்களில் நாம் காண முடிகிறது.

மாபெரும் ரிஷியான யாஜ்ஞவல்கியரைப்பற்றி ஓர் அழகிய கதை உள்ளது. அவர் ஜனக மன்னரின் சபைக்குச் சென்றார். பண்டிதர்களுக்கான சபை அங்கே கூட்டப்பட்டிருந்தது. பலர் அவரிடம் வந்து கேள்விகள் கேட்டனர். ஒருவர், ‘இந்த யாகத்தை எப்படிச் செய்வது? என்று கேட்டார். மற்றொருவர், ‘அந்த யாகத்தை எப்படிச் செய்வது?’ என்று கேட்டார். அவர்களுக்கெலாம் பதில் அளித்த பின் அங்கே ஒரு பெண் எழுந்து கூறினாள்; ‘இவையெல்லாம் சிறுபிள்ளைத்தனமான கேள்விகள் இப்போது கவனமாக இருங்கள். இரண்டு அம்புகளைப் போல் நான் இரண்டு கேள்விகள் கேட்கப் போகிறேன். முடிந்தால் பதில் சொல்லுங்கள். அப்போது ங்களை ரிஷி என்று அழைக்கிறோம். முதல் கேள்வி: “கடவுள் என்பவர் யார்?”

இவ்வாறு இந்தியாவில் ஆன்மாபற்றியும் கடவுள் பற்றியும் கேள்விகள் எழுந்தன; அதுவும் பெண்களிடமிருந்து எழுந்தன. ஒரு ரிஷி அவள் முன்னால்பரிசோதனையில் தேற வேண்டியிருந்தது, அவரும் தேறினார்.

இலக்கியத்தின் அடுத்தப்படியான புராணங்களுக்கு வருகிறோம். இங்கும் கல்வி சீர்கெடவில்லை. குறிப்பாக அரசர்களிடம் கல்வி என்பது மிகவும்போற்றத்தக்க நிலையில் இருந்தது.

பெண்கள் கணவனைத் தாங்களே தேர்ந்தெடுத்துக் கொள்வதை வேதங்களில் காண்கிறோம். ஆண்களும் அப்படியே செய்தார்கள். அடுத்த படிக்கு வரும்போது, ஒரு ஜாதியைத் தவிர மற்ற அனைவரும் பெற்றோர் பர்த்துத்திருமணம் செய்விக்கப்பட்டார்கள்.

இங்கேயும் மறுபக்கத்தைப் பார்க்கும்படி உங்களை நான் கேட்டுக்கொள்கிறேன். இந்துகளைப்பற்றி என்ன தான் சொன்னாலும், அவர்கள் இதுவரை உலகி தோன்றியமிக உயர்ந்த கல்வி பெற்றவர்களுள் ஓர் இனத்தினர். இந்து தத்துவவாதி அனைத்துமையம் அறிவின் மூலம் பார்க்கிறான் அவன். எல்லாமே ஜோதிடக் கணக்கின் மூலம் சரி செய்யப்பட வேண்டும். இதன் கருத்து என்னவென்றால், நட்சத்திரங்கள் நமது விதியை ஆள்கின்றன. இன்றுகூட, குழந்தை பிறந்ததும் ஜாதகம் கணிக்கப்படுகிறது. அது அந்தக் குழந்தையின் குண நலன்களை நிர்ணிக்கிறது. ஒரு குழந்தை தெய்வீக இயல்புடன் பிறக்கிறான்; இன்னொருவன் மனித இயல்புடன், மற்றொருவன் அதை விடக்கீழான இயல்புடன் பிறக்கிறான்.

இப்போது பிரச்சினை ஒன்று எழுகிறது; அசுர இயல்பு படைத்த குழ்தையுடன் தெய்வ இயல்பு கொண்ட குழந்தையைச் சேர்த்து வைத்தால் ஒருவரையொருவர் கீழ்நிலைக்கு இழுக்க மாட்டார்களா?

அடுத்த பிரச்சினை; நெருங்கிய உறவினர்களுக்கு இடையே திருமண உறவை நமது சட்டங்கள் அனுமதிப்பத்திலை. சொந்தக் குடும்பத்திலோ, சகோரதர்களின் பிள்ளைகளுக்க இடையிலும்,சகோதரிகளின் பிள்ளைகளுக்கு இடையிலும் திருமண உறவு கூடாது என்பது மட்டுமல்ல; தந்தை அலது தாய்வழி உறவினரிடையே கூட திருமண பந்தம் வைத்துக் கொள்ளக் கூடாது.

மூன்றாவது பிரச்சினை: மணமகன் அல்லது மணமகளின் ஆறு தலைமுறைகளில் யாருக்காவது குஷ்ட ரோகம், காசநோய் போன்ற தீராத வியாதிகள் வந்திருக்குமானால் அங்கே திருமண பந்தம் கூடாது.

இந்த மூன்று பிரச்சினைகளையும் மனத்தில் கொண்டு பிராமணன் கூறுகிறான்: ‘பையனோ பெண்ணோ தங்கள் விருப்பம்போ திருமணம் செய்துகொள்ளுமாறு விட்டுவிடுவதாக வைத்துக் கொள்வோம். அவர்கள்முக அழகைக் கண்டு மயங்குவதார்களாஏ தவிர, மேற்கண்ட பிரச்சினைகளைதக் கருத்தில் கொள்ளாமல் போக ஏரலாம். இது குடும்பத்தையே அழித்துவிடும் எங்கள் திருமணச் சட்டங்களை நிர்ணயிக்கின்ற முதல் கருத்து இதுதான். சரியோ தவறோ இந்தக் கருத்து பின்னணியில் இருக்கிறது. சிகிச்சையைவிட, தடுபது சிறந்ததே அல்லவா!

துன்பத்தை நமே உருவாக்கிக் கொண்டோம்; அதனல்தான் உலகில் துன்பம் இருக்கிறது. எனவே இத்தகைய அப்பாவிக் குழந்தைகள் பிறப் பதைத் தடுப்பது எப்படி என்பதுதான் கேளவி. சமுதாய உரிமைகள் எவ்வளவு தூரம் தனிமனிதன் மீது ஆதிக்கம் செலுத்தலாம் என்பது விடை காண வேண்டிய கேள்வி. யாரைத் திருமணம் செய்துகொள்வது என்பதைப் பையனோ பெண்ணோ தீர்மானிக்கக்கூடாது என்பது இந்துக்களின் கருத்து.

இப்படிச் செய்வதுதான் மிகச் சிறந்தது என்று நான் சொல்லவில்லை. இபடி அவர்கள் கையில் பொறுப்பை விடுவது ஒரு முழுமையான தீர்வு என்று நான் கருதவும் இல்லை. இதற்கு நான் எந்தத் தீர்வையும் கண்டுபிடிக்கவில்லை. அத்தகைய ஒரு தீரவு எந்த நாட்டிலும் இருபதாகவும் தெரியவில்லை.

இனி மற்றொரு விஷயத்திற்கு வருவோம். இன்னொரு வினோதமான திருமண முறை, குறிப்பாக மன்னர் குலத்தில் உள்ளது என்று ஏற்கனவே சொன்னேன். பெண்ணின் தந்தை பல்வேறு நாடுகளின் இளவரசர்களையும், உயர் குலத்தினரையும் அழைத்து சுயம்வரம் நடத்துவதே அந்த முறை. பெண் ஒரு பல்லக்கில் இளவரசர்களின் முன்பு அழைத்துச் செல்லப்படுகிறாள். ‘இவன் இன்ன நாட்டு இளவரசன், இன்னின்ன பெருமைகள் படைத்தவன்’ என்று அவளுக்கு ஒவ்வோர் அரசகுமாரனும் அறிமுகப்படுத்தப்படுகிறான். அவள் ஒருவனை ஏற்றுக்கொண்டால் அங்கேயே நின்றுவிடுவாள்; இல்லாவிட்டால் பல்லக்கை முன்னால் போகும் படிக்கூறுவாள். (இந்த ஏற்பாடுகள் எல்லாம் ஏற்கனவே செய்யப்பட்டிருக்கும். அவள் ஏற்கனவே யாரையாவது மனத்தில் வரித்திருப்பாள்) அவள் ஒருவனைத் தேர்ந்தெடுத்ததும் அவனது கழுத்தில் ஒரு மாலையைப் போடும்படிக் கூறுவாள்; அதன்மூலம் தனது சம்மதத்தைத் தெரிவிப்பாள். (முகமதியர் இந்தியாவில் படையெடுத்து வருவதற்கு இத்தகைய கடைசி திருமணங்களில் ஒன்றே காரணம் ஆயிற்று) இத்தகைய திருமணங்கள் ஷத்திரிய ஜாதியில் மட்டுமே நடைபெற்றது.

இருப்பவற்றுள் மிகப் பழையதாகிய ராமாயண காவியத்தில் இந்துக்களின் மிக உயர்ந்த பெண்மை லட்சியம் சீதை என்ற பாத்திரத்தின் மூலம் படைக்கப்பட்டுள்ளது. எல்லையற்ற பொறுமை, எல்லையற்ற நற்பண்புகள் இவற்றின் திரண்ட வடிவமாக விளங்கிய அவளது வாழ்க்கையை முழுமையாகச் சொல்வதற்குத் தற்போது நேரம் இல்லை. நாங்கள் அவளை தேவியின் அவதாராமாக வழிபடுகிறோம். கணவனான ராமனின் பெயருக்கு முன்னால் அவளது பெயரே சொல்லப்படுகிறது. நாங்கள் ‘திரு. மற்றும் திருமதி’ என்றே கூறுகிறோம். எல்லா தேவதேவியரின் பெயரைச் சொல்லும்போதும் முதலில் பெண்களின் பெயரையே சொல்கிறோம்.

இந்துக்களிடம் மற்றொரு தனித் தன்மையும் உள்ளது. பிரபஞ்சத்தின் பின்னணியாக விளங்குகின்ற அறுதிப் பரம்பொருளே இந்தத் தத்துவத்தின் மைக் கோட்பாட என்பதை எனது சொற்பொழிவுகளைத் தொடர்ந்து கேட்வர்கள் தெரிந்திருப்பார்கள். அந்த அறுதிப் பரம்பொருளைப் பற்றி நாம் எதுவும் சொல்ல முடியாது. அவரது சக்திகளை ‘அவள்’ என்று குறிப்பிடுகிறோம். இந்த ‘அவளே’ இந்தியாவில் சகுணக் கடவுளாக வழிபடப் படுகிறாள். பிரம்மத்தின் இத சக்தி எப்போதும் பெண்பாலாகவே குறிக்கப்படுகிறது.

இப்போது நான் சட்டங்களை வகுத்தவரான மனுவுக்கு வருகிறோம். ஒரு குழந்தையை எப்படி வளர்க்க வேண்டும் என்பது பற்றி மனுநீதியில் விரிவாக காணப்படுகிறது. எந்த ஜாதியைச சேர்ந்தவர்களாக இருந்தாலும் ஆரியன் குழந்தையை படிக்க வைக்க வேண்டியது கட்டாயமான ஒன்று. குழந்தைக்கு எப்படிக் கலவி அளிக்க வேண்டும் என்பதை விவரித்த பிறகு மனு சொல்கிறார்: ‘சிறுவர்களைப்போல் சிறுமிகளும் அதே ரீதியில் பயிற்றுவிக்கப்பட வேண்டும்’.

பெண்களை இழிவாக்க்கூறுகின்ற பல பகுதிகள் இருப்பதாக நான் கேள்விப்படுகிறேன். பெண்கள் நமது ஆணையைத் தூண்டுவதாக நமது சாஸ்திரங்களில் பல இடங்களில் காணப்படுகிறது என்பதை நான் ஒத்துக் கொள்கிறேன். அது உங்களுக்கும் தெரியும். ஆனால் அதே பெண்களை இறைவனின் சக்தியாகப் போற்றுகின்ற பகுதிகளும் உள்ளன. எந்த வீட்டில் பெண்ணின் ஒரு துளி கண்ணீர் விழுகிறதோ, அந்த வீட்டில் தேவர்கள் மகிழ்ச்சி அடைவதில்லை; அந்த வீடு நாசம் அடைகிறது என்பது போன்ற பகுதிகள் உள்ளன். மது அருந்துவது, பெண்ணைக் கொல்வது, பிராமணனைக் கொல்வது இவை இந்து மதத்தில் மிகக்கடுமையான குற்றங்கள். எங்கள் சில நூல்களில் பெண்களை நிந்திக்கின்ற வாக்கியங்கள் இருப்பதை நான் ஒத்துக்கொள்கிறேன். ஆனாலும் இந்து சாஸ்திரங்கள் உயர்ந்தவை என்பதை நான் உறுதியாக்க் கூறுவேன். ஏனெனில் மற்ற மத நூல்களில் பெண்களை இழிவாகப் பேசுவது மட்டுமே உள்ளது. அவர்களைப்பற்றி நல்லதாக ஒரு வார்த்தை கூட இல்லை.

இனி பழைய நாடகங்களுக்கு வருவோம். நூல்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும். சமுதாயத்தை அப்படியே பிரதிபலிப்பது அந்தக் காலத்தில் எழுதப்பட்ட நாடங்களே. கிறிஸ்துவக்கு 400 வருடங்களுக்கு முன்பே எழுதப்பட்ட இந்த நாடகங்களில் ஆண்களும் பெண்களும் சேர்ந்து படிக்கின்ற பல பல்கலைக் கலகங்களைப் பற்றிக் கூறப்பட்டுள்ளது. அதன் பிறகு இந்துப் பெண்கள் உயர்கல்வி கற்க அனுமதிக்கப்டபடாததால் இன்று அவர்கள் கல்வி பெறவில்லை. இன்று போலவே அன்று அவர்கள் தோட்டங்கள், பூங்காக்கள் போன்ற இடங்களுக்கு உல்லாசமாகச் சென்று வரவே செய்தனர்.

உலகின் மற்ற பெண்களைவிட இந்துப் பெண்கள் உயர்ந்த நிலையில் இருக்கின்ற மற்றரு கருத்தையும் உங்களிடம் சொல்ல விரும்புகிறேன்: அது அவளது உரிமைகள். இந்தியாவில் ஆண்களைப் போலவே பெண்களுக்கும் சொத்துரிமை உண்டு. இது ஆயிரமாயிரம் ஆண்டுகளாக வருகின்ற வழக்கம். உங்களுக்கு யாராவது வழக்கறிஞர் நண்பர்கள் இருந்து, அவர்களின் உதவியுடன் இந்துச் சட்டங்களை நீங்கள் படிக்க முடியுமானால் இந்த விஷயங்களை நீங்களே அறிந்துகொள்ள முடியும். ஒரு பெண் தன் வீட்டிலிருந்து லட்ச ரூபாய் கொண்டு வரலாம், ஆனால் அது அவளுக்கே சொந்தம். அதல் ஒரு பைசாவைக்கூடத் தொட யாருக்கும் உரிமை கிடையாது. பிள்ளை இலாமல் கணவன் இறந்தால், அவனுக்குத் தந்தை தாய் இருந்தால்கூட, அவனது சொத்து மனைவிக்கே சேரும். அன்றிலிருந்து இன்று வரை அதுதான் சட்டமாக உள்ளது. மற்ற நாட்டுப் பெண்களைவிட இந்தப் பெண்ணிற்கு உரிய தனி உரிமை இது.

பழைய சாஸ்திரங்கள், ஏன், புதிய நூல்கள்கூட, இந்து விதவைகள் மறுமணம் செய்துகொள்வதைத் தடை செய்வதில்லை. அப்படி அவை தடைசெய்வதாக நினைப்பது தவறு. ஆணும் சரி, பெண்ணும் சரி அதை முடிவு செய்ய வேண்டிய பொறுப்பை சாஸ்திரங்கள் அவர்களிடமே விட்டுவிடுகின்றன. எங்கள் மதத்தைப் பொறுத்தவரை, திருமணம் என்பது பலவீனர்களுக்கு மட்டுமே- இந்தக் கருத்து இன்றும் அப்படியே பொருந்துவதாகத்தான் உள்ளது. நிறைவான, முழுமையான ஒருவனாகத் தன்னை உணர்கின்ற ஒருவனுக்குத் திருமணத்தால் என்ன பயன்? திருமணம் செய்துகொள்பவர்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுக்கப்பட்டது; அந்த வாய்ப்பை இழந்தவர்கள், ஆணானாலும் பெண்ணானாலும் மீண்டும் திருமணம் செய்து கொண்டால் இழிவாக்க் கருதப்படுகிறார்கள் அதற்காக அவர்கள் தடைசெய்யப் படுகிறார்கள். என்பது பொருளில்லை. விதவை திருமணம் செய்துக்கொள்ளக் கூடாது என்று எங்குமே சொல்லப்படவில்லை. ஆனால் கணவனையோ மனைவியையோ இழந்தவர்கள் மீண்டும் திருமணம் செய்துகொள்ளாவிட்டால் ஆன்மீகத்தில் உயர்ந்தவர்களாக்க் கருதப்படுகிறார்கள்.

ஆண்கள் இந்தச் சட்டத்தை மதிப்பதில்லை, மீண்டும் திருமணம் செய்துகொள்கிறார்கள். பெண்கள் இயல்பாகவே ஆன்மீகப் போக்கு உடையவர்கள், ஆதலால் அவர்கள் சட்டத்தை மதிக்கிறார்கள். உதாரணமாக, இறைச்சி உண்பது மோசமானது. பாவமானது என்று எங்கள் சாஸ்திரங்கள் கூறுகின்றன; அதே வேளையில் இன்ன இன்ன மாமிசங்களை – உதாரணமாக ஆட்டிறைச்சி – உண்ணலாம் என்ற சொல்கின்றன. ஆட்டிறைச்சி உண்கின்ற எத்தனையோ ஆயிரக் கணக்கான ஆண்களை நான் பார்த்திருக்கிறேன்; ஆனால் எந்த வகையான இறைச்சியானாலும் அதை உண்கின்ற உயர்ஜாதிப் பெண் ஒருத்தியைகூட நான் கண்டதில்லை. சட்டதைத் மதிப்பது, மத வழியில் நடப்பது என்பது அவர்களது இயல்பிலேயே உள்ளது என்பதைத்தான் இது காட்டுகிறது. அதற்காக இந்து ஆண்களைப் பற்றிக் கடுமையான முடிவெடுத்து விடாதீர்கள். என் நிலையிலிருந்தும் நீங்கள் இந்துச் சட்டங்களைப் பார்க்க வேண்டும், ஏனெனில் நான் ஓர் இந்து ஆண்.

விதவைகள் இப்படித் திருமணம் செய்துகொள்ளாமல் இருப்பது படிப்படியாக ஒரு வழக்கமாக ஆகிவிட்டது. இந்தியாவில் ஒரு வழக்கம் உறுதியாகி விடுமானால் அதை மீறுவது ஏறக்குறைய முடியாத காரியம். இந்த விஷயத்தில் உங்கள் நாட்டைப்போல்தான் இந்தியாவும். நாகரிகம் (Fashion) என்ற பெயரில் ஐந்து நாள் பழகிய ஏதோவொரு வழக்கத்தையே விடுவது உங்களுக்குச் சிரம்மாக இருக்கிறது. இரண்டைத் தவிர மற்ற கீழ்ஜாதிகளில் விதவைகள் திருமணம் செய்து கொள்கிறார்கள்.

பிற்கால ஸ்மிருதிகளில் பெண்கள் வேதம் படிக்க் கூடாது என்ற கருத்து வருகிறது. அதேவேளையில் பிராமணன்கூட பலவீன்னாக இருந்தால் வேம் படிக்க்கூடாது என்பதையும் அத நூல்கள் சொல்கின்றன. மன வலிஐயற்ற பிராமணச் சிறுவனுக்கும் இந்தச் சட்டம் பொருந்தும். அதனால் கல்வியே அவர்களுக்கு மறுக்கப்பட்டது என்பது பொருள் அல்ல; ஏனெனில் வேதங்கள்தான் இந்துக்களுக்கு உரிய ஒரே நூல் என்று எண்ணிவிடக் கூடாது. வேதங்களைத் தவிர அனைத்தையும் பெண்கள் படிக்கலாம். சம்ஸ்கிருத இலக்கியம், விஞ்ஞானம், நாடகம், கவிதை என்று எல்லாவற்றையும் அவள்படிக்கலாம்; வேதங்களைத் தவி எல்லாவற்றையுமே படிக்கலாம்.

பிற்காலத்தில், பெண்கள் புரோகிதர்கள் ஆக்க் கூடாது என்ற கருத்து வந்தது. புரோகிதர் ஆகாவிட்டால் அவள் வேதங்களைப் படிப்பதால் என்ன பயன்? இந்த விஷயத்தில் இந்துக்கள் மற்ற நாடுகளைப்போல் அவ்வளவு பின்தங்கிய நிலையில் இல்லை. ஒரு பெண் உலகைத் துறந்து எங்களைப்போல் துறவியான பின், அவள் ஆணாகவோ,, பெண்ணாகவோ கருதப்படுவதில்லை. துறவிகளுக்குப் பால்வேறுபாடே கிடையாது. உயர்ந்த ஜாதி தாழ்ந்த ஜாதி, ஆண் பெண் போன்ற எல்லா கேள்விகளும் அங்கே அடியோடு மறைந்து விடுகின்றன.

மதத்தைப் பற்றி நான் அறிந்தவை எல்லாம் எனது குருநாதரிடமிருந்து கற்றுக் கொண்வை. அவர் அவற்றை ஒரு பெண்ணிடம் இருந்தே கற்றுக்கொண்டார்.
அமைதியான இந்து இனம் அவ்வப்போது வீராங்களைகளான பெண்களைத் தோற்றுவிப்பதுண்டு. 1857 கலத்தின்போது ஆங்கிலேயரை எதிர்த்துப் போரிட்ட பெண்மணியைப் பற்றி (ஜானசிராணி லட்சுமிபாய்) உங்கள் சிலருக்குத் தெரிந்திருக்கும். நவீனப் படைகளை வழிநடத்திக்கொண்டு, பெரிய படைகளுக்குத் தலைமை ஏற்று, அதை நிர்வகித்து இரண்டு வருடம் சுதந்திரமாக வாழ்ந்தாள் அவள், இந்த ராணி ஒரு பிராமணப் பெண்.

அந்தப் போரில் தன் மூன்று மகன்களை இழந்த ஒருவரை எனக்குத் தெரியும். அவர் தன் பிள்ளைகளைப் பற்றிப்பேசும்போது சாந்தமாக இருப்பார். ஆனால் ராணியைப்பற்றிப் பேச ஆரம்பித்தால் அவரது குரல் தழுதழுத்துவிடும்; ‘அவள் சாட்சாத் தேவியே, அவள் ஒரு மனிதப்பிறவியே அல்ல’ என்பார் அவர். அந்த ராணியைவிடச் சிறந்த தளபதியைத் தாம் கண்டதில்லை என்பார் அந்த முதியவர்.

சாந்த் பீபி அல்லது சாந்த சுல்தானாவின் (1546 – 1599 ) கதை இந்தியாவில் மிகவும் பிரபலமான ஒன்று. வரைச் சுரங்கங்கள் இருக்கின்ற கோல்கொண்டாவின் ராணி அவள். மாதக் கணக்காக அவள் போரிட்டாள். கடைசியில் எதிரிகள் கோட்டைச் சுவரில் ஒரு பிளவை ஏற்படுத்தி உள்ளே புக முயன்றனர். அதனை எதிர்பார்த்துத் தயாராக இருந்த ராணி அந்தப் படைகளைத் திரும்பி ஓடும்படிச் செய்தாள்.

பிற்காலத்தில் பதினாறே வயதான இந்துப் பெண் ஒருத்தி பெரிய ஆங்கிலேயே தளபதி ஒருவனையே எதிர் கொண்டாள் எனபது உங்களுக்குத் திகைப்பைத் தரலாம்.

அரசியல் நிர்வகம், எல்லப் பாதுகாப்பு, நாட்டை ஆளுதல் என்று மட்டுமல்ல, போர் திறத்தில்கூட ஆண்களுக்குச சம்மானவர்கள் என்பதைப் பெண்கள் இன்று நிரூபித்துவிட்டார்கள். இந்தியாவைப்பொறுத்தவரை எனக்கு இதில் சந்தேகம் இல்லை. தாங்கள் ஆண்களுகு எந்த வித்ததிலும் சளைத்தவர்கள் அல்ல என்பதை அவர்கள் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் நிரூபித்து வருகிறார்கள்; இனி அவர்கள் முன்னேறிய பிறகு சீர்குலைவதும் இல்லை, இது அவர்களது தனிப்பெருமை. ஒழுக்கம் என்பது இயல்பிலேயே ஊறிப்போயிருப்பதால் அவர்கள் அதிலிருந்து பிறழ்வதில்லை. எனவே நாட்டை ஆள்பவர்கள் என்ற ரீதியில் அவர்கள் ஆண்களைவிடச் சிறந்தவர்கள் என்பதை இந்தியாவிலாவது நிரூபித்துவிட்டார்கள். ஜான் ஸ்டூவர்ட் மில் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இன்றுகூட இந்தியாவில் பெண்கள் பெரிய எஸ்ட்டேட்களைத் திறமையுடன் நிர்வகிப்பதைக் காண்கிறோம். நான் பிறந்த ஊருக்கு அருகில் அத்தகைய இரண்டு பெண்கள் இருந்தார்கள். அவர்கள் பெரிய எஸ்டேட்களுக்குச் சொந்தக்காரர்கள் அந்த நிர்வாகத்தை முற்றிலும் தங்கள் சொந்தத் திறமையால் நடத்தினார்கள்; கல்வி மற்றும் கலையை வளர்ப்பதிலும் மிகுந்த ஆர்வம் காட்டினார்கள்.

பொதுவான மனித நேயம் என்பதற்கும் அப்பால் ஒவ்வொரு நாடும் தனக்கென்று ஒரு தனிப்பண்பை உருவாக்கிக் கொள்கிறது. அதுபோல்தான் மத்தில், அதுபோல்தான் அரசியலில், அதுபோல்தான் மதத்தில், அதுபோலத்தான் அரசியலில் , அதுபோலத்தான் உடம்பில், அதுபோல்தான் மனத்தில், அதுபோல்தான் ஆணலும் பெண்ணிலும், அதுபோல்தான் பண்புநலனிலும்ர ஒரு நாட்டிற்கு ஒரு குறிப்பிட்ட பணபு இருக்கிறது. மற்றொரு நாட்டிற்கு மற்றொரு பண்பு; கடந்த சில வருடங்களாக உலகம் இதை உணர ஆரம்பித்திருக்கிறது.

இந்தப் பெண் தனக்குத்தானே உருவாக்கிக் கொண்ட தனித்துவமும், வாழ்கை என்பது பற்றிய அவளது கருத்தும் தாய் என்பதே. ஓர் இந்துவின் வீட்டில் நீங்கள் சென்றால், இங்கு காண்பதைப்போல் மனைவி எவ்வளவு தூரம் கணவனக்கு நெருங்கியவளாக இருப்பதை அங்கே காணமுடியாது. இந்துவின் வீட்டில் தாய்தான் ஆதாரமாக இருப்பாள். மனைவி தாயாக ஆவதறகுக் காத்திருக்க வேண்டும், அதன்பிறகு அவள் குடும்பத்தில் அனைத்துமாக ஆவாள்.

ஒருவன் துறவியானபின் அவனது தந்தைதான் அவனை முதலில் வணங்க வேண்டும்; ஏனெனில் அவன் துறவி, எனவே தந்தையைவிட உயர்ந்தவன். ஆனால் தாயின் விஷயத்தில், அன் துறவியானாலும் சரி இல்லையானாலும் சரி முதலில் வணங்க வேண்டியவன் இவனே; முழந்தாளிட்டு , தாயின் முன் வீழந்து வணங்க வேண்டும். பிறகு அவள் முன்னால் ஒரு சிறிய பாத்திரத்தில் தண்ணீரை வைக்க வேண்டும். அவள் அதில் தன் கால் பெருவிரலை நனைப்பாள். நாங்கள் அதை அருந்த வேண்டும். ஓர் இந்து மகன் இதனை ஆயிரம் முறை வேண்டுமானாலும் மகிழ்ச்சியோடு செய்வான்.

வேதங்கள் நல்லொழுக்கம்பற்றி உபதேசிக்கின்ற பகுதியில் முதலில் வருவது, ‘தாய் உனக்கு தெய்வம் ஆகட்டும்’ என்பதுதான்.. அவள் தெய்வம்தான். இந்தியாவில் பெண் என்றால் தாய் என்பதுதான் பொருள். மனித குலத்தின் தாயாக இருப்பதில்தான் அவர்களது மதிப்பு இருக்கிறது. இதுவே இந்துவின் கருத்து.

முதியவரான எனது குருநாதர் சிறுமிகளை நாற்காலியில் அமரச் செய்து, அவர்களை மலரிட்டு வழிபட்டு, அவர்கள்முன் வீழந்து வணங்குவதை நான் கண்டிருக்கிறேன். அவர்கள் தெய்வத் தாயின் அம்சங்கள், ஆதலால் அவர்களை உண்மையாகவே அவர் வழிபட்டார்.

எங்கள் குடுபத்தில் தாய் என்பவள் தெய்வமே. இந்த உலகில் தன்னலம் கலாத அன்பு தாயிடம் மட்டுமே உள்ளது. அது எப்போதும் துன்பங்களை ஏற்றுக்கொள்வது; எப்போதும் நேசிப்பது – இதுதான் எங்கள் கருத்து. தாயிடம் காண்கின்ற அன்பைத் தவிர வேறு எது இறையன்பை நமக்குக் காட்ட முடியும்? இவ்வாற ஓர் இந்துவைப்பொறுத்தவரையில் தாய் என்பவள் உலகில் தெய்வத்திலை அவதாரம்.

‘எந்த மகன் முதலில் தாயால் கற்பிக்கப்படுகிறானோ அவன் மட்டுமே கடவுளை அறிவான்’ எங்கள் பெண்களின் கல்வியின்மையைப் பற்றி பல பயங்கரமான நான் கேட்டிருக்கிறேன். ஆனால் எனக்குப் பத்து வயதாகும்வரை என் தாய்தான் எனக்குப் பாடம் சொல்லிக் கொடுத்தார். நான் என் பாட்டியைப் பார்த்திருக்கிறேன், கொள்ளுப்பாட்டியைப் பார்த்திருக்கிறேன். எழுதப்படிக்கத் தெரியாமலோ, கைநாட்டு வைக்க வேண்டிய நிலையிலோ எனது முன்னோர்களுள் எந்தப்பெண்ணும் இருந்ததில்லை. என்பதை நான் உங்களுக்கு உறுதியாகக் கூறமுடியும். அப்படி எழுதப்படிக்கத் தெரியாமல் ஒரு பெண் இருந்திருந்தால் நான் அங்கு பிறந்திருக்கவே முடியாது. ஜாதிச் சட்டங்கள் கல்வியைக் கட்டாயப்படுத்துகின்றன.

எனவே இடைக்காலத்தில் இந்த்பு பெண்களுக்குப் படிப்பும் கல்வியும் மறுக்கப்பட்டது என்பதெல்லாம் வெறும் கட்டுக்கதை. சர் வில்லியம் ஹண்டர் எழுதிய ‘ஆங்கிலேயர்களின் வரலாறு’ (History of English People) என்ற நூலைப் படித்துப் பாருங்கள். சந்திர கிரகணத்தைக் கூட கணிக்கக்கூடிய இந்தியப் பெண்களைப் பற்றி அவர் அதில் குறிப்பிடுகிறார்.

தாயை மிகவும் போற்றுவது அவளைத் தன்னலம் மிக்கவன் ஆக்குகிறது. குழந்தைகள் தாயிடம் அதிக அன்பு காட்கும்போது அவை தன்னலம் மிக்கவை ஆகின்றன என்றெல்லாம் என்னிடம் சொன்னார்கள். ஆனால் நான் அவற்றை நம்பவில்லை. என் தாய் என்னிடம் காட்டிய அன்பே இன்றைய என்னை உருவாக்கியுள்ளது. அவளிடம் நான் பெற்ற கடனை ஒருபோதும் தீர்க்க முடியாது.

இந்துத்தாயை ஏன் வழிபட வேண்டும்? எங்கள் த்த்துவ்வாதிகள் இதற்கு ஒரு காரணம் கண்டுபிடிக்க முயன்று, ஒரு முடிவுக்கும் வந்துள்ளார்கள்; நாங்கள் எங்களை ஆரிய இனம் என்று அழைக்கிறோம். யார் ஆரியன்? யார் ஆன்மீகத்தின் மூலம் பிறந்தானோ அவன் ஆரியன். நான் சொல்கின்ற விஷயம் இந்த நாட்டி சற்று வினோதமாகப்படலாம். கருத்து என்னவென்றால், மனிதன் ஆன்மீகத்தின் மூலம் பிற்ற வேண்டும். பிரார்த்தனைகளின் காரணமாகப் பிறக்க வேண்டும். எங்கள் நீதிநூல்களை எடுத்த்துப் பார்த்தீர்களானால் முதல் ந்து அத்தியாயங்கள் இதற்காகவே, அதாவது ஒரு குழந்தை பிறக்குமுன் அதன் மீது தாயின் தாக்கம் என்பதை விளக்குவதற்காவே ஒதுக்கப்பட்டுள்ளது.

நான் பிறக்கும் முன் என் தாய் விரதம் இருந்தாள், பிரார்த்தனை செய்தாள், நான் ஐந்து நிமிடங்கள்கூடச செய்ய முடியாத நூற்றுக்கணக்கான விஷயங்களைச் செய்தாள். இது எனக்குத் தெரியும். இவ்வாறு அவள் இரண்டு வருடங்கள் செய்தாள். மதப் பண்பாடு என்று ஏதாவது என்னிடம் இருக்குமானால் அது அவள் தந்ததே. நான் இன்று என்னவாக இருக்கிறேனோ, அவ்வாறு இருப்பதற்காகவே என்னை அவள் பெற்றெடுத்தாள். என்னிடம் நல்லது என்று ஏதாவது இருக்குமானால் அது அவள் அறிந்தே எனக்குத் தந்தது; அவள் அறியாமல் என்னிடம் வந்ததல்ல.

‘உலகியல் ரீதியில் பிறப்பவன் ஆரியன் அல்ல, ஆன்மீக ரீதியில் பிறப்பவனே ஆரியன்’. ஒரு தூய குழந்தையைப் பெறுவதற்கு அவள் தன்னைத் தூயாவளாக ஆக்கிக்கொள்ள வேண்டியிருக்கிறது. இந்தச் சிரமங்களுக்காகத்தான் இந்துத்தாய்க்குத் தன் குழந்தைமீது ஒரு தனி உரிமை இருக்கிறது. மற்ற விஷயங்களில் அவள் பிற நாட்டுப் பெண்களைப் போன்றவளே. அவள் தன்னலமற்றவள். எங்கள் குடும்பங்களில் தாய் என்பவள் மிகவும் சிரமப்பட வேண்டியவளாக இருக்கிறாள்.

தாய் கடைசியாகத்தான் சாப்பிட வேண்டும். ‘உங்கள் நாட்டில் ஏன் ஓர் இந்துக் கணவன் தன் மனைவியுடன் அமர்ந்து சாப்பிடுவதில்லை?’ என்று என்னிடம் பலமுறை கேட்டிருக்கிறார்கள். மனைவி என்பவள் அவ்வளவு தாழ்ந்தவளா என்பது அவர்களின் கேள்வி. இந்த எண்ணமே தவறு. காட்டுப்பன்றியின் முடி தூய்மையற்றது என்பது உங்களுக்குத் தெரியும். அதனால் செய்யப்பட்ட குச்சத்தினால் ஓர் இந்து பல் தேய்க்க மாட்டான். எனவே மரக் குச்சிகளை அவன் பயன்படுத்துகிறான். இதைக் கண்டார் ஒரு யாத்திரிகர், உடனே ‘ஓர் இந்து அதிகாலையில் எழுந்து ஒரு செடியைப் பிடுங்கி மென்று தின்கிறான்’ என்று எழுதிவிட்டார். அதுபோல் தான் யாரோ ஒரு கணவனும் மனைவியும் சேர்ந்து உண்ணாத்தைக் கண்ட ஒருவர் இப்படி ஒரு விளக்கத்தைக கொடுத்திருக்கிறார். விளக்கம் கொடுப்பதற்கு உலகில் மனிதர்களுக்குப் பஞ்சமே இல்லை – ஏதோ இவர்களின் விளக்கத்திற்காகத்தான் உலகம் அல்லாடிக் கொண்டிருப்பதாக இவர்களின் எண்ணம். எதையும் ஊன்றிக் கவனிப்பவ்கள் மிகவும் அபூர்வமாகவே உள்ளார்கள்.

அதனால்தான் அச்சுக்கலையைக் கண்டுபிடித்தது ஒரு பெரும்பேறு என்பதை என்னால் முற்றிலுமாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை. உண்மை. என்னவென்றால், உங்கள் நாட்டில் சில விஷயங்களைப் பெண்கள் ஆண்கள் முன்னால் செய்யக்கூடாது. அதுபோல் எங்கள் நாட்டில் ஆண்களின் முன்னால் பெண் எதையம் தின்பது நாகரீகமற்ற செயலாகக் கருதப்படுகிறது. அவள் தன் சகோதரர்களின் முன்னால் சாப்பிடலாம். ஆனால் அப்போது கணவன் வந்தால் அவள் நிறுத்திவிடுவாள். கணவன் உடனே விரைந்து வெளியே போய்விடுவான். நாங்கள் மேஜையில் சாப்பிடுவதில்லை. யாருக்குப் பசிக்கிறதோ அவன் வந்து உணவை எடுத்துக் கொண்டு வெளியே போய்விடுவான். எனவே இந்துக் கணவன் தன் மனைவியை மேஜையில் தன்னோடு அமர்ந்து சாப்பிட அனுமதிப்பதில்லை என்றெல்லாம் சொல்வதை நம்பாதீர்கள். அவனுக்கு மேஜையே கிடையாது.

உணவில் முதற்பங்கு விருந்தினருக்கும் ஏழைகளுக்கும், இரண்டாம் பங்கு பிராணிகளுக்கு, மூன்றாம் பங்கு பிள்ளைகளுக்கு, நான்காம் பங்கு கணவனுக்கு, கடைசியாகத்தான் தாயின் உரிமை வருகிறது. சிலவேளைகளில் என் தாய் மதிய உணவு கொள்ளும்போது இரண்டு மணி கூட ஆகிவிடுவதை நான் எத்தனையோ முறை கண்டிருக்கிறேன். நாங்கள் பத்து மணிக்குச் சாப்பிடுவோம். அவள் உண்ணும்போது இரண்டு மணி ஆகிவிடும். ஏனெனில் அதற்கிடையில் அவளுக்கு எத்தனையோ வேலைகள் இருக்கும். வாசலில் யாரோ வந்து கதவைத் தட்டுவார்கள், அவர்கள் விருந்தினராக இருப்பார்கள். அந்த வேளையில் அவளுக்கன்று வைக்கப்பபட்டுள்ள உணவைத் தவிர வேறு எதுவும் எஞ்சியிருக்காது. அவள் அதை மகிழ்வுடன் விருந்தினருக்குக் கொடுத்துவிட்டுக் காத்திருப்பாள். இதுதான் ஒரு தாயின் வாழ்க்கை, அவள் அதை விரும்புகிறாள். அதனால்தான் நாங்கள் தாயை தெய்வமாக வழிபடுகிறோம்.

உங்களிடமும், பிறர் நட்பு காட்டுவதைவிட, ஆதரவு காட்டுவதைவட அதிகமாக வழிபட வேண்டும் என்று நான் விரும்புகிறேன். நீங்களும் மனித குலத்தின் ஓர் அங்கமே அல்லவா! உங்கள் இயல்பும் போக்கும் அப்பாவி இந்துவுக்குத் தெரியாது. ஆனால், ‘நாங்கள் அன்னையர், எனவே கட்டளையிடுகிறோம்’ என்று அவனிடம் சொல்லுங்கள், அவன் உடனே பணிந்து அதனை ஏற்று கொள்வான். இந்து வளர்ந்த பண்பு இது.

தத்துவக் கோட்பாடுகளுக்கு மீண்டும் வருவோம். பிற மதங்களைச் சகித்துக்கொள்ள வேண்டும் என்று கருத்திற்கு மேலைநாட்டினர் சுமார் நூறு வருடங்களுக்கு முன்புதான் வந்தார்கள். ஆனால் எங்களுக்கு தெரிந்ததோ வெறும் சகிப்புத்தன்மை அல்ல; பிற மதங்களை ஏற்றுக் கொள்வது. அதாவது சேர்த்துக்கொள்ள வேண்டம் விட்டுத்தள்ளுவது அல்ல, ணேத்துக்கொள்வது என்பதே அது. இந்தப் பல்வேறு பக்கங்களையும் இணைக்கும் போதுதான் உணைமையை உணர முடியும். ஒவ்வொரு மதமும் உண்மையின் ஒரு பக்கத்தைப் பிரதிபலிக்கிறது; எல்லாவற்றின் மொத்தத்தையும் அறியும்போதுதான் உண்மையை முழுமையாக அறிந்தவ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *