சுவையான நிகழ்ச்சிகள் – பாகம் III

காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் – பாகம் III

1. திருடன் அகப்பட்டுக்கொண்டான்

நாடு குழப்ப நிலையில் இருந்தது. அப்பொழுது தனி நபர் சத்தியாக்கிரகம் தொடங்கவில்லை. வைசிராயுடன் பேச்சு வார்த்தை நடந்துகொண்டிருந்தது. காந்திஜி ஹரிஜனக் குடியிருப்பில் தங்கியிருந்தார். புகழ்ப்பெற்ற தலைவர்கள் பலர் அவருடன் இருந்தனர்.

அங்கே ஹிந்தி எழுத்தாளர், ஸ்ரீராம்நாத் ‘ஸூமனு’ம் தங்கியிருந்தார். அவருடைய மனைவி க்ஷயரோகத்தால் கடுமையாகப் பீடிக்கப்பட்டிருந்தாள. அப்பொழுது இந்த வியாதிக்கு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. ஆகையால் ‘ஸூமன்’ஷி இதைப்பற்றிய சிந்தனையில் ஆழ்ந்திருந்தஆர். காந்திஜியையும் சந்திக்க வருவதில்லை. காந்திஜிக்கு இந்த விவரமும் தெரிந்திருந்தது.

ஒரு நாள் வைசிராயைச் சந்திக்கச் சென்றபொழுது ‘ஸூமன்’ஜி வராந்தாவில் செய்தித்தாள் படித்துக்கொண்டிருந்தார். அந்த வழியாகத்தான் காந்திஜி செல்ல வேண்டி இருந்தது. சிறிது தூரம் நடந்து சென்றுதான் அவர் காரில் ஏற வேண்டும். ‘ஸூமன்’ஜி, காந்திஜி வருகிறார் என்று அறிந்து உள்ளே அறையில் ஒளிந்து கொண்டார். கண்ணிமைக்கும் நேரத்திற்குள் காந்திஜி உள்ளே நுழைந்து , ‘திருடன் அகப்பட்டுக் கொண்டான்’ என்று கூறித் தனக்கே உரிய பாணியில் சிரித்தார்.

இவ்வளவு நாட்களாகத் தன்னைபார்க்க வராத்தற்காகவம், அவருடைய மனைவியின் நிலையைத் தெரிவிக்காத்தற்காகவும், காந்திஜி அவரை மிகவம் கடந்து கொண்டார். அதற்கு ‘ஸூமன்’ஜி, நீங்கள் அரும்பெரும் செயல்களில் தீவிரமாக முனைந்திருக்கிறீர்கள். ஆகையால் என் துன்ப நிலையைத் தங்களிடம் கூறித் தங்கள் நேரத்தை வீணாக்க விரும்பவில்லை என்று பதிலளித்தார்.

உடனே காந்திஜி, ‘அப்படியா சொல்கிறாய்’ என்று ஆத்திரப்பட்டார்.

பிறகு, மனைவிக்கு ஆறுதல் சொல்லி அவளை உற்சாகப்படுத்தும்படி கூறிவிட்டு எல்லா வேலைகளையும் விட்டுவிட்டு உன் மனைவியைக் கவனித்துக்கொள்” என்று ‘ஸூமன்’ஜிக்குக் கட்டளையிட்டுச் சென்றார்.

சிலநாள் கழித்து ‘ஸூமன்’ஜிக்கு காந்திஜி ஒரு கடிதம் எழுதினார். ”போராட்டத்தில் ஈடுபடவேண்டுமென்ற ஆசையைத் துறப்பதுதான் உன்னுடைய உண்மையான தியாகம். தியாகம் என்பது மனப்பக்குவம். நீ உன்னைக் கால்முடம் என்று எண்ணிக்கொண்டிருக்கிறாய். கால் முடமானவன் கூடச் சேவை செய்ய முடியும். இந்தச் சமயத்தில் உன்னுடைய சுதர்ம்ம் இதுதான்”என்று எழுதியிருந்தார்.

2. ஏற்றத்தாழ்வு எதிலும் இல்லை.

தென்னாப்பிரிக்காவிலிருந்து வந்த சில நாட்களுக்குப்பிறகு காந்திஜி சாந்தி நிகேதனத்திற்குச் சென்றார். அவருடன் சில நண்பர்களும் சென்றனர். காகா சாகேப் காலேல்கர் அப்பொழுதுதான் அங்கே இருந்தார். நடுநிசி வரை இருவரும் பேசிக்கொண்டிருந்தனர். அதிகாலையில் எழுந்து பிரார்த்தனை செய்தனர். பின் காலேல்கரும் மற்றவர்களும் வேலை செய்ய சென்றுவிட்டார்கள்.

வேலை முடிந்து எல்லோரும் திரும்பி வந்தனர். காலைச் சிற்றுண்டி தயாராக இருந்தது! தட்டுகளில் பழமும் உணவும் பரிமாறப்பட்டிருந்தன! காலேல்கர் ஆச்சரியப்பட்டார்; திகைத்துப் போனார்.

”நான் எல்லோரும் அன்றாட உழைப்பிற்காக அல்லவா சென்றிருந்தோம்! யார் இத்தகைய தாயின் பணியைச்செய்த்து? யார் இவ்வேலையைச் செய்தது?” என்று காந்திஜியிடம் கேட்டார்?

”நான்தான்” என்றார் காந்திஜி.

”நீங்களா செய்தீர்கள்! நீங்கள் உழைக்க நாங்கள் மட்டும் உண்ண வேண்டுமா?” என்று வருந்தினார்.

”இதில் என்ன ஏற்றத்தாழ்வு இருக்கிறது” என்றார் அவர்.

உடனே, காலேல்கர்”உங்களைப் போன்ற பெரிய மனிதர்களுக்குச் சேவை செய்வதுதானே எங்கள் கடமை” என்றார்.

”உண்மைதான். நீங்கள் எல்லோரும் உழைக்கச் சென்றீர்கள். உண்ட பின்னும் உழைக்கச் செல்வீர்கள். எனக்கு அவகாசம் இருந்தது. நான் இதை உங்களுக்காக பயன்படுத்திகனேன். இச்சிற்றுண்டியைச் சாப்பிடுவதற்கு நீங்கள் ஒரு மணி நேரம் உழைத்ததின் பலனைப் பெற்று விட்டீர்கள். இல்லையா!” என்று சொல்லி விட்டார்.

3. ஜார்ஜ் வீட்டில்

திருவாங்கூர் ஆலயப் பிரவேச விழாவிற்குத் தலைமை தாங்க காந்திஜி அங்கு சென்றார். விருந்தினர் மாளிகையில் தங்கினார். எஸ்.கே.ஜார்ஜூம் அம்மாளிகையின் அருகில் வசித்து வந்தார். அப்பொழுது ஜார்ஜின் மனைவிக்கு உடல் நலம் சரியாக இல்லை என்று தெரிந்து, அவரைப் பார்ப்பதற்காக்க் காந்திஜி சென்றார். கைத்தடியை எடுத்துக்கொண்டு.

அப்பொழுது இரவு மணி ஒன்பது கதவு தாளிடப்பட்டிருந்தது. வீட்டில் சிம்னிவிளக்கு மட்டும் சுடர்விட்டு எரிந்துகொண்டிருந்தது. மகாதேவ் தேசாய் குரல் கொடுத்தார். ஜார்ஜ் எழுந்து, வெளியே எட்டிப் பார்த்தார். காந்திஜியும் மற்ற நண்பர்களும் வெளியில் நிற்பதைக் கண்டு ஓடி வந்து கதவைத் திறந்தார்.

சிரித்துக்கொண்டே காந்திஜி உள்ளே நுழைந்தார். ”நீங்கள் ஏன் திருடர்களுக்கு இப்படிப் பயப்படுகிறீர்கள்? என்று கேட்டார்.

அவரை ஜார்ஜ் வரவேற்பு அறைக்கு அழைத்துச் சென்றார். காந்திஜி உடனே, ‘நான் உங்களைச் சந்திக்க வரவில்லை, உங்கள் மனைவியைப் பார்க்கவே வந்தேன்’ என்றார்.

ஜார்ஜ், அவரை நோயால் தன் மனைவி படுத்திருக்கும் அறைக்கு அழைத்துச் சென்றார். காந்திஜி கட்டிலின் அருகில் அமர்ந்து உடல்நலம் பற்றி விசாரித்தார்.

மறுநாள் காலையில் காந்தியைப் பார்க்க ஜார்ஜ் வந்தார். ஆனால் அவரைப் பார்க்க முடிவில்லை. ஆகையால் மகாதேவ் தேசாயிடம் தன் மனைவியின் நலத்தைப் பற்றிக் கூறிவிட்டுத் திரும்பி வந்துகொண்டிருந்தார். வழியில் ராமச்சந்திரன் என்பவர், அவரிடம் ‘மகமதுதான் மலைக்குப் போக வேண்டும்’ என்று விளையாட்டாக்க்கூறினார். அதற்கு அவர், பிரபு (காந்திஜி) எங்கள் இல்லம் வரும் அளவுக்கு நாங்கள் அப்படியொன்றும் புண்ணியம் செய்தவர்களல்ல’ என்றார் ஜார்ஜ்.

ஆனால் பிரபுவோ விஜயம் செய்துவிட்டார்.

4. இது உன் தவறு

இந்திய விடுதலைக்கு முன், 1947 இல் பீகாரில் சுற்றுப்பயணம் செய்து வந்தார் காந்திஜி. அங்கே இனவெறி தலைவிரித்தாடிற்று.

பாட்னாவில் தங்கியிருந்தபொழுது காந்திஜி, பிராரத்தனை செய்வதற்காக அருகிலிருக்கும் கிராமத்திற்குச் செல்வார். எனவே, ஐந்து அல்லது ஆறு மணி நேரம் அதில் கழிந்து விடும்.

ஒரு நாள் காந்திஜி பிரார்த்தனை முடிந்து வந்ததும் களைப்புடன் காணப்பட்டார். ஆகவே கண் அயரச் சென்றார். ஆனால், அங்கே ஒரு ஃபைலில் இருந்த காகிதங்கள் பரந்து கிடந்தன. அவற்றை ஒழுங்காக ஃபைலுக்குள் வைத்தார். ஒரே ஒரு காகிதம் மட்டும் காணவில்லை. அதைத்தேட நேரமாயிற்று. அதை எடுத்திருப்பவன் யார் என்றும் அவருக்குத் தெரியும். ஆனால் இது மனுவிற்குத் தெரியாது. ”இந்த ஃபைலுக்குள் இருந்த காகிதங்கள் பரந்து கிடந்திருந்தன. அது பற்றி ஒன்றுமில்லை. அதை எடுத்தவன்தான் இதைச் செய்திருக்கிறான். இது உன்னுடைய தவறுதான். மற்றவர்களை விட உன்னிடம் இந்தத் தவறுகளை நான் காண்கிறேன். அலுவலக வேலையில், தனி நபர் வேலையில், வீட்டு வேலைகளில், அன்றாட வேலைகளில் யாருக்கும் தவறு ஏற்படும். ஆனால் இதை உன்னுடையதுதான் என்று சொல்வேன். நீ நவகாளியிலிருந்ததைப்போல் இங்கேயும் தனியாகத்தான் இருக்கிறாய். ஆனால் இவ்வளவு அதிகமான தவறுகளை நான் உன்னிடம் கண்டதில்லை. நீ அங்கே தனியாகத்தான் எல்லா வேலைகளையும் கவனித்துக் கொண்டிருந்தாய். தனிமையான வாழ்க்கையில் கவனித்துக்கொண்டிருந்தாய். தனிமையான வாழ்க்கையில் ஏற்படும் சோதனைகளைவிட கூட்டு வாழ்க்கையில் அதிகமாக வரும். ஆனால் கூட்டு வாழ்க்கை வாழ்வதற்கு நீ தைரியமாகவும் விழிப்பாகவும் இருந்தால் கெட்டிக்காரியாக விளங்குவாய்.”

இவ்வாறு மனுவிற்கு விளக்கம் சொல்லியபின் காந்திஜி தூங்கச் சென்றார்.

5. மனம் என்னும் சீடன்

தென்னாப்பிரிக்காவில் ஒரு முறை காந்திஜி பதினான்கு நாட்கள் உண்ணாவிரதம் இருந்தார். இது, ஜோகன்னஸ்பர்க்கில் இருந்த ஜெர்மானிய நண்பர் காலன்பாக்கிற்கு நான்கு நாட்களுக்குப் பிறகுதான் தெரிந்தது; அவருக்குக்கவலையாக இருந்தது. உடனே ‘நான் வந்து கொண்டிருக்கிறேன்’ என்று தந்தி அனுப்பினார்.

மறுநாள் மாலை வண்டியில் நான்கு மணிக்கு வந்து சேர்வதாக இருந்தது. காந்திஜி அன்று இரண்டரை மணிக்குப் படுக்கையிலிருந்தவாறே, ”யார் என்னுடன் இரயில் நிலையத்திற்கு வர விரும்புகிறார்களோ, அவர்கள் புறப்படுங்கள் அச்சகத்தில் அலுவல் இருப்பவர்கள் வரவேண்டியதில்லை.” என்று சொன்னார்.

பின் படுக்கையிலிருந்து எழுந்து, கைத்தடியை எடுத்துக் கொண்டு செருப்பை அணிந்து, ரயில் நிலையத்திற்குப் புறப்பட்டார். நடந்துதான். ராஜாஜியும், படேலும் அவருடன் சென்றனர். ரயில் நிலையம் அடைந்தனர். இரயில் வந்தது. காலன்பாக் ரயிலிலிருந்து இறங்கினார். அங்கே காந்திஜியைக் கண்டதும் எல்லையற்ற மகிழ்ச்சி அவருக்கு. அங்கே அவரை அவர் எதிர்பார்க்கவில்லை. ‘நீங்கள் படுக்கையிலல்லவா இருக்கிறீர்கள் என்று நினைத்தேன்’ என்றார் காலன்பாக்.

காந்திஜி சிரித்துக்கொண்டே, ‘ஆமாம், நான் படுக்கையில்தான் இருந்தேன். ஆனால், நான் படுக்கையில் இருக்கின்றேன் என்பதை அறிந்ததும் இத்துணை தொலைவிலிருந்து வந்திருக்கிறீர்களே, அதை என்னால் பொறுக்க முடியவில்லை. என்மேல் இத்துணை பரிவு எதற்காக! கவலை எதற்காக? நான் படுக்கையில் இல்லை என்று கூறவே மூன்று மைல்கள் நடந்துவந்தேன்” என்றார்.

காலன்பாக் அதைக்கேட்டு ஆனந்தமடைந்தார் எல்லோரும் பேசிக்கொண்டே ஆசிரமம் அடைந்தார்கள். ஆனால் காந்திஜியின் மனதில் இக்கேள்வி அன்று முழுதும் உறுத்திக் கொண்டிருந்தது. மாலைப் பிரார்த்தனைக்குப் பின் ”நீங்கள் கீதை சுலோகங்களைப் பாராயணம் செய்வதால் நான் மகிழ்ச்சியடைய மாட்டேன். வரலாறு, கணிதம், சமஸ்கிருதம் முதலியவற்றைப் பயின்றாலும், பயிலாவிட்டாலும் எனக்குக் கவலையில்லை. முக்கியமாக, ஒழுக்கம் பயில வேண்டும். இதுதான் என் விருப்பம். நான் ஒருக்கால் மனிதனுக்கு அடிமையாகவேன்; ஆனால் மனதிற்கு ஒருபோதும் அடிமைப்பட மாட்டேன். அப்பாவத்தைவிடக் கொடுமையானது வேறொன்றுமில்லை. நீங்கள் நன்கு பயின்று மனதைக் கட்டுப்படுத்துங்கள். இச்சூழ்நிலையில் என்னுடன் இருப்பவர்கள் மட்டுமே இருக்கலாம். என்னிடத்தில் ஒருசீடன் இருக்கிறான். அவனுக்குக் கற்றுக்கொடுப்பதே மிகவும் பெரிய காரியம். அவனுக்குத் கற்றுக்கொடுப்பதன் மூலம்தான் இந்தியாவிற்கும் அவனுக்குப் பயிற்சி கொடுப்பதன் மூலம்தான் இந்தியாவிற்கும் சமூகத்திற்கும் நன்மை செய்ய முடியும். அந்தச் சீடன் வேறு யாருமல்ல. நானே தான். இதை நான் என்னுடைய மனதிற்குச் சொல்லுகிறேன். இவ்விதம் தன்னைத்தானே சீடனாக்கிக்கொண்டு வாழ்கிறவர்தான் இங்கே இருக்கத் தகுதியுள்ளவன்” என்று அறிவுரை கூறினார்.

6. ஆங்கிலத்தை எங்கே கற்கலாம்?

புகழ்ப்பெற்ற புலவர் பண்டித ஸூகாலால் ஆங்கிலம் கற்க வேண்டுமென்று விரும்பினார். ஏதோ ஓர் இடத்தில் காந்திஜி சொற்பொழிவு நிகழ்த்த வந்திருந்தார். அப்பொழுத் அவரைப் பார்த்து, ஸூகாலால்: ‘நான் எங்கே ஆங்கிலம் கற்றுக்கொள்ளலாம்’ என்று ஒரு தாளில் எழுதிக் கொடுத்திருந்தார்.

எரவாடா சிறையிலிருந்தபொழுது காந்திஜி இதற்குப் பதில் எழுதி அனுப்பினார். ”ஆங்கிலம் கற்க வேண்டும் என்ற ஆசையில் ஒரு குறை உள்ளது. ஆகையினால் அதை நன்கு சிந்தித்து உறுதி செய்துகொண்டபின் கற்றுக் கொள்ளுங்கள். இதற்குச் ‘சாந்தி நிகேதன்’ சிறந்த இடம்.” என்று எழுதியிருந்தார்.

சில ஆண்டுகளுக்குப் பின்னர் அப்புலவர் காந்திஜியைச் சந்தித்துத் தன் விருப்பத்தைத் தெரிவித்தார். இதற்குக் காந்திஜி தெளிவாக விளக்கினார். ”ஆங்கில மொழி பூமியைப் போன்று மிகவும் பரந்த மொழி. உங்களைப் போன்றவர்கள் இதற்காகத் தங்கள் அறிவைச் செலவழிக்காவிட்டால இது ஒன்றும் அழிந்து போகாது. நீங்கள் படித்தவற்றையும், சமஸ்கிருதம், பிராகிருதம், பாலி ஆகிய மொழிகளிலுள்ள உயர்ந்த் கருத்துகளையும் எளிய, புதிய முறையில் விளக்கம் எழுதி, வெளியிடுவது மிக்க் கடினம். இம் முயற்சியில் தங்களைப் போன்றவர்கள் ஈடுபடலாம். நீங்கள் ஈடுபடலாமல்லவா?”

இரண்டு வினாடிக்குப்பின் மீண்டும் காந்திஜி சொன்னார்: ”ராய்சந்திரருக்கு அபாரமாக ஞாபக சக்தி உண்டு. அவர் அவருக்குப் புதிதான ஒரு ஆங்கிலப் புத்தகத்தில் ஒரு பக்கத்தைப் படித்தாலோ, அல்லது கேட்டாலோ, அப்படியே அவற்றை ஞாபகத்திருத்திக் கொள்வார். படித்தவற்றைக் குழப்பிக் கொள்ளவும்மாட்டார். நல்ல விஷயங்கள்ப் படித்திருக்கிறார். நீங்களும் ஏன் அவ்வழியைப் பின்பற்றக் கூடாது?” என்று ஸூகாலாலிடம் சொன்னார்.

7. எனக்குத் தங்கம்தான் வேண்டும்

1927 – இல் ‘ஹரித்துவரா’த்தில் கும்பமேளாவின்போது அகில இந்தியக் கதர்க் கண்காட்சியொன்று அமைக்கப்பட்டிருந்தது. பண்டித மதன்மோகன் மாளவியா அதைத்திறந்து வைத்தார். காந்திஜியும் அச்சமயத்தில் அங்கு இருந்தார்.

காந்திஜி விழாவிற்கு வந்தவுடன் ஒரு சேட்டின் மனைவி, காந்திஜியின் திருவடிகளை வணங்கி ஆசிபெற வந்தாள். அவள் நகைகள் அணிந்திருந்தாள். காந்திஜி அவளைப் பார்த்தார். சிரித்தார். ஏதேனும் தருவாள் அல்லது வணங்குவாள் என்று எண்ணினார்.
அவள் தன் கணவன் பக்கம் திரும்பினாள். சேட் தன்பையலிருந்து சில நோட்டுகளை எடுத்துக் கொடுத்தார். ”இல்லை இல்லை. எனக்குத் தங்கம்தான் வேண்டும்” என்றார் காந்திஜி.

அவள் தன் கழுத்தில் அணிந்திருந்த மாலையொன்றைக்கழற்றிக் கொடுத்தாள். ‘இப்பொழுது திருப்திதானே’ என்று காந்தியிடம் கேட்டாள்’.

‘இல்லை’ என்று பதில் அளித்தார்.

‘என்னிடம் இனி ஒன்றுமே இல்லையே” என்றாள் அவள். உடனே காந்திஜி, அவள் கால்களில் அணிந்திருந்த மெட்டியைக் காட்டி ‘இதோ அவை இருக்கின்றனவே’ என்று சொன்னார்.

அவள் அதையும் கழற்றிக் கொடுத்துவிட்டாள். எனினும் காந்திஜி திருப்தியடையவில்லை, ‘இனிமேல் நகைகள் அணிவதில்லை என்று வாக்குறுதி கொடு’ என்று கேட்டார் காந்திஜி.

அவளும் அங்ஙனமே உறுதியளித்தாள்.

8. ஆட்டுவிப்பவன் அவனே

பீகார் மாகாணத்தில் காந்திஜி சுற்றுப்பயணம் செய்து கொண்டிருந்தார். ஒரு நாள் ‘மஸூடி’ என்ற ஊருக்குச் சென்று கொண்டிருந்தார். ரயில் நிலையத்தில் கணக்கற்ற மக்கள் அவரை வரவேற்றனர். மிகவும் கஷ்டப்பட்டு கூட்டத்திலிருந்து வெளியே வந்து காரில் ஏறினார். அங்கு ஒரு பள்ளிக்கூடத்தில் தங்கினார். அன்று மாலைப்பிரார்த்தனைக்கு சுற்று வட்டார ஊர்களிலிருந்தும், பாடனாவிலிருந்தும் மகள் வந்திருந்தனர். கூட்டம் அமைதியாக இருந்தது. ராம பூனை ஆரம்பிக்கப்பட்டது. படித்த பிரமுகர்களும் பஜனையில் கலந்துகொண்டு கைதட்டிப் பாடினர். எல்லோரும் ஒன்று சேர்ந்து ஒரே குரலில் பஜனை செய்தனர். காந்திஜிக்கோ அளவில்லா ஆனந்தம். பிரார்த்தனை முடிவில் சொன்னார்”நீங்கள் நன்றாக்க் கைகொட்டிப் பாடினீர்கள். சகோதர சகோதரிகள் எல்லோரும் பஜனையில் கலந்து கொண்டீர்கள். உங்களையெல்லாம் ஆனந்தமடையச் செய்ய நான் யாத்திரையை மேற்கொள்ளவில்லை. இன்று எங்கும் துன்பச் சூழ்நிலையே காணப்படுகிறது. இதற்கு நீங்கள் கழுவாய் தேடிக்கொள்ள வேண்டும். இதுநான் செய்தவினையோ அல்லது நீங்கள் செந்தத வினையோ நான் அறியேன். இந்தச் சூழ்நிலையில் நீங்கள் ஆரவாரித்தல், மாலைகள் அணிவித்தல் போன்றவை சரியல்ல. இவை மனதிற்குத் துன்பந்தான் தரும். உங்களில் யார் யார் தவறு செய்திருக்கிறீர்களோ, அவர்கள் எல்லோரும், என்னிடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்ளலாம். தவறுகளுக்கெல்லாம் கழுவாய் தேடிக் கொள்ளுங்கள். அவ்வாறு செய்தால் அரசாங்கம் உங்களை ஒன்றும் செய்
யாது. நான் இதற்குத் துணை நிற்பேன். மனிதனுக்குத் தவறுகள் ஏற்படுவது இயல்புதான். அவன், தான் செய்த தவறுகளுக்கு மன்னிப்புக் கோரி, மீண்டும் அதைச் செய்யாமல் வாழ்ந்தால், அவனைச் சிறைக்கு அனுப்பவோ, போலீசிடம் ஒப்படைக்கவோ தேவையில்லை. இத்தகைய செலவு மீதமாகும். என்னுடைய ஆட்சி வந்தால் நான் போலீஸ்காரர் கையில் துப்பாக்கிக்குப் பதிலாக மண்வெட்டி, கோடாரி, கலப்பை முதலியவற்றைக் கொடுப்பேன். அவர்கள் இதன் உதவியால் கிராமத்தில் சீர்திருத்தம் செய்வார்கள். உழவுத் தொழிலில் ஈடுபடுவார்கள்.”

பிரார்த்தனைக் கூட்டம் முடிந்தபின் இருப்பிடத்திற்குச் சென்று ஓய்வெடுத்துக் கொண்டார். அப்பொழுது ஒரு சகோதர்ர் ‘நான் காந்திஜியைச் சந்திக்க வந்திருக்கிறேன். அவரிடம் என் தவறை ஒப்புக் கொள்ளப் போகிறேன்” என்றான்.

இதையறிந்து காந்திஜி, காந்திஜி அவனை அழைத்தார். அவன் அச்சத்தால் தயங்கியே உள்ளே சென்றான். காந்திஜி அன்பாக அவனை அழைத்து தண்ணீர் கொடுத்தார். ஆறுதல் சொன்னார். அரசாங்கமோ, ஸி.ஐ.டி. அதிகாரிகளோ செய்யமுடியாத செயலைத் தன் அன்பால், அஹிம்சையால் ஒரு நொடியில் செய்துவிட்டார். ஆனால் காந்திஜிக்கு இது ஆச்சரியப்படத்தக்க செயலல்ல.

அந்த சகோதர்ர் சென்றபின் சொன்னார்: நான் ‘தென்னாப்பிரிக்காவில் இச்செயலில்தான் ஈடுபட்டிருந்தேன். என் வாழ்க்கையில் இவ்வாறுதான் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. இவையாவும் இறைவனின் செயல். ஸ்ரீராமச்சந்திரன்தான் என்னை ஆட்டுவிக்கிறான்’ என்று கூறிவிட்டுத் தூங்கச் சென்றார்.

9. அனுப்பிய புட்டி திரும்பி வந்தது.

ஜூலியன் வாலாபாக் நிகழ்ச்சிக்குப் பிறகு காந்திஜி பஞ்சாப் மாநிலத்தில சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். அன்று ஜலந்தருக்குச் சென்றார். அவரைப் பார்க்க எண்ணிறந்த மக்கள் கூடியிருந்தனர். கூட்ட நெருக்கத்தால் காந்திஜியின் கால் மிதிபட்டுவிட்டது. காலில் வலி அதிகமாகிவிட்டது. அதனால் காய்ச்சலும் வந்தது. ராஜகுமாரி அம்ருத கௌரியின் சகோதர்ர் ஒருவர் டாக்டர். அதிர்ஷ்டவசமாக அவர் ஜலந்தரில்தான் அரசாங்க வைத்தியராக இருந்தார். அவர் காந்திஜியைக் கவனித்துவிட்டு” நீங்கள் இருப்பத்தினான்கு மணிநேரத்திற்கு உங்கள் சுற்றுப்பயணத்தை நிறுத்திக்கொள்ளுங்கள்” என்று காந்திஜியிடம் கூறினார்.

”அது எப்படி, என்னைக் கானவே ஆவலுடன் காத்திருக்கும் மக்களை நான் அலட்சியப்படுத்தலாமா? நான் நாளை காலை பத்து மணிக்குப் புறப்பட்டாக வேண்டும். அப்பொழுது நான் குணமடைந்து விடுவேன், என்று தங்களுக்கு நான் உறுதியளிக்க முடியும்!” என்உற சொல்லி விட்டார்.

காந்திஜி புறப்படும் பொழுது வெந்நீர் கொண்டுபோவதற்காக, ஒரு புட்டியில் வெந்நீரை நிரப்பி அனுப்பியிருந்தார் அம்ருத கௌரி. ஆனால் காந்திஜி மறுநாள் அதைத் திருப்பி அனுப்பிவிட்டார். அத்துடன் ஒரு கடிதமும் இருந்தது. ”நீங்கள் மகிழ்ச்சியடைவீர்கள் என்று நினைக்கிறேன். என்ன வென்றால், காந்திஜி, ஜலந்தரிலிருந்து புறப்படு முன்னே குணமடைந்து விட்டார். ஆகையினால் நீங்கள் கொடுத்தனுப்பிய புட்டிக்குத் தேவையேற்படவில்லை” என்று அக்கடிதத்தில் மகாதேவ தேசாய் குறிப்பிட்டிருந்தார்.

10. எது உண்மையான வெற்றி?

ராஜ்கோட் சமஸ்தானத்தில் செய்யவேண்டிய சீர்திருத்தங்களைப் பற்றி காந்திஜிக்கும், சமஸ்தான மன்னருக்கும் கருத்து வேறுபாஉ ஏற்பட்டது. அதனால் காந்திஜி உண்ணாவிரதம் மேற்கொண்டார். இறுதியில், இதற்குத் தீர்வுகாணுமாறு தலைமை நீதிபதி ஸர், மோரிஸ் க்வாயரைக்கேட்டுக் கொண்டார். அவர் தெரிவித்த முடிவும் காந்திஜிக்கு திருப்தி அளித்தது.

சில நாட்கள் சென்ற பிறகு காந்திஜி தீர்ப்பை அந்த நீதிதபதியின் பொறுப்பில் விட்டது தவறு என்று அறிந்து வருத்தப்பட்டார். அது அஹிம்சை வழிக்கு மாறானது என்றும் உணர்ந்தார். நீங்கள் உடனே வைசிராய்க்கு அந்த முடிவை நிராகரித்து விடுங்கள் என்று கடிதமும் எழுதிவிட்டார்.

அக்கடித்த்தில் மேலும் இதைப்பற்றி ”எனது இச்செயல் அஹிம்சை வழிக்கு முரணானது; அந்த முடிவை நம்பி தவறான எண்ணத்இல் என்மனம் ஈடுபட்டு விட்டது. பிறகுதான் இதை எண்ணினேன். சமஸ்தான அதிகாரி வீரபாலாதரர் கருணை காட்ட முடியும். நம்பிக்கையிலிருந்துதான் நம்பிக்கை பிறக்கிறது. என்னுடைய நம்பிக்கையில்தான் குறையிருந்தது. ஆனால் இப்பொழுது மீண்டும் தைரியத்தைப்பெற்று விட்டேன். மக்கள்முன் என் குறையை ஒப்புக்கொள்வதின் மூலமும், அதற்காக வருத்தப்படுவதன் மூலமும்தான், அஹிம்சையில் எனக்கிருந்த நம்பிக்கை வலுப்பெறுகிறது.

இச்செயல் காந்திஜியின் சகாக்களுக்கு பிடிக்கவில்லை. இந்த சத்தியாகிரகத்தில் காந்திஜியுடைய சகோதரியும் ஈடுபட்டிருந்தாள். அவளுக்கும் இச்செயல் புரியவில்லை.அவளுக்கு புரியவைக்கும்படி காந்திஜியைக் கஸ்தூரிபா கேட்டுக்கொண்டார்.

“நீயே புரியவைக்கலாமே” என்றார் காந்திஜி.

‘நானே இதைப்புரிந்து கொள்ளவில்லையே!’ என்று பதிலளித்தாள் கஸ்தூரிபா.

”சரி. நான் விளக்குகிறேன். நீ தென்னாப்பிரிக்காவில் நோயுற்றிருந்தபொழுது, கோழி சூப் அருந்தவில்லையென்றால் நீ இறந்து விடுவாய் என்று டாக்டர் வற்புறுத்திய போதும் சூப் அருந்தாமலே இறந்து விடுகிறேன்’ என்று தெளிவாகக் கூறினாய் அல்லவா? உனக்குக் கடவுளின் மேல் அத்தகைய உறுதியான நம்பிக்கை இருந்தது. அதனால்தான் புலால் உணவைச் சாப்பிட்டாவது உன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள முயலவில்லை. அதேபோல் சீர்திருத்தவாதிகள் மக்களுக்கு அளித்த வாங்குறுதிகளை நிறைவேற்றும் வரையில் நானும் என் உண்ணாவிரதத்தை முடித்திருக்க கூடாது. ஆனால் என் மனம் அதற்குள் குழம்பிவிட்டது. அதனால் தான், மரணத்திற்குப் பயந்து ஆங்கிலேயே அரசாங்கத்தின் உதவியை நாடி என் மனம் சென்றுவிட்டது. இப்பொழுது நான் நிர்ணயித்த முடிவு அந்த வினையின் விளைவுதான். ஆகையால் நான் தியாகம் செய்வது இன்றியமையாததாகும்.

தர்பார் வீரவாலாவும், சமஸ்தான மன்னரும் உண்டாக்கிய குழப்பங்களைப்பற்றிக் கஸ்தூரிபா விவாதித்தார். ஆனால், காந்திஜியோ, ”எல்லா விளைவுகளுக்கும் என் தவறுதான் காரணம்” என்று மறுத்தார். ”நான் அவசரப்பட்டேன். அதனால் ஆண்டவன் எனக்குத் தண்டனை அளித்துவிட்டான். ஆனால் எனக்குத் தோல்வியல்ல என்பது மட்டும் உண்மை. தன்னுடைய தவறை ஒத்துக்கொள்வது தோல்வியாகாது. இதை அக்காவிடம் விளக்கிச் சொல். தனது குற்றத்தை ஒத்துக்கொள்வதுதான் உண்மையான வெற்றி.” என்று ‘பா’ விடம் சொன்னார்.

11. ஆண்டியிடம்தான் ஆண்டவன் இருக்கிறான்.

வெளிநாட்டுப் பெண்ணொருத்தி, காந்திஜியைப் பாரக்க வந்தாள். மிகவும் பயந்து நாணிக்கொண்டே உள்ளே நுழைந்து, காந்தியின் முன் நின்றாள். காந்திஜி, ”வா, வா.. ஏன் இப்படிப் பயப்படுகிறாய்? நலந்தானே? கடிதம் கிடைத்ததா?” என்று கேட்டார்.

ஆனால் அவளிடமிருந்து ஒரு பதிலும் வரவில்லை. சில நிமிடங்கழித்து, மெதுவாக, மிகவும் தயங்கிக் கொண்டே ”கடிதம் கிடைக்கவில்லை” என்றாள் அவள்.

நீ எழதியிருந்த ‘அந்த கடிதம் அன்பு மடலாக இருந்தது. நானோ வயதானவன். அதை எப்படிப் புரிந்து கொள்ள முடியும்’ என்று சொல்லிச் சிரித்தார்.

இது கேட்டு அப்பெண்ணின் முகம் சிவந்துவிட்டது. அவள் காந்திஜியின் அருகில் சென்று ரகசியமாக சில வார்த்தைகள் சொன்னாள். பின் காந்திஜி, ”நீ என் அன்பிற்குகந்த மகள். வெகுதூரத்திலிருந்து இங்கு வந்திருக்கிறாய். இங்கேயே தங்கி சேவை செய்யலாமே” என்று சொன்னார்.

”எனக்கு இங்கே பேசும் மொழி தெரியாதே” என்றாள் அப்பெண்.

”அப்படியா! அதுவும் நல்லதுதான். வாய், மூடியே இருக்கும், யாரேனும் உன்னிடம் பேச வந்தால், நீ இருவிரல்களால் வாயை அடைத்துக் கொள். ஊமை போலும் என்று எண்ணிச் சென்று விடுவார்கள்” என்று யோசனை கூறினார்.

அப்பெண் இது கேட்டுச் சிரித்தாள். பின் காந்திஜி எழுந்து பைபிளை எடுத்து, சில வரிகள் வாசித்தார். ”நாம் கடைசியிலிருக்கிறோம். அங்கே முன்னிருப்பது பின்னும் போகலாம். பின்னிருப்பது முன்னாலேயும் ..” என்று வாசித்த பின். ‘இவ்வரிகள் உங்கள் பைபிளில்தானே இருக்கின்றன?’ என்று கேட்டார். ”பிறகு எனக்கு பைபிள் முழுவதும் தெரியாது. நான் மலை உபதேசம்தான் நன்கு படித்திருக்கிறேன். நீ இப்பொழுது இந்தியாவில் இருக்கிறாய். இது உன் நாடு. நாங்கள் ஏழைகள். ஆண்டியிடம் தான் ஆண்டவன் இருக்கிறான்” என்றார் காந்திஜி.

மனமாற்றம் அடைந்த அப்பெண் காந்திஜி பேசி முடிக்கு முன்னரே அவ்விடத்தைவிட்டு நகர்ந்தாள். காந்திஜி ”நாம் இயேசுநாதரின் வழியில் செல்வோம். இன்று ஒன்றும் பேசாதே. நாளை சந்திப்போம்… ஊமையாக உட்கார்” என்று கூறி விட்டுத் தன் வேலையைத்தொடர்ந்தார். அப்பெண்ணும் அவ்விதமே பேசாமல் போய் உட்கார்ந்தாள்.

12. போர்வையை விட்டுச் சென்ற போலீஸ்காரர்

காந்திஜி சம்பாரணியிலிருந்து ரயிலில் திரும்பி வந்து கொண்டிருந்தார். அவர் இருந்த பெட்டியில் எளிய தோற்றம் கொண்ட ஒருவரும் இருந்தார். அவருடன் பேசியபொழுது அவர் போலீஸ்காரர் என்று தெரிந்தது. அவர் மேலேயிருந்த காற்றாடியைச் சுழல விட்டார். காந்தி நன்றாகத் தூங்கிவிட்டார். காந்திஜியின் கால்கள் போலீஸ்காரருடைய போர்வையின் மேல் இருந்தன. அவரோ பாட்னாவில் இறங்க வேண்டியவர். பாட்னாவும் வந்துவிட்டது. அவர் யோசித்தார். போர்வையை எடுத்தால் காந்திஜியின் தூக்கம் கலைந்துவிடும் எனவே அப்படியே விட்டு விட்டுச் சென்றுவிட்டார்.

காந்திஜி விழித்தார். போர்வை அங்கிருப்பதைக் கண்டு ஆச்சரியப்பட்டார். அம்மனிதன் செய்கையை எண்ணி வியந்தார். ‘இத்தகைய பொறுமைக் குணம் படைத்த போலீஸ்கார்ர்களும் இருக்கிறார்களா’ என்று ஆச்சரியப்பட்டார்.

மகாதேவ தேசாயும் இதைக்கேட்டு வியந்தார். தான்கூட இம்மாதிரி அரிய செயலைச் செய்வதில்லையே என்று சொல்லிப் பாராட்டினார்.

ஒரு மார்வாடி இதை யாவற்றையும் கேட்டுக்கொண்டிருந்தான். முகல்ஸ்ராய் ரயில் நிலையம் வந்தவுடன் காந்திஜி கீழிறங்கியபோது, ”இந்தப் போர்வையை என்னிடம் கொடுத்துவிடுங்களேன். இதை என்ன செய்வீர்கள்?” என்று கேட்டான் அம் மார்வாடி.

”நான் இதை இதற்கு உரியவரிடத்தில் சேர்த்துவிடுவேன்” என்று கூறிவிட்டுச் சென்றார்.

13. கட்டுப்பாடு விதிகள்

காந்திஜி லாகூரில் தங்கியிருந்தபொழுது, ஒரு நாள் ஒரு தந்தி வந்தது. சந்திர சங்கர் சுக்லா அதைப்பிரித்துப்பார்த்தார். படேல் விடுதலை செய்யப்பட்டதைப் படித்தார். அதை காந்திஜிக்கும் உடனிருந்த எல்லோருக்கும் சொல்லிவிட்டார் சுக்லா.

தக்கர் பாபா அந்நேரத்தில் அங்கு இல்லை. ஆகையால் அவரது செயலாளரிடம் செய்தியைத் தெரிவித்து விட்டார். ஆனால் அச்செயலாளர் எப்படியோ இச்செய்தியைத் தக்கர் பாபாவிடம் தெரிவிக்கவில்லை.

தக்கர் பாபா மாலையில் காந்திஜியைச் சந்திக்க வந்த பொழுது அவருக்க் இது தெரிய வந்தது. காந்திஜி சுக்லாஜியிடம், ‘தந்தியை யார் பிரித்தார்கள்’ என்று கேட்டார்.

”நான்தான். அப்பொழுது தக்கர்பாபா அங்கு இல்லை. ஆகவே அவருடைய செயலாளரிடம் தெரிவித்துவிட்டேன்” என்று சொன்னார் சுக்லாஜி.

”அதெப்படி , தந்தியைப் பிரித்ததோ நீங்கள்; ஆகையினால் நீங்கள்தான் எல்லோருக்கும் செய்தியைத் தெரிவிக்க வேண்டும். ஆகையால் என்னுடைய கருத்துப்படி கட்டுப்பாடு விதிகளில் ஏதோ குறையிருக்கிறது என்று தெரிகிறது” என்று பதிலளித்தார்.

14. என் கவலையை நானே தீர்த்துக்கொள்வேன்

உப்புச் சத்தியாகிரகம் முடிவடைந்திருந்தது. காந்திஜி வைசிராய் இர்வின் பிரபுவுடன் பேச்சுவார்த்தை தொடங்கியிருந்தார். அவர் நாள்தோறும் வைசிராயைச் சந்திக்கப்போவார்; மணிக்கணக்காகப் பேசுவார். திரும்பி வந்தவுடன் செயலாளர்களிடம் பேச்சு வார்த்தையன் முக்கிய விஷயத்தைச் சொல்லுவார். அன்று ஏதோ ஒரு விஷயத்தில் வைசிராயிடம் உறுதியளித்துவிட்டு வந்திருந்தார். அதைச் செயலாளர்களுக்குத் தெரிவித்ததும், அவர்கள் சிந்தனையில் ஆழ்ந்து விட்டார்கள். ”இதனால் உங்களுக்கு அவமதிப்பு ஏற்படாதா?” என்று கேட்டார் ஒருவர்.

”இதனால் எனக்கு அவமதிப்போ, நன்மதிப்போ, அதைப் பற்றி நீங்கள் கவலைப்படாதீர்கள். என்னுடைய கவலையை நானே தீர்த்துக்கொள்வேன். நீங்கள் உங்களைப்பற்றிச் சற்றுச் சிந்தியுங்கள். இவ்விஷயத்தில் உங்களுக்குச் சம்மதம் இல்லாவிடில், வைசிராயிடம் சென்று இந்து உடன்படிக்கையை நாங்கள் ஒப்புக்கொள்ளவில்லை என்று தெரிவித்துவிடுவேன்” என்று திட்டவட்டமாகச் சொல்லிவிட்டார்.

அவ்வப்போது தோன்றும் சூழ்நிலையிலிருந்து சத்தியத்தை நாடும் மகாத்மாவிடம் யார் இதை மறுக்க முடியும். அனைவரும் அமைதியாக இருந்தார்கள்.

15. ”செய்வன திருந்தச்செய்”

ஒருமுறை பூர்ணகுடியில் காந்திஜி உண்ணாவிரதம் மேற்கொண்டிருந்தபோது அவரை பிரிஜ் கிருஷ்ணசாந்தி வாலா உடனிருந்து கவனித்து வந்தார். அவரேதான் அவருடைய மலஜலப் பாண்டத்தைச் சுத்தம் செய்வார். ஒரு நாள் காந்திஜி, ”இன்று யார் மலஜலப்பாண்டத்தைச் சுத்தம் செய்தார்கள்?” என்று அவரிடம் கேட்டார்.

”நான் வேறொரு வேலையில் இருந்தேன். தோட்டி இதைச் சுத்தம் செய்திருக்கிறான்’ என்று பிரிஜ் கிருஷ்ணஜி சொன்னார். ”வேலைக்காரர்களை ஒருபோதும் இவ்வேலையைச் செய்யச் சொல்லக்கூடாது என்பதில் மிகக்கவனமாக இருக்கவேண்டும்” என்று காந்திஜி சற்று கடுமையாகக் கூறினார்.

மற்றொருநாள்:

பொதுவாக, அவர் படுக்கையில் ஒரு கதர்மெத்தை விரிக்கப்பட்டிருக்கும். தினந்தோறும் அதை வெயிலில் காயப்போட்டாக வேண்டும். அதற்குப்பதிலாக, மாற்று மெத்தை ஒன்றை விரிக்க வேண்டும். அன்று மாற்று மெத்தை இல்லை. அதனால் மில் நூல் மெத்தை விரித்து மேலே, கதர் போர்வையை விரித்திருந்தார்கள். காந்திஜிக்கு இது தெரிந்தது, உடனே, ஏன் கதர் மெத்தையை விரிக்கவில்லை? என்று கேட்டார்.

பிரிஜ்கிருஷ்ணஜி, இதை மறைக்க எவ்வளவோ சாக்கு போக்குகள் சொன்னார். காந்திஜியிடம் ஒன்றும் பலிக்கவில்லை. நம்பிக்கையின் பேரில் நான் எல்லாப் பொறுப்புக்களையும் உன்னிடம் கொடுத்திருக்கிறேன். ஆகையினால், நீ கூட எனக்கு நம்பிக்கைத் துரோகம் செய்யலாமா” என்று சொல்லிமுடித்தார்.

16. என்னைச் சுட முடியாது

நாடெங்கிலும் சத்தியாகிரகப் போராட்டத்தின் முதல் கட்டம் துவங்கியிருந்தது. நாட்டின் பல பாகங்களில் புரட்சிகள் நடந்தன. இறுதியில் காந்திஜீ கைது செய்யப்படுவார் என்று உறுதியாக எண்ணினர் மக்கள். ஆமதாபாத்தில் நடந்த ராணவத்தின் செயல்களும் இவ்வெண்ணத்தை வலியுறுத்தின.

காந்திஜி அப்பொழுதுதான் பம்பாயிலிருந்து ஆமதாபாத்திற்குப் புறப்பட்டார். இதைக்கண்டு மகாதேவ் தேசாயும் மற்றவர்களும் கலக்கமடைந்தனர். ‘நீங்கள் ஏன் கலக்கமடைந்திரு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *