100 சுவையான நிகழ்ச்சிகள்

காந்திஜி வாழ்வில் 100 சுவையான நிகழ்ச்சிகள்

 

1.புத்திலிபாய்

 

போர்பந்தர் சமஸ்தானத்தில் திவான் பதவி வகித்தவர் உத்திமசந்திர காந்தி. அவருடைய ஐந்தாம் மகனாகப் பிறந்தவர் பிறந்தவர் கரம்சந்திர காந்தி என்று அவரை அழைப்பது வழக்கம். காபா காந்தி ராஜ்காட்டில் திவானாக இருந்தார். புத்திலிபாயை மணந்துகொண்டார்.

புத்திலிபாய்க்கு ஒரு பெண்ணும் மூன்று பிள்ளைகளும் பிறந்தார்கள். 1869-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 2-ம நாளன்று காபா காந்தி–புத்திலிபாயின் கடைசி மகனாகத் தோன்றியவர் மோகன்தாஸ் கரம்சந்திர காந்தி. காபா காந்தி நாணயமும் நேர்மையும் மிகுந்த திவானாக இருந்தார். புத்திலிபாய் தவஒழுக்கத்தில் சிறந்த பெண்மணியாக விளங்கினார்.

தினசரி பிரார்த்தனை செய்தபிறகே உணவு உட்கொள்வதை புத்லிபாய் வழக்கமாகக் கொண்டிருந்தார். தனந்தோறும் விஷ்ணு கோவிலுக்குச் சென்று வருவார். ஆண்டுதோறும் சாதுர்மாஸ்ய விரதத்தை தவறாமல் கைக்கொள்வார். மிகக் கடுமையான விரதங்களை மேற்கொண்டு, அதை நிறைவேற்றி வருவார். உடவாசம் இருப்பார். சாதுர்மாஸத்தில் புத்லிபாய் ஒருநாளைக்கு ஒரு வருடங்களில் ஒருநாள் விட்டு ஒருநாள் பூரண உபவாசம் இருப்பார்.

ஒரு வருடத்தில் சாதுர்மாஸ்ய விரதத்தின்போது, புத்திலிபாய் தினம் சூரிய தரிசனம் செய்தபிறகே சாப்பிடுவேன் என்று உறுதி எடுத்துக்கொண்டார். அவ்விதமே செய்து வந்தார். தினமும், மோகனதாஸூம் அவருடைய உடன்பிறப்புகளும் காலை வேளையில் சூரியன் எப்போது மேகக் கூட்டங்களிலிருந்து வெளிவரப் போகிறான் என்று பார்த்துக் கொண்டிருப்பார்கள். மழைக்காலமானதால், சூரியனின் தரிசனம் கிடைத்தும், குழந்தைகள் ஓடிச்சென்று தாயிடம் கிடைத்ததும், குழந்தைகள் ஓடிச்சென்று தாயிடம் தெரிவிப்பார்கள். புத்லிபாய் வெளியில் வந்து பார்ப்பதற்குள் சூரியன் மறைந்திருப்பான். ‘அதனாலென்ன மோசம்! இன்று நான் சாப்பிடுவது பகவானுக்கு விருப்பமில்லை’ என்று கூறியபடி, மலந்த முகத்தடன் மீண்டும் வீட்டு வேலைகளைக் கவனிக்கத் தொடங்கிவிடுவார்.

புத்லிபாய் கல்விஞானம் பெற்றிராவிடினும், அனுபவ ஞானம் அதிகம் பெற்றிருந்தார். ராஜ்காட் சமஸ்தானத்தில் இருந்த ராஜ குடும்பத்துப் பெண்மணிகள் எல்லோரும் புத்லிபாயின் அனுபவஞானம் மிகுந்த பேச்சைக் கேட்பதில் மிகவும் விருப்பம் உடையவர்கள். புத்திலிபாய் அடிக்கடி சமஸ்தானத்துக்குச் சென்று அங்குள்ள பெண்களோடு உற்சாகமாகப் பேசுவார்.

2. அரம்பை சொன்ன வழி

 

மோகன்தாஸ் காந்தி, சிறு பிள்ளையாக, இருந்தபோதே கோவிலுக்குச் சொல்லுவார். தாயுடம் விஷ்ணு கோவில்களுக்குப் போவார். புத்லிபாயின் பக்தியும், தெய்வ நம்பிக்கையிம் கண்டு மோகனதாஸூக்கு பக்தியும், தெய்வ நம்பிக்கையும் கண்டு மோகனதாஸூக்கு வியப்பு ஏற்பட்டது. ஆனால், மோகனதாஸின் இளம் உள்ளத்தில் பக்திப் பயிரை விளைவித்தவள், அவரது வீட்டில் வேலை செய்து வந்த அரம்பை என்ற பெண்மணியே ஆவார்.

காந்திஜியை எடுத்து வளர்த்த செவிலித்தாயாகவும் இருந்தவள் அரம்பை. காந்திஜிக்குப் பயம் அதிகம். பாம்பு பயமும் திருடர் பயமும் அதிகம். அத்துடன் இருட்டைக் கண்டால் காந்திஜி நடுநடுங்கிப் போவார். இருட்டில், கண்ணை மூடினால் பிசாசுகள் நிறைய வருவதாகவும் எண்ணி நடுங்குவார்.

காந்திஜிக்கு இருந்த இந்த பயங்களைப் போக்க வேண்டும் என்று அரம்பை மிகவும் பாடுபட்டாள்.

ஒருநாள் காந்திஜி, இருட்டறையில் தனியாகச் செல்வதற்குப் பயந்தார்.

“ஒன்றும் பயமில்லை, போ” என்றார்கள் அவருடைய சகோதரர்கள். ஆனால் காந்திஜி போகவில்லை. பயத்தோடு நின்றிருந்தார்.

அரம்பை இதனைக் கண்டாள். காந்திஜியின் பயத்தைப் போக்க வேண்டும் என்று எண்ணினாள்.

“மோகன்தாஸ், உனக்கு பயம் தோன்றும் போதெல்லாம் ‘ராம், ராம்’ என்று சொல். அந்த ராம நாமம் உன் பயத்தைப் போக்கிவிடும்”.

அவள் சொன்னதும், மோகன்தாஸ் காந்திஜிக்கு நம்பிக்கை ஏற்பட்டது. ‘ராம், ராம், ராம்’ ராம்’ என்று கூறிக்கொண்டே இருட்டறைக்குள் சென்றார். பயம் மெல்ல மெல்ல அவரை விட்டு அகன்றது.

அது முதல் மோகன்தாஸ் காந்தி ராம நாம ஜெபம் செய்யத் துவங்கினார். அவர் இறக்கும் தருணத்திலும் ‘ஹே ராம்’ என்று ராம நாமத்தைக் கூறிக்கொண்டேதான் இறந்தார்.

3. மனத்தில் நிலைத்த நாடகம்

 

இராஜ்காட்டில் மோகன்தாஸ் பள்ளிப் படிப்பைத் தொடந்தார். மத்தியதர மாணாக்கனாகவே அவர் விளங்கினார். வெட்கம் நிறைந்த மாணவனாகவே அவர் விளக்கினார். வெட்கம் நிறைந்த மாணவனாக, யாருடனும் அதிகம் பேசாமல் இருப்பார். ஒருமுறை அவர் படித்த பள்ளிக்கு மிஸ்டர் கைல்ஸ் என்பவர் இன்ஸ்பெக்டராக வந்தார்.

மோகன்தாஸ் படிக்கும் வகுப்புக்கு இன்ஸ்பெக்டர் வந்து, ஜந்து வார்த்தைகளைச் சொல்லி மாணாக்கர்களை எழுதுமாறு கூறினார். அந்த வார்த்தைகளில் ஒன்று ‘கெட்டில்’ என்பதாகும். அதனை மோகன்தாஸ் தவறாக எழுதினார். அப்போது, அங்கே வந்த வகுப்பு ஆசிரியர், மோகன்தாஸ் தவறாக எழுதியிருப்பதைச் சுட்டிக்காட்டி, அவரது கால்களை அழுத்தினார்.

அருகில் இருக்கும் மாணவனைப் பார்த்து, சரியாக எழுதச் சொல்லவே அவர் அழுத்தினார். ஆனால் அவ்விஷயம் மோகன்தாஸூக்குப் புரியவில்லை.

‘காபி’ அடித்து எழுதுவது தவறு என்று மோகன்தாஸ் எண்ணினார். ‘கெட்டில்’ என்ற வார்த்தையை மோகன்தாஸைத் தவிர மற்ற எல்லா மாணவர்களும் சரியாக எழுதியிருந்தார்கள். மோகன்தாஸ் தமது ஆசிரியரிடம் பெருமதிப்பு வைத்தியிருந்தார்கள். மோகன்தாஸ் தமது ஆசிரியரிடம் பெருமதிப்பு வைத்திருந்தார். பள்ளியில் நடந்த இந்த நிகழ்ச்சியை வாழ்நாள் முழுவதும் அவர் நினைவில் வைத்திருந்தார்.

மோகன்தாஸின் பள்ளிப் பருவத்தில் நடந்த மற்ற இரு நிகழ்ச்சிகள், அவருடைய பிற்கால வாழ்வின் அடித்தளங்களாக அமைந்தன எனலாம்.

காபா காந்தியின் ‘சிரவணபித்ரு பக்தி நாடகம்’ என்னும் புத்தகம் இருந்தது. அப்புத்தகம் மோகன்தாஸை மிகவும் கவர்ந்தது. புத்தகத்தை அவர் பலமுறை படித்தார். அச்சமயத்தில் படக்காட்சி நடத்துபவர் சிலர் ராஜ்காட்டிற்கு வந்தார்கள். சிரவணன் பித்ரு பக்தி நாடகக் காட்சிகளைப் படமாக்க் காட்டியதை மோகன்தாஸ் பார்த்தார். கண்ணிழந்த தாய் தந்தையரை சிரவணன் காவடியில் வைத்துக்கொண்டு தூக்கிச் செல்வதை மோகன்தாஸ் படக்காட்சியில் பார்த்தார். அக்காட்சியானது அவரது மனத்தை விட்டு அகலவே இல்லை. சிரவணன் இறந்ததும் அவனது பெற்றோர்கள் துன்பக் கடலில் ஆழ்ந்து புலம்புனார்கள். அப்போது சோகரசம் ததும்பும் பாடல் ஒன்றைப் பாடுவதாக படக் காட்சியில் காட்டப்பட்டது. அந்தப் பாட்டும் அதன் மெட்டும் மோகன்தாஸின் உள்ளத்தை உருவாக்கியது. தந்தை வாங்கித் தந்த வாத்தியக் கருவியில் மோகனதாஸ் அந்த சோகப்பாட்டை அடிக்கடி வாசிப்பார்.

சிரவணனின் கதை, மோகன்தாஸூக்கு ஒரு முன்னுதாரணமாக அமைந்தது.

இச்சமயத்தில், ஒரு நாடகக் கம்பெனி, அரிச்சந்திர நாடகத்தை நடத்தியது. மோகன்தாஸ், இந்த நாடகத்தைக் காணத் தந்தையிடம் அனுமதி பெற்றிருந்தார். நாடகத்தைக் காணச் சென்றார். அரிச்சந்திரனின் சத்தியம் தவறாத வாழ்வும் அதனால் அவர் அடைந்த துன்பங்களையும் கண்டு மோகன்தாஸ் மனம் உருகினார். அந்த நாடகம் அவரது நெஞ்சில் நீங்க இடம் பெற்றது.

பலமுறை அந்நாடகத்தைக் காணச் சென்றார். வீட்டிற்கு வந்தபிறகும் அதே நினைவாக, அரிச்சந்திரனாக தன்னை கற்பனை செய்துகொண்டு நடித்து மகிழ்ந்திருப்பார்.

‘அரிச்சந்திரனைப் போன்று ஏன் எல்லோரும் சத்திய சந்தர்களாக இருக்கக்கூடாது?’ என்று தனக்குத்தானே கேட்டுக்கொள்வார்.

சத்தியத்தைக் கடைப்பிடிப்பது நின்று அரிச்சந்திரன் பட்ட துன்பங்களை எல்லாம் அனுபவிக்க வேண்டும் என்ற இலட்சியம் அவருடைய உள்ளத்தில் குடி கொண்டது.

மோகன்தாஸின் வாழ்வு மகத்தான வாழ்வாக மலர, இளம் உள்ளத்தில் விழுந்த இந்த விதைகளே, பெரும் மரங்களாகி உயர்ந்த லக்ஷியங்களாயின என்பதைக் கூறவும் வேண்டுமோ?

4.சைவ உணவின் பெருமை

 

மோகன்தாஸூக்கு பதின்மூன்று வயது இருக்கும் பொழுது, ஒரு நண்பர் அவரோடு நட்பு பாராட்டினார். அந்த நண்பர் அவரோடு நட்பு பாராட்டினார். அந்த நண்பர் நல்ல பலசாலியாகவும் பராக்கிரமச் செயல்கள் செய்பவராகவும் விளங்கினார். அவருடைய தேக பலத்தைப் பார்க்க மோகன்தாஸூக்கு வியப்பு ஏற்படும்.

“நாம் பலவீனர்களாக இருப்பதைக் காரணமே புலால் உண்ணாத்துதான். ஆங்கிலேயர்களைப் பார். நம்மை அவர்கள் அடிமைபப்டுத்தி ஆட்சி செய்வதற்கு என்ன காரணம்? அவர்கள் புலால் உண்கிறார்கள். பலசாலியாக விளங்குகிறார்கள்” என்று நண்பர் அடிக்கடி கூறுவதை மோகன்தாஸ் கேட்டார்.

மோகன்தாஸ் இயல்பாகவே மிகுந்த பயந்த சுபாவம் உடையவர். உடல் மெலிந்தவர். நண்பர் கூறுவதைக் கேட்டு, புலால் உண்ணுவதால்தான் பலம் பெற முடியும் என்று தீர்மானுத்தார். புலால் உண்டு, பலம் பெற்று, இந்தியர்களை, ஆங்கிலேயரை நாட்டை விட்டே விரட்டி விடலாம் என்றும் எண்ணினார்.

மோகன்தாஸின் குடும்பத்தார் சைவ உணவே உண்பவர்கள். எனவே புலால் உண்பதை வீட்டில் இருப்போர் அறியாமல் உண்ண வேண்டும். இதை எண்ணி மோகன்தாஸ் கலங்கினார். ஆனால் நண்பர், அவரது கலக்கத்தைப் போக்கினார். வீட்டிலுள்ளோர் அறியாதவாறு உண்ணலாம் என்றார்

முடிவாக, ஒருநாள் குறிக்கப்பட்டது. நண்பர் ஆற்றங்கரைக்கு மோகன்தாஸை அழைத்துச் சென்றார். தனியான இடத்தில் நண்பர், தாம் கொண்டுவந்திருந்த உணவுப் பொட்டலத்தைப் பிரித்தார். இருவரும் சாப்பிடத் துவங்கினார்கள். மோகன்தாஸூக்கு, புலால் உணவும் பிடிக்கவில்லை. யாரும் அறியாமல் இச்செயலைச் செய்வதும் பிடிக்கவில்லை. ஒரு வாய்கூட அவரால் சாப்பிட முடியவில்லை. எழுந்துவிட்டார்.

நண்பரும் அதிகம் வற்புறுத்தவில்லை. முதல்நாள் தானே, இனி போகப் போக, மோகன்தாஸூக்கு புலால் உண்ணும் பழக்கம் ஏற்பட்டுவிடும் என்று நினைத்தார்.

மோகன்தாஸை, வீடு வந்து சேர்ந்தார். அவருக்கு, தாம் ஏதோ குற்றம் செய்துவிட்டோம் என்ற குறுகறுப்பு இருந்தது.

பெற்றோர்களுக்குத் தெரியாமல் செய்ததை மோகன்தாஸ் பெரும் குற்றமாகவே எண்ணினார். இரவு முழுவதும் இதைப்பற்றி எண்ணி வருந்தினார். தூங்கினால், வயிற்றுக்குள் உயிருள்ள ஆடு கத்துவது போலக் கனவு கண்டு திடுக்கிட்டு விழித்துக்கொண்டார்.

உடல் பலம் பெறுவதற்காக புலால் உண்பதும் அதை மறைத்துச் செய்வதும் மோகன்தாஸூக்குப் பிடிக்கவில்லை.

பொய் சொல்வது என்பது மோகன்தாஸூக்கு பிடிக்காத குணம். எனவே, தாய் தந்தையரை ஏமாற்றி அவர்களிடம் பொய் சொல்லி புலால் உண்டு, பலம் பெற வேண்டாம் என்று தீர்மானித்தார்.

எனவே மறுநாள் மதல், நண்பரிடம் தன்னுடைய தீர்மானத்தைக் கூறிவிட்டார். நண்பர் பலமுறை வற்புறுத்தியும், மோகன்தாஸ், தமது தீர்மானத்தைக் கைவிடவில்லை.

மோகன்தாஸின் இந்தக் கொள்கை பிற்காலத்தில் அவருக்கு மிகவும் பயனளித்தது. புலால் உண்பதைவிட சைவ உணவு உண்பவரே தேகபலத்தில் விஞ்சியவராக இருக்கிறார் என்று மகாத்மா காந்தி கூறினார். மகாத்மா காந்தி இங்கிலாந்தில் படித்த காலத்திலும், தென்னாப்ரிக்காவில் வாழ்ந்த காலத்திலும் சைவ உணவையே உண்டு வந்தார். அதுவே சாத்வீகமான–ஆரோக்கியமான உணவு என்பது காந்திஜியின் கொள்கை.

5. தந்தை காட்டிய பாதை

 

காந்திஜியின் இளம் வயதில் ஒருவரோடு நட்பு கொண்டுருந்தார். அந்த நண்வர் சுருட்டு குடிக்கும் வழக்கமுடையவர். அவருடன் சேர்ந்ததால் காந்திஜிக்கும் இந்தக் கொடிய பழக்கம் தொற்றிக்கொண்டது. சுருட்டு குடிக்கும் பழக்கத்தை நாகரீகம் உள்ளவர் என்பதைக் காட்டிக் கொள்ள காந்திஜியும் நண்பருடன் சேர்ந்து புகை பிடிக்கத் துவங்கினார்.

இப்பழக்கத்தின் காரணமாக செலவுக்குப் பணம் தேவைப்பட்டது. சுருட்டு வாங்குவதற்கு பணம் வேண்டுமே. சில காலம் கடைகளிலும் நண்பர்களிடமும் பணம் கடனாகப் பெற்று சுருட்டு வாங்கினார். கடனை அடைப்பதற்குப் பணம் தேவைப்பட்டதும் என்ன செய்வது என்று யோசித்தார்.

தமது மூத்த சகோதரரின் தங்கக் காப்பிலிருந்து ஒரு பகுதியை காந்தி வெட்டி எடுத்தார். இவ்வாறு செய்யும் போது அவர்மீது அவருக்கே வெறுப்பும் வேதனையும் ஏற்பட்டது. தாம் செய்யும் செயல் எத்தனையது என்று எண்ணிப் பார்த்து தாங்கொணாத துயரம் அடைந்தார்.

கடைசியாக, தாம் செய்த தவறுகள் எல்லாவற்றையும் தந்தையிடம் கூறி மன்னுப்பு கேட்க வேண்டும் என்று விரும்பினார். ஆனால் அவர் செய்தவற்றை, நேரில் சொல்வதற்கு நடுக்கமாக இருந்தது. எனவே காகிதத்தை எடுத்தார். தாம் செய்த குற்றங்களுக்குத் தகுந்த தண்டனை அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

காந்திஜியின் தந்தை காபா காந்தி உடல்நலம் சரியில்லாத்தால் படுத்த படுக்கையாக இருந்தார்.

தந்தையிடம் சென்று தாம் எழுதிய கடிதத்தைக் கொடுத்தார். அவர் படித்துவிட்டு தரும் தண்டனையை எதிர்நோக்கி அருகில் நின்றிருந்தார்.

காந்திஜி தந்த கடித்த்தை வாங்கிக்கொண்ட காபாகாந்தி, எழுந்து உட்கார்த்துகொண்டார். கடித்த்தைப் படித்தார். படிக்கும்போது அவருடைய கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது.

கடிதத்தைப் படித்து முடித்தும் கண்களை மூடிக் கொண்டார். பிறகு கடிதத்தைக் கிழித்துப் போட்டார். பிறகு படுத்துக்கொண்டார்.

தான் செய்த தவறுகளுக்கு தந்தையிடம் தண்டனையை எதிர்பார்த்து நின்ற காந்திஜி அழுதார். கோபம் கொண்டு திட்டுவார் அல்லது அடிப்பார் என்றி காந்திஜி
எண்ணினார்.

தந்தையிடம் காந்திஜி மறைக்காமல், தமது தவறுகளைக் கூறி மன்னிப்புக் கேட்டாரல்லவா? குற்றம் செய்வதை ஒப்புக்கொள்பர்களை மன்னிக்க வேண்டும் என்பதே காபா காந்தியின் எண்ணமாக இருந்தது.

இதை காந்திஜிஅஹிம்சை என்று உணர்ந்தார். அன்பால் எதையும் வெல்லாம் என்பதே அஹிம்சையின் ஆணிவோர். இந்த தத்துவம், இளம் பிள்ளையாக இருக்கும் போதே காந்திஜியின் மனத்தில் ஆழ வேரூன்றச் செய்தது இந்தச் சம்பவமே!

பெரும் சாதனைகளை பிற்காலத்தில் செய்ய அஹிம்சையும் சத்தியமுமே காந்திஜிக்குத் துணையாக நின்றன.

தந்தையிடம் குற்றத்தை ஒப்புக்கொண்டு மன்னிப்பையும் பெற்றபிறகு காந்திஜி, தேவையற்ற பழக்கங்கள் அனைத்தையும் விட்டுவிட்டார்.

6. சத்தியம் காத்தார்

 

மோகன்தாஸ் காந்திஜியின் தந்தை உடல்நலம் குன்றி படுத்த படுக்கையானார். அவருக்கு வேண்டிய பணிவிடைகளை மோகன்தாஸ் செய்து வந்தார். அவருக்கு ஏற்பட்டிருந்த புண்ணைத் துடைத்துக் கட்டுவது, மருந்து கொடுப்பது, அவருடைய கால்களைப் பிடித்துவிடுவது போன்றவற்றைச் செய்தார். மருத்துவம் பார்த்துவம் பார்த்தும், கவனமுடன் இருந்தபோதிலும் அவரைக் காப்பாற்ற முடியவில்லை. அவர் காலமானார்.

தந்தை இறந்தபோது மோகன்தாஸூக்கு வயது பதினாறு. பள்ளியில் படித்துக்கொண்டிருந்தார். இரண்டு வருஷங்களில் மெட்ரிகுலேஷன் தேர்வில் தேறினார்.

பின்பு பவநகரில் இருந்த ஸமால்காஸ் கல்லூரியில் சேர்ந்தார். கல்லூரி வாழ்வு மோகன்தாஸூக்குப் பிடிக்கவில்லை. தந்தையின் நண்பரும் குடும்ப ஆலோசகருமான மாவ்ஜி தவே என்பவர் ராஜ்காட் வந்திருந்தார். அவர், மோகன்தாஸின் கல்வியைப் பற்றி கேட்டார்.

கல்லூரியில் படிப்பது பற்றிக் குடும்பத்தார் கூறினார்கள்.

ஆனால் மாவ்ஜி தவே, பி.ஏ. படித்து, பின்பு சட்டம் படிக்க இன்னும் ஆறு வருஷம் ஆகும். அப்படிப்படித்தாலும் சம்பளம் அதிகம் கிடைக்குமா என்பது சந்தேகமே. அதைவிட இங்கிலாந்து சென்று பாரிஸ்டர் பட்டம் பெற்று வந்தால் வக்கீலாகவும் இருக்கலாம். இல்லையென்றால் சமஸ்தானங்களில் திவான் பதவியில் இருக்கலாம். பாரிஸ்டர் படிப்பு மூன்று வருஷத்தில் முடிந்துவிடும் என்றார்.

அவர் கூறியது நல்ல யோசனையாகவே இருந்தது. ஆனால் மோகன்தாஸ் குடும்பத்தார் ஆதலில் அதற்கு ஒப்பவில்லை. அக்காலத்தில் கடல் கடந்து செல்வது என்பது பெரும் குற்றமாகக் கருதப்பட்டது.

சிறிய தந்தையைப் பார்த்துப் பேச மோகன்தாஸ் ராஜ்காட்டிலிருந்து போர்பந்தருக்குச் சென்றார்.

இங்கிலாந்து சென்று மேற்படிப்பதைப் பற்றிய அவரது எண்ணத்தைக் கேட்டார்.

எல்லாவற்றையும் விபரமாகக் கேட்ட மோகன்தாஸின் சிறிய தந்தை, ‘என்னுடைய ஆசி உனக்கு என்றும் உண்டு. உன் தாய் சம்மதம் தந்தால் நீ இங்கிலாந்துக்குப் போ’ என்று கூறி அனுப்பினார்.

மோகன்தாஸ் ராஜ்காட் வந்ததும் நேராக அன்னை புத்லிபாயிடம் வந்தார். சிறிய தந்தை அனுமதியளித்துவிட்டார் என்று கூறி அன்னையின் அனுமதியை வேண்டினார்.

புத்லிபாய் எளிதில் இணங்க மறுத்தார்.

‘அம்மா, நான் வெளிநாடு சென்று படிப்பதில் உனக்கு விருப்பமில்லையா? ஏன் என்னைத் தடுக்கிறாய்?’

‘மோகன்தாஸ் என் மனத்தில் இதைப்பற்றி சில எண்ணங்கள் இருக்கிறது. வெளிநாட்டுக்குச் செல்பவர்கள் ஒழுக்கம் தவறி நடப்பதாக நான் கேள்விப்படுகிறேன். அதனால்தான் நான் உன்னை அனுப்பத் தயங்குகிறேன்’.

‘என்னை நம்புங்கள் அம்மா. நீங்கள் செய்ய வேண்டாம் என்று சொல்வதைச் செய்யமாட்டேன். இது உண்மை’ என்றார்.

‘தூரதேசம் செல்லும்போது நீ உறுதியாக இருந்தாலும் அவ்வாறு இருக்க முடியுமா? மோகன்தாஸ் எனக்கு கலக்கமாக இருக்கிறது’.

அன்னையின் கலக்கத்தை மோகன்தாஸ் காந்தி உடனே போக்கினார்.

‘மதுபானம் செய்யமாட்டேன்; மாமிசம் உண்ண மாட்டேன். மங்கையரைத் தொடமாட்டேன்’ என்று உறுதியோடு கூறி சத்தியம் செய்து கொடுத்தபிறகு புத்லிபாயின் கலக்கம் நீங்கியது.

மோகன்தாஸ் காந்தி இங்கிலாந்து செல்ல அனுமதி அளித்தார்.

1887-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 4-ம நாளன்று பம்பாயிலிருத்து இங்கிலாந்துற்குக் கப்பலில் பயணமானார்.

7. மமிபாய்க்காக வாதிட்டார்

 

மூன்றாண்டு காலம் லண்டனில் வசித்து மேற்படிப்பை முடித்தார், மோகன்தாஸ் காந்தி. 1891-ம் ஜூன் மாதம் 10-ம் நாளன்று பாரிஸ்டர் ஆனார். மறுநாள், வக்கீல் தொழில் நடத்தும் உரிமையைப் பெற்றார். உடனே ஜூன் 12-ம் நாளன்று இந்தியாவுக்குப் பயணமானார்.

எஸ்.எஸ். அஸ்ஸாம் என்ற கப்பலில் தாய்நாடு நோக்கி பயணப்பட்ட மோகன்தாஸ் காந்தியின் மனம் கவலையில் ஆழ்ந்தது.

இங்கிலாந்தில் படித்த பாரிஸ்டர் படிப்பில், இந்தியச் சட்டங்கள் பற்றி எதுவும் இல்லை. இது தெரியாமல் இந்தியக் கோர்ட்டுகளில் எவ்விதம் வாதாட முடியும் என்று கவலை கொண்டார்.

பிங்கட் என்ற ஆங்கிலேய நண்பர் கூறியதை நினைவில் கொண்டு மனத்தைத் தேற்றிக்கொண்டார். “வக்கீல் தொழில் செய்வதற்கு முயற்சியும் நேர்மையும் இருந்தால் போதும்” என்றார் அந்த நண்பர்.

மோகன்தாஸ் காந்தி தாயகம் வந்தடைந்தார். வந்ததும் அவர், தாய் காலமான செய்தியறிந்து கண்ணீர் விட்டார். தாயிடம் அளித்த வாக்கை இந்த மூன்றாண்டு காலமும் மீறவில்லை என்று கூற எண்ணியிருந்தார். அவருடைய விருப்பம் நிறைவேறவில்லை.

‘பாரிஸ்டர்’ என்ற பட்டத்துடன் வந்த மோகன்தாஸ்காந்தி, தமது வக்கீல் தொழிலைத் துவங்கினார்.

முதல்முதலாக, பம்பாய் ஸ்மால்காஸ் கோர்ட்டில், காந்திஜி ஒரு வழக்கை எடுத்து நடத்தினார். மமிபாய் என்னும் பெண்ணின் சார்பில் வழக்கறிஞராக ஆஜரானார். மமிபாய் பிரதிவாதி. வாதியின் தரப்பில் இருந்த சாட்சிகளை காந்திஜி விசாரணை செய்ய வேண்டும்.

முதல் சாட்சி, கூண்டுக்கு அழைத்து வரப்பட்டார். விசாரனை செய்ய காந்திஜி எழுந்து நின்றார். ஆனால், அவருக்கு முன்னே, நீதிமன்றமும் நீதிபதியும் எல்லோரும் சுழல்வதுபோல இருந்தது.

ஆம் காந்திஜியின் தலை சுற்றியது. என்ன பேசுவது என்று தெரியாமல் திகைத்தார். பயமும் கலக்கமும் தோன்றின.

எதுவும் கேட்காமலேயே, தம்முடைய இருக்கையில் அமர்ந்துகொண்டார். பிறகு, தமது கட்சிக்காரரானர மமிபாயிடம், “என்னால் இந்த வழக்கை ஏற்று நடத்த முடியவில்லை. வேறொருவரை ஏற்பாடு செய்து கொள்ளுங்கள்” என்று கூறிவிட்டு, நீதிமன்றத்தை விட்டு வெளியேறினார்.

திகைப்பும் தயக்கமும், சபை கூச்சமும் காந்திஜியை இவ்வாறு செய்ய வைத்தன. இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு, பாரிஸ்டர் காந்திஜி மன்றத்திற்குப் போகவில்லை. விண்ணப்பங்கள் எழுதுக் கொடுப்பது ஓரளவு வருவாய் பெற்றார்.

முதல் வழக்கில் பேச இயலாமல் தயங்கி வெளிவந்த காந்திஜி பின்னாளில் லட்சக்கணக்கானவர்கள் கூடியிருந்த கூட்டங்களில் பேசினார்; பல நீதிமன்றங்களில், ஆங்கில அரசுக்கு எதிராக, பலரும் போற்றும்படியாக வாதம் புரிந்திருக்கிறார். பல அரசியல் தலைவர்கள் பாராட்டும். வண்ணம் பேசினார் என்பதை அறிய வியப்பாக இருக்கிலதல்லவா?

8. கம்பவுண்டர் வேலை

 

வக்கீல் தொழிலிலும் குடும்ப வாழ்விலும் காந்திஜிக்கு நிறைய பொறுப்பும் பணிகளும் இருந்தன. அத்துடன் பொதுச்சேவை செய்வதிலும் காந்திஜிக்கு அதிக நாட்டம் இருந்தது. தொண்டு செய்யும்போது, மனம் அமைதியடைவதாக காந்திஜி
நினைத்தார்.

ஒருநாள், காந்திஜியின் வீட்டு வாசலில் குஹ்டநோய் உள்ள ஒருவன் வந்து பிச்சை கேட்டான்.

அவனைக் கண்டு இரங்கிய காந்திஜி, ஊர் பெயர் எல்லாம் விசாரித்தார். அவன் ஒரு ஒப்பந்தத் தொழிலாளியாக இருந்தவன். வேலையின் கடுமை, சரியான வசதியில்லாததால் நோய்வாய்ப்ப்ட்டான். குஷ்ட நோய் பற்றியதால், அவனை கூலியாக ஒப்பந்தம் செய்யதவர்கள், வேலையை விட்டு விலக்கினார்கள். அதுமுதல் பிச்சை எடுத்து வாழ்வதாக அவன் சொன்னான்.

அந்தப் பிச்சைக்காரனுக்கு ஒருவேளை சோறு போட்டு அனுப்பி வைத்துவிட காந்திஜி விரும்பவில்லை.

தன்னுடைய வீட்டில் தங்கச் சொன்னார். அப்போது, அவனுடைய உடம்பிலிருந்து புண்களைத் தாமே துடைத்து மருந்திட்டார். இவ்வாறு சில நாட்கள், காந்திஜி அந்த பிச்சைக்காரனுக்கு தொண்டு செய்தார்.

அவனுக்கு சற்று உடல்நிலம் தேறியதும்,ஒப்பந்தப் கூலிகளுக்காக ஏற்பட்ட மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

அதுமுதல் நோயாளிகளுக்குப் பணிவிடை செய்ய வேண்டும் என்ற எண்ணம் காந்திஜியின் உள்ளத்தில் அதிகமாகியது.

ரஸ்டம்ஜி, தர்மப்பணிக்காக என்று அளித்த பணத்தில், காந்திஜி ஏழைகளுக்காக ஒரு இலவச மருத்துவமனையை நிறுவினார். டாக்டர் பூத் என்பவரை நியமித்தார்.

இந்த இலவச மருத்துவமனையில் தினமும் ஒரு சில மணி நேரங்கள் பணியாற்றினார்.

டாக்டர் பூத் நோயாளிகளைக் கவனித்து, அவர்களுக்கு என்னென்ன மருந்துகள் கொடுக்க வேண்டும் என்று எழுதிக் கொடுப்பார். காந்திஜி, அதன்படி மருந்துகளைக் கலக்கித் தந்து, ‘கம்பவுண்டர்’ வேலை செய்தார்.

எளியவர்களுக்குத் தொண்டு செய்வதுடன், எதையும் தானே செய்ய வேண்டும் என்பதில் ஆர்வமுள்ளவர் காந்திஜி. தன்னுடைய துணிகளைத் தானே துவைத்துக் கொள்வார். அவ்வளவு ஏன், தலைமுடி வெட்டுக்கொள்வதையும் கூட அவரே செய்துகொள்வார்.

‘என் கடன் பணி செய்து கிடப்பதே’ என்ற வாக்குக்கு ஒப்ப காந்திஜி ஒப்புக்கொள்ளவில்லை.

9. சிநேகிதமும் சொந்தமும்

 

பம்பாயை விட்டு மீண்டும் ராஜ்காட் வந்து சேர்ந்தார் காந்திஜி. காந்திஜியின் மூத்த சகோதரர் போர்பந்தர் ராஜாவின் செயலாளராக இருந்தார். அப்போது, அவர் பேரில் ராஜா, தவறாக யோசனை சொன்னார் என்ற காரணம் காட்டி, காந்திஜியின் சகோதரர்மீது குற்றம் சாட்டினார். அக்குற்றத்தை விசாரிக்கும் பொறுப்பு, ஆங்கிலேய அரசின் பிரதிநிதியாக இருக்கும் ‘பொலிடிகல் ஏஜெண்டிடம்’ ஒப்படைக்கப்பட்டது.

தமது சகோதரர் கூறியதை காந்திஜி ஒப்புக்கொள்ளவில்லை.

“தாங்கள் குற்றமற்றவர் என்றால் எதற்காக அவருடைய தயவை நாட வேண்டும்…… பொறுத்திருந்து பார்க்கலாம்” என்றார்.

“தம்பி, உனக்கு இந்த ஊரைப்பற்றித் தெரிய நியாயமில்லை. இங்கே எதுவும் செல்வதற்கு ஒன்றால்தான் நடக்கும். உனக்குத் தெரிந்தவர் அந்த பொலிடிகல் ஏஜெண்ட். உனக்கு சகோதரனின் பேரில் சிறிதாவது பாசம் இருக்குமானால் இதைச் செய்வாய்”.

மூத்த தமையனாரிடம் அன்பும் பாசமும் நன்றியும் கொண்டிருந்தார் காந்திஜி . எனவே அவரிக்காக, பொலிடிகல் ஏஜெண்டைக் காணச் சென்றார்.

அந்த ஆங்கிலேய அதிகாரியைச் சந்தித்ததும், பழைய நட்பை நினைவூட்டினார். ஆனால் அந்த ஆங்கிலேயரோ, இந்தியர் ஒருவருடன் நட்புப் பாராட்டவும் விரும்வில்லை. நேரடியாக விஷயத்தைக் கூறினார்.

“உங்களிடைய சகோதரத் செய்த செயல்களைப் பற்றி எனக்குத் தெரியும். அவருக்காக நீங்கள் என்னிடம் எதுவும் பேச வேண்டியதில்லை. ஏதேனும் சொல்ல விரும்பினால் அதை அவரே முறைப்படி எழுத்துமூலம் தெரிவிக்கட்டும்” என்றார்.

அவர் இவ்வாறு கூறிய பிறகும் காந்திஜி ” தயவுசெய்து என் வார்த்தையைக் கேளுங்கள்” என்றார்.

அந்த ஆங்கிலேயருக்கு முகுந்த கோபம் வந்தது.

”நீங்கள் வெளியே போகலாம்” என்றார் கடுமையாக.

அதன்பிறகும் காந்திஜி வெளியேறாமல் நின்றிருந்தார். உடனே ஆங்கிலேயர், தமது பணியாளை அழைத்தார்.

அந்தப் பணியாள், காந்திஜியின் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளினான்.

கோபம் கொண்ட காந்திஜி, அந்த ஆங்கிலேய அதிகாரியின்மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க விரும்பினார். ஆனால் வக்கீல் தொழிலில் உயர் அனுபவம் பெற்றவர்கள், அவரை அவ்வாறு செய்ய வேண்டாம் என்று தடுத்தார்கள்.

இந்நிகழ்ச்சி காந்திஜிக்கு ஒரு படிப்பினையைக் கற்றுக் கொடுத்தது.

”இனிமேல் எக்காரணம் கொண்டும், சொந்தப் பணிகளுக்கு சிநேகித்தை–நட்பை–பயன்படுத்திக் கொள்ளமாட்டேன்” என்று தமக்குத்தாமே உறுதி எடுத்துக்கொண்டார்.

10. வாழ்வில் திருப்பம் தந்த பயணம்

 

போர்பந்தரிலிருந்த ஒரு வியாபாரக் கம்பெனியின் அழைப்பை ஏற்று காந்திஜி தென்னாப்ரிக்காவுக்குப் பயணமானார். தாதா அப்துல்லா கம்பெனியில் வேலை பார்ப்பவராக வருஷத்திற்கு 105 பவுன் சம்பளத்துடம் சேர்ந்தார். 1893-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் காந்திஜி தென்னாப்ரிக்காவுக்குப் புறப்பட்டார்.

கப்பலின் மேல்தளத்தில் பயணம் செய்யுமாறு, கப்பல் தலைவர் காந்திஜியிடம் கேட்டுக்கொண்டார். முதல் வகுப்பு வேண்டும் என்று காந்திஜி கேட்டதற்கு ‘இடமில்லை’ என்றார் தலைவர்.

”எப்படியாவது ஒரு இடம் தர உங்களால் முடியாதா?” என்று காந்திஜி பணிவுடன் கேட்டார்.

காந்திஜியை தலைமுதல் கால்வரை உற்றுப் பார்த்த அந்தக் கப்பல் தலைவர், ”என்னுடைய சொந்த அறையில் என்னோடு சேர்ந்து இருங்கள்” என்றார். அவருக்கு காந்திஜி நன்றி கூறினார்.

அந்தத் தலைவருக்கு சதுரங்கம் விளையாடுவதில் விருப்பம் அதிகம். ஆனால் காந்திஜிக்கோ சதுரங்கம் பற்றி எதுவும் தெரியாது. கப்பல் தலைவர், காந்திஜிக்கு சதுரங்கம் விளையாடக் கற்றுத் தந்து, தன்னுடன் விளையாட வைத்தார்.

பதின்மூன்று நாட்கள் தொடர்ந்து பயணம் செய்து, லாமு துறைமுகத்தை அடைந்தது. கரையில் இறங்கி ஊரைச் சுற்றிப் பார்க்க எல்லோரும் விரும்புனார்கள். காந்திஜியும் இறங்கினார்.

”இந்தத் துறைமுகத்தில் கடல் கொந்தளிப்பு அதிகம். எச்சரிக்கையுடன் போய், விரைவில் வாருங்கள்” என்று கூறி அனுப்பினார் கப்பல் தலைவர்.

காந்திஜி லாமு நகரைச் சுற்றிப் பார்த்தார். மூன்று மணி வரை கரையில் இருந்துவிட்டு, பிறகு கப்பலை நோக்கிச் சென்றார்கள். படகிலே அதிகமாக மனிதர்கள் ஏறியதால் படகு தள்ளாடியாது. மேலும் கடல் கொந்தளித்துக் கொண்டிருந்தது. காந்திஜிக்கு படகில் நிற்கவும் இடமில்லை.

கப்பலின் அருகில் படகு வரும். ஆனால் வேகமான அலைகளால் அடித்துக்கொண்டு போகும். இதனால் கப்பலில் இருந்த ஏணியைப் பற்றி ஏற முடியாமல் போயிற்று.

கப்பல் கிளம்புவதற்கான சங்கொலி கேட்டதும் காந்திஜி விரைவாகச் செயல்பட்டார். தம்முடைய படகின் அருகில் வந்த மற்றொரு படகில் ஏறிக்கொண்டார். அதில் அதிகமானவர்கள் இல்லை. எனவே எளிதாக அப்படகை, கப்பலின் ஏணியருகே செலுத்த முடிந்தது.

காந்திஜி அவசர அவசரமக ஏணியைப் பற்றி ஏறி, மேல்தலத்தைஅடைந்ததும், கப்பலும் புறப்பட்டது. பயணம் தொடர்ந்தது.

தென்னாப்ரிக்கா பயணம், காந்திஜியின் வாழ்வில், மகத்தான திருப்பங்களை ஏற்படுத்தியது.

11. பாத்திரம் துலக்குவதில்

 

1903-ம் வருடம் காந்திஜி மூன்றாண்டு முறையாக தென்னாப்பிரிக்கா நாட்டுக்குச் சென்றார். டர்பன் நகரில் வக்கீலாக இருந்தார். அலுவலக சிப்பந்திகள், காந்தியுடன் அவரது வீட்டிலேயே தங்கியிருந்தார்கள்.

காந்திஜியின் வீடு மேல்நாட்டுப் பாணியில் கட்டப்பட்டிருந்தது. ஒவ்வொரு அறையிலும் சாக்கடை அமைக்கபட்டிருந்தால் அழுக்கு நீர் பாத்திரம் ஒன்று இருந்தது. சிப்பந்திகள் அவரவர் பாத்திரங்களை, அவரவர் சுத்தம் செய்து வைத்திவிடுவது வழக்கமாக இருந்தது.

காந்திஜியின் அலுவலகத்தில் புதிதாக ஒரு கிறிஸ்துவ சிப்பந்தி சேர்ந்திருந்தான். அவன் புதிநவனாதலால், அவனுடைய அறையிலிருந்து பாத்திரத்தை, கஸ்தூரிபாயை சுத்தம் செய்ய சொன்னார் காந்திஜி.

”என்னால் முடியாது” என்றால் கஸ்தூரிபாய்.

”ஏன் முடியாது” என்று காந்திஜி கேட்டார்.

”ஒரு தீண்டத்தகாதவரின் பாத்திரத்தை நான் தொட்டு சுத்தம் செய்யமாட்டேன்” என்று கஸ்தூரிபாய் பிடிவாதமாகக் கூறினார்.

”சரி நான் செய்கிறேன்” என்றார் காந்திஜி.

அவர் செய்வதையும் அவளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

கண்கள் தாரைதாரையாக நீர் பெருக்க, கோபத்துடன் பாத்திரத்தை எடுத்துக்கொண்டு போய் சுத்தம் செய்தார்.

”கோபத்தோடு இதைச் செய்வதாயிருந்தால் செய்யவே வேண்டாம். மூடத்தனமான எண்ணங்களை விட்டுவிட்டு இரு” என்றார் காந்திஜி.

கஸ்தூரிபாயின் கோபம் எல்லை கடந்தது.

”உங்கள் வீட்டை நீங்களே வைத்துக்கொள்ளுங்கள். என்னைத் தொலைத்துவிடுங்கள்” என்றார்.

இதைக் கேட்டு காந்திஜி, அவரருகே சென்று வெளியே தள்ளுவதற்கு முயன்றார்.

கஸ்தூரிபாய் வேதனையும் வருத்தமும் அதிகரிக்க கண்ணீர் சிந்தினார்.

”என்னை வெளியே போகச் சொல்கிறீர்களா? உங்களையே நம்பி வந்தேன். இங்கே எனக்கு போக்கிடம் எங்கே? என் பெற்றோர்களோ உற்றார்களோ இருக்கிறார்களா? உதைத்தாலும் வதைத்தாலும் உங்களைத் தவிர நான் யாரிடமும் போவேன்?”

கஸ்தூரிபாய், இவ்வாறு கூறியதும் காந்திஜி வெட்கமடைந்தார். மனைவியின் வார்த்தைகளில் இருந்த உண்மையை உணர்ந்தார். அளவற்ற பொறுமையும் அன்பும் கொண்ட கஸ்தூரிபாய், காந்திஜியை தமது அன்பால் வென்றார்.

கணவரின் அடிச்சுவட்டைப் பின்பற்றி நடப்பதையே தமது வாழ்நாளில் லட்சியமாகக் கொண்டவர் கஸ்தூரிபாய்.

காந்திஜி கஸ்தூரிபாய் வாழ்க்கை எப்போதும் திருப்தியும் மகிழ்ச்சியும் வளர்ச்சியும் உடையதாக இருந்தது.

12. உயிர் போனாலும் பரவாயில்லை

ஒரு சமயம் கஸ்தூரிபாயின் உடல்நலம் குன்றியது. மருத்துவர்கள், அவருக்கு ரணச்சிகிச்சை செய்ய வேண்டும் என்றார்கள். ஒரு பிரபல மருத்துவமனையில் கஸ்தூரி பாயை சேர்த்தார்கள். மயக்க மருந்து கொடுக்காமலே, ரணச்சிகிச்சை செய்யப்பட்டது.

மருத்துவர்கள் இனி கவலை இல்லை என்று சொன்னதும் காந்திஜி, ஜோகனிஸ்பர்க் போனார்.

அவர் ஊருக்குச் சென்ற சில தினங்களில் கஸ்தூரி பாயின் உடல்நிலை மோசமாகியது. மிகவும் பலவீனமடைந்திருந்தாள். காந்திஜிக்கு போன் மூலம் செய்தி அனுப்பப்பட்டது.

அவர் டர்பனுக்கு விரைந்து வந்தார். மருத்துவரைப் பார்த்தார். கஸ்தூரிபாயின் உடல்நிலையில் முன்னேற்றம் எற்பட வேண்டுமானால் உனடடியாக மாட்டிறைச்சி ரஸம் (சூப்) கொடுக்க வேண்டும் என்றார் மருத்துவர். இதைக் கேட்டதும் காந்திஜி சிந்தனையில் ஆழ்த்தார்.

“நான் இதற்கு ஒப்புதல் தரமாட்டேன். அவளையே கேளுங்கள். அவள் சம்மதம் என்றால் கொடுங்கள். நான் தடுக்கமாட்டேன்” என்றார்.

மருத்துவர் இதள்கு உடன்படவில்லை. ”நோயாளியிடம் ஆலோசனை கேட்பது தவறு. நான் சொல்லுவதைச் சொல்லிவிட்டேன்”. இனி அவருடைய உயிருக்கு நான் பொறுப்பாளி இல்லை. உங்களிடம் பொறுப்பைக் கொடுத்துவிடுகிறேன்” என்றார்.

சிகிச்சை விஷயத்தில் பூரண சுதந்திரம் தமக்கு வேண்டும் என்று மருத்துவர் விரும்பினார். காந்திஜியோ, ஜீவஹிம்சை வழியான அசைவ உணவை உண்பதை வெறுப்பவர்.

கஸ்தூரிபாயைக் கலந்து ஆலோசிக்க விரும்புனார். நடந்தது அனைத்தையும் அவளிடம் கூறினார்.

எல்லாவற்றையும் கேட்டபிறகு கஸ்தூரிபாய், ”எனக்கு மாட்டிறைச்சி ரஸம் வேண்டாம். அரிதாகக் கிடைத்த மனித ஜென்மத்தை நான் அசுத்தப்படுத்த விரும்பவில்லை. உங்கள் காலடியில் இருந்து உயிர் விட்டாலும் விடுவேனே தவிர, இதையெல்லாம் உண்ணமாட்டேன்” என்று முடிவாகக் கூறிவிட்டார்.

அதற்குப் பிறகும் காந்திஜி விடாமல் எடுத்துரைத்தார்.

”எனக்காக, நீ வேண்டாம் என்று சொல்லாதே. உன் உடல்நிலைக்கு இது தேவை என்கிறார் மருத்துவர். உயிர் வாழ்வதற்காக, அசைவ உணவு உண்ணுவது, மது அருந்துவது இவையும் மருந்து போலத்தான் கொடுப்பார்கள். நன்றாக யோசித்துச் சொல்”.

ஆனால் கஸ்தூரிபாய் எக்காரணம் கொண்டும் இந்த மருத்துவத்துக்கு உடன்படவில்லை. தன்னை இங்கிருந்து அழைத்துக்கொண்டு போகும்படி கணவரிடம் கேட்டுக்கொண்டார்.

உயிர் போனாலும் கொள்கையை விடாமல் காப்பாற்றும் இந்தத் தம்பதியரை மருத்துவர் அதிசயமாகப் பார்த்தார்.

காந்திஜி, மனைவியை அழைத்துக்கொண்டு டர்பனுக்கு வந்து தமது சொந்த சிகிச்சையைத் துவங்கினார்.

கஸ்தூரிபாயின் மன உறுதியாலும் காந்திஜியின் தளராத நம்பிக்கையாலும், நோய் குணமாகியது.

13. டர்பன் ரயிலில்…

தென்னாப்ரிக்காவில், பிரிட்டோரியாவுக்கு, காந்திஜியை, வழக்கு தொடர்பாக செல்லுமாறு தாதா அப்துல்லா சேட் கூறினார். வழக்கு பற்றிய முழு விபரங்களையும் தெரிந்துகொண்ட பிறகு, காந்திஜி பிரிட்டோரியாவுக்குக் கிளம்பினார். அவருக்கு முதல் வகுப்பு டிக்கெட் வாங்கிக் கொடுத்தார் சேட்.

முதல் வகுப்பில், காந்திஜி பயணம் செய்தார். நேட்டாலின் தலைநகரமாகிய மேரிஸ்பர்க்குக்கு ரயில் வந்தபோது, இரவு ஒன்பது மணி. முதல் வகுப்புப் பெட்டியில் வெள்ளையர் பார்த்தார். அவர் உடனே சென்று இரண்டு ரயில் நிலைய அதிகாரிகளை அழைத்துக் கொண்டு வந்தார்.

அவர்களும் காந்திஜியை உற்றுப் பார்த்தார்கள். முடிவில், ”கீழே இறக்கு; சாமான்கள் ஏற்றும் வண்டியில் ஏறிக்கொள்” என்று காந்திஜியைப் பார்த்துச் சொன்னார்கள்.

”நான் எதற்காக இறங்க வேண்டும்? என்னிடம் முதல் வகுப்புப் பயணச் சீட்டு இருக்கிறது” என்று மிகவும் பணிவாகக் காந்திஜி கூறினார்.

”இருந்தால் என்ன? அதைப் பற்றி எங்களுக்குக் கவலை இல்லை. இந்த பெட்டியில் நீ ஏறக்கூடாது. சாமான்கள் பெட்டியிலே தான் பயணம் செய்ய வேண்டும்” என்று அந்த அதிகாரி கடுமையாகக் கூறினார்.

”டர்கனில் இந்தப் பெட்டியில்தான் எனக்கு இடம் அளிக்கப்பட்டது. ஆகையால் நான் இதிலேதான் என் பயணத்தைத் தொடர்வேன்” என்று உறுதியாகச் சொன்னார்.

”ஒரு கறுப்பர் இவ்வளவு உறுதியாக, பிடிவாதமாகப் பேசுவதா?” என்று எண்ணிய அந்த ரயில் நிலைய அதிகாரி கடும் கோபம் கொண்டார்.

”மரியாதையாக, நீயே இறங்குகிறாயா இல்லை போலீஸ்காரனை அழைத்து வெளியே தள்ளிச் சொல்லட்டுமா?” என்று மிரட்டினார்.

அவருடைய மிரட்டலுக்கு காந்திஜி பயப்படவில்லை. நன்றாக அமர்ந்துகொண்டு, சரி, நானாக, இந்த இடத்தைச் செய்யுங்கள்” என்றார். அவர் குரலில் கோபமும் இல்லை; மரியாதைச் குறைவான வார்த்தைகளையும் அவர் பயன்படுத்தவில்லை.

ஆயினும் அந்த அதிகாரி ஆவேசத்துடன் அங்கிருந்து சென்றார். அவர் காந்திஜியை மிரட்டியது போலவே, போலீஸ்கார் ஒருவருடன் திரும்பி வந்தார்.

போலீஸ்காரரும் ”இறங்கு” என்று காந்திஜியை மிரட்டினார்.

”முடியாது” என்றார் காந்திஜி.

உடனே போலீஸ்காரர், காந்திஜியின் கையைப் பிடித்து இழுத்து வெளியிலே தள்ளினார். அவருடைய பெட்டி படுக்கைகளையும் வெளியில் எறிந்தான். ரயிலும் கிளம்பிச் சென்றது.

தமக்குச் சரி என்று தோன்றுவதை, யார் தடுத்தாலும் செய்வது என்பது காந்திஜியின் குணம். இந்த மன உறுதிதான் சத்யாக்ரஹம் என்ற அஹிம்சை ஆயுதம் தொன்றவும் காரணமாக இருந்தது.

14. குதிரை வண்டியில்

பிரிட்டோரியாவுக்குப் போகும் வழியில் சார்லஸ் டவுனை காந்திஜி அடைந்தார். ஜோகான்ஸ்பார்க் போக வேண்டும். ஆனால் சார்லஸ் டவுனிலிருந்து குதிரை வண்டியில் பயணம் செய்ய பயணச்சீட்டு காந்திஜியிடம் இருந்தது. ஆனால் அந்த வண்டிக்குள் அமர்ந்திருந்த பல வெள்ளையர்களுக்கு நடுவே காந்திஜியை ஏற்ற வண்டித் தலைவன் விரும்பவில்லை.

தென்னாப்ரிக்காவில் உள்ள இந்தியர்களை ‘கூலி’ என்று அழைப்பது வெள்ளைக்காரர்களின் வழக்கம். ஒரு கூலியை, அதுவும் ஊருக்குப் புதியவனாக இருப்பவனை எதற்காக வண்டியில் ஏற்ற வேண்டும் என்று வண்டித் தலைவன் எண்ணினான்.

ஆனால் காந்திஜி வண்டியில் ஏற்ற வேண்டும் என்று புடிவாதமாக இருந்தார்.

ஆகையால் அவரை வண்டி ஓட்டியின் அருகிலே உட்காரச் சொன்னான் அந்தத் தலைவன். இப்படி உட்கார வைப்பது அநீதி என்றும் அவமதிப்பு என்றும் காந்திஜி எண்ணினார். ஆகையால் இந்த வண்டியை விட்டால், இனி வேறு வண்டி இல்லை என்ற நிலைமை, இன்னொரு நாள் வீணாகும். எனவே வேறு வழியின்றி அவன் காட்டிய இடத்தில் உட்கார்ந்தார்.

வண்டி சென்றது. பகல் மூன்று மணி ஆகும்போது பர்தேகோப் என்ற இடத்தை அடைந்தது. வண்டித் தலைவன் அப்போது சுருட்டு பிடிக்க நினைத்தான். காந்திஜி உட்கார்ந்திருந்த இடத்தில் உட்கார விரும்பினான். வண்டியிலிருந்து இறங்கப் பயன்படுத்தும் படியில் காந்திஜியை உட்காரச் சொன்னான்.

‘வண்டிக்கு உள்ளே போகச் சொன்னால் போகிறேன். இங்கே படியில் என்னால் உட்கார முடியாது” என்றார் காந்திஜி.

தலைவனுக்குக் கோபம் வந்தது. காந்திஜியை அறைந்தான். கீழே தள்ள முயன்றான். ஆனாலும் காந்திஜி வண்டியின் கம்பியை விடாமல் பிடித்துக்கொண்டு வந்தார். வண்டியினுள்ள உட்கார்ந்திருந்த சில வெள்ளையர்கள் காந்திஜியின் மெலிந்த உடலையும், தலைவனின் முரட்டுத்தனத்தையும் எண்ணி காந்திஜிக்காக பரிந்து பேசினார்கள்.

காந்திஜியின் விடாப்பிடியான குணம் அவருக்கு நியாயத்தை வழங்கியது.

15. கோடெஸ்ஸின் நட்பு

தென்னாப்ரிக்காவில் டிரான்ஸ்வால் என்ற ஊரில் காந்திஜி தங்கியிருந்தபோது, அவருக்கு சில வெள்ளையர்கள் நண்பர்களாக இருந்தார்கள். அவர்கள் நடத்தும் பிராத்தனைக் கூட்டங்களுக்குக் காந்திஜியும் போவார்.

டிரான்ஸ்வால் நகரச் சட்டப்படி இந்தியர்கள் எவரும் பொது நடைபாதையில் நடக்கக்கூடாது; இரவு ஒன்பது மணிக்குமேல், அனுமதிச்சீட்டு பெறாமல் செல்வதும் கூடாது.

காந்திஜி நண்பர் கோடெஸ்ஸூடன் தினந்தோறும் இரவு உலாவச் செல்வார். திரும்பி வருவதற்கு இரவு பத்து மணியாகிவிடும்.

”மிஸ்டர் காந்தி எதற்கும் நீங்கள் அனுமதிச் சீட்டு வாங்கிக் கொள்ளுங்கள். இல்லாவிடில், அரசாங்கம் உங்களைக் கைது செய்துவிடும்” என்று மிகவும் கவலையுடன் கூறினார்.

அத்துடன் நில்லாமல், அவ்வூரின் மிகச் சிறந்த பாரிஸ்டர் ஒருவரிடம் கடிதமும் வாங்கித் தந்தார். அனுமதிச் சீட்டும் பெற்றுத் தந்தார்.

நண்பரின் இந்த உதவியால் காந்திஜி டிரான்ஸ்வாலில் எப்போதும் எங்கேயும் போக முடிந்தது.

ஆனால் அனுமதிச் சீட்டு இருந்தாலும் இந்தியர்கள் இரவில் செல்வது தடை செய்யப்பட்டது. காந்திஜி அதைப் பற்றி எண்ணாமல் வழக்கம்போல் வெளியே சென்றார். அவரைக் கண்டதும் ஒரு காவல்காரன், உதைத்துத் தள்ளி ‘போ போ’ என்று விரட்டினான்.

எதிர்பாராமல் கிடைத்த உதையால் காந்திஜி கீழே விழுந்தார்.

நல்ல வேளையாக அச்சமயத்தில் காந்திஜியின் நண்பர் கோடெஸ் குதிரைமீது அங்கே வந்தார்.

நடந்த சம்பவத்தையும் கீழே விழுந்து கிடப்பவர் காந்திஜி என்பதையும் அறிந்து பரபரப்புடன் ஓடிவந்தார். ”நண்பரே, அடி ஏதும் பட்டுவிட்டதா” என்று அன்போடு விசாரித்தார்.

காவல்காரன்மீது கடுங்கோபம் கொண்டார்.

”முரட்டுத்தனமாக அவன் நடந்துகொண்டான். எச்சரிக்கை செய்யாமல் இவ்வாறு நடந்துகொண்ட இவன்மீது வழக்குத் தொடர வேண்டும். இந்த வழக்கில் நான் சாட்சி சொல்வேன். இவன் கட்டாயம் தண்டிக்கபட வேண்டும்” என்றார்.

ஆனால் காந்திஜி அதற்கு என்ன பதில் சொன்னார் தெரியுமா?

”வேண்டார். பாவம்! கறுப்பு மனிதர்களிடம் இவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பது இந்த நாட்டுச் சட்டம். அவன் அந்த சட்டத்தின்படி செய்தான். என்னை அடித்தான் என்பதற்காக இவன்மேல் கோபம் கொண்டு பழிவாங்க மாட்டேன். ”தீமையை மன்னித்துவிட்டேன். அருள்வாக்கு, இவனை நானும் மன்னித்துவிட்டேன். வழக்குத் தொடர வேண்டும்”.

மிஸ்டர் கோடெஸ் திகைத்தார்.

இச்செய்தி உலகமெங்கும் பரவியது.

கோடெஸ் அந்தக் காவல்காரனிடம் காந்திஜி கூறியத்ச் சொன்னதும் அவன் உள்ளம் இளகியது.

காந்திஜியிடம் ஓடோடிவந்து மன்னிப்புக் கேட்டான்.

16. கடவுளிடம் விட்டுவிடுங்கள்!

ஜெர்மானிய நண்பர் காலன்பார்க் என்பவர் தென்னாப்ரிக்காவில் காந்திஜியை இருந்தார். சில எதிரிகள், காந்திஜியை தாக்குவார்களோ என்ற எண்ணத்தில், காந்திஜி எங்கே சென்றாலும் அவரைத் தொடர்ந்து செல்வார்.

ஒருநாள், காந்திஜி வெளியே போகும்பொழுது அணிந்து கொள்வதற்காக கோட்டை எடுத்தார். கோட்வழக்கத்தைவிட கவனமாக இருந்தது. பையைப் பார்த்தார். அதிலே துப்பாக்கி இருந்தது.

உடனே காந்திஜி காலன்பாகை அழைத்தார்.

”என் பையிலே இந்தக் கைத்துப்பாக்கியை ஏன் வைத்தீர்கள்” என்றார்.

”ரஸ்கின்,டால்ஸ்டாமய் இவர்களுடைய புத்தகங்களில் எங்காவது காரணமில்லாமல் ரிவால்வர் வைத்திருப்பதைப் பற்றி எழுதியிருக்கிறார்களா?”

”ஆனால் சில குண்டர்கள் உங்களைத் தாக்க வருவார்களோ என்றுதான் இவ்வாறு செய்தேன்” என்று காலன்பாக் சமாதானம் தெரிவித்தார்.

”என்னை அவர்களிடமிருந்து காக்க விரும்புகிறீர்கள் அப்படித்தானே”.

”ஆமாம் அதனால்தான் உங்கள் பின்னாலேயே வருகிறேன்”.

”ஓகோ இப்போது எனக்கு ஒன்று புரிகிறது. என்னைக் காக்கவேண்டிய கடவுளின் அதிகாரத்தையும் நீங்களே எடுத்துக்கொண்டு விட்டீர்களா? நீங்கள் இருக்கும்வரை நான் என்னுடைய வாழ்வைப் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. கடவுளின் செயலை நீங்களை நீங்களே செய்து விடுவீர்கள்”.

காலன்பாக் என்ன பதில் சொல்வது என்றறியாமல் திகைத்தார்.

”என்ன யோசிக்கிறீர்கள். பகவானிடம் நான் கொண்ட பக்தியையே இது அவமதிப்பதாகும். என்னைக் காப்பாற்றுகிற கவலையை விடுங்கள். என்னைப் பற்றி அக்கறை கொள்பவர் அந்த பகவான் ஒருவரே! அவரிடம் என்னைக் காப்பாற்றும் பொறுப்பை விட்டுவிடுங்கள். இந்த கைத்துப்பாக்கி ஒருபோதும் விட்டுவிடுங்கள். இந்த கைத்துப்பாக்கி ஒருபோதும் என்னைக் காப்பாற்றாது”.

காலன்பாக் மிகவும் பணிவாக, ”மன்னியுங்கள். நான் தவறு செய்துவிட்டேன். இனி நான் உங்களைப்பற்றிக் கவலை கொள்ளமாட்டேன்”.

கைத் துப்பாக்கியை அவர் திரும்பப் பெற்றுக் கொண்டார்.

17. ரஸ்தம்ஜி காட்டிய அன்பு

1894-ம் ஆண்டு மே மாதம் 22-ம் தேதி நேட்டாலில் காந்திஜியின் தலைமையில் ‘நேட்டால் இந்தியக் காங்கிரஸ்’ உருவாயிற்று. தென்னாப்ரிக்காவில் வாழும் இந்தியர்களுக்கு அடிப்படை உரிமைகளைப் பெற்றுத் தருவது என்பது இந்தக் காங்கிரஸின் நோக்கம்.

காந்திஜி தென்னாப்ரிக்காவில் வாழ்ந்த பல இந்தியர்களை இச்சங்கத்தில் உறுப்பினராக்கினர். எல்லோரும் ஒற்றுமையாக உரிமைக்குரல் கொடுத்ததும் அரசாங்கம் அதை எதிர்த்தது. அத்துடன் நில்லாமல் காந்திஜியை பலவிதங்களிலும் துன்புறுத்தத் தொடங்கியது.

ஒருநாள் காந்திஜி ரிக் ஷாவில் ஏறி ரஸ்டம்ஜி என்ற நண்பரின் வீட்டிற்குச் சென்றார். அவரைக் கண்ட மக்கள் அந்த ரிக் ஷாவில் ஏறி ரஸ்தம்ஜி என்ற நண்பரின் வீட்டிற்குச் சென்றார். அவரைக் கண்ட மக்கள் அந்த ரிக் ஷாவை நிறுத்தினார்கள். காந்திஜயைச் சூழ்ந்துகொண்டு அடித்தார்கள். ரத்தம் ஒழுக தளராமல் நின்றார். மேலும் மேலும் அடிகள் விழுந்தன.

அந்நிலையில் போலீஸ் சூப்ரெண்ரெண் டின் மனைவி அவ்வழியாகச் சென்றாள். காந்திஜியின் நிலையைக் கண்டு கலங்கி அவரைச் சூழ்ந்துகொண்டிருந்த மக்களை விலக்கினார்.

தன்னுடைய குடையை விரித்து காந்திஜிக்கு நேராகப் பிடித்துக் கொண்டாள். மக்கள் காந்திஜயை நெருங்க முடியவில்லை. அவரை அடிபடாமல் காப்பாற்றி ரஸ்டம்ஜியின் வீட்டிற்கு அழைத்துச் சென்றார்.

போலீஸ் சூப்ரெட்டெண்டு அலெக்ஸாந்தல் மிகவும் பரிவிள்ளம் கொண்டவர். அவர் காந்திஜியின் நிலைமையைக் கண்டு, தாங்கள் என்னுடைய பொறுப்பில் போலீஸ் ஸ்டேஷனிலேயே இருங்கள்” என்றார்.

ஆனால் காந்திஜி அவ்விதம் ஒளிந்து இருக்க விரும்பவில்லை.

காந்திஜியின் மீது கோபம் கொண்ட தென்னாப்ரிக்க வெள்ளையர் அவரைத் தேடி ரஸ்டம்ஜியின் வீட்டு வாசலுக்கே வந்துவிட்டார்கள்.

கூச்சலை போட்டு, கதவைத் தட்டினார்கள். இச்செய்தியைக் கேள்வியுற்று, அலெக்ஸாந்தர் அங்கே வந்தார். கோபம் பொதுமக்களை திசைதிருப்ப அவர்களோடு பேசிக்கொண்டிருந்தார்.

ரகசியமாக ஒரு காவலாளியை வீட்டினுள்ளே அனுப்பி, காந்திஜியைப் பின்புற வழியாகத் தப்பிச் செல்லுமாறு யோசனை கூறினார்.

தன்னால் ரஸ்டம்ஜக்கும் அவரது குடும்பத்தாருக்கும் துன்பம் நேரக்கூடாது என்ற எண்ணத்தினால் காந்திஜி மாறுவேடம் பூண்டு, ரஸ்டம்ஜியின் வீட்டின் பின்புற வழியாகச் சென்றார்.

அவர் சென்று பல நிமிடங்கள் ஆனபிறகு, அலெக்சாந்தர் மக்களிடம், ”வீட்டினுள்ளே காந்திஜி இருக்கிறாரா என்று யாரேனும் இருவர் சென்று பாருங்கள்” என்றார். அவர்களும் காந்தியைத் தேடிச் சென்றார்கள். வீட்டினுற் காந்திஜி இல்லை என்று தெரிந்ததும் கலைந்து சென்றார்கள்.

18. கஸ்தூரிபாயின் கண்ட ஹாரம்

1901-ஆண்டின் காந்திஜி, தென்னாப்பிக்காவிலிருந்து கிளம்பி தாயகம் திரும்ப எண்ணினார். தென்னாப்பிரிக்காவில் இருந்த காந்திஜியின் நண்பர்கள், அவர் தாயகம் திரும்புவதற்கு எளிதில் அனுமதி கொடுக்கவில்லை.

காந்திஜி, அவர்களின் அன்பிலே உள்ளம் கசிந்தார். எனுனும் இந்தியாவுக்குக் திரும்ப வேண்டும் என்ற எண்ணத்தைக் கைவிடவில்லை.

காந்நிஜிக்கு, தென்னாப்பிரிக்காவிலிருந்த நண்பர்கள் ஒரு பிரிவு ஒபசார விழாவை ஏற்பாடு செய்தார்கள். திரளாக மக்கள் அதிலே கலந்து கொண்டார்கள். தங்களுடைய அன்பை வெளிப்படுத்த, பல பரிசுப் பொருங்களை காந்திஜிக்கும் அவருடைய குடும்பத்தாருக்கும் அளித்தார்கள். தங்க நகைகள், வெள்ளிப்பாத்திரங்கள், வைர நகைகள் என்று எல்லாம் விலையுயர்ந்த பரிசுப் பொருட்களாக இருந்தன.

இந்தப் பரிசுப் பொருட்களை மறுப்பதால், அவர்களிடைய மனம் வருத்தமடையும். க்ஷற்பதும் காந்திஜக்கு சர் என்று தோன்றவில்லை. பொதுத்தொட்னு செய்த தனக்கு, கூளி கொடுத்ததுபோள இந்தப் பரிசுப் பொருட்களை அளிக்கப்பட்டன என்றே அவர் எண்ணுனார். பொது சேவைக்குக் கூலி பெறுவது என்பது கேவலம் என்பதை உணர்த்தார். ஆயினும் இது விஷயமாக குடும்பத்தாரையும், ஆலோசிக்க வேண்டும் என்று எண்ணி, வீடு வந்து சேர்ந்தார்கள்.

அதுநாள் வரை, காந்திஜியின் வீட்டில் தங்க நகை, வெள்ளிப் பாத்திரம் என்று விலையுயர்ந்த பொருட்கள் வீட்டில் இருந்தன. அவற்றை அவர சுமை என்றே எண்ணினார். தங்களுக்கு உரியது என்ற எண்ணமும் அவருக்கு இல்லை.

காந்திஜி, தம்முடைய மகன்களை அழைத்து, இதைப் பள்ளிக் கேட்டார். இந்த விலையியர்ந்த பொருட்களை பொதுப்பணிக்கு கொடுத்துவிடுவது தான் தமது நோக்கம் என்றும் அதுபற்றிஅவர்களது எண்ணம் என்ன என்றார்.

காந்திஜியின் அடிச்சுவட்டில் வளர்ந்த பிள்ளைகள் அல்லவா. அவர்கள் ஒருமனதாக, எல்லாவற்றையும் பொதுப்பணிக்குக் கொடுத்துவிடுவதே நல்லது என்றார்கள்.

ஆனால் கஸ்தூரிபா காந்திக்கு அளிக்கப்பட்ட ஐம்பத்திரண்டு பவுன் கண்டஹாரம் பற்றி அவரைக் கேட்டார்.

கஸ்தூரிபா கண்டஹாரத்தைக் கொடுக்க சம்மதிக்கவில்லை.

”இந்த கண்டக்ஹாரம், நான் செய்த பொது சேவைக்காகக் கொடுக்கப்பட்டதா, இல்லை நீ செய்ததற்காகக் கொடுகக்ப்பட்டதா?”

காந்திஜி இவ்வாறு கேட்டதும், கஸ்தூரிபாவும் வாதிட்டார்.

”உங்களுடைய சேவைக்காக்க கொடுக்கபட்டதுதான். ஆனால் நீங்கள் செய்த சேவையில் எனக்கு பங்கில்லையா? நீங்கள் சொன்னதையெல்லாம் நான் செய்யவில்லையா? வீட்டுக்கு அழ்த்து வந்தவர்களுக்கெல்லாம் அடிமை போல் நான் உழைக்கவில்லையா?” என்றார்.

காந்திஜி, கஸ்தூரிகாவிடம், பொது சேவையில் ஈடுபட்டவர்கள், பண விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய அவசியத்தை அவளுக்கு எடுத்துச் சொன்னார்.

கஸ்தூரிபாவும் கண்டஹாரத்தைக் கொடுத்தார்.

தென்னாப்ரிக்க இந்திய மக்களின் பொது நலனுக்காக, காந்திஜி பரிசுப் பொருட்களைக் கொடுத்து உதவினார்.

19. எந்த வேலையானால் என்ன?

காந்திஜி தாயகம் வந்து சேர்ந்த 1901-ம் ஆண்டில், இந்திய காங்கிரஸ் மகாசபை, கல்கத்தாவில் நடைபெற்றது. அதற்கு காந்திஜியும் சென்றிருந்தார்.

மகாசபை கூடுவதற்கு இரு தினங்களுக்கு முன்பாகவே, நாடு முழுவதிலும் இருந்து காங்கிரஸ் தொண்டர்களும் பிரதிநிதிகளும் கல்கத்தாவுக்கு வந்து சேர்ந்தார்கள். மகாநாடு நடக்கும் இடத்தில் குப்பையும் கூளமுமாக இருப்பதை காந்திஜி பார்த்தார்.

”இந்தக் குப்பைகளைப் பெருக்கி அள்ள வேண்டும்” என்று அங்கிருந்த தொண்டர் ஒருவரிடம் சொன்னார்.

அந்தத் தொண்டர் காந்திஜியை ஏற இறங்கப் பார்த்து விட்டு, ”இந்த வேலையைச் செய்ய நாம் என்ன தோட்டிகளா” என்றார்.

காந்திஜி, அந்தத் தொண்டரின் எண்ணத்தை மாற்ற விரும்பினார். நான் இருக்கும் இடத்தை, நாமே சுத்தம் செய்வதில் என்ன தவறு? ஒரு துடைப்பத்தை எடுத்து வந்து காந்திஜி, அந்தக் குப்பையைப் பெருக்கினார். இதைப் பார்த்த அந்தத் தொண்டரும், தாமும் அவ்வாறே செய்யத் தொடங்கினார்.

காந்திஜி, இந்தத் துப்புரவுப் பணியுடன், காங்கிரஸ் அலுவலகப் பணி ஏதேனும் இருந்தாலும் செய்யலாமே என்று நினைத்தார். சிறிது நேரத்தைக்கூட வீணாக்க காந்திஜி விரும்பியதில்லை.

காங்கிரஸ் மகாசபை செயலாளரைப் போய்ப் பார்த்தார். கோஷால் என்பவர் அப்போது செயலாளரைப் போய்ப் பார்த்தார். கோஷால் என்பவர் அப்போது செயலாளராக இருந்தார்.

அவர் காந்திஜியைப் பார்த்து, ”இங்கே, உங்களுக்கு என்ன வேலை கொடுக்க முடியும், குமாஸ்தா வேலை செய்வீர்களா?” என்றார்.

”அதற்கென்ன, செய்வேன்” என்று காந்திஜி பணிவாக பதில் கூறினார். கோஷாலுக்கு காந்திஜியின் பதில் வியப்பைத் தந்தது.

”இவர் கூறியதைக் கேட்டீர்களா? சமூகத் தொண்டு செய்ய வருபவர்கள் எந்த வேலை செய்யவும் தயாராக இருக்க வேண்டும்” என்று அங்கே இருந்த தொண்டர்களிடம் கூறினார்.

பிறகு காந்திஜியிடம் அவர் செய்ய வேண்டிய வேலையைக் குறிப்பிட்டார். ”அங்கே உள்ள கடிதங்களைப் பிரித்து, படித்து, முக்கிநமான விஷயம் என்றால், அக்கடிதங்களி மட்டுமே என்னிடம் கொடுங்கள்” என்றார்.

காந்திஜியும் அவருக்கு அளிக்கப்பட்ட வேலையை கவனத்துடன் செய்தார்.

அவர் அவ்வாறு குமாஸ்தா வேலை செய்துகொண்டிருப்பதைப் பார்த்த சில காங்கிரஸ் தலைவர்கள், கோஷாலைக் கடிந்துகொண்டார்கள்.

காந்திஜியைப் பற்றி அறிந்துகொண்ட கோஷால், ”அட்டா உங்களுக்கு இந்த வேலைய்க் கொடுத்தேனே!” என்று வருந்தினார்.

”இதற்கு ஏன் வருத்துகிறீர்கள். இதுவும் ஒரு காங்கிரஸ் தொண்டுதானே! எந்த வேலையானால் என்ன? இதில் உயர்வு தாழ்வு பார்ப்பது சரியல்ல”—-என்றார்.

ஒரு தொண்டரைப்போல உழைக்கவும் காந்திஜி அஞ்சியதில்லை.

20. கைதேர்ந்த தையல்காரர்

குளிர் காலங்களில், காந்திஜி, கம்பளித் துணியை தலையில் சுற்றிக்கொள்வார். நாளடைவில் அது நைந்து கிழிந்த கம்பளித் துணியை, இனி அவர் உபயோகிக்க முடியாது என்று எண்ணி, புதிய கம்பளித் துணியை எடுத்து வைத்திருந்தார்.

மறுநாள் இரவு, காந்திஜியிடம் அந்தப் புதிய கம்பளித் துணியை, தலையில் சுற்றிக்கொள்ளுமாறு அளித்தார்கள்.

அவர், ”பழைய துணி கொடுக்கிறீர்கள்” என்றார் ஆசரம உதவியாளர்.

”இது எனக்கு வேண்டாம். பழைய துணிதான் வேண்டும் அதைக் கொண்டு வாருங்கள்” என்றார். பழைய துணியைக் கொண்டுவந்து தந்தார்கள்.

”நீயோ, நானோ ஏதாவது வேலை செய்து சம்பாதிக்கிறோமா? இல்லையே. உனக்கு உன் தந்தை செலவு செய்கிறார். என்க்காக யார் செலவு செய்வார்கள்? அப்படி இருக்கம்பொழுது, பொருள்களை வீணாக்கலாமா? இன்னும் சிறிதுகாலம் அதை தைத்து பயன்படுத்தலாம் அல்லவா? இதைக் கொண்டுபோய் பத்திரமாக வை” என்று புதிய கம்பளித் துணியைத் திருப்பிக் கொடுத்துவிட்டார்.

”பாபுஜி நீங்கள் படுக்கப் போகுமுன்பு, நானே கிழிசலைத் தைத்துத் தருகிறேன்” என்று ஆசரமத்தில் இருந்தவர் கூறினார்.

ஆனால் அவர் சொன்னபடி, அவரால் செய்ய முடியவில்லை. வேறு வேலைகளில் மூழ்கி, இதைப்பற்றி மறந்து போய்விட்டார்.

இரவு நள்ளிரவு ஆகும்போது, அவருக்கு அதைப் பற்றிய நினைவு வந்தார். ஆனால் அதற்கு காந்திஜியே, கிழிசலைத் தைத்துவிட்டு, கம்பளியை அணிந்துகொண்டு விட்டார் என்பதை அறிந்து வெட்கமடைந்தார்.

காந்திஜி, விரும்பியிருந்தால் எத்தனையோ உயர் ரக கம்பளிகளும் சால்வைகளும் வந்து குவிந்திருக்கும். ஆனால் அவர் அவ்வாறு செய்யவில்லை.

மறுநாள், காந்திஜி, ஆச்ரமவாசியிடம், ”என்னுடைய தையல் எப்படி இருக்கிறது?” என்று கம்பளியைக் காட்டிக் கேட்டார்.

”கைதேர்ந்த தையல்கார்ரின் திறமை இதில் தெரிகிறது” என்றார் அந்த ஆச்ரமவாதி. பிளவுபட்டு நின்ற பாரதத்தின் கிழிசல்களையெல்லாம் தைத்து, ஒன்றுபட்ட பாரதமாக ஆக்கிய கைதேர்ந்த தையல்காரர் காந்திஜி.

21. கோச்வண்டியும் டிராம் வண்டியும்

அக்காலத்தில் இந்தியாவின் தலைநகரமாக கல்கத்த இருந்தது. அங்கு இந்திய சட்டசபை ஒன்றும் இருந்தது. அதில் திரு. கோபாலகிருஷ்ண கோகலேயும் ஒரு அங்கத்தினர் சட்டசபை நடக்கும் காலங்களில் கோகலே கல்கத்தாவில் இருப்பார்.

கல்கத்தா, காங்கிரஸ் மகாசபை நடந்து மடிந்த பிறகும் காந்திஜி கல்கத்தாவில் தங்கியிருந்தார். கோகலே, காந்திஜியைத் தம்முடன் வந்து தங்குமாறு கூறினார்.

அவர் சொன்னபிறகு, ஒரிரு நாட்களிக்குப் பிறகே, காந்திஜி, கோகலேயுடன் தங்கச் சென்றார் கோகலேயின் அருகில் இருந்து, அவருடைய வாழ்க்கை முறையை கவனிக்கும் வாய்ப்பு காந்திஜிக்குக் கிடைத்தது. யாருடன் பேசினாலும் அதில் பொதுநல நோக்கமே இருந்ததை காந்திஜி கவனித்து வியந்தார்.

எளிய வாழ்வும் உயர்ந்த லட்சியங்களும் கொண்டிருந்தவர் கோகலே. அவர் சட்டசபைக்குப், மற்ற இடங்களுக்கும் செல்வதற்காக ஒரு கோச்வண்டி வைத்திருந்தார்.

காந்திஜி ஒருநாள் இதைப்பற்றி நேரிடையாக கோகலேயிடம் கேட்டுவிட்டார்.

”நீங்கள் எதள்காக, கோச்வண்டி வைத்துக் கொண்டிருக்கிறீர்கள். எளிமையான வாழ்வு வாழ விரும்பும் பயணம் செய்யக் கூடாது? அது உங்களுடைய கெளரவத்திற்குக் குறைவு என்று எண்ணுகிறீர்களா?”

”காந்தி, நீங்கள் உங்கள் விருப்பம்போல் டிராம்வண்டியில் செல்கிறீர்கள். இதைப் பார்த்து எனக்கும் பொறாமையாகத்தான் இருக்கிறது. என்னால் அவ்விதம் போக முடியாது. என்னை இந்த நகரத்து ஜனங்கள் நன்றாக அறிந்திருக்கிறார்கள். நான் டிராம் வண்டியில் போனாலும், போகும் பணிக்கு அதுவே இடையூறாகிவிடும். பொதுமக்களால், நீங்களும் ஒருநாள் அறியப்படும் மனிதராவீர்கள். அப்போது உங்களாலும் டிராம் வண்டியில் பயணம் செய்வது என்பது இயலாத காரியமாகிவிடும்”.

இந்த பதில் காந்திஜியின் சந்தேகத்தைப் போக்கியது.

கோகலேயுடன், ஒரு சில மாதங்கள் தங்கியபின்பு, காந்திஜி ரயிலில் மூன்றாம் வகுப்பிப் பெட்டியில் சுற்றுப்பயணம் செய்யக் கிளம்பினார். அவர் ஊருக்குக் கிளம்பும்போது, கோகலே தவறாமல், ரயில் நிலையத்துக்கு வந்து, காந்திஜியை வழி அனுப்பி வைத்தார்.

கோகலேயின் பண்பாட்டை, காந்திஜி வியந்தார்.

22. காந்திஜி செய்த ஜலசிக்ச்சை

காந்திஜி, பம்பாய் நகரத்திற்கு வந்து வக்கீல் தொழிலை மேற்கொண்டார். கஸ்தூரிபாய், குழந்தைகள் வன்று, காந்திஜி குடும்பத்தோடு வாழ்த்திருத்தார். அச்சமயத்தில், காந்திஜியின் இரண்டாவது மகன் மணிலாலுக்கு ஜூரம் வந்தது. ஜூரம் அதிகரித்துக் கொண்டே போனாலும், காந்திஜி மருத்துவரிடம் காட்டினார்.

மணிலாலுக்கு ட்பாய்டும் அத்துடன் நிமோனியவும் கண்டிருப்பதாகவும், இதற்கு மருந்து கொடுப்பதோடு, முட்டையும், சிக்கன் சூப்பும் கொடுக்க வேண்டும் என்றார் மருந்துவர்.

காந்திஜி சைவ உணவு மட்டுமே சாப்பிட வேண்டும் என்பதில் உறுதி கொண்டவராயிற்றே! மருத்துவர் கூறியதைக் கேட்டு, அதன்படி நடக்க அவர் முன்வரவில்லை.

”இதைத் தவிர வேறு ஏதாவது யோசனை சொல்லுங்களேன்” என்று காந்திஜி மருத்துவரைக் கேட்டார்.

”குழந்தையின் உயிர் முக்கியம். அதைக் காப்பாற்ற வேண்டுமே தவிர, வீண் பிடிவாதம் பிடிக்க வேண்டாம். முட்டையும் சூப்பும் கொடுப்பது தவிர வேறு வழியில்லை” என்றார்.

காந்திஜி இதற்கு ஒப்பவில்லை. ”சரியோ, தவறோ, உயிர் போவதாக இருந்தாலும், இதற்கு சம்மதிக்க மாட்டேன்” என்றார் காந்திஜி.

பிறகு தனக்குத் தெரித் ஜலசிகிச்சை முறையை கையாளப் போவதாக காந்திஜி கூறிவிட்டு, அடிக்கடி மருத்துவரை வந்து கவனிக்குமாறு வேண்டுக் கொண்டார்.

பத்து வயதான மணிலாவிடம் நடந்ததை காந்திஜி கூறினார்.

”எனக்கு, அசைவம் வேண்தாம். நீங்கள் செய்யும் மருத்துவமே போதும்” என்று அவன் கூறியதும், காந்திஜி தமது சிகிச்சையைத் தொடங்கினார்.

தொட்டியில் ஜலம் நிரப்பி அதில் மணிலாவை உட்கார வைப்பதும் எடுப்பதுமாக இருந்தார். மூன்று நாட்கள் இதைத் தொடர்ந்து செய்தும் ஜூரம் குறையவில்லை.

பிறகு ஈரத்துணியை உடம்பிலும் தலையிலும் சுற்றி, கனத்த கம்பளியால் உடம்பைப் போர்த்திவிட்டு, காந்திஜி உலாவச் சென்றுவிட்டார்.

மணிலால், ”அப்பா” என்று கூவியதைக் கேட்டு பரபரப்புடன் வந்தார்.

மணிலால் வியர்வை வெள்ளத்தில் மூழ்கியிருந்தான். ஜூரம் நன்றாகக் குறைந்திருந்தது.

பாலும் பழரசமும் அருந்தினனு. பல நாட்கள் படுக்கையில் கிடந்தாலும், நல்ல தேக ஆரோக்கியம் பெற்றான்.

மணிலால் பிழைத்தி எழுந்தது, சிகிசைச்சையினால் மட்டுமல்ல ஆண்டவனுடைய கருணையினால் தான் என்று காந்திஜி மனப்பூர்வமாக நம்பினார்.

23. சதாக்கிரகம்-சத்யாக்ரகம்

தென்னாப்ரிக்காவில் டிரான்ஸ்வால் என்னுமிடத்தில் இந்தியர்கள் அதிக அளவில் வாழ்ந்து வந்தார்கள். அவர்களுக்கு அதிக உரிமை வழங்கினால், அங்கே வெள்ளையரின் கை வலுவிழந்து போய்விடக் கூடும் என்று அரசாங்கம் எண்ணியது. அதனால் இந்தயர்கள் புதிதாக அந்த மாகாணத்திற்குள் உரிமைகளைப் பறிக்கவும் ஒரு சட்டம் கொண்டு வரப்பட்டது

இச்சட்டத்தை காந்திஜி ‘கறுப்புச் சட்டம்’ என்று கூறினார். இச்சட்டம் நடைமுறைக்கு வந்தால் என்னென்ன துன்பங்கள் ஏற்படும் என்பதை இந்தியர்களுக்கு எடுத்துரைத்தார்.

இச்சட்டத்தை எதிர்க்க வேண்டும் என்பதில் டிரான்ஸ்வாலில் வாழ்ந்த இந்தியர்கள் ஒரு முனைப்பான எண்ணம் கொண்டிருந்தார்கள்.

அந்த மாகாணத்தில் வாழ்ந்த இந்தியர்கள் அனைவரும் ஓரிடத்தில் கூட வேண்டும் என்று முடிவு செய்தார்கள்.

1906-ம் வருடம் செம்டம்பர் 11-ம் நாளன்று ‘எம்பயர் என்ற நாடக மன்றத்தில் சுமார் மூவாயிரம் இந்தியர்கள் கூடினார்கள். ஜனாப் அப்துல்கனி என்பவர் கூட்டத்துக்குத் தலைமை வகித்தார்.

”கறுப்புச் சட்டம் நடைமுறைப்படுத்தினால் அதற்கு ஆதரவு தருவதில்லை என்றும் சட்டத்தை மீறுவதால் ஏற்படும் கஷ்டங்களை பொறுமையுடன் ஏற்கவும் வேண்டும்” என்று அவர் எல்லோரையும் கேட்டுக் கொண்டார்.

காந்திஜி இதற்குப் பிறகு பேசினார்.

”இப்போது நாம் இங்கே நிறைவேற்றிய தீர்மானம் மிகவும் முக்கியமான ஒன்று. நம்முடைய எதிர்கால வாழ்வு எப்படியிருக்க வேண்டும் என்பதை தீர்மானிக்க வேண்டும். நாம் எல்லோரும் கடவுள் சாட்சியாக இந்தச் சட்டத்துக்கு உட்படுவதில்லை; அதனால் ஏற்படும் துன்பங்களையும் பொறுத்துக் கொள்வேன்” என்று எல்லோரும் சபதம் செய்ய வேண்டும். கடவுள் சாட்சியாகச் செய்யப்படுகிற இந்த சபதத்தை, உறுதிமொழியை உயிர் உள்ளவரை காக்க வேண்டும்” என்றார்.

அங்கே கூடியிருந்த மூவாயிரம் இந்தியர்களும் காந்திஜியின் பேச்சைக் கேட்ட பிறகு எழுந்து நின்றார்கள்.

ஒரே குரலில், ”கறுப்புச் சட்டத்துக்கு நாங்கள் உடன் படமாட்டோம். கடவுள் சாட்சியாக, இது எங்கள் உறுதிமொழி”–என்று கூறினார்கள்.

உலக சரித்திரத்தில் முகவும் முக்கியமான நாளாக அந்த நாள் அமைந்தது. இந்த நிகழ்ச்சியை உலகம் ‘பாஸிவ்ரெஸிஸ்டென்ஸ்’ சாத்வீக சட்டமறுப்பு” என்று அழைத்தது.

உலகம் இதுவரை காணாத புதிய எழுச்சியாக, தென்னாப்ரிக்கா வாழ் இந்தியர்கள் தங்கள் எதிர்ப்பை அகிம்ஸை முறையில் தெரிவித்தார்கள்.

இந்த இயக்கத்திற்கு இந்திய மொழியில் ஒரு பெயரைத் தரவேண்டும் என்று காந்திஜி விரும்பினார்.

‘சதாக்ரகம்’ என்று மகன்லால் காந்தி என்பவர் புதிய பெயர் கூறினார். அதில் சிறிய திருத்தம் செய்து அதையே ”சத்யாக்ரகம்” என்று காந்திஜி மாற்றினார்.

புதிய போர்முறை அகிம்சா முறையிலான போர்முறை–சத்யாக்ரகம் உதயமாயிற்று.

24. மீர்ஆலத்துக்கு மன்னிப்பு

புதிய போர் முறை தென்னாப்ரிக்கா வாழ் இந்தியர்களுக்கு உற்சாகம் ஊட்டியது. கறுப்புச் சட்டத்தின் நிபந்தனைகளுக்கு அவர்கள் உட்பட மறுத்தார்கள். ஆயிரக்காணக்கான இந்தியர்கள் இவ்வாறு சட்டத்தைப் புறக்கணித்தடைக் கண்ட அரசாங்கம், மக்கள் தலைவர்கள் சிலரை கைது செய்தது.

காந்திஜியும் கைது செய்யப்பட்டு இரண்டு வாரகாலம் சிறையில் இருந்தார். அரசாங்கம் சமாதானப் பேச்சு நடத்த விரும்பியது.

காந்திஜி உட்பட பல தலைவர்களை விடுவித்தார்கள். கறுப்புச் சட்டத்தின் நிபந்தனைப்படி அரசாங்கத்தின் கட்டாயம் இல்லாமல், மக்கள் தாங்களே தங்கள் பெயர்களைப் பதிவு செய்துகொள்ள வேண்டும். இவ்வாறு செய்தால், நாளடைவில் சட்டத்தை அரசு எடுத்துவிடும்” என்று அரசாங்கம் தலைவர்களிடம் உறுதி கூறியது.

இதனை காந்திஜி ஆதரித்தார். மக்களைக் கட்டாயப்படுத்தாமல் இருக்கும்படியான சட்டம், குற்றமல்ல என்பதே அவரது வாதம்.

ஆனால், ஒரு சிலர் இதற்கு உடன்பட மறுத்தார்கள். நிபந்தனைகள் மாறாதபோது, எப்படி அதனை ஏற்பது என்பது அவர்கள் தொடுக்கும் வாதம்.

இதில் முன்னணியில் இருந்தவன் ஒரு பட்டாணியன். அவன் பெயர் மீர் ஆலம். அவன் காந்திஜியிடம், ”இப்போதுள்ள ஒப்பந்தப்படி, பத்து விரல் அடையாளத்தைப் பதிவு செய்ய வேண்டுமா?” என்று கோபமாகக் கேட்டான்.

”கொடுக்க வேண்டும் என்படே என் எண்ணம். இதை தன்மானத்துக்கு அழுக்கு என்று எண்ணினால் கொடுக்க வேண்டாம்.

”நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்?”

”கட்டாயம் பதிவு செய்யப் போகிறேன்”.

”முதலில் யார், இப்படி பதிவு செய்யப்போகிறார்களோ அவர்களை அடித்துக் கொன்று போடப் போகிறேன். அல்லாமீது ஆணை”–என்று மீர்ஆலம் உறுதியாகச் சொல்லிச் சென்றான்.

ஆனால் காந்திஜி கலங்கொஇல்லை. மறுநாள் காந்திஜி பின்தொடர, பலர் பதிவு செய்யும் அலுவல்த்திற்குச் சென்றார்கள். மீர்ஆலம் அலுவலக வாசலில் நின்றிருந்தான். காந்திஜியைக் கண்டதும் ”எங்கேபோகுறீர்கள்” என்றான்.

”என் பெயரைப் பதிவு செய்யப் போகிறேன்”.

இதைக் கேட்டதும் மீர்ஆலம், தான் சொன்னது போலவே, பதிவு செய்ய வந்த முதல் நபரான காந்திஜியைத் தடியினால் இடித்தான்.

காந்திஜி ‘ஹே ராம்’ என்று கூறிவிட்டு மயங்கிக் கீழே விழுந்தார்.

அரசாங்கம் மீர்ஆலத்தைக் கைது செய்தது. மயக்கம் தெளிந்த காந்திஜி முதலில் மீர்ஆலம் பற்றிக் கேட்டார். பின்பு அவனை விடுதலை செய்யுமாறு வேண்டிக் கொண்டார்.

25. பாமர வைத்தியன்

தென்னாப்ரிக்காவில் இருந்தபோது, கஸ்தூரிபாய்க்கு ஆபரேஷன் செய்யப்பட்டது. இரத்தப் போக்கு குறைந்தது. ஆனால் சில நாட்களுக்குப் பீறகு மறுபடி இரத்தப்போக்கு அதிகரித்தது. கஸ்தூரிபாயின் உடல் நலமும் பாதிப்படைத்து.

காந்திஜி, கஸ்தூரிபாயை, உப்பையும் மசாலாக்களையும் தவிர்த்து சாப்பிட சொன்னார். மருந்து சாப்பிட்டும் குணமாகாத நோய், பத்தியத்தால் குணமாகும் என்று நம்பினார்.

கஸ்தூரிபாய்க்கு இந்த யோசனை சிறிதும் பிடிக்கவில்லை.

”உப்பையிம் மசாலா சாமான்களையும் விட்டு விடுங்கள் என்று உங்களிடம் சொன்னால் உங்களால் விட முடியுமா?” என்று கஸ்தூரிபாய் கோபத்துடன் காந்திஜியைக் கேட்டார்.

இதைக் கேட்டு காந்திஜி வருந்தவில்லை. மன மகிழ்ச்சியே அடைந்தார். கஸ்தூரிபாயிடம் தனக்குள்ள அன்பை வெளிப்படுத்த இதுவே சரியான சந்தர்ப்பம் என்று நினைத்தார்.

”நீ சொல்வது தவறு. எனக்கு உடம்பு சரியில்லாமல் போய், மருத்துவர், உப்பு, மசாலா, இன்னும் வேறு எதுவானாலும் விட்டுவிட வேண்டும் என்று சொன்னால், மறுவார்த்தை பேசாமல் விட்டுவிடுவேன் கஸ்தூரிபா. உனக்கு சந்தேகமே வேண்டாம். இப்போது மருத்துவர் யாரும், என்னை எதையும் விடச் சொல்லவில்லை. ஆனாலும் உனக்காக இனி ஒரு வருட காலம் உப்பும் மசாலாவும் சேர்க்க மாட்டேன். இது உறுதி” என்றார்.

காந்திஜி இவ்வாறு கூறியதும், கஸ்தூரிபாய் திடுக்கிட்டார்.

”என்னை மன்னித்துவிடுங்கள். உங்கள் குணம் தெரிந்தும், நான் இப்படிப் பேசிவிட்டேனே! தயவுசெய்து, உங்கள் உறுதியைக் கைவிட்டு விடுங்கள்” என்று கெஞ்சினார்.

சத்தியவாக்கை மீறும் குணம் காந்திஜிக்கு இருந்ததே இல்லை.

”இதற்காக நீ கண்ணீர் விட வேண்டிய அவசியம் இல்லை. இந்த உப்பும் மசாலாவும் உடம்பிற்கு தேவையானதல்ல; இவற்றைத் தவிர்ப்பது எனக்கும் நல்லதுதான். ஆகையால் நான் எடுத்துக்கொண்ட உறுதியிலிருந்து தவறவே மாட்டேன்” என்றார் காந்திஜி.

கணவர் உப்பு, மசாலா இல்லாமல் சாப்பிடத் துவங்கியதும், கஸ்தூரிபாயிம் அவ்விதமே சாப்பிடலானார். உணவுக் கட்டுப்பாட்டினால் கஸ்தூரிபாயின் உடல் நலம் பெற்றது.

26. கஸ்தூரிபாயின் மனத்துணிவு

தென்னாப்ரிக்காவில் காந்திஜி சத்யாகிரக இயக்கத்தைத் தொடங்கியதும் அந்த இயக்கத்தில் பங்கேற்க சில பெண்களும் முன்வந்தார்கள். காந்திஜி அவர்களைத் தமது வீட்டிற்கு அழைத்து அறப்போரைப் பற்றிக் கூறலானார்.

அவற்றையெல்லாம் வீட்டிற்குள் இருந்த கஸ்தூரிபாய் ஊன்றி கவனித்துக் கொண்டிருந்தார்.

அப்பெண்கள் எல்லோரும் போனபிறகு, கஸ்தூரிபாய், காந்திஜியிடம் வந்தார்.

”சட்டமறுப்பு செய்ய எனக்கு தகுதி இல்லையா? இந்த விஷயங்களை நீங்கள் என்னிடம் ஏன் கூறவில்லை” என்றார்.

கஸ்தூரிபாயின் படபடப்பான பேச்சைக் கேட்டு, காந்திஜி அவளை அமைதிப்படுத்தினார்.

”சொல்லக்கூடாது என்பதில்லை. ஆனால் உன்னை துன்புறுத்த எனக்கு விருப்பம் இல்லை. நீயும் சத்யாக்ரகத்திலே சேர்ந்துகொண்டு போராடி சிறைக்குச் சென்றால் எனக்கு மகிழ்ச்சிதான். ஆனாலும்………நான் உன்னை இதுபற்றிக் கேட்க தயக்கமாகவே இருக்கிறது?”

”என்ன தயக்கம், சொல்லுங்கள்”.

”அந்தப் பெண்களைக் கேட்டது போல உன்னையும், நீ சிறை செல்லத் தயாராக இருக்கிறாயா என்று கேட்டிருந்தால், நீ என் சொல்லை மறுத்துப் பேசியிருக்கமாட்டாய். போராடி சிறை சென்ற பிறகு, அங்குள்ள கஷ்டங்களைக் கண்டு உனக்கு அச்சம் ஏற்பட்டால், அதற்குப் பொறுப்பாளி நான்தான் என்று உலகம் பழிக்கும். நீயாகக் கேட்டு வந்தாயே, இதுவே நான் வேண்டியது. இனி எனக்கு, உன் விஷயத்தில் கவலை எதுவும் இல்லை” என்று காந்திஜி, அவளுக்கு விளக்கம் கூறினார்.

”ஜெயிலில் கஷ்டங்கள் இருந்தால் அதைத் தாங்க முடியாமல் நான் மன்னிப்புக் கேட்டால், அதன்பிறகு நீங்கள் என் முகத்தில் விழிக்கவே வேண்டாம். நீங்கள், ஜெயில் கஷ்டங்களைத் தாங்கவில்லையா? அதுபோல என் பிள்ளைகளும் தாங்குவார்கள். நானும் தாங்கிக் கொள்வேன்”.

அழுத்தமாகக் கூறிய அன்னை கஸ்தூரிபாய், சத்யாக்ரக போராட்டங்களில் கலந்துகொண்டார். ஆறு ஆண்டு காலம் நடந்த போராட்டாங்களில் கஸ்தூரிபாய் பலமுறை சிறைவாசத்தை அனுபவித்தார்.

அண்ணளுக்கேற்ற அன்னை என்று அகில உலகமும் போற்ற வாழ்ந்தார்.

27. அதிசய விருந்து

தென்னாப்ரிக்காவிலிருந்து தாயகம் வந்த பின்பு, காந்திஜி சென்னைக்கு ஒருமுறை விஜயம் செய்தார். தென்னாப்ரிக்காவில் காந்திஜியின் சத்யாக்ரக போராட்டத்தில் பெரும்பங்கு வகித்தவர்கள் தென்னாப்ரிக்கா வாழ் தமிழர்கள். எனவே காந்திஜி, தமிழர்களின் மீது தனி அன்பு வைத்திருந்தார்.

சென்னையில் பிரபலமான எஸ். ஸ்ரீனிவாச அய்யங்கார், காந்திஜியைப் பாராட்டி ஒரு விருந்தளித்தார். அந்த விருந்துக்கு, அவர் பல முக்கியமானவர்களையும் அழைத்திருந்தார்.

காந்திஜியும் கஸ்தூரிபாயும் வந்தார்கள். குஜராத்தி பாணியில் வெள்ளை குர்த்தாவும் வேஷ்டியும் தலைப்பாகையிம் அணிந்து ஒரு படித்த வடநாட்டு குடியானவனைப் போல தோற்றமளித்தார்.

தூய்மையன வெள்ளைப் பாவாடை, தாவணி அணிந்து, மெலிந்த உடம்பினரான கஸ்தூரிபாய் உடன் வந்தார். அன்பு கனிந்த பார்வை. உலக அனுபவத்தை உள்ளடக்கிய கனிவான களையான முகம். கைகளில் ஒரு ஜதை இரும்புக் காப்புகள் மட்டுமே அணிந்திருந்தார்.

விருந்து நடக்கும் இடத்திற்கு அனைவரும் சென்றார்கள். மேஜைகளின்மீது உண்ணவேண்டிய பொருட்கள் கொண்டுவந்து வைக்கப்பட்டன. விருந்துக்கு வந்திருந்தவர்கள், ஜிலேபி, பேடா, ஐஸ்கிரீம், பூந்தி போன்ற இனிப்பு வகைகளை எதிர்பார்த்து காந்திருந்தார்கள். ஆனால் அன்றைய விருந்தில் இருந்தவை என்ன தெரியுமா?

தேங்காயின் இளம் வழுக்கல் ஒரு அடுக்கில் வைக்கப்பட்டிருந்தது.

வேக வைத்த வேர்க்கடலையை மிதமான உப்பு போட்டு ஒரு பாத்திரத்தில் வைத்திருந்தார்கள்.

இன்னொரு தட்டில் உரித்த ஆரஞ்சுச் சுளைகள்; மற்றொன்றில் நறுக்கிய ஆப்பிள் துண்டங்கள். திராட்சைப் பழம்; அராபிய நாட்டு பேரீச்சம் பழத்தில் கொட்டை நீக்கப்பட்டு குவிக்கப்பட்டிருந்தது. இவை தவிர குளிர்ந்த நீர் மோர்; பருக இளநீர், இனிப்பான பானகம்.

காந்திஜியின் இயற்கை உணவே அன்றைக்கு எல்லோருக்கும் விருந்தில் அளிக்கப்பட்டது. 1915-ம் ஆண்டு ஏப்ரல் 20-ம் தேதி நடந்த இந்த அதிசய விருந்தில் கலந்து கொண்டவர்களுக்கு புதுமையான அனுபவமாக இருந்தது.

28. தீபாவளிப் பார்சல்

வார்தா காந்தி ஆச்ரமத்தில், காந்திஜியுடன் சிறிது காலம் தங்க வேண்டும் என்ற விருப்பத்துடன், அம்புஜம்மாள் வந்தாள். சிறிய வயது, சுகபோகமாக வாழ்ந்த பெண். ஆசிரம வாழ்வு அவளுக்கு ஒத்து வருமோ என்று அவளுடைய தந்தை கவலைப்பட்டார். ஆனால் காந்திஜியோ, ”கவலைப்பட வேண்டாம். அம்புஜத்தை என் பெண்போல கவனித்துக் கொள்வேன்” என்றார்.

ஆச்ரம நியமங்களைக் கடைப்பிடிப்பது, அம்புஜத்திற்கு முதலில் சற்று கடினமாக இருந்தாலும், பிறகு பழகிவிட்டது. முரட்டு ரொட்டி, உப்பு சிறிதளவே சேர்த்த வேகவைத்தா காய்கறிகள், பருப்பு, கீரை, கஞ்சி, பழங்கள் என்று ஆசரம உணவு முறை இருந்தது.

அறுசுவை உணவு உண்ட நாக்குக்கு இவை சப்பென்று இருந்தாலும் உடலுக்கு நன்மையே செய்தன என்பதால் அம்புஜம்மாள் அவற்றை விரும்பி உண்டாள்.

அவள் வார்தா ஆச்ரமத்தில் இருக்கும் சமயத்தில் தீபாவளி வந்தது. சென்னையில் இருந்து அம்புஜம்மாளுக்காக, அவளுடைய தாய், பக்ஷணங்கள் செய்து ஆச்ரமத்திற்கு அனுப்பியிருந்தார்.

அம்புஜம்மாறை காந்திஜி அழைத்தார். அவள், அவர் முன்னால் போய் நின்றாள். காந்திஜியின் அருகே ஒரு பெரிய பார்சல் இருந்தது.

”அம்புஜம் இதை உன் அம்மா அனுப்பியிருக்கிறாள். என்னதென்று பிரித்துப் பார்” என்றார் காந்திஜி.

அம்புஜம் மிகவும் ஆவலுடன் பார்சலை மளமளவென்று பிரித்துப் பார்த்தாள். பிரிக்கும்பொழுதே இனிய வாசனை மூக்கைத் துளைத்தது. பார்சலின் உள்ளே இனிப்புகளும் முறுக்கு சீடை வகைகளும் இருந்தன.

”அம்புஜம் இதையெல்லாம் பார்த்தும் உனக்கு உடனே எடுத்துத் தின்ன வேண்டும் என்று ஆசை ஏற்படுகிறது இல்லையா? உன் அம்மா ஆசையுடன் செய்து உனக்கு அனுப்பியதாயிற்றே” என்றார்.

அம்புஜம்மாள் காந்திஜியின் பேச்சில் உட்பொருளை கவனித்தாள். பிறகு, ”நான் இவற்றை தின்னவிரும்பவில்லை” என்றாள்.

”உண்மையாகவா சொல்கிறாய் அம்புஜம்”.

உண்மைதான்”.

”அப்படியானால் இவற்றை எடுத்துக்கொண்டு போய் மகிலாச்ரமக் குழந்தைகளுக்கு உன் கையாலேயே கொடு பார்க்கலாம்.”

அம்புஜம்மாள், காந்திஜி கூறியபடியே செய்துவிட்டு வந்தாள்.

”அம்புஜம் நீ ஒன்றைக்கூட தின்று பார்க்கவில்லையே! உன் நாவடக்கம் எனக்கு பெருமையாக இருக்கிறது” என்று அவளைப் பாராட்டினார்.

காந்திஜியிடம் பெற்ற பாராட்டு, அம்புஜம்மாளுக்கு இனிப்பு வகையெல்லாம் சாப்பிட்டதுபோல நிறைவாக இருந்து.

29. டால்ஸ்டாய் பண்ணையில்

காந்திஜியின் கருத்தைக் கவர்ந்தவர்களிலே ருஷ்ய நாட்டின் டால்ஸ்டாய் ஒருவராவார். அவர் எழுதிய ‘ஆண்டவன் ராஜ்யம் உனக்குள்ளே என்ற புத்தகம் காந்திஜிக்கு மிகவும் விருப்பமானதாகும். தென்னாப்ரிக்காவில் காந்திஜி ஏற்படுத்திய ஆச்ரமத்திற்கு ”டால்ஸ்டாய் பண்ணை” என்று பெயர் வைத்தார்.

தால்ஸ்டாய் பண்ணையில் பல மத்த்தவர்களும் பல வயதுடையவர்களும் வசித்து வந்தார்கள். இளம் வாலிபர்களும் பெண்களும் இருந்தார்கள். அவர்கள் எல்லோரும் ஒழுக்கமான வாழ்க்கையை மேற்கொள்ள வேண்டும் என்பதில் காந்திஜி மிகவும் கண்டிப்பானவராக இருந்தார்.

ஆச்ரமத்தில் வசித்த இளம்பெண்களைப் பாதுகாக்கும் பொறுப்பு தம்மைச் சார்ந்தது என்பதால் காந்திஜி அவர்களை மிகவும் கருத்துடன் கவனித்தார்.

சில வாலிபர்கள், ஆச்ரமத்தில் உள்ள பெண்களோடு பேசிச் சிரித்துக் கொண்டுருந்தார்கள். கேளியும் கிண்டலும் நிறைந்திருந்த வாலிபர்களை அழைத்து, அறிவுரை கூறி அனுப்பினார்.

காந்திஜியின் மனம் சிந்திக்கத் துவங்கியது. எப்போதும் இதுபோல் கவனித்துக்கொள்ள முடியாது என்பதால், இதற்கு வேறு வழி தேட வேண்டும் என்பதில் சிந்தையைச் செலுத்தினார். பெண்கள் தவ்வாழ்வு வாழ்ந்தால், ஆண்கள் அணிகமாட்டார்கள் என்ற முடிவுக்கு வந்தார்.

மறுநாள் காந்திஜி, அந்த இளம் பெண்களை அயைத்தார்.

”குழந்தைகளே, நேற்று உங்களைக் கிண்டல் செய்த இளைஞர்களைப் பற்றியே நான் இரவு முழுவதும் யோசித்தேன். அவர்கள் இனி இவ்வாறு செய்யாமல் இருக்க்வும், வேறு எவரும் உங்களிடம் இதுபோல நடக்காமலிருக்கவும் எனக்கு ஒரு யோசனை தோன்றியது”.

”சொல்லுங்கள்” என்றார்கள் அந்தப் பெண்கள்.

”இளமையும் அழகும்தானே, இளைஞர்களைத் தவறான திசைக்குத் திருப்புகிறது. குழந்தைகளே, உங்களுக்கு அழகு தரக்கூடிய ஒன்றை நீங்கள் தியாகம் செய்ய வேண்டும். செய்வீர்களா?” என்றார்.

அந்த பெண்களுக்கு, காந்திஜி என்ன கேட்கப் போகிறார் என்பதை எண்ணி, கலக்கமாக இருந்தது.

”இதில் வருத்தப்பட எதுவுமில்லை. உங்களிடைய நன்மைக்குத்தான் சொல்கிறேன். பெண்களிக்கு அழகைத் தருவது தலைமுடிதானே, உங்களுடைய நீண்ட கூந்தலை நாங்கள் தியாகம் செய்வீர்களா?

இதை எதிர்பார்க்காத அவ்விரு பெண்களிம் திடுக்கிட்டார்கள். தான் எதள்காக் இவ்விதம் கூளுகிலேன் என்பதை காந்திஜி பலமுறை அவர்களிக்கு விளக்கினார். பிறகு, அவர்களிள் அவருடைய விளக்கத்தை ஏற்றார்கள்.

உடனே கத்தரிக்கோலைக் கொண்டுவந்து, அப்பெண்களின் நீண்ட தலைமுடியை, காந்திஜி வெட்டி எறிந்தார்.

டால்ஸ்டாய் பண்ணையில் உள்ளோர், இதற்குப் பிறகு பெண்களிடம் கிண்டலோ கேலியோ பேசியதே இல்லை.

30. கோடீஸ்வரர் ஜெகாங்கீர் பெடிட்

1914-ம் வருடம் ஜூலை மாதம் காந்திஜி, கஸ்தூரிபாயிடம் தாயகம் திரும்ப, கப்பலேறினார். இங்கிலாந்து சென்று கோபாலகிருஷ்ண கோகலேயை சந்தித்தபிறகே, காந்திஜி இந்தியா வந்தார்.

காந்திஜி பம்பாய் துறைமுகத்தில் வந்து இறங்கிய போது, அவரை தாயக மக்கள் வாழ்த்தி வரவேற்றார்கள். தென்னாப்ரிக்காவில் காந்திஜி நடத்திய சத்தியாக்ரகப் போராட்டம் பற்றியும் அவருக்குக் கிடைத்த வெற்றியைப் பற்றியும் செய்திகள் மக்களிடையே பரவி இருந்தன. எனவே அவரைக் காணும் ஆவலில் மக்கள் பெருங்கூட்டமாக வந்தார்கள்.

நகரங்களில் பல வரவேற்பு விழாக்களும் கூட்டங்களும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

அக்காலத்தில் பம்பாயில் வசித்து வந்த ஜெகாங்கீர் பெடிட் என்பவர் கோடீஸ்வரர். பார்ஸி வகுப்பைச் சேர்ந்த அந்த செல்வந்தர், தமது மாளிகையில் காந்திஜிக்கு விருந்தளித்தார். ஒளிமயமாக விளங்கிய இந்த மாளிகையின் பிரம்மான்டமாத்தையும் செல்வச் செழிப்பையும் கண்டு காந்திஜி வியந்தார்.

விருந்தில் கலந்துகொள்ள பம்பாய் நகரத்தின் பிரமுகர்கள் பலர் வந்தார்கள். ஆனால் காந்தியோ, பழைமையான கத்தியவார் பாணியில் வேட்டியணிந்து, நீண்ட அங்கியும் தலைப்பாகையும் தரித்திருந்தார். நாகரீக மனிதர்களுக்கு நடுவே பேணப் பழக மிகவும் தயக்கமாக இருந்தது காந்திஜக்கு. அந்த விருந்துக்கு வந்திருந்த ஸர் பிரோசிஷா மேதாவுடன் இருந்து. அவர் அன்பைப் பெற்றார்.

பின்பு குஜராத்திகளின் சங்கம் காந்திஜிக்கு ஒரு விருந்து அளித்து கெளரவித்தது. குஜராத் மாகாணத்தைச் சேர்ந்த பலர் இதில் கலந்துகொண்டார்கள்.

காந்திஜியைப் பேண அழைத்தார்கள்.

”இது குஜராத்தியர் சங்கம். வந்திருப்பவர்களில் பெரும்பாலோர் குஜராத்தியர். ஆகையால் நான் குஜாரத்தியில் பேணவே விரும்புகிறேன். தாய்மொழியை நாமே புறக்கணிக்கலாமா?” என்று கேட்டுவிட்டு தாய்மொழியான குஜராத்தியிலேயே பேசினார்.

ஆங்கிலத்தில் பேசுவதே கெளரவமானது என்று எண்ணியிருந்த பலருடைய எண்ணத்தை மாற்றி, தாய்மொழிப் பற்றை விதைத்தார்.

கோடீஸ்வரர் ஜெகாங்கீர் பெடிட் காந்தியின் தாய்மொழிப் பற்றைப் கண்டு மகிழ்ந்தார்.

31. வெளியேறமாட்டேன்

பீகார் மாகாணத்தில் சம்பரான் என்றொரு ஜில்லாவில், அவுரித் தொட்டங்கள் நிறைந்திருந்தன. ஒவ்வொரு தோட்டக் குடியானவனும் ‘தீன்கதியா’ என்ற கட்டாய அவுரிப் பயிர் செய்ய வேண்டுமென்று, தோட்ட முதலாளிகள் கூறினார்கள்.

தங்களுக்கு இழக்கப்படும் கொடுமைகெல்லாம் ஒரு முடிவு கட்ட வேண்டும் என்று குடியானவர்கள் நினைத்தார்கள். அவர்களிடைய பிரதிநிதியக ராஜ்குமார் சுக்ளா என்பவர் காந்தியைச் சந்தித்தார்.

சம்பராளில் நடப்பதையெல்லாம் அவர் காந்திஜிக்கு கூறினார். சம்பரான் குடியானவர்களின் குறைகளை விசாரிக்க, தாம் அங்கே வருவதாக காந்திஜி கூறி, சுக்லாவை அனுப்பி வைத்தார்.

பின்பு கல்கத்தாவுக்குச் செல்லும்போது, சம்பரானுக்குச் சென்றார். அங்கு சென்றதும் தோட்ட முதலாளிகளையும் அரசாங்க அதிகாரிகளையும் சந்தித்துப்பேசினார். காந்திஜி, தாம் தோட்டக் குடியானவர்களின் நிலைபற்றி விசாரிக்க வந்ததாகக் கூறினார்.

இதைக் கேட்ட தோட்ட முதலாளிகள் கோபமடைந்தார்கள். காந்திஜி இவ்விஷயத்தில் தலையிட வேண்டாம் என்றும் எச்சரித்தார்கள்.

அரசாங்க அதிகாரியான கமிஷனரோ, காந்திஜியை மிரட்டினார். ”இவ்வூரில் எல்லையை விட்டுப் போய் விடுங்கள். வெளியேறவில்லை என்றார் என்ன நடக்குமென்று கூற முடியாது” என்றார்.

திட மனதும் உறிதியான கொள்கையும் கொண்ட காந்திஜி இதையெல்லாம் பற்றி சிறிதும் கவலை கொள்ளவில்லை.

அச்சமயத்தில் மோத்திஹாரியின் அருகில் இருந்த ஒரு சிற்றூரில் அவுரி தோட்டத் தொழிலாளி ஒருவன் துன்புறுத்தப்பட்ட செய்தி கிடைத்தது.

உடனே அவ்விடத்துக்குச் செல்ல காந்திஜி விழைந்தார். காத்திஜி ஒரு யானைமீது அமர்ந்து பயணம் செய்தார். சிறிது தொலைவு சென்றதும் காவல்துறையைச் சார்ந்த ஒருவன் காந்திஜியிடம், ”ஐயா, தங்களுக்குக் காவல்துறை அதிகாரி வந்தனம் தெரிவிக்கச் சொன்னார்” என்றான். இதற்கு என்ன பொருள் என்று காந்திஜிக்கு புரிந்தது. காந்திஜிக்கு, அந்தக் காவல்துறைச் சேவகனுடன், அவருடைய வண்டியில் பயணம் செய்தார்.

வண்டி சிறிது தூரம் சென்றதும், இன்னுமொருவன் வண்டியை நிறுத்தி கடிதத்தைக் கொடுத்தான்.

”இவ்வூரை விட்டு உடனே வெளியேற வேண்டும்” என்ற உத்தரவு அதில் இருந்தது.

அச்சம் என்பதையே அறியாத காந்திஜி, அக்கடிதத்திலே கையெழுத்திட்டார். அதோடு மட்டுமா? ”விசாரனை முடியும் வரை இவ்வூரை விட்டு வெளியேறமாட்டோன்” என்றும் எழுதி அனுப்பினார்.

திட்டமிட்ட படி பயணத்தைத் தொடர்ந்தார். மோத்திக்ஹரிக்கு வந்து சேர்ந்தார். அவர் அவ்வூரை அடைவதற்று முன்பே, அவரைப் பற்றிய செய்திகள் அங்கே வந்திருந்திருந்தன.

ஊர் மக்கள் அனைவரும் கூடி அவரை வரவேற்றார்கள். வெள்ளையரின் உத்தரவுக்கு அடிபணியாமல் வருபவரை அம்மக்கள் காண்பது இது முதன் முறையல்லவா?

இச்செய்தி சம்பரானில் மட்டுமல்ல இந்திய நாடு முழுவதிலும் பரவியது. வெள்ளையரின் அதிகாரத்துக்குப் பணிய மறுத்த முதல் இந்தியர் காந்திஜி என்ற புகழ் பரவியது.

32. இருப்பது ஒன்றுதான்!

கிராமத்தில் சுகாதார வசதிகள் செய்வது கற்க பள்ளிகள் ஏற்படுத்துவது, சுற்றுப்புறச் சூழலை தூய்மையாக வைத்திருக்கக் கற்பிப்பது, இவை எல்லாம் காந்திஜியின் அரசியல் போராட்டங்களுடன் இணைந்தே இருந்தன.

பிதிஹர்வா என்ற கிராமத்தில் பள்ளிக்கூடம் ஒன்றை நிறுவியிருந்தார். அங்கே ஒருமுறை காந்திஜி சென்றிருந்தார். அவருடன் அவரது மனைவி கஸ்தூரிபாயும் சென்றிருந்தார்.

கிராம மக்கள் மிகவும் அழுக்கான ஆடைகள் அணிந்திருந்ததை காந்திஜி கண்டார். இது அவருக்கு மிகுந்த மனவேதனையைத் தந்தது. மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும்.

மனைவியை அழைத்து, ‘பா, அதோ பார், இவர்கள் உடைகள் எவ்வளவு அழுக்கான உள்ளன. துவைத்துக் காட்டவேமாட்டார்களா? நீ போய் இதைப்பற்றி அந்தப் பெண்மணியிடம் கேட்டுவிட்டு வா” என்று கூறினார்.

கஸ்தூரிபாயிம், அப்பெண்மணியின் அருகில் சென்றாள். தன் கணவர் கூறியதை அப்படியே கேட்டார்.

அப்பெண்மணியோ, கஸ்தூரிபாயை தனது குடிசைக்குள்ளே வருமாறு அழைத்தார்.

‘உள்ளே வந்து நன்றாகப் பாருங்கள். வேறு துணிமணிகள் வைத்துள்ள பெட்டியோ அலமாரியோ இங்கிருக்கிறதா என்று பாருங்களேன்” என்றாள் அப்பெண்மணி.

கஸ்தூரிபாய் குடிசைக்குள் பார்த்தாள். அப்படி எதுவும் தென்படவில்லை. ”ஒன்றுமில்லை” என்றார்.

”என்னிடம் இருப்பதே இந்த ஒரே ஒரு புடைவைதான். இப்படி இருக்கும்போது, நான் எவ்வாறு குளிப்பேன்? உங்கள் கணவரிடம் சொல்லி எனக்கு மாற்றுப் புடைவை வாங்கித் தாருங்கள். நான் தினமும் குளித்து, துவைத்தபுடவையைக் கட்டுவேன்” என்றாள். அவள் கூறியதைக் கேட்டு, கஸ்தூரிபாயின் நெஞ்சம் இளகியது.

மானத்தைக் காக்கவும் துணியின்றி இருக்கும் ஏழை கிராம மக்களின் துயரக் கதையைக் காந்திஜி கேட்டார். இதற்கு ஒரு வழி தேட முனைந்தார்.

கிராம மக்களின் சுயதேவையை நிறைவு செய்வதள்காக காந்திஜி ராட்டை இயக்கத்தைத் தோற்றுவிக்க, இது போன்ற கிராமத்தில் பார்த்த நிகழ்ச்சிகளே அடித்தளமாக அமைந்தன.

33. புதுமையான வேலைநிறுத்தம்

குஜராத்திலுள்ள அகமதாபாத் நகரில் ஆலைகள் அதிகம். அதில் வேலை செய்த தொழிலாளர்களுக்கு கொடுக்கப்பட்ட சம்பளம் மிகக் குறைவாக இருந்தது. தொழிலாளர்கள் சம்பள உயர்வு கோரினார்கள். ஆனால் முதலாளிகள் இதற்கு சம்மதிக்கவில்லை. தொழிலாளர்கள் பல நாட்கள் கிளர்ச்சி செய்தார்கள். ஆனால் பலன் எதுவும் கிடைக்கவில்லை.

ஆலைத் தொழிலாளர்களின்மீது அக்கறை கொண்ட திருமதி அனுசுயாபென் என்பவர், காந்திஜியின் சம்பரான் வெற்றியைப் பற்றிக் கேள்வியுற்றார். காந்திஜிக்கு அகமதாபாத் ஆலைத் தொழிலாளர் பிரச்சினை பற்றி எழுதினார். காந்திஜியை வருமாறு அழைத்தார்.

சம்பரான் நிலைமை சீராகி, அவுரித் தோட்டக் குடியானவர்களுக்கு நியாயம் கிடைத்தபிறகு, காந்திஜி அகமதாபாதுக்குக் கிளம்பினார். ஆலைத் தொழிலாளர்களையும் முதலாளிகளையும் சந்தித்துப் பேசினார். முதலாளிகள், தங்களுக்கும் தொழிலார்களுக்கும் இடையில் யாரும் குறுக்கிட வேண்டாம் என்று பிடிவாதமாக்க் கூறினார்கள்.

தொழிலாளர்களின் நலனைக் கருதி, காந்திஜி வேலை நிறுத்தம் செய்யச் சொன்னார். அவ்வாறு சொல்லும்போது சில நிபந்தனைகளையும் விதித்தார்.

1. யாரும் எக்காரணம் கொண்டும் வன்முறை வழிகளைக் கைக்கொள்ளக்கூடாது
2. கட்டுப்பாட்டை மீறி வேலைக்குச் சென்றால், அவரை மற்றவர்கள் கட்டாயப் படுத்தக்கூடாது.
3. வேலைநிறுத்தத்தின்போது, வாழ்க்கை நடத்துவதற்காக யாரும் பிச்சை எடுத்தல் கூடாது.
4. எவ்வளவு நாட்கள் வேலைநிறுத்தம் நடந்தாலும் மனம் தளரக்கூடாது.

தொழிலாளர்கள்மேற்படி நிபந்தனைகளுக்கு ஒப்புக்கொண்டு வேலைநிறுத்தத்தைத் தொடங்கினார்கள்.

இரண்டு வாரகாலம் ஓடியது. சிலர் வேலைக்குத்திரும்பிச் சென்றதை காந்திஜி அறிந்தார். மற்ற தொழிலாளர்கள் நிபந்தனையை மீறியதற்காக, காந்திஜி உண்ணாவிரதம் இருப்பதாக அறிவித்தார்.

தொழிலாளர்கள் இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்தார்கள். காந்திஜியை உண்ணாவிரதம் இருக்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார்கள். ஆனால் வேலைநிறுத்தம் முடியும்வரை கைவிடுவதில்லை என்று அவர் உறுதியாக இருந்தார்.

காந்திஜி உண்ணாநோன்பை ஏற்று மூன்று நாட்கள் ஆயின். ஆலை முதலாளிகள் கலங்கினார்கள். காந்திஜியிடம் பெரும் மதிப்பு வைத்திருந்த திரு. அம்பாலால் என்பவர் காந்திஜியைக் கேட்டுக்கொண்டதற்கிணங்க காந்திஜி உண்ணாவிரதத்தை முடித்தார்.

தொழிலாளர்களின் கோரிக்கைகள் நிறைவேறின. அவர்களும் மகிழ்வோடு வேலைக்குத் திரும்பினார்கள்.

இதைப்பற்றிக் குறிப்பிட்ட வெள்ளையரான நகர கமிஷன் கெய்ரா, ஒரு கலவரமும் இல்லாமல் இருபத்தியொரு நாட்கள் வேலைநிறுத்தம் நடைபெற்றது புதுமை என்று வியந்தார்.

34. வெள்ளாட்டுப்பால் அருந்தலாமே

1918-ம் வருடம், காத்திஜியின் உதல்நிலை வேகுவாகப் பாதிக்கப்பட்டிருந்து. நண்பர்களின் ஆலோசனையின் பேரில் காந்திஜி மருத்துவரைப் பார்க்க இசைந்தார். சங்கர்லால் பாங்கர் என்னும் நண்பர், டாக்டர் தலாலை அழைத்து வந்து காந்திஜியின் உடல்நிலையைப் பரிசோதிக்கச் செய்தார்.

டாக்டர் தலால் நன்றாகப் பரிசோதனை செய்தார். பிறகு அவர் தமது ஆலோசனையை வழங்கினார்.

”வெகுநாட்கள் சீதபேதி ஆனதால் உடல் மிகவும் பலவீனமடைந்துள்ளது. இரத்தம் இழந்திருக்கிறது. தினமும் நிறைய பால் அருந்த வேண்டும். இன்ஜக் ஷன் மூலமாக இரும்புச் சத்தையும் ஏற்றினால்தான் உடல் பலம் பெற முடியும்” என்றார்.

”இன்ஜக் ஷன் செய்துகொள்ள எனக்கு விருப்பமில்லை. ஆயினும் உங்களிடைய ஆலோசனையை ஏற்று செய்து கொள்கிறேன். ஆனால் பால் சாப்பிடமாட்டேன் என்றுஉறுதிமொழி எடுத்துக் கொண்டிருக்கிறேன். அதை மீறி என்னால் சாப்பிட முடியாது”.

சத்தியத்தை மீற அவர் என்றுமே துணிந்ததில்லை.

”பால் சாப்பிடமாட்டீர்கள்? ஏன் அப்படி ஒரு உறுதிமொழி எடுத்துக்கொண்டீர்கள்” என்று டாக்டர் தலால் கேட்டார்.

”பல நகரங்களில் பசு, எருமை மாடுகள் நிறைய பால் கறக்க வேண்டும் என்பதற்காக மாட்டுக்காரர்கள் அவற்றைக் கொடுமைப்படுத்துவதைப் பார்த்தேன். அதுமுதல் பால் சாப்பிடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன். பால் இயற்கை உணவு இல்லை என்பதே என் எண்ணம்”.

காந்திஜியின் அருகில் இருந்த கஸ்தூரிபாய், ”பசும் பால், எருமைப்பால் மட்டும்தானே சாப்பிட மாட்டேன் என்று உறுதி எடுத்துக்கொண்டீர்கள். ஆனால் வெள்ளாட்டுப் பாலை சாப்பிடலாம் இல்லையா?” என்றார்.

டாக்டர் தலால், ”வெள்ளாட்டுப் பால் அருந்துங்கள் அது போதும்” என்றார்.

காந்திஜிக்கு தர்மசங்கடம் ஏற்பட்டது. ஆயினும் உடல்நலம் கருதி வெள்ளாட்டுப்பாலை அருந்த ஒப்புதல் அளித்தார். ஆயினும் உறுதிமொழியை மீறி வெள்ளாட்டுப் பாலை அருந்துவது அவரது மனத்துக்கு வேதனையை அளித்து வந்தது.

35. கனவில் வந்த யோசனை

ரெளலட் கமிட்டியின் அறிக்கையின்படி, இந்தியாவில் எந்தவிதமான கிளர்ச்சிகளும் நடைபெற தடைவிதிக்க அரசாங்கம் தயாராக இருந்தது. இந்த அறிக்கை சட்டமானால், நிலைமை ஆலோசித்தார்கள்.

சட்டசபையில் இந்த மசோதாவே வெளியிட்டபோது, அதை எதிர்த்துப் பேசியவர், மகாகனம் சீனிவாச சாஸ்திரியார்.

சட்டசபை நடவடிக்கைகளைக் காணச் சென்றிருந்த காந்திஜி சாஸ்திரியாரின் உணர்ச்சிபூர்வமான பேச்சைக் கேட்டு மெய்சிலிர்த்தார்.

வெள்ளையர் அரசோ சிறிதும் அசையவில்லை. மசோதா நிறைவேறியது.

இந்நிலையில், சென்னைக்கு வருமாறு காந்திஜியை நண்பர்கள் அழைத்தார்கள். சென்னையில் திரு. ராஜகோபாலாச்சாரியாரின் விருந்தினராக காந்திஜி தங்கினார். திரு. கஸ்தூரிரங்க ஐயங்கார், சேலம் விஜயராகவாசாரியார் போன்றவர்களுடன் காந்திஜி கலந்து ஆலோசித்தார்.

சாத்வீக முறையில் சட்டமறுப்பு செய்ய வேண்டும் என்பது பற்றி பேசினார்கள். இதற்கிடையில் ரெளலட் மசோதா சட்டமாகிவிட்டது. செய்தி கிடைத்ததும் எல்லோரும் கவலையில் ஆழ்ந்தார்கள்.

காந்திஜி சிந்தனையுன் படுக்கச் சென்றார். மறுநாள் விடியற்காலையில் எழுந்துகொண்டார். ஏதோ கனவு கண்டதுபோல் இருந்தது. அதைப்பற்றி ராஜகோபாலாச் சாரியாரிடம் கூறினார்.

”நேற்றிரவு கனவு ஒன்று கண்டேன். நாட்டுமக்கள் அனைவரும் முழு வேலைநிறுத்தம் நடத்தும்படி கேட்டுக்கொள்ள வேண்டுமென்று யோசனை அக்கனவிலே தோன்றியது. இதைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?”

”முழு வேலைநிருத்தம் செய்வது என்பது நல்ல யோசனைதான்” என்று ராஜகோபாலாச்சாரியாரும் யோசனையை ஏற்றார்.

பிறகு எல்லோரும் கலத்து ஆலோசித்தார்கள். புனிதமான இந்தப் போராட்டத்தினை தூய்மையாக நடத்த வேண்டும் என்று காந்திஜி விரும்பினார். அதனால் முழு வேலைநிறுத்தத்தின் போது, மக்கள் உபவாசம் இருந்து பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று முடிவாயிற்று.

1919-ம் வருஷம் மார்ச் மாதம் 30-ம் நாள் முழுவேலைநிருத்த நாளாக குறிக்கப்பட்டு, நாடு முழுவதிலுமுள்ள கோடிக்கணக்கான இந்தியர்கள் ஒன்றுபட்டு நின்றார்கள்.

36. இந்து —-முஸ்ஸிம் ஒற்றுமை

1919-ம் வரிடம் மார்ச்சு 30-ம் தேதியை முழு வேலைநிருத்த நாளாக அறிவித்து, பின்பு ஏப்ரல் 6-ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்கள். ஆனால் இச்செய்தி பல இடங்களுக்குப் போய்ச் சேரவில்லை. முன்பே குறிப்பிட்டது போல அவர்கள் மார்ச்சு 30-ம் தேதியை வேலைநிறுத்த நாளாக அனுஷ்டித்தார்கள். டில்லி மாநகரில் ஒரு சிறிய கடைகூடத் திறக்கப்படவில்லை.

வண்டிகள் ஓடவில்லை. வீதியெங்கும் மக்கள் கும்பல் கும்பலாக ஊர்வலமாகச் சென்றார்கள். யாரும் எந்தவித வன்முறையிலும் இறங்கவில்லை. பலர் உண்ணாநோன்பை மேற்கொண்டார்கள். கூட்டம் கூட்டமாகப் பிரார்த்தனை செய்தார்கள்.

மிகவும் பிரம்மாண்டமான கூட்டம் ஜூம்மா மசூதியில் நடைபெற்றது. வரறாறு காணாத கூட்டம் அலைமோதியது. மொகலாய மாமன்னன் ஷாஜகஹான் கட்டிய மசூதியான அதன் உட்புறத்தில் ஒரு லட்சம் பேர்கள் உட்கார முடியும். விசாலமான அம்மசூதியில் இதுநாள்வரை முஸ்லிம்கள் தவிர வேறு யாரும் அனுமதிக்கப்பட்டதில்லை.

ஆனால் மார்ச்சூ 30-ம் நாளன்று நடந்த கூட்டதிதில் தேசியத் தலைவர்கள் பேசினார்கள். அதில் குறிப்பிடத்தகுந்தவர் சுவாமி சிரத்தானந்தர்.

இன்னொருவர் அஜ்மல்கான். இவர்களுக்கு டில்லி மக்களிடையே பெரும் செல்வாக்கு இருந்தது.

தலைவர்கள் இருவரும் பேசப்போவதாக கேட்பதற்காக ஆயிரக்கணக்கான மக்கள் ஜூம்மா மசூதியில் கூடியிருந்தார்கள்.

அவர்களில் இந்துக்களும் இருந்தார்கள். ஜூம்மா மசூதிக்குள் அதுவரை அனுமதிக்கப்படாதவர்களும் இன்று அனுமதிக்கப் பட்டார்கள்.

இந்துவும் முஸ்லிமும் ஒற்றுமையாக தேசத்தில்காகப் போராட முன்வந்த இந்த சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த மார்ச்சு 30-ம் நாள் இந்திய சுதந்திர வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்க வேண்டிய நன்னாள்.

37. இமாலயத் தவறு

நாடு முழுவதும் வேலைநிறுத்தம் நடத்தியபிறகு, ஏப்ரல் 7-ப் தேதியன்று காந்திஜி பஞ்சாபுக்குக் பயணமானார். அப்போது பஞ்சாபில், பொதுமக்கள்மீது துப்பாக்கிப் பிரயோகமும், அதனால் உயிர்ச்சேதமும் ஏற்பட்டிருந்தன. இதைப்பற்றி விசாரிக்கவே காந்திஜி அங்கு செல்ல விரும்பினார்.

அம்ருதசரஸ் போகும் வழியில் டில்லி அருகே, காந்திஜயை ஒரு போலீஸ் அதிகாரி சந்தித்து உத்தரவோன்றைக் கொடுத்தார். அதில் காந்திஜி பஞ்சாபுக்குப் போகக் கூடாது என்று எழுதியிருந்தது.

பஞ்சாபில் அமைதியைக் காப்பதற்காகவே போக விரும்பினார் காந்திஜி. எனவே, இந்த உத்தரவொன்றைக் பணிய மறுத்தார். அதனால் அவரைக் கைது செய்தார்கள் மீண்டும் பம்பாய்க்கு அவரைக் கொண்டுவந்து விட்டார்கள்.

காந்திஜியை அரசாங்கம் தடுத்து, கைது செய்து, பின்பு பம்பாய்க்கே திரும்ப அழைத்துவரும் செய்தி மக்களிடையே பரவியது. பம்பாய் அருகே பைதோனியில் ஏராளமானவர்கள் கூடியிருந்தார்கள். காந்திஜியைக் காணவேண்டும் என்ற ஆவலுடன் காத்திருந்த மக்களைக் கட்டுக்குள் வைத்திருப்பது கடினமானதாயிற்று.

பம்பாய் வந்தடைந்ததும் நேராக பைதோனிக்குச் சென்று, காந்திஜி அங்கே கூடியிருந்தவர்களைக் கண்டார். அவரைக் கண்டதும் பொதுமக்களின் உற்சாகம் கரைபுரண்டது. ‘வந்தேமாதரம்’, ‘அல்லாஹூ அக்பர்’ என்ற கோஷங்களும் எழுந்தன. அத்துடன் நில்லாமல் கற்களை வீசத் தொடங்கினார்கள். காந்திஜி எவ்வளவோ வேண்டிக்கொண்டும் கூட்டம் கட்டுக்கடங்காமல் வன்முறையில் இறங்கியது.

அச்சமயத்தில் அரசாங்கத்தின் குதிரைப்படையினர் கூட்டத்தின் நடுவில் புகுந்து, கூட்டத்தைக் கலைக்க முற்பட்டனர். குதிரையின் காலடியில் மாண்டவர்களும், மிதியுண்டு கிடந்தவர்களிம், காயமடைந்தவர்களுமாக, கூச்சலும் குழப்பமும் மிகுந்தது.

இதனைக் கண்ணுற்ற காந்திஜியின் மனம் மிகுந்த வேதனையை அடைந்தது. வண்டியிலேறி, நேராக போலீஸ் ஸ்டேஷனுக்குச் சென்றார்.

பொதுமக்கள்மீது குதிரைப்படையை ஏவியது தவறு என்று அதிகாரியிடம் கூறினார்.

அவரோ, காந்திஜியின்மீது குற்றம் சுமத்தினார்.

”நீங்கள் செய்யும் போதனையால், ஜனங்கள் கட்டுக்கடங்காமல் போகிறார்கள். அம்ருதசரஸிலும் அகமதாபாத்திலும் பயங்கரமான கலவரங்கள் நடக்கின்றன. ரயில் தண்டவாளங்களைப் பெயர்த்திருக்கிறார்கள். தந்திக்கம்பிகளை அறுத்திருக்கிறார்கள். இதுதான் உங்கள் அகிம்சை வழியா? என்று அதிகாரி கேட்டார்.

போலீஸ் கமிஷனரின் சொற்கள் அவரது மனத்தை வருத்தின. மறுநாள் அகமதாபாத் நகரம் சென்றார் சபர்மதி நதிக்கரையில் பொதுக்கூட்டம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் அவர் பேசும்பொழுது, ”ஜனங்கள் அகிம்சையைப் பற்றி நன்கு புரிந்துகொண்ட பிறகு சத்தியாக்கிரகத்தை நான் துவங்கி இருக்க வேண்டும். அப்படி நான் செய்யவில்லை. நான் ‘இமாலயத் தவறு’ செய்துவிட்டேன் என்று மிகவும் வருத்தம் தெரிவித்தார்.

சத்தியாக்கிரக இயக்கத்துக்கு மக்களைத் தகுதி செய்வதற்காக காந்திஜி அந்த இயக்கத்தை சில காலம் ஒத்தி வைத்தார்.

38. இத்தனை பெட்டிகளா?

1931-ம் ஆண்டு வட்டமேஜை மகாநாட்டுக்காக, ‘ராஜபுதனம்’ என்ற கப்பலில் காந்திஜி பயணம் செய்தார். அவருடன் மகாதேவ சர்க்காவும் தேசாயும் உடன் சென்றார். காந்திஜியின் சர்க்காவும் பஞ்சணிக்கும் வில்லும் பல பெட்டிகளும் உடைமைகளாகாக கப்பலில் ஏற்றப்பட்டன.

கப்பல் கிளம்பியபின்பே, காந்திஜி தமது சாமான்களைக் கவனித்தார். மீராபென், காந்திஜியின் பயண ஏற்பாடுகளைக் கவனித்தாள்.

”இந்தப் பெட்டிகளில் என்ன இருக்கிறது?” என்றார்.

”பாபுஜி, தங்களுடைய உடைகள்” என்றாள் பெரிய பெட்டியா?”

”துணி மட்டுமில்லை” என்றாள் மீராபென், சற்று தயக்கமாக

”வேறு எதை வைத்து நிரப்பியிருக்கிறீர்கள்? நான் இந்தியாவில் என் துணிகளை பெட்டியிலா வைத்திருந்தேன்? காகிதம் வைப்பதற்குக்கூட பெட்டியைக் கொண்டுவந்திருக்கிறீர்களே” என்று கடிந்துகொண்ட காந்திஜி தமக்கு மிகவும் அவசியமானவற்றை மட்டும் வைத்துக்கொண்டு மற்ற பெட்டிகளையெல்லாம் ஏடன் துறைமுகம் வந்ததும் இந்தியாவிக்குத் திருப்பி அனுப்பிவிடச் சொன்னார்.

பின்பு கப்பலில் தாம் எங்கே உட்கார வேண்டும் என்று தீர்மானிப்பதற்காக, கப்பலின் மேல்தளத்திற்கு வந்தார். கப்பலின் ஓரத்தில் ஆட்டம் அதிகமாக இருக்கும். அங்கே நிற்கவே முடியாத அளவு ஆடியது. ஆனால் காந்திஜியோ அத்தனைய ஆபத்தான இடத்தில்தான் உட்கார போவதாக்க் கூறிவிட்டார்.

”நல்ல இடத்தில் நாம் போய் உட்கார்ந்தால் அதனால் மற்றவர்களுக்குக் கஷ்டம் ஏற்படக்கூடும். அங்கே தனிமை கிடைப்பதும் அரிதாகிவிடும். இதுபோன்ற தொல்லையான ஆபத்தான இடமே, நமக்கு நல்லது” என்று காந்திஜி உறுதியாகக் கூறினார். முதல் வகுப்பு டிக்கெட் இருந்தும் அவர், கப்பலின் மேல்தளத்தியலே இருந்தார்.

”சூரிய சந்திரர்கள் சஞ்ணரிக்காத இடத்தில் கடவுள் வாசம் செய்கிறார்” என்று கூறிவதுபோல, யாரும் சஞ்சாரம் செய்யாத இடத்தில் காந்திஜி இருந்தார். அவரது கப்பல் பயணம் இவ்விதமாகத் தொடர்ந்தது.

39. கதர் என்பது தாரகமந்திரம்

கதர் பணியில் காந்திஜி தீவிரமாக ஈடுபட்டிருந்தார். 1927-ம் ஆண்டு பண்டித மதன்மோகன் மாளவியா, காந்திஜியை தமது இந்து பல்கலைக்கழகத்தில் வந்து பேசுமாறு அழைப்பு விடுத்திருந்தார்.

காந்திஜியும் வருவதற்கு ஒப்புக்கொண்டார்.

பல்கலைக்கழகத்திலே சுமார் இரண்டாயிரம் மாணவர்கள் கூடியிருந்தார்கள். காந்திஜி பேசினார்.

”கதரைப் பற்றியே நீங்கள் எப்போதும் பேசுகிறீர்கள். ஆனால் அதை யாரும் செவி கொடுத்துக் கேட்பதாகத் தெரியவில்லை. நீங்கள் கதரைப் பற்றிப் பேசுவதை நிறுத்து விடக்கூடாதா?” என்று என்னிடம் சில பத்திரிக்கை நிருபர்கள் கேட்டார்கள்.

”பிரகலாதனை, எவ்வளவோ சித்ரவதைகள் செய்தார்கள். விஷம் கொடுத்தார்கள் ஆனாலும் அவன் நாராயணன் நாமம் சொல்வதை நிறுத்தினானா? நிறுத்தவில்லையே! அவனுடைய உதாரணத்தையே நானும்
பின்பற்றுகிறேன். கதர் என்பது ஒரு தாரகமந்திரம். அதை நான் சொல்வதால், யாரும் என்னை நான் இந்த தாரக மந்திரத்தைச் சொல்வதை நிறுத்த வேண்டும்”.

”யுத்த காலத்தில், பிரிட்டனில் ஒவ்வொருவரும் தங்களுடைய வீட்டில் உருளைக்கிழங்கு உற்பத்தி செய்ய வேண்டும் என்றும், தையல் வேலையில் ஈடுபட வேண்டும் என்றும் அதிகாரிகள் கேட்டுக் கொண்டார்கள். அவர்களுக்கு அது வேள்வியாகும். இன்று சமக்கு சர்க்காவே வேள்வி. ஆகவேதான் நான் கதவைப் பற்றிப் பேசுகிறேன்.”

இந்தியாவில் வாழும் ஏழை மக்கள்மீது உங்களுக்கு அன்பு இருக்குமானால், அவர்களிடைய வறுமை நிலை உங்கள் இதயங்களைத் தொடுமானால், இன்றே ஆசார்யகிருபளானி நடத்தும் கதர் கடையில்மீது படையெடுத்து, அங்கே சரக்கே இல்லாமல் செய்துவிடுங்கள்”.

”மாளவியாஜி, பணக்காரரிடம் பிச்சை எடுக்கிறார். நானோ ஏழைகளிடம் பிச்சை எடுக்கிறேன். ஏழைகளை விட ஏழைகளாக வாழ்பவர்களுக்காகவே நான் பிச்சை எடுக்கிறேன். மாளவியா, சீரிய சிந்தனையியும் எளிய வாழ்வும் வாழ்பவர். அவரைப்போல, மாணவர்களாகிய நீங்களும் வாழ முயற்சி செய்ய வேண்டும்.

காந்திஜியும் மாளவியாஜியும் கருத்து வேறுபாடுகள் நிறைந்தவர்களாக இருந்தாலும் இறுதிவரை நண்பர்களாகத் திகழ்ந்தார்கள்.

40. ஆனந்தபவனம்——ஸ்வராஜ்யபவனம்

இரண்டு துருவங்களைப் போன்றவர்கள் காந்திஜியும் மோதிலால் நேருவும். ஜாலியன்வாலாபாக் படுகொலையை விசாரிக்க அமைத்த குழுவில் மோதிலால் ஒரு உறுப்பினர். அச்சமயத்தில் காந்திஜியுடன் பழகும் வாய்ப்பு ஏற்பட்டு அவரால் ஈர்க்கப்பட்டார்.

”வாழ்க்கை வாழ்வதற்கே” என்ற கொள்கை உடைய மோதிலால் நேரு ஆடம்பரப் பிரியர்; மோதிலால் நேருவின் மாளிகையான ஆனந்தபவனத்திலே, அடிக்கடி ஆடம்பரமான விருந்துகள் நடைபெறும். ஒரு மன்னரைப் போல வாழ்ந்தார் மோதிலால் நேரு. ஆங்கிலேய நாகரீகத்தில் மூழ்கி இருந்த ஆனந்தபவன் ‘சுதந்திரப் போராட்டத்தின் பாசறையாக’ மாறியது. காந்திஜியின் தொடர்பு ஏற்பட்டதும், மோதிலாலின் ஆடம்பர வாழ்க்கை மாறியது.

இதைப்பற்றி, காந்திஜிக்கு மோதிலால் எழுதினார்.

ஆனந்தபவனத்தில் வெள்ளிச் சாமான்கள் எதுவும் இல்லை. எல்லாம் பித்தலைச் சாமான்கள்தான். வேலைக்காரக் கூட்டமும் போய்விட்டது. இப்பொழுது, உதவிக்கு ஒரே ஒருவன்தான் இருக்கிறான். கைவசம் கொஞ்சம் அரிசியும் பருப்பும் மட்டுமே வைத்திருக்கிறோம். இப்போது சாப்பாட்டில் சாதம் பருப்பு, காய்கறிகள்தான். ஆங்கிலேய உணவு இல்லை. வேட்டைக்குப் போவதை நிறுத்திவிட்டேன். தினமும் நீண்டதூரம் நடக்கிறேன். துப்பாக்கியைத் தூர எறிந்துவிட்டேன். எட்வண்ட் அர்னால்ட் எழுதிய பகவத்கீதையின் ஆங்கில மொழி பெயர்ப்பை மூன்றாவது முறையாகப் படித்துக் கொண்டிருக்கிறேன். என்னே வீழ்ச்சி. ஆனால் நான் இப்போது மிகவும் மகிழ்ச்சியோடு இருக்கிறேன்”.

காந்திஜி என்னும் சந்யாசியால் கவரப்பெற்ற மோதிலாலின் வாழ்வு அடியோடு மாறிப் போயிற்று.

பிரிட்டனில் தயாரிக்கப்பட்ட உயரக ‘சூட்’ அணியும் வழக்கமுடைய மோதிலால், அழகாகக் கதர் உடை அணியலானார். கதர் குல்லாய் தலையிலே கம்பீரமாகக் காட்சி தரலாயிற்று.

ஆனந்தப வனுக்கு வந்த சிஹால்சிங், மோதிலால் நேருவின் தோற்றத்தைக் கண்டு வியந்தார்.

”இதென்ன பெரும் மாறுதல்?”

”தோற்றத்தில் மட்டுமல்ல மனத்திலும்தான்” என்றார் மோதிலால் நேரு.

1930-ல் மோதிலால் நேரு தமது சொந்த இருப்பிடமான ஆனந்தபவனத்தை ஸ்வராஜ்ய பவனமாக, காந்திஜிக்குத் தந்து நாட்டுடைமை ஆக்கினார்.

41. ராஜ விசுவாசத் தீர்மானம் எதற்கு?

அகமதாபாத் நகரில் ‘குஜராத்தி க்ளப் என்று ஒரு சங்கம் இருந்தது. அதில் வல்லபாய் படேல் முக்கியமான அங்கத்தினர். அச்சங்கத்திற்கு அரசியல் தலைவர்கள் யாரேனும் பேச அழைக்கப்பட்டால், படேல் பேச்சைக் கேட்க வரமாட்டார். க்ளப் கட்டிடத்திலேயே உட்கார்ந்து சேஸ் விளையாடிக் கொண்டிருப்பார்.

ஆனால் பீகாரிலுள்ள சம்பரானில், மாஜிஸ்ட்ரேட்டின் உத்தரவை மீறி, அங்கிருந்து வேறியேற மறுத்த காந்திஜயைப் பற்றி படேல் அறிந்தார். காந்திஜியைப் பார்க்க வேண்டும் என்று மிகவும் விரும்பினார்.

குஜராத்தி சபையில் காந்திஜியைப் பேச அழைத்துள்ளதை அறிந்ததும் மிகவும் ஆவலுடன் வல்லபாய் படேல் முன்வரிசையில் சென்று அமர்ந்தார்.

சபையின் மகாநாட்டில் கலந்துகொள்ள காந்திஜியுடன் திலகரும் முகமதலி ஜின்னாவும் வந்திருந்தார்கள். அந்த மகாநாட்டில் பேசியவர்கள் அனைவரும் தாய் மொழியில் பேசினார்கள். ஜின்னா குஜராத்தி மொழியில் பேசியதை, சரோஜினி தேவி பாராட்டினார்.

அக்காலத்தில் எந்த சங்கத்தில் எவ்வகையான கூட்டம் நடத்தாலும் ‘ராஜ விசுவாசத் தீர்மானம்’ ஒன்றைக் கூறிய பிறகே துவங்கிவது வழக்கமாக இருந்தது.

ஆனால் காந்திஜி, குஜராத்தி சபையின் மகாநாட்டுக்கு வந்ததுமே, அதன் அங்கத்தினர்களிடம் கூறிவிட்டார்! பிரிட்டிஷ் மக்கள் அவர்களுடைய கூட்டங்களில் ராஜ விசுவாசத் தீர்மானம் ஏதாவது செய்கிறார்களா?” என்று கேட்டார்.

”இல்லை” என்று எல்லோரும் விடையளித்தார்கள்.

”நாம் எதற்குச் செய்ய வேண்டும்?” என்று காந்திஜி உறுதியாகச் சொன்னார். இந்த உறுதியும், திடமும் வல்லபாய் பட்டேலுக்கு வியப்பைத் தந்தன.

”அரசியல்வாதிகள் வெறும் பேச்சாளிகள்; செயலில் ஒன்றும் செய்யமாட்டார்கள்” என்று அதுநாள் வரை எண்ணியிருந்த படேல், மனம் மாறினார். காந்திஜியின் பால் ஈர்க்கப்பட்டு அரசியலுக்கு வந்தார்.

காந்திஜி குஜராத் சபைக்கு செயற்குழு ஒன்றை நியமித்தார். அதற்கு பொதுச் செயலாளராக வல்லபாய் பட்டேல் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

42. கீதையின் கருத்தறிய வந்தவரிடம்

கீதையின் உயர்வை காந்திஜி நன்கு உணர்ந்தவர். தினமும் பல் துலக்கும் நேரத்தை வீணாக்காமல் கீட்யின் சுலோகங்களை எழுதி வைத்து மனப்பாடம் செய்தவர். நேரம் கிடைக்கும்பொழுதெல்லாம் பகவத் கீதையைப் பாராயணம் செய்யத் தவறாதவர்.

காந்திஜிக்கு கீட்யின்பால் இருந்த ஈடுபாட்டையிம் புலமையையும் நன்கு அறிந்திருந்தார் ஒரு நண்பர். அவர் காந்திஜியைத் தேடி ஆச்ரமத்துக்கு வந்தார்.

காந்திஜி, ஒய்வாக அமர்த்து ராட்டை சுற்றிக்கொண்டிருந்த நேரத்தில் அவரை அணுகினார்.

”உட்காருங்கள். ஏதோ கேட்க வேண்டும் என்பது போல வந்துவிட்டு எதற்குத் தயங்குகிறீர்கள். சொல்லுங்கள்”.

காந்திஜி சொன்னதும் நண்பர், ”தாங்கள் பகவத் கீதையிலே தேர்ந்த அறிவுடையவர் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். ஒவ்வொரு அத்யாயமாக எனக்கு அர்த்தம் சொல்லி விளக்க உங்களுக்கும் நேரமில்லை. எனக்கும் பொறுமை கிடையாது. சுருக்கமாக, கீதையின் சாராம்சத்தை, உட்கருத்தைச் சொன்னால் புரிந்துகொள்வேன்” என்று அவர் கேட்டுக் கொண்டார். ஆச்ரமத்தில் அப்போது கட்டிட வேலைகள் நடந்துகொண்டிருந்தன. அதற்காக செங்கற்கள் வண்டிகளில் வந்து இறங்கின.

காந்திஜி நண்பர் சொன்னதைக் கேட்டிக் கொண்டார். பிறகு, ”இதோ வண்டிகளில் கற்கள் வந்து இறங்குகின்றன. அதை எண்ணி தினமும் குறித்து வையுங்கள்” என்றார்.

சில நாட்கள் வரை நண்பரும் கற்களை எண்ணுவதும் சீட்டில் குறித்துக் கொள்வதுமாக இருந்தார். பிறகு அவருக்கு இந்த வேலையில் சலிப்பு ஏற்பட்டது. காந்திஜியிடம் சென்றார்.

”பாபுஜி, ஒரு கூலியாள் செய்யும் வேலையை என்னைச் செய்யச் சொல்கிறீர்களே! நான் கீதையின் சாரத்தை அறிவதற்காக அல்லவா இங்கே வந்தேன்?” என்றார்.

”கீதையின் சாரத்தை இன்னுமா நீங்கள் தெரிந்து கொள்ளவில்லை. பலன் கருதாமல், தன்னலம் இன்றி பணியைச் செய்ய வேண்டும் என்பதுதானே கீதையின் கருத்து” என்றார் காந்திஜி.

நண்பர் மனம் தெளிந்தவராக பணியில் ஆழ்ந்தார்.

43. வேப்பிலை விழுது

ஆச்ரமத்தின் விதிகளில் ‘நாவடக்கும்’ ஒன்று. கசப்பான வேப்பிலையையும் முகம் சுளிக்காமல் உண்ண வேண்டும் என்பார் காந்திஜி. தினமும் வேப்பிலைத் துளிரை அரைத்து சிறிது தட்டில் பரிமாறப்ப்ட்டது. மருத்துவ குணமுள்ள அதனை உண்ண வேண்டும் என்பதே காந்திஜியின் எண்ணம்.

இந்த உணவுச் சோதனை நடக்கும் காலத்தில் ஆச்ரமத்துக்கு படேல் வந்தார். பகல் உணவின்போது காந்திஜியின் அருகில் அமர்ந்தார். வேப்பிலை விருது பரிமாற எடுத்து வந்தபோது, ”பாபுஜி, இத்தனை நாள் ஆட்டுப்பால் மட்டும்தான் குடித்து வந்தீர்கள். இப்போது ஆடு தின்னும் தழையையும் தின்னுகிறீர்களா?” என்றதும் எல்லோரும் சிரித்தார்கள்.

இந்த வேப்பிலை விழுது சர்தார் படேலுக்குப் பிடிக்கவில்லை என்று உணர்ந்து அவருக்குப் பரிமாறவில்லை.

இயற்கை முறையிலேயே வைத்தியம் செய்து கொள்வதே காந்திஜிக்குப் பிடித்தமான முறையாகும். ஒருமுறை அவருக்குக் கடுமையான நோய் தொற்றியது. பலவகையான மருத்துவம் பார்த்தும் பயனில்லை. முடிவில் ஒரு மருந்துவர் வந்தார். காந்திஜியின் உடல் முற்றிலும் பலவீனமடைதிருந்தது.

மருத்துவர் வேறெந்த மருந்தும் காந்திஜிக்குத் தரவில்லை. படுத்த படுக்கையாக இருந்த காந்திஜியின் தலையிலும் வயிற்றிலும் பனிக்கட்டியை வைத்தார். இந்தச் சிகிச்சை ஓரிரு நாட்கள் தொடர்ந்தது.

என்ன ஆச்சர்யம்! காந்திஜியின் நோய் குணமடைந்தது. நல்ல பசி ஏற்பட்டது. படுத்த படுக்கையாக இருந்தவர் எழுந்து உட்கார்ந்துவிட்டார்.

”காந்திஜி, சேவாக்கிராமம் போனபிறகு மகன்வாடியிலுள்ள ஒரு மருத்துவர் புல்லையும் உணவாகாக கொள்வது நல்லது என்றார். நல்லவேளை! இதை மட்டும் காந்திஜி அறிந்தால், ஆச்ரமச் சமையலறையை இழுத்துப் பூட்டியிருப்பார். எல்லோருடைய கழுத்திலும் நீண்ட தும்பிக் கட்டி புல் தரையில் மேயவிட்டிருப்பார். தப்பித்தோம்!” என்றார்.

இயற்கையோடு இயைந்த வாழ்வு, காந்திஜி விரும்பிய வாழ்வாக இருந்தது.

44. ஒரு பிடி உப்பு

அன்றாட வாழ்வில் மிகத் தேவையனது உப்பு. ”கடவுளால் பரிசாசாக கொடுக்கப்பட்ட உப்பை, அந்நிய அரசு கபடமாக மக்களிடமிருந்து பறிந்துக்கொண்டது” என்று உப்புச் சட்டம் பற்றி காந்திஜி தமது கருத்தை வெளியிட்டார். உப்புச் சட்டத்தை எதிர்த்து சத்யாக்கிரகம் செய்யவும் முடிவு செய்தார்.

1930-ம் வருடம் மார்ச் மாதம் 12-ம் நாளன்று உப்பு சத்யாக்கிரகம் செய்ய நாள் குறிக்கப்பட்டது. அன்று சபர்மதியிலுருந்து காந்திஜி தம்முன் 49 தொண்டர்களை அழைத்துக்கொண்டு, அங்கிருந்து 200 மைல் தொலைவில் இருந்த தண்டியை நோக்கி யாத்திரையைத் தொடங்கினார்கள்.

சபர்மதி ஆச்ரமத்தில் காலை பிரார்த்தனைக்குப் பிறகு தொண்டர்கள் மூவர் மூவராக அணிவகுத்துச் சென்றார்கள். அவர்கள் சென்ற வழியெல்லாம் மக்கள் வரவேற்று உற்சாகமூட்டினார்கள். களைப்பைப் போக்க பானங்களைக் கொடுத்தார்கள்.

24 நாட்கள் இந்த பாதயாத்திரை தொடர்ந்தது. இந்தியா முழுவதும் இந்த உப்பு சத்யாக்கிரகத்தினால் கிளர்ந்து எழுந்தது. உலகமே கண்டு வியந்து நின்றது. 1930-ம் வருடம் ஏப்ரல் 5-ம் நாளன்று இந்த அற்புதமான அறப் போராட்டம் தண்டி கடற்கரையை அடைந்தது.

மறுநாள் விடியற்காலையில் காந்திஜி கடலிலே நீராடினார். கரையிலே குவிந்திருந்த உப்பிலிருந்து ஒரு பிடி எடுத்தார். இதற்காகவே காத்துக் கொண்டிருந்ததுபோல, பிரிட்டிஷ் படைவீரர்கள் தடியடி செய்யலானார்கள்.

தொண்டர்கள் அமைதியாக அணிவகுத்து கடற்கரையில் நடந்து செல்லச் செல்ல படைவீர்ர்கள் அடித்தார்கள். அடிபட்டு காயமடைந்தவர்களின் வாய்கள் ‘வந்தே மாதரம்’ என்றும் ‘காந்திஜக்கு ஜே’ என்றும் கோஷமிட்டன். இதுபோலவே பாரதத்தின் பல கடற்கரை ஊர்களிலும் உப்பு சத்யாக்கிரகம் நடைபெற்றது. ஆங்கில பேரரசுக்கு எதிராகப் போர்க்கொடி உயர்த்தப்பட்டது.

நாடெங்கும் சட்ட விரோதமாக எடுத்த உப்பை, விற்பதற்கு காங்கிரஸ் ஏற்பாடு செய்தது. காந்திஜி, தாம் தண்டி யாத்திரையின்போது எடுத்த ஒரு பிடி உப்பை ஏலத்திற்கு விட்டார். அது 1600 ரூபாய்க்கு விலை போயிற்று.

தண்டி யாத்திரையில் ஈடுபட்ட பல தலைவர்களையும் ஆங்கிலப் பேரரசு கைது செய்தது.

இந்திய சுதந்திர வரலாற்றில் தண்டி யாத்திரை ஒரு திருப்புமுனையாகும்.

45. சிவக்கிராமம்——-சேவாக்கிராமம்

வார்தாவில் காந்திஜி சிலகாலம் தங்கிருந்தார். காந்திஜி தங்கியிருக்கும் பொழுது ஆசரமம் முழுவதுமான செலவை ஜம்னாலால் பஜாஜ் ஏற்றார். இனியும் அவருக்கு தொல்லை தருவது சரியல்ல என்று எண்ணினார் காந்திஜி. இதைத் தவிர் கிராம வாழ்க்கையை மேற்கொள்ள வேண்டும் என்ற எண்ணமும் அவருக்கு இருந்தது.

ஆனால் மகாதேவ தேசாயோ, பஜாஜோ இதை ஏற்கவில்லை. வார்தாவில் தங்குவதே சரியானது என்று நினைத்தார்கள்.

1936-ம் வருடம் ஏப்ரல் மாதத்தில் ஒருநாள் இரவில், பிராத்தனை முடிந்ததும், தடி ஏந்தி காந்திஜி வார்தாவை விட்டுச் சென்றார். தன்னந்தனியாக நடந்து சென்றார். சிறிது தூரம் சென்றதும் திரும்பி வருவார் எல்லோரும் நினைத்து அவரைப் பின்தொடராமல் இருந்தார்கள்.

ஆனால் காந்திஜி திரும்பி வரவே இல்லை. மழை வேறு பெய்யத் தொடங்கியது. காந்திஜி, சேற்றில் நடந்து மழையில் நனைத்து, ஒரு கிராமத்தை அடைந்தார்.

அந்தக் கிராமத்திலை இருந்த ஒரு விவசாயியின் குடிசையிலே தங்கினார். குடிசைக்கு வெளியில் இருந்த நார்க் கட்டிலில் படுத்து உறங்கிவிட்டார்.

மறுநாள் காலையில், வார்தா ஆச்ரமமே திரண்டு காந்திஜியைத் தேடி கிராமத்துக்கு வந்துவிட்டது.

‘ராமர் இருக்குமிடமே அயோத்தி’அல்லவா?

காந்திஜி வந்து சேர்ந்த இடம் சிவக்கிராமம். இதுவே பிறகு சேவாக்கிராமம் ஆயிற்று.

”பாபுஜி இப்படி எதுவுமே சொல்லாமல் வந்துவிட்டீர்களே” என்று மகாதேவ தேசாய் மிகவும் கவலை ததும்பக் கேட்டார்.

”சொல்லாமல் வரவில்லையே! நகர வாழ்வு வாழ்ந்து கொண்டு, எல்லோரையும் தேசத் தொண்டு செய்ய கிராமத்துக்குப் போங்கள் என்று நான் சொன்னால், அது எப்படி நடக்கும். நானல்லவா வழிகாட்ட வேண்டும். பிறரைத் தூண்டுவதற்கு முன்னால், நான் அதைச் செய்ய வேண்டும் அல்லவா? இதை சில நாட்களாக உங்களிடம் சொல்லி வந்தேன். ஆனால் நீங்கள் அதை ஏற்கவில்லை. யாரையும் எதிர்நோக்கி இருப்பதை விட தனியாகவேனும் செல்ல வேண்டுமென்றுதான் கிளம்பினேன்”.

சேவாக்கிராமம், காந்திஜியின் வரவால் புதுப்பொலிவு பெற்றது.

46. குங்குமமும் வளையலும்

சிறைவாசமும் போராட்டமும் உபவாசமும் அண்ணல் காந்திஜியின் வாழ்வின் பெரும்பகுதியாக இருந்தன. தென்னாப்ரிக்காவில் மும்முறை சிறைவாசம் அனுபவித்திருக்கிறார்.

தாயகம் வந்தபிறகு எட்டுமுறை சிறைவாசம் செய்திருக்கிறார். சத்யாக்கிரக அடிப்படையிலான கிளர்ச்சிகளையும் போராட்டங்களையும் நடத்தியுள்ளார். அவுரி விவசாயிகளுக்கான உரிமைப் போர், கெய்ராவில் வரியை எதிர்த்துப் போராட்டம், ரெளலட் சட்டத்தை எதிர்த்து சத்யாக்கிரகம், ஒத்துழையாமை இயக்கம், உப்பு சந்தியாக்கிரகம், தனி நபர் சத்யாக்கிரகம், ஆகஸ்ட் போராட்டம் எல்லாம் இணைந்த சுதந்திரப்போராட்டத்தின் தலைமகனாக இருந்தவர் காந்திஜி.

போராட்டத்துடன், அவரது உபவாசமும் மகத்தான பலன்களைத் தந்தன என்று சொல்லலாம்.

நாட்டை மேம்படுத்தும்போது தன்னைத்தானே புதுப்பித்துக் கொள்ளவும் காந்திஜி உபாவாசத்தை ஒரு கருவியாக நினைத்தார்.

ஆத்மசுத்திகாக அவர் ஒருமுறை உண்ணாநோன்பை மேற்கொண்டார். இந்தச் சோதனையில் அவர் வெற்றியடைய வேண்டுமென்று லட்சோபலட்சம் இந்துக்களும் முஸ்ஸிம்களும் இன்னும் பிற மதத்தைச் சார்ந்தவர்களும் பிரார்த்தனை செய்தார்கள்.

அச்சமயத்தில் பம்பாயைச் சேர்ந்த முஸ்லிம் அன்பர், கஸ்தூரிபாய்க்கு ஒரு கடிதத்தில், ஒரு ஜோடி வளையல்கள், குங்குமம் இவற்றை அனுப்பியிருந்தார். அவர் கடிதத்தில் பெயரை மட்டுமே குறிப்பிட்டிருந்தார்.

1933-ம் வருடம் மே 29-ம் தேதி அவர் இவைகளை அனுப்பி அத்துடன் வரு கடிதத்தையும் எழுதியிருந்தார்.

”இந்தச் சிறிய காணிக்கையை, மனம் நிறைந்த பிராத்த்தனையுடன் அனுப்பியுள்ளேன். இறையருளால், நீங்கள் சகல செளபாக்யங்களுடன் வாழ வேண்டும். இவற்றை அணிய வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்”.

இந்த அன்பரின் வேண்டுகோளை ஏற்று, கஸ்தூரிபா குங்குமத்தை இட்டுக்கொண்டு, வளையல்களை அணிந்து கொண்டார்.

மக்களின் பேரன்பை எண்ணி உள்ளம் நெகிழ்ந்தார்.

47. சமையல் கூடத்தில் சப்தம்

விருந்தினர் வருவதும் போவதும் சபர்மதியில் நிகழ்ந்த வண்ணம் இருக்கும். கஸ்தூரிபாய் சமையல் பொறுப்பை ஏற்று திறம்பட நிர்வகித்து வந்தார். ஒருநாள் பகல் வேலைகள் முடிந்து, சமையலறையை மூடிவிட்டு கஸ்தூரிபாய் சற்றுநேரம் இளைப்பாறச் சென்றார்.

அச்சமயத்தில் காந்திஜியைக் காண சில பெரிய மனிதர்கள் வருவதாகத் தகவலை வந்தது. காந்திஜி பாவுக்கு உதவி செய்யும் ஆச்ரமத்தின் பையனை ரகசியமாக அழைத்தார். ”இப்போது மோதிலால் நேருவும் இன்னும் சிலரும் வருவார்கள். அவர்கள் உண்பதற்காக ஏதாவது தயார் செய்ய வேண்டும். பா இப்போதுதான் களைப்பாகப் படுத்திருக்கிறாள்.

ஓசைப்படாமல் மூவரும் சமையலறையில் வேலை செய்தார்கள்.

”குஸூம், எதை எங்கே இருந்து எடுத்தீர்களோ, அதை அங்கையே வைத்துவிட வேண்டும். தெரிந்ததா? இல்லாவிடில் பா கோபித்துக் கொள்வார்” குஸூம் சுறுசுறுப்பாகப் பணியில் ஆழ்ந்தார்.

பாதி சமையல்கூட முடிவடையவில்லை. எதையோ அவசரமாக எடுக்கும்போது, உதவி செய்யும் பையன் கீழே போட்டுவிட்டான். சமையல் கட்டில் ஏதோ சப்தம் கேட்கிறதே என்றபடி கஸ்தூரிபாய் எழுந்து வந்துவிட்டார்.

”நீ ரொம்ப களைத்துப் போயிருப்பாய். அதிகாலை முதல் வேலை செய்கிறீர்கள். உங்களால் முடியும் என்றால் என்னால் முடியாதா? இந்தச் சிறுவர்களிடம் ஏன் இந்தப் பணியை ஒப்படைத்தீர்கள்” என்று பா படபடத்தார்.

நீ கோபித்துக்கொண்டால் நான் மிகவும் பயந்து விடுவேன்”.

‘பா’ உடனே சிரித்துவிட்டார். ”ஆமாம் பயப்படுகிற ஆளைப் பார்க்கவில்லை. ஷூம் நீங்கள்?” என்று கூறிவிட்டு சமையல் செய்வதில் ஈடுபட்டார்.

48. வியக்க வைத்த வினோபா

காந்திஜியின் சீடராகவும் மகனாகவும் ஆச்ரமத்தில் இருந்த வினோபாபாவேவுக்கு உடல்நலம் குன்றியது. அதுவுமல்லாமல், சம்ஸ்கிருத மொழியில் மேலும் பயிற்சி பெற வேணிடும் என்ற எண்ணம் தோன்றியது.

காந்திஜியிடம், தமக்கு ஓராண்டு கால விடுமுறை அளிக்க வேண்டும் என்று வினோபா விண்ணப்பித்தார். காந்திஜியும், வேண்டுகோளை ஏற்று விடுப்பளித்தார். ‘வாயி’ என்ற ஊருக்கு வினோபாபவே சென்றார். அங்கிருந்த சமஸ்கிருத பண்டிதரிடம், பிரம்மசூத்ர பாஷ்யம் கற்றார். இன்னும் பல நூல்களையும் கற்றார். அவற்றுள் பதஞ்சலி யோக சூத்திரம், மனுஸ்மிருதி குறிப்பிடத்தக்கவையாகும்.

வினோபா, சமஸ்கிருதம் கற்கும் நேரம் போக, வேறு பல பயனுள்ள பல செய்திகளையும் செய்து வந்தார். எதைச் செய்தாலும் உடனுக்குடன் அதைப் பற்றி காந்திஜிக்குக் கடிதம்மூலமாகத் தெரிவிக்கத் தவறியதே இல்லை.

கீதைப் பேருரைகள் நிகழ்த்தினார். பல கிராமங்களுக்குச் சுற்றுப்பயணம் செய்து, மக்களுக்குத் தொண்டு செய்தார். எங்கே சென்றாலும் அவர் தம்மை காந்திஜியின் சீடராக ஆச்ரமவாசியாகவே எண்ணி, நடந்து வந்தார்.

”தன்னை காந்திஜி மகனாக ஏற்க வேண்டும்” என்று ஒரு கடிதத்தில் வினோபா வேண்டுக் கொண்டார்.

இதைக் கண்டு வினோபா மனம் மகிழ்ந்தார். ஓராண்டு கால விடுமுறையை முடித்துக்கொண்டு ஆச்ரமத்துக்குத் திரும்பினார். எவரும் எதிர்பாராத நேரத்தில் வினோபா திரும்பி வந்ததைக் கண்டு திகைத்தார்கள்.

காந்திஜிக்கு அளித்த வாக்கு தவறாமல் ஒரு விநாடி நேரமும் தாமதிக்காமல் அவர் வந்து சேர்ந்ததை எண்ணி காந்திஜி வியந்தார்.

”உண்மைக்கு நீங்கள் காட்டும் நேர்மை இது என்று பாராட்டினார்கள்.

”கணித்ததிற்குக் காட்டிய நேர்மை என்பதிலை சந்தேகமில்லை” என்றார் வினோபா.

”உண்மையை கணிதம் புறக்கணிக்க முடியுமா?” என்றார் காந்திஜி.

”காந்திஜிக்கு, வினோபாவிடம் இருந்த மதிப்பும் மரியாதையும் கண்டு ஆச்ரமவாசிகள் மகிழ்ந்தார்கள்.

49. பாபுஜி ஒரு ‘பனியா’

1947-ம் ஆண்டு காந்திஜி, பிரார்த்தனைக் கூட்டத்திற்குச் சென்றுவிட்டுத் திரும்பும்போது, அவரைக் காண ஒரு தமிழர் வந்தார்.

”எனக்கு, தமிழிலேயே கையெழுத்துப் போட்டுத் தர வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.

”நீங்கள் விரும்பியபடியே தமிழில் கையெழுத்துப் போட்டுத் தருகிறேன். அந்தக் கையெழுத்தில் ஏதாவது தவறு இருந்தால், அதை நீங்கள் திருத்த வேண்டும். கையெழுத்துப் போட நான் எப்போதும் ஐந்து ரூபாய்தான் தக்ஷிணை வாங்குகிறேன். விசேஷமாக தமிழில் போடுவதற்கு நீங்கள் இரட்டுப்பாகத் தர வேண்டுமே” என்றார் குறும்புச் சிரிப்புடன்.

தமிழரின் கையெழுத்துப் பிரதியை வாங்கி, எழுத்துக் கூட்டி காந்திஜி கையெழுத்திட்டார். ‘மோ. க. காந்தி’ என்று எழுதியிருந்தார்.

”தமிழ் தெரியாது என்று சொன்னீர்கள். பிழையே இல்லாமல் மிகச் சரியாக எழுதிவிட்டீர்களே” என்று அந்தத் தமிழர் மகிழ்ந்தார்.

இந்த வாய்ப்பை காந்திஜி நழுவிடுவாரா?

”பிழையின்றி நான் எழுதியதற்காக, இன்னுமொரு பத்து ரூபாய் கூடுதலாக நீங்கள் தர வேண்டும்” என்று கேட்டார்.

அப்போது அந்த நண்பரின் கையில் அவ்வளவு பணம் இல்லை. இதை உணர்த்த காந்திஜி, ”பரவாயில்லை. நாளை மாலைவரை நான் இங்கேதான் இருப்பேன். கொண்டுவந்து தாருங்கள்” என்றார்.

உடனே அந்த அன்பர், நாளைவரை காத்திருப்பானேன் என்று தமது கை விரலில் இருந்த மோதிரத்தைக் கழற்றினார். அந்தப் பொன் மோதிர்த்தை காத்திஜியிடம் அளித்துவிட்டார். அவர் அதைக் கொடுக்கும் சமயத்தில் ஜவாகர்லால் நேருவும் அங்கே வந்தார். நடந்த விஷயத்தைக் கேட்டறிந்தார்.

பிறகு அந்த நண்பரிடம், ”பாபுஜி, ஒரு பனியா, உமக்கு இது தெரியாதா?” என்று நேருஜி கேட்டார்.

அதற்கு அந்நண்வர், ”அதிலும் பணம் பறிப்பதிலும் நன்கு தேர்ச்சி பெற்றவர் என்பதையும் நன்றாகவே அறிந்து கொண்டேன்” என்று பதில் கூறவும் அங்கே மகிழ்ச்சி கலகலப்பு ஏற்பட்டது.

”காந்திஜியிடம் கொடுக்கதன் மூலம், ஏழை எளியவர்களின் நலனுக்காக நாமும் ஏதோ செய்தோம் என்ற திருப்தி கிடைக்கிறதே! எளியவர்களின் வாழ்க்கைப் பெற, காந்திஜி உதவுகிறார்” என்று அந்தத் தமிழர் பெருமித்துடன் கூறி காந்திஜியை வணங்கிச் சென்றார்.

50. மகாத்மாவும் மகாகவியும்

தேசப்பிதா காத்திஜியை மகாகவி பாரதியார் சந்தித்தார். 1919-ம் வருடம் பிப்ரவரி மாதம் காந்திஜி சென்னைக்கு வந்திருந்தார். மகாகவி பாரதியாருக்கு காந்திஜியை சந்திக்க வேண்டுமென்ற எண்ணம் தோன்றியது. காந்திஜி தங்கியிருக்கும் இடம் தேடிச் சென்றார்.

காந்திஜியைச் சந்திக்க, நேராக வீட்டினுள்ளே சென்றார். அவர் அமர்ந்திருந்த இருக்கையில், அவர்அருகே அமர்ந்தார். அப்போது, ராஜாஜி, வ. ரா. போன்றோர் காந்திஜியுடன் இருந்தார்கள்.

”மிஸ்டர் காந்தி, இன்றைக்கு சாயங்காலம் ஐந்திரை மணிக்குக் கடற்கரையில் நான் ஒரு கூட்டத்தில் பேசப் போகிறேன். தாங்கள் அந்தக் கூட்டத்திற்குத் தலைமை வகிக்க முடியுமா?”

காந்திஜி மகாதேவதேசாயிடம், ”இன்றைக்கு மாலையில் நம்முடைய அலுவல்கள் என்ன?” என்று கேட்டார்.

”இன்றைக்கு மாலை ஐந்தரை மணிக்கு நாம் வேறொரு இடம் போக வேண்டும்” என்று மகாதேவ் கூறினார்.

அப்படியானால், இன்றைக்கு செளர்யப்படாது. தங்களுடைய கூட்டத்தை நாளைக்கு ஒத்திப்போட முடியுமா?” என்று காந்தி வினவினார்.

‘முடியாது, நான் போய் வருகிறேன். மிஸ்டர்காந்தி, தாங்கள் ஆரம்பிக்கப் போகும் இயக்கத்தை நான் ஆசீர் வதிக்கிறேன்” என்று கூறிவிட்டு புயலென வெளியேறி விட்டார்.

தான் அழைத்து அவர் வரவில்லையே என்ற வருத்தம் மகாகவிக்கு சிறிதும் இல்லை. ‘இன்று வர இயலாது, நாளை வருகிறேன்’ என்று உள்ளதை உள்ளபடி கூறிய உத்தம குணத்தை வியந்தார். அதனாலேயே, அவரது இயக்கத்துக்கு தமது ஆசீர்வாதங்களை நல்கினார்.

மாககவி பாரதியார் சென்றபின்பு, காந்திஜி, ராஜாஜியிடம் ”யார் அவர்?” என்று கேட்டார்.

”எங்கள் நாட்டுக் கவிஞர்” என்று ராஜாஜி கூறினார்.

”அவரை நன்கு பாதுகாக்க வேண்டும்”என்றார் காந்திஜி. காந்திஜியும் மகாகவியும் சந்தித்து உரையாடியது சில நிமிடங்கள்தான் எனினும் ஒருவர் பெருமையை மற்றவர் நன்கு உணர்ந்து கொண்டார்கள்.

51. ‘பா’ கற்றுத் தந்த பாடம்

சம்பரானில், காந்திஜி சுற்றுப்பயணம் செய்து கொண்டிருந்தார். ஒருநாள் கஸ்தூரிபாவிடம், ”நீ ஒரு பள்ளிக்கூடம் ஆரம்பிக்கலாமே. இந்த ஊரிலுள்ள விவசாயிகளின் பிள்ளைகளுக்கு பாடம் சொல்லித் தரலாமே” என்றார்.

இதைக் கேட்டு ‘பா’ திகைத்துப் போனார். தானாவது பாடம் நடத்துவதாவது என்று எண்ணினார். தான் அதிகம் படிக்கவில்லை என்ற எண்ணம் பாவுக்கு உண்டு.அதைத்தான் காந்திஜி கேலி செய்கிறார் என்று நினைத்தார்.

அவருடைய முகபாவத்தைக் கண்ட காந்திஜி,. ”பா” உண்மையாகவே உன்னை அவர்களுக்குப் பாடம் நடத்தச் சொல்கிறேன்” என்றார்.

”நான் எதை அவர்களுக்குச் சொல்லிக் கொடுக்க முடியும். அதுவும் இல்லாமல் எனக்கு இவர்களுடைய மொழியும் தெரியாதே”.

பா, இங்குள்ள குழந்தைகளைப் பார். அழுக்கு உடையும் பரட்டைத் தலையுமாக இருக்கிறார்கள். இவர்களுக்கு தினமும் குளிக்கவும் துவைத்து கட்டவும் சுத்தமாக தலை வாரவும் சொல்லிக் கொடுக்க உன்னால் முடியாதா? முடியும். நான்கு பிள்ளைகளைப் பெற்ற உன்னால், மற்ற பிள்ளைகளுக்குப் பெற்ற உன்னால், மற்ற பிள்ளைகளுக்குச் செய்ய முடியும். தினமும் அவர்களைக் குளிப்பாட்டு. கண்களிலூள்ள அழுக்கைப் போக்கு. துணியை நன்றாகத் தோய்த்து உலர்த்து. மண்ணில் விளையாடக் கூடாது என்று தோய்த்து உலர்த்து. மண்ணில் விளையாடக் கூடாது என்று சொல். தினமும் பல் தேய்க்கிறார்களா என்று பார். இதெல்லாம் உன்னால் எளிதாகச் செய்யமுடியும் இல்லையா?”

”ஆமாம், இதெல்லாம் செய்துவிட முடியும்!” என்றார் கஸ்தூரிபா.

” காந்திஜி கூறியபடி, கஸ்தூரிபாய் தினந்தோறும் எளிய குடியானவர்களின் குடிசைகளுக்குச் சென்றார். சிறுவர் சிறுமியருக்கும் ஏன் பெரியவர்களுக்கும்கூட சுற்றுப்புற சுத்தம், இடம் சுத்தம், உடை சுத்தம் இவற்றை போதிக்க ஆரம்பித்தார். நாளடைவில், காந்திஜி எந்த கிராமத்தில் சுற்றுப்பயணம் செய்தாலும் அங்கெல்லாம் கஸ்தூரிபாய் தன்னுடைய ‘பாடம்’ கற்றுத் தரும் பணியைத் துவக்கி விடுவது வழக்கமாயிற்று.

52. ஏழைகளுக்காகவே நிதி

தில்லையில் வாழும் குஜராத்தியர்கள் அனைவரும் ஒன்றுகூடி, காந்திஜியின் பிறந்தநாளைக் கொண்டாட விரும்பினார்கள். அக்கொண்டாட்டத்தின்போது, அகதிகள் நிதிக்காக பணம் திரட்டித் தருவதாகவும் கூறினார்கள். காந்திஜி வருவதாக வாக்களித்தார்.

பிறந்த நாளன்று காந்திஜிக்கு ஜூரம் அடித்தது. படேல், அவரை விழாவுக்குப் போக வேண்டாம் என்று தடுத்துப் பார்த்தார். ஆனால் காந்திஜி கொடுத்த வாக்கைக் காப்பாற்ற போயே தீருவதாகக் கூறினார்.

விழாவுக்கு காந்திஜியுடன் வல்லபாய் படேல், அவரை விழாவுக்குப் போக வேண்டாம் என்று தடுத்துப் பார்த்தார். ஆனால் காந்திஜி கொடுத்த வாக்கைக் காப்பாற்ற போயே தீருவதாகக் கூறினார்.

விழாவுக்கு காந்திஜியுடன் வல்லாபாய் படேலும் சென்றார். பேசும்பொழுது, ”இன்றைக்கு எனது பிறந்தநாள். அத்துடன் என்னுடைய சர்க்காவுக்கும் பிறந்தநாளைக் கொண்டாட விரும்பும் நீங்கள் செய்ய வேண்டியவை. உடல்நலம் சரியில்லாத்தால் அதிகம் பேச முடியவில்லை” என்று கூறி காந்திஜி அமர்ந்துவிட்டார்.

குஜராத்தியர்கள் அனைவரும் திரட்டிய பணத்தை காந்திஜிக்கு அளித்தார்கள். பிறகு வல்லபாய் படேலையும் பேசுமாறு பணித்தார்கள்.

படேல் பேசினார். ”காந்திஜிக்கு இந்தப் பொற்கிழியை அளித்துவிட்டு, என்னை வெறுங்கையுடன் பேசச் சொல்கிறீர்கள்! இது சரியா?” என்று கேட்டதும் காந்திஜி விழுந்து நகைத்தார்.

”பாபுஜி ஒரு பனியா எப்போதும் பணத்திலேயை குறியாக இருப்பவர். இப்போதுகூடப் பாருங்கள். உடம்பு இருந்தும் இன்றைக்கு இங்கே அவர் எதற்காக வந்திருக்கிறார்கள் தெரியுமோ? பிறந்தநாளைக் கொண்டாட இல்லை. நீங்கள் கொடுப்பதாகக் கூறியிருக்கும் பணத்தை உங்களிடமிருந்து பறிப்பதற்காகத்தான்!”

கூட்டத்தில இதைக் கேட்டு மகிழ்ச்சி ஆரவாரம் எழுந்தது.

”மரணப் படுக்கையில் கிடந்தாலும் நிதி என்றால் இவர் எழுந்து உட்கார்ந்துவிடுவார். உடல்நிலை சரியில்லை போக வேண்டாம் என்றால் கேட்கவில்லையே. இந்த நிதியிலிருந்து ஏழைகளுக்கு கம்பளி வாங்கிக் கொடுத்த பிறகுதான் இவர் ஜூரம் குறையும். உடல்நிலை சரியாகும்”.

படெல் பேசி முடித்ததும் கைத்தட்டல் ஒலி பல நிமிதங்களுக்குத் தொடர்ந்து ஒலித்து.

53. சமயத்தில் உதவிய கடவுள்

கோடை காலத்தில் மாம்பழங்கள் மலிவாக்க கிடைக்கும். காந்திஜி தங்கியிருந்த ஹரிஜன விடுதிக்கு, நண்பர் ஒருவர் கூடை நிறைய மாம்பழங்கள் அனுப்பியிருந்தார். அந்தப் பழங்களில் சிலவற்றைச் சாறு பிழிந்து, ஒரு கோப்பை நிறைய, காந்திஜியிடம் கொண்டுவந்து தந்தார் அவரது உதவியாளர்.

”ஒரு கோப்பை மாம்பழச்சாறு என்ன விலை” என்று காந்திஜி வினவினார்.

உதவியாளர் எதுவும் பேசாமல், வேறு ஏதோ பணியில் இருப்பதுபோல பாவனை செய்துவிட்டு, பிறகு உள்ளே சென்றுவிட்டார்.

அரைமணி நேரம் சென்றபின் வந்தார். அந்தக் கோப்பையில் மாம்பழச்சாறு அப்படியே இருந்தது.

”பாபுஜி, தங்கள் இன்னும் இதை இருந்தவில்லையா?”

”எப்படி அருந்துவேன். இதன் விலை என்ன என்று கேட்டேன். நீ போய்விட்டாய். விலை தெரிந்துகொள்ள வருவதற்காகத்தான் போய்விட்டாய். விலை தெரிந்துகொள்ள வருவதற்காகத்தான் போயிருக்கிறாய் என்று நினைத்தேன். என்ன விலை” என்றார் மீண்டும்.

”பாபுஜி…..” என்று உதவியாளர் மழுப்பினார்.

”இன்னும் தெரிந்து கொள்ளவில்லையா! எனக்குத் தெரிந்தவரே ஒரு மாம்பழம் பத்தணா விற்கிறது. இந்தக் கோப்பையளவு சாறு தயாரிக்க சுமார் இரண்டு அல்லது மூன்று ரூபாய் செலவாகும். இது எனக்குத் தேவையே இல்லை. இவ்வளவு விலை உயர்ந்த பானம் இல்லாமலே என்னால் உயிர் வாழ முடியும். விலைவாசிகள் ஏறியுள்ள இக்காலத்தில், மக்கள் பட்டினி கிடக்கும்போது நான் மட்டும் இதை அருந்துவதா? என் மனம் வேதனைப்படுகிறது” என்று காந்திஜி கூறினார். உதவியாளருக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை.

அப்போது ஒரு ஹரிஜனப் பெண், குழந்தையுடன் அங்கே வந்தாள். அவரைக் கண்டதும் காந்திஜி, இரண்டு கோப்பைகளில் அந்தப் பழச்சாறை ஊற்றி அவர்களிடம் தந்தார்.

”கடவுள் என் மனவேதனையைக் குறைத்துவிட்டார். என்னுடன் இத்தனை நாள் பழகியிருந்தும், இவ்வளவு விலை உயர்ந்ததை எனக்குக் கொடுக்க முன் வருகிறார்களே! எனக்கெதற்கு? கடவுள் உரிய சமயத்தில், அதற்கு உரியவரை அனுப்பி வைத்துவிட்டார். நன்றி”.

காந்திஜியின் வார்த்தைகள், அவருடைய ஆழ்மனத்தின் எண்ணத்தை அப்படியே வெளிப்படுத்தியது.

அவருடைய மனத்தை நோகச் செய்ததற்காக, உதவியாளர் மன்னிப்புக் கோரினார்.

54. மன்னருக்கு மரியாதை

பாவ்நகர் மகாராஜா, காந்திஜியைக் காண விரும்புவதாக்க் கடிதம் எழுதியிர்ந்தார். அவரைக் காண காந்திஜியும் ஆவலுடன் இருப்பதாகவும் தெரிவித்து ஒரு நாளைக் குறிப்பிட்டு வருமாறு அழைப்பும் அனுப்பப்பட்டது.

காந்திஜியின் பிரார்த்தனை நேரம் முடிந்த பிறகு, மகாராஜாவை சத்திப்பதாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

காந்திஜி தமது உதவியாளரிடம், மகாராஜாவை தாம் எதிர்கொண்டு அழைக்க வேண்டும் என்றும், எனவே மாகாராஜா வந்ததும் தகவல் தெரிவிக்கவும் என்று கூறியிருந்தார்.

ஆகவே, மகாராஜவின் கார் ஆச்ரமத்தின் வாயிலை நெருங்கியதும் உதவியாளர் ஓடோடிச் சென்று காந்திஜியிடம் தெரிவித்தார்.

பிரார்த்தனைக்குப் பிறகு, காந்திஜி வெந்நீரில் தேன் கலந்து பருகுவது வழக்கம். அதைப் பருகிக் கொண்டிருந்த வேளையில் மகாராஜாவின் வருகையை அறிந்ததும், தம்ளரை அப்படியே வைத்துவிட்டு எழுந்து ஆச்ரம வாயிலுக்கு விரைந்து சென்றார். மகாராஜாவை ”வாருங்கள், வாருங்கள்” என்று கைகூப்பி வரவேற்றார்.

ஆச்ரமத்தில் இருந்தவர்களுக்கெல்லாம் வியப்புமகாராஜாவை அழைத்ததற்கு. காந்திஜி தமது அறைக்குள் சென்றார். அவர்கள் பேசிமுடித்து, மகாராஜா கிளம்பினார். அவரை வாசல்வரை சென்று வழியனுப்பிவிட்டு வந்தார் காந்திஜி. எல்லோருடைய வியப்பு எல்லை கடந்தது.

எத்தனையோ மகாராஜக்கள், பெரிய மனிதர்கள், வைச்ராய், பிரபுக்களும் வந்தபோதும், காந்திஜி இவ்வாறு மதிப்பும் மரியாதையும் அளித்த நினைவில்லையே என்று ஆச்ரமவாசிகள் பேசிக்கொண்டார்கள்.

இதனைக் கேட்ட காந்திஜி புன்னகையுடன் அவர்களது சந்தேகங்களுக்கு விளக்கம் கூறினார்.

”அரச பரம்பரைக்கே முடிவு கட்டிய நான், ஒரு மகாராஜவுக்கு இவ்வளவு மரியாதை காட்டுகிறேனே என்பது தானே உங்கள் சந்தேகம். நான் பாவ்நகரில் சமல்தாஸ் கல்லூரியில் படித்தேன். இவர் என்னுடைய நாட்டு மன்னர். இவரை நான் மதித்து தரியாதை செய்த்தில் என்ன வியப்பு இருக்கிறது! நான் செய்வது சரியா இல்லையா?”

ஆச்ரமத்தில் இருந்தவர்கள் காந்திஜியின் இயல்பை உணர்ந்துகொள்ள ஒவ்வொரு நிகழ்ச்சியும் துணை செய்தது சரியா இல்லையா?”

ஆசிரமத்தில் இருந்தவர்கள் காந்திஜியின் இயல்பை உணர்ந்துகொள்ள ஒவ்வொரு நிகழ்ச்சியும் துணை செய்தன. அவற்றுள் இதுவும் ஒன்றாக இருந்தது.

55. உழைப்பின் உயர்வு

விவசாயிகள் போராட்டத்திற்காக பீஹாரில் மோதிகரியில் காந்திஜி தங்கியிருந்தார். ராஜேந்திர பிரசாத், ராஜ்குமார் சுக்லா போன்றவர்கள் உடன் இருந்தார்கள். ராஜன்பாபுவுக்கும், சுக்லா, இன்னும் நண்பர்க்தள் சிலருக்கும் உதவி செய்ய வேலைக்கார்ர்கள் இருந்தார்கள். இச்செய்தி காந்திஜிக்கு பல நாட்கள் வரை தெரியாமல் இருந்தது.

பல விவசாயிகள் தாங்கள் தங்கியிருந்த இடத்திற்கு வருவதும் போவதுமாக இருந்தால் இந்த வேலைக்கார்ர்களும் அவர்களைச் சேர்ந்தவர்களே என்று காந்திஜி எண்ணினார்.

மோதிகாரியிலிருந்து பெட்டியா என்ற இடத்திற்கு எல்லோரும் சென்றபோதும் இந்த வேலைக்கார்ர்கள் உடன் வந்தார்கள். அப்போதுதான் காந்திஜி ராஜன் பாபுவைக் கேட்டார்., “இவர்கள் யார்? நம்முடனேயே தொடர்ந்து வருகிறார்களே?” என்றார்.

“இவர்கள் எல்லோரும் எங்களுடைய வேலைக்காரர்கள் ” என்று ராஜன் பாபு சொன்னதும் காந்திஜி, “மக்களுகுச் சேவை செய்பவர்கள் வேலைக்கு ஆள் வைத்துக் கொள்வது சரியல்ல” என்றதும் அனைவரும் தலை கவிழ்ந்தார்கள்.

“உங்களை நீங்களே கவனித்துக்கொள்ளலாமே. ஏன் அது உங்களால் முடியாதா? முடியாது என்பது பொதுச் சேவை செய்பவர்களுடைய அகராதியில் இருக்கக் கூடாது.”

காந்திஜி இவ்விதம் சொன்னபிறகு எல்லா வேலைக்கார்ர்களையும் ஊருக்கு அனுப்பிவிட்டார்கள்.

சுத்தம் செய்யவும் பாத்திரம் தேய்க்கவும் மட்டும் ஒருவனை வைதுக்கொண்டார்கள்.
அது முதல் எல்லோரும் அவர்ர் சொந்த அலுவல்களை அவரவரே செய்துகொண்டார்கள்.
உழைப்பின் உயர்வை காந்திஜி தாமும் அறிந்திருந்தார். பிறரையும் அறியச்செய்தார்.

56. சின்ன விஷயத்திலும் சிக்கனம்

குளிர் அதிகமாக இருந்ததால், ஆச்ரமவாசி ஒருர் காந்திஜியின் கால்கள் கழுவ்வவதற்கு வெந்நீர் கொண்டு வந்து வைத்தார்.

“வெந்நீரா கொண்டு வந்திருக்கிறாய்?” என்று கேட்டார்.

“ஆமாம் மிகவும் குளிராக இருக்கிறதே. தண்ணீரால் கால் கழுவினால் உங்களுக்கு உடம்புக்கு ஏதேனும் வந்துவிட்டால் என்ன செய்வது?”

“நன்றாக இருக்கிறது உன் பேச்சு. குளிர்காலத்தில் குளிக வெந்நீர் உபயோகித்தால் போனால் போகிறது. என்று விட்டுவிடலாம். கால் கழுவுவதற்கும் வெந்நீரா? பேஷ் பேஷ். விறகுகிடைப்பதே அரிதாக இருக்கிறது. இதில் கால் கழுவ வெந்நீர் தயார் செய்ய எப்படி மனம் வருகிறது உங்களுக்கு? அத்யாவசியமான உணவை பக்குவமு செய்யக்கூட விறகுகள் சுள்ளிகள் இல்லாமல் எத்தனையோ பேர் தவிக்கையில், எனக்கு வெந்நீர், அதுவும் கால் கழுவ… இனி இவ்விதம் செய்ய வேண்டாம் என்று அவர்களை எச்சரித்தார்.

மற்றொரு நாள், ஆச்ரமத்தில் மேஜையை ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்துக்கு எடுத்துச் சென்றார்கள். அப்படி எடுத்துச் செல்லும்போது அதன் மேலிருந்த கோப்பையும் தட்டும் கீழே விழுந்து நொறுங்கிவிட்டன.

ஏதோ விழுந்து உடைந்த சத்தம் கேட்டு, காந்திஜி அங்கே வந்தார்.

அதற்குள் வேறு ஒரு கோப்பையும் தட்டும் கொண்டு வந்து மேஜைமீது வைத்தார் ஒருவர்.

“கவனக்குறைவாக இருப்பதால்தானே பொருட்கள் வீணாகின்றன. மேஜையை நகர்த்துவதற்கு முன்பாகவே கோப்பையை பத்திரமாக எடுத்து வைத்திருக்கலாமே. நாம் பரிய லட்சாதிபதி இலை. கோப்பையை உடைத்து விட்டு புதிது பதிதாக வாங்க நான் பணக்காரன் இல்லை. மிகவும் ஏழை. அதனால்ல் இருப்பதை இனிமேலாவது கவனமாகப் பாதுகாத்து வாருங்கள். என் பணியை நானே செய்யாமல, உங்களையெல்லாம் செய்யச்சொல்கிறேன் பாருங்கள். அதுதான் குற்றம்”. காந்திஜி தன்னைத்தானே குறை கூறிக்கொண்டதைப் பார்த்ததும் ஆச்ரமவாசிகளுக்கு மிகவும் வேதனை ஏற்பட்டது.

எக்காலத்திலும் இனி, கவனக்குறைவாக நடந்து கொள்ளக்கூடாது என்று அவர்களை உணரச் செய்துவிட்டார் காந்திஜி. சின்னச்சின்ன விஷயங்களிலும் சிக்கனமும் கவனமும் கொண்டு, அதைப் பிறரும் அறியும் வண்ணம் செய்தார் அண்ணல்.

57. மனுபென் செய்த பணி

தில்லியல் வைச்ராயை காந்திஜி சந்திக்கச் செல்லும் சமயம், அவரைக் காண ராஜாஜி தில்லிக்கு வந்திருந்தார். காந்திஜி குளிப்பதற்காக தண்ணீர்த் தொட்டியில் அமர்ந்திருக, அதனருகே நாற்காலியில் ராஜாஜியும் அமர்ந்தார்.

குளிக்கும் முன்பாக காந்திஜிக்கு மனுபென் முகச்சவரம் செய்வது வழக்கம்.

காந்திஜி மனுவை அழைத்தார். அவள் வரவில்லை. ‘ஏன்’ என்று வினவினார். ராஜாஜி இருக்கும்பொழுது செய்ய மனு வெட்கமுற்றாள்.

“மனு இதற்காகவா வெட்கப்படுகிறாய்? இந்தக் கலையில் தேர்ச்சி பெற்றதாக சந்தோஷப்படு. நாளைக்கே காந்திஜியின் சிபாரிசுக் கடித்த்தோடு நீ ஒரு சிகை அலங்காரக் கடை நடத்தலாமே” என்று ராஜாஜி சொன்னதும் மூவரும் சிரித்து மகிழ்ந்தார்கள்.

காந்திஜிக்கு முகச்சவரம் செய்ய தயக்கமின்றி மனு முன் வந்தாள். இறக்கும் வரை, அவருக்கு தினமும் முகச்சவரம் செய்வதை பெரும் பாக்யமாகவே கருதினாள். யார் வந்தாலும் அவர்களிடம் மனுவை அறிமுகப்படுத்துவார். “இவள்தான் எனக்கு தினமும் முகச்சவரம் செய்கிறாள்” என்று மறக்காமல் கூறுவார். இப்படிச் சொல்லியே, மனுவின் கூச்சத்தை அவர் போக்கிவிட்டார்.

குளியல் தொட்டியில் அமர்ந்து கொள்ளும்போது முகச்சவரம் செய்ய வருவாள். சில நாட்களில் அவள் செய்யும்போதே உறங்கிவிடுவார். முகச்சவரம் முடிந்ததும், உறக்கம் நீங்கி புத்துணர்ச்சியோடு எழுவார். அநேகமாக, காலையில் விரைவாக எழுந்து முகச்சவரம் செய்து கொள்வது அவருக்குப் பழக்கமாகிவிட்டது.

ஒருமுறை காந்திஜி ஹரிஜன விடுதியொன்றில் இருக்கும்பொழுது அவரைக்காண மௌண்ட்பாட்டன் பிரபுவின் மனைவி வந்திருந்தார்.

அப்போதும் காந்திஜி மனுபென்னை அறிமுகப்படுத்துவதை விடவில்லை.

“இவள்தான் மனு, இவள் இருக்கிறாளே, சோப்புப் போடாமலேயே மிகவும் கச்சிதமாக முகச்சவரம் செய்து விடுவாள். கெட்டிக்காரி, எப்படித்தெரியும் என்கிறீர்களா? தினமும் எனக்கு முகச்சவரம் செய்வது இவள்தான்” என்று காந்திஜி பொக்கைவாய் திறந்து சிரித்தார்.

“ஓ அப்போது உண்மையிலேயே இவள் கெட்டிக்காரிதான்” என்று மௌண்ட்பாட்டனின் மனைவியும் மனுவுக்கு புகழ்மாலை சூட்டினாள்.

58. உண்மையான சுதந்திரம் எது?

மனுபென் காந்தி, காந்திஜியுடன் இருந்தவள். காந்திஜியிடம் பக்தியும் அன்பும் உடையவள். அவருக்குத் தொண்டு செய்வதே வாழ்வின் லட்சியமாக்க் கொண்டு காந்திஜியுடன் ஆச்ரமத்தில் வாழ்ந்தவள்.

அன்றாடம் ஆச்ரமத்திற்கு நிறையக் கடிதங்கள் வரும். அவற்றைப் பிரித்து காந்திஜியின் பார்வைக்கு, மனுபென் வைப்பது வழக்கம்.

“சுகரவர்த்திகு, நீங்கள்பணிந்து பணிந்து கடிதங்கள் எழுதினீர்கள் அல்லவா? அதற்கு அந்த மனிதர் எப்படி பதில் எழுதியிருக்கிறார் பாருங்கள். சிலபேர், வாழ்வில் திருந்தவே மாட்டார்கள் என்பதற்கு இது சாட்சியாக இருக்கிறது” என்று கூறியபடி கடித்த்தை மனுபென் காந்திஜியிடம் அளித்தாள்.

“மனு, நீ இப்போது, அவரை சுகரவர்த்தி என்று குறிப்பிட்டாய் இல்லையா?”

“ஆமாம் பாபுஜி, அதற்கென்ன?”

“இவ்வாறு கூறுவது சரியா? சுகரவர்த்தி உன்னைவிட வயதில் சிறியவரா?”

“இல்லை” என்று சொல்லும்போதே மனுபென் தன் தவறை உணர்ந்தாள்.

“உன்னைவிட வயதில் மூத்தவர்; ஒரு பெரிய மாகாணத்தின் பொறுப்பு மிக்க அமைச்சர் பதிவியில் இருப்பவர். அவர் பெயரைக் கூறும்பொழுது ‘சாகேப்’ என்று சேர்த்துச் சொல்ல வேண்டும். பேச்சில்கூட அவமரியாடை தொனிக்க்கூடாது. அதுவும் அகிம்சைக்குப்புறம்பானதுதான். உன் மனத்தில் அவர்மீது கொண்டுள்ள வெறுப்பால்தான் இவ்வாறு மரியாதையின்றி அவர் பெயரைக்கூறினாய்! மனு, எது எப்படி இருந்தாலும் பிரிட்டிஷ் மக்களிடம் உள்ள நல்ல வழக்கங்களை நான் பின்பற்ற வேண்டும்.

“தேவையில்லாத உடைப்பழக்கம், உணவுப் பழக்கங்களைப் பின்பற்றுகிறோம். தேவையானதை கடைப்பிடிக்க மறுக்கிறோம். தன் கீழே பணிபுரிகிறவர்களிடம் ஒரு வேலையைச் செய்யச் சொன்னால்கூட, “தயவு செய்து செய்யுங்கள்ம என்கிறார்கள். செய்து முடித்தபிறகு மறக்காமல் ‘நன்றி’ அல்லது ‘வந்தனம்’ என்று சொல்வார்கள், நாம், நம் குழந்தைகளுக்கும் இளம் தலைமுறைக்கும் பணிவைக் கற்றுத்தர வேண்டும். ஒழுக்கம், பண்பு,மதம், சமூகம், பொருளாதாரம் எல்லாவற்றிலும் இந்த நாடு முன்னேறினால்தான் உண்மையான சுதந்திரமாகும். இல்லையென்றால் அது வெறும் அரசியல் சுதந்திரம்தான்” என்றார்.

மனுபென், இந்த கருத்தாழமுள்ள பாடத்தை வாழ்நாள் முழுவதும் மறக்காமல் இருந்தாள்.

59. பாம்புப் பழமொழி

குஜராத்தி மொழியில் பழமொழி ஒன்று உண்டு. ‘செத்த பாம்பும் பயன்படும்’. ஒருநாள் சபர்மதி ஆச்ரமத்தில் காந்திஜிக்கும் வல்லபாய் படேலுக்கும் இந்தப் பழமொழி எப்படித்தோன்றியிருக்கும் என்பதில் வாத விவாதங்கள் ஏற்பட்டன.

அப்போது வல்லபாய் படேல் ஒரு கதை சொன்னார்.

“ஒரு பனியா இருந்தான். (காந்திஜியும் பனியா வகுப்பைச்சேர்ந்தவர்) அவனுடைய வீட்டில் பாம்பு வந்துவிட்டது. பனியா மிகவும் பயந்த சுபாவம் உடையவன். அவன் பாம்பை அடிக்க பயந்தான். பாம்போ நடு வீட்டில் இருந்தது. அதை அடிக்கயாரையும் அழைக்கவும் முடியவில்லை. வீட்டிலும் வேறுயாருமில்லை. பாம்பு சமையலறையருகே சென்றதும் ஒரு பெரிய பானையை எடுத்து, பனியா அப்படியே பாம்பின்மீது கவிழ்த்து வைத்துவிட்டாள். யாராவது ஆள்கிடைத்தால் அடித்துப் போடலாம் என்று இருந்தான். இரவானதும் தூங்கிவிட்டான்.

அன்று அவனுடைய வீட்டிற்கு திருடர்கள் வந்தார்கள். வந்தவர்கள் கவிழ்ந்து கிடந்த பானையைத்தான்முதலில் திறந்தார்கள். பானைக்குள் இருந்த பாம்பு சீறி வெளியே வந்து திருடர்களைக் கடித்துவிட்டு வெளியேறிவிட்டது”

இதுதான் அந்தப்பழமொழியின் கதை என்றார் பட்டேல்.

நான் ஒரு கதை சொல்கிறேன் என்று காந்திஜி துவங்கினார்.

“ஒரு கிழவியின் வீட்டுக் கூரைமீது யாரோ செத்த பாம்பை வீசி எறிந்துவிட்டார்கள. கழுகு ஒன்று, எங்கிருந்தோ ஒரு தங்கச்சங்கிலையை தூக்கிக்கொண்ட பறந்து வந்தது. கூரைமீது இருந்த செத்த பாம்பைக் கண்டதும் அதை எடுக்க விரைந்தது. அபோது அதன் வாயில் இருந்த தங்கச் சங்கிலி கிழவியின் வீட்டு வாயிலில் வழுந்துவிட்டது. செத்த பாம்பும் பயன்தந்தது என்பதற்கு இதுதான் சரியான கதை” என்றார் காந்திஜி. படேல்கூறிய கதையில் பாம்பு உயிருடன் இருந்ததே.

ஆயினும் இருவரும் கவிஞர் நரசிகராவிடம் கேட்டு முடிவு செய்துகொள்ள எண்ணினார்கள்.

60. ஆச்ரமத்திற்கு ஆசி தர வந்தவர்

காசி இந்து பல்கலைக்கழகத்தில் காந்திஜி ஆற்றிய உரையை பத்திரிகைகள் வாயிலாக அறிந்த அந்த 21 வயது மாணாக்கன், காந்திஜியைக் காண விழைந்தான்.

வீட்டைத் துறந்து, ஊர் ஊராகச் சென்ற அந்த மாணாக்கன் – அவன்தான் வினோபா பாவே – காந்திஜியால் ஈர்க்கப்பட்டான். அவருக்கு இருமுறை கடிதங்கள் எழுதினான். நேரில் வரும்படி காந்திஜி பதி எழுதினார். வினோபா,காந்திஊஇயை சத்யாக்கிரக ஆச்ரமத்தில் சந்தித்தார்.

இருவரும் முதல்முறையாப் பார்த்துக்கொண்டபோதே, வர்கள் உள்ளங்கள் உறவாடின; ஒன்றாகிக்கலந்தன. வானிலிருந்து பொழியும் மழையை பூமி ஏற்பதுபோல வினோபாவை, காந்திஜி ஏற்றார். காந்திஜியை, வினோபா குருவாக எண்ணினார்.

ஆச்ரமத்தில் தவ வாழ்க்கை வாழலானார் வினோபா, காந்திஜி வினோபாவின் வாழ்க்கையைப் பற்றித் தெரிந்துகொள்ள முயலவில்லை. ஆனால் ஒருநாள் ஆச்ரமவாசியொருவரின் வாயிலாக, வினோபாவைப் பற்றிய உண்மையை அறிந்தார். சந்நியாசியாக வேண்டும் என்ற எண்ணத்துடன் வீட்டை விட்டு வெளியேறி வந்தவர் வினோபா என்று தெரிந்ததும், காந்திஜி வினோபாவின் தந்தைக்கு தகவல் தெரிவிக்க விரும்பினார்.

“வினோபா என்ற உங்களுடைய பிள்ளை, தற்போது என்னுடன் ஆச்ரமத்தில் இருக்கிறார். அவருக்கு இளம் வயதிலே ஆன்மீக நாட்டமும் அதற்கேற்ற பக்குவமும், தேச சேவையிலே ஈடுபட வேண்டும் என்று ஆவலும் இருப்பது வியப்பானதாகும். நான் இந்த நிலையை அடைய எனக்கு பல ஆண்டுகள் ஆயின. மிகுந்த முயற்சியினால் நான்பெற்றுள்ள பக்குவத்தை, வினோபா மிக இளவயதிலேயே, மிக எளிதாகப் பெற்றிருப்பது நீங்கள் செய்த பாக்கியம்.”

காந்திஜியின் பாராட்டையும் புகழ்மாலையையும் கேட்டு, வினோபா மகிழ்ந்து போய்விடுவதில்லை. ‘என் கடன் பணி செய்து கிடப்பதே’ என்று கொள்கையுடன் செயலாற்றுவார்.

“ஆச்ரமத்தில் ஆசி பெற வந்தவர் இவரல்லர்; இவர் ஆச்ரமத்திற்கே ஆசி தர வந்தவர்” என்று காந்திஜி பலமுறை கூறியிருக்கிறார். காந்திஜியை குருவாக எண்ணியவர். பின்பு தந்தையாக மதித்து, அவர் வழி நடந்தார்.

61. காந்திஜியும் முகமுது அலியும்

இந்திய நாடு, அன்னியத் துணியினால்தான் அடிமைப்பட்டது. பின்னாளில் ஆட்சியைக் கைப்பற்றினார்கள். ஆகையால் அன்னியத்துணிகள் அடிமைத்தனத்தின் சின்னம் என்று காந்திஜி கருதினார்.

சுதந்திரப்போராட்டத்தில், “அன்னியந் துணி எரிப்பு” முக்கியப் பங்கு வகித்தது. 1921 -ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 1-ம் தேதியன்று பம்பாய் சௌபாத்தி கடற்கரையில், மெபெரும் கூட்டம் ஏற்படாலாயிற்று. சுமார் ஐந்து லட்சம் மக்கள் வந்திருந்தார்கள். பம்பாயில் வசிப்பவர்கள் எல்லோரும் தங்களிடமிருந்த அன்னியத் துணிகளை கடற்கரையில் மேடையில் முன்பு மலைபோல குவித்தார்கள்.

அந்த துணி மலைக்கு காந்திஜி தீ மூட்டினார். பெரும் ஜ்வலையுடன் எரிந்தபோது, மக்கள் ‘வந்தே மாதரம்’ என்று முழங்கினார்கள்.

துணிகள் எரிந்ததுபோல அடிமைத்தனமும் அழிந்தது என்று எண்ணி உற்சாகமடைந்தார்கள்.

அன்னியத் துணி எரிப்புக்குப்பிறகு காந்திஜியும் மௌலான முகம்மது அலியும் சுற்றுப்பயணம் செய்யக்கிளம்பினார்கள். 1921-ஆகஸ்டு 14-ம் தேதியன்று அவர்கள் சென்னைக்கு வந்து கொண்டிருந்தார்கள்.

வரும் வழியில் வால்டேர் நிலையத்தில் ரயில் நின்றது. ரயில் நிற்கும்போதெல்லாம் காந்திஜியும் அலியும் ரயிலை விட்டு இறங்கி, அங்கே கூடியிருக்கும் மக்களிடம் பேசுவது வழக்கம்.

அதுபோன்று வால்டேர் நிலையத்திலும் இருவரும் இறங்கினார்கள். காந்திஜி முன்னால் நடக்க, அலி பின்தொடர்ந்தார். சற்று நேரத்தில் சில போலீஸ் அதிகாரிகள் முகமது அலியின் கையைப் பிடித்து இழுத்துச் சென்றார்கள். அவரும் ‘போய் வருகிறேன்’ என்று கையசைத்து காந்தியை நோக்கியபடியே சென்றார்.

இதைக்கண்டு காந்திஜி செயலிழந்து நின்றார்.

காந்திஜிக்கும் முகமது அலி, அவரது சகோதரர் ஷவுகத் அலி இருவருக்கும் இடையிலான நட்பு இணையற்றதாக இருந்தது.

அகிம்சை, அமைதி இவற்றைப் பற்றி சிறிதும் அறியாத இந்தச் சகோதர்ர்கள்,காந்திஜியிடம் கொண்ட அன்பால் அகிம்சையை, அறப்போரை மேற்கொண்ட அதிசயம், எல்லோரையும் வியக்க வைத்த ஒன்றாகும்.

“நான் மௌலானா ஷவுகத் அலியின் சட்டைப் பையிலே இருக்கிறேன்” என்று காந்திஜி பலமுறை கூறுவதுண்டு, அலி சகோதர்ர்களிடம் அன்பு கொண்ட காந்திஜிக்கு, தன்னுடன் வந்த முகமது அலியை, போலீஸ் கைது செய்து அழைத்துச் சென்றதும் பேரதிர்ச்சியாக இருந்ததில் வியப்பென்ன?

பின்பு காந்திஜி பயணத்தைத்தொடர்ந்தார். “அலி சகோதர்ர்களுக்கு நாம் என்ன செய்ய வேண்டும்” என்று தொடங்கி ‘யங் இந்தியா’வுக்குக் கட்டுரை எழுதினார்.

சௌபாத்தியிலிருந்து ஆல்டேர் ரயில் நிலையம் வரைநகாந்திஜியின் இதயம் நட்பில் மிதந்தது.

62. கதர் ஆடை

அன்னியத் திணியை அணிய வேண்டாம். கதர் அணி அணியுங்கள் என்ற பிராசாரத்தை காந்திஜி போகும் இடங்களில் எல்லாம் செய்து வந்தார்.

காந்திஜி மதுரையில் தங்கியிருந்தபோது, அவரைக்காண பலபெரிய மனிதர்கள் வந்தார்கள். ஒருவர் அன்னியத் துணியை அணிந்திருந்ததை காந்திஜி பார்த்தார்.

‘நாடெங்கும் அன்னியத்துணிகளுக்கு எதிராக வேள்வி நடத்துவது பற்றி உங்களுக்கு தெரியாதா? இதெல்லாம் பார்த்தபிறகு அன்னியத் துணியை அணிந்து கொண்டிருக்கிறீர்களே? ஏன் கதர்த்துணியை அணியவில்லை?” என்று கேட்டார்.

“கதர்த்துணியை உடுத்த எனக்கு மிகவும் விருப்பம். ஆனால் கதர் கிடைக்கவில்லையே. நான் என்ன செய்வேன்?” என்றார் அந்தப் பிரமுகர்.

இதைக் கேட்டதும் காந்திஜியின் சிந்தனையில் பொறி தட்டியது. கதர்கிடைக்காத காரணத்தால்தான் இவர் அணியவில்லை என்று எண்ணிக்கொண்டே தன்னையே உற்றுப்பார்த்தார். இடுப்பில் பத்து முழ வேட்டி, இரண்டு சட்டைகள், தலையில் குல்லா, இத்தனையும் தைக்க எவ்வளவு கதர்த்துணி ஆகியிருக்கும். இவ்வளவு ஏவையா என்று எண்ணம் காந்திஜிக்கு தோன்றியது.

காந்திஜி தென்னாட்டில் பயணம் செய்யும்பொழுதெல்லா, அவர்களுடைய உடைப்பழக்கத்தையும் கவனிப்பார். தமிழ்நாட்டில் உடைப்பழக்கத்தையும் கவனிப்பார். தமிழ்நாட்டில் ஏழை விவசாயிகள் பெரும்பாலோர் இடுப்பில் முழத்துண்டு மட்டுமே அணிந்து வேவை செய்வதை அவர் பாத்த்திருக்கிறார். ஒரு துணிக்கு அதிகமாக இரண்டாவது துணி வாங்கவும் இயலாத ஏழைகள் நிறைந்த இந்த நாட்டிலே, தமக்கெதற்கு இவ்வளவு ஆடைகள் என்று எண்ணினார்.

மறுநாள் காந்திஜி, தம்முடன் பயணம் செய்த நண்பர்களை அழைத்தார்.

“இனி நான், ஒரு முழத்துண்டு மட்டுமே உடுத்தப்போகிறேன். குளிர்காலங்களில் மட்டும் போர்வை போர்த்திக்கொள்வேன். இனி இதுவே என் உடை” என்று திட்டவட்டமாக்க் கூறினார்.

கைராட்டைக்கும் கதருக்கும் அவரது உடையே தகுந்த பிரசாரம் ஆயிற்று.

63. மௌலானா ஸோபானியின் உத்தி

காந்திஜி மதுரையில் தமது சுற்றுப் பயணத்தை முடித்துக்கொண்டு திருநெல்வேலிக்கு வந்து சேர்ந்தார். தமிழ்நாட்டுக்கு வந்தபிறகு, தமிழ் விவசாயிகைப் போல உடையணிய விரும்பி, காந்திஜி தானும் அவ்வாறு முழந்துண்டு அணிந்ததைக் கேள்வியுற்று பலர் அவரைக் காண வந்தார்கள்.

காந்திஜி தங்கியிருந்த வீட்டிற்கு முன்னால் பெருங்கூட்டம், காந்திஜியைக் கண்டு பேச விரும்புபவர்கள், அவரது கொள்கைகளைக் கடைப்பிடிக்கிறார்களா என்பது சந்தேகம். இதைத் தெரிந்துகொள காந்திஜி யுடன் இருந்த மௌலானா ஸோபானி என்பவர் முயன்றார்.

மதுரையில் இருந்தபோது, காந்திஜி தமது உடையைக் குறைத்து முழந்துண்டு அணிந்தும் மௌலானா ஸோபானியும் யோசித்தார்.
இவர், காந்திஜி இருந்த வீட்டின் வெளியே வந்து அமர்ந்தார்.

காத்திருந்த மக்களிடம், “நீங்கள் அணிந்திருக்கும் அன்னியத் துணிகளை இங்கே எறிந்துவிட்டு உள்ளே போகலாம்” என்றார்.

மௌலானா ஸோபானி கூறியதைக்கேட்டு சிலர், தாங்கள் அணிந்திருந்த அன்னியத் துணிகளைக் கழற்றி எறிந்தார்கள். பின்பு காந்திஜியைப் பார்க்கச் சென்றார்கள். ஆனால், பலர், இதனைச்செய்ய முன் வரவில்லை. தங்களுடைய ஆடைகளைக்கழற்றத் தயங்கி, காந்திஜியைப் பார்க்கும் விருப்பத்தைக் கைவிட்டு அங்கிருந்து சென்றார்கள்.

காந்திஜயைப் பார்த்துப்பேசி அவரது பொன்னான நேரத்தை அவர்கள் வீணாக்கியிருப்பார்கள். மௌலானா ஸோபானி தமது உத்தியினால் அவ்வாறு நடக்காமல் பார்த்துக்கொண்டார்.

64. ஏலத்தில் திரட்டிய நிதி

பொதுப்பணிக்கு நிதி திரட்டுவதில் காந்திஜி மிகவும் கெட்டிக்கார்ர். திலகர் சுயராஜ்ய நிதிக்கு ஒரேநாளில் பம்பாயில் ஐந்து லட்சம் ரூபாய் திரட்டித் தந்தவர். ஒரு சமயம் காந்திஜி ஈரோட்டுக்கு வந்தார். அச்சமயம் ஈரோட்டில் காங்கிரஸ் தலைவராக இருந்தவர் திரு. ஈ.வெ. ராமசாமி நாயக்கர் ஆவார்.

காந்திஜி காங்கிரஸ் தலைவரின் இல்லத்தில் தங்கினார். அன்றுமாலை பொதுக்கூட்டம் ஒன்று நடைபெற்றது. ஈரோட்டில் ஆற்றங்கரையில் நடைபெற்ற அக்கூட்டத்திற்கு நகர மக்கள் அனைவரும் திரண்டு வந்திருந்தார்கள்.

பலரும் அதில் பேசினார்கள். காந்திஜியும் பேசினார். தீண்டாமை என்ற அநீதியைப் போக்க வேண்டும் என்பது பற்றிப் பேசினார்.

காந்திஜியிடம் மதிப்பும் மரியாதையும் வைத்திருந்த பல சமூக அமைப்புகளின் சார்ப்பில் காந்திஜிக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. வாழ்த்துகள் கொடுக்கப்பட்டன.

பரிசுப் பொருள்காளக்க் கொடுக்கப்பட்டவைகளை, வெள்ளிப் பேழைகள், பெட்டிகள், என்று விலையுயர்ந்த தாக இருந்தன.

தென்னாப்பிரிக்காவில் பொதுச்சேவைக்குக் கிடைத்த பரிசுகளை பொதுநல நிதிக்கே சேர்த்து அளித்தார். அதற்குப் பிறகு காந்திஜி எந்த ஊரில் யார், எதை அளித்தாலும் அவற்றைப் பொதுநிதிக்கே அளித்துவிடுவது அவருடைய வழக்கமாயிற்று.

ஈரோட்டில் கொடுக்கப்பட்ட பரிசுப்பொருட்களை உடனே அவ்விடத்திலேயே ஏலத்திற்கு விட்டார்.

பொருளி விலையை விடவும் அதிகமான பணம், அப்பொருளுக்கு ஏலத் தொகையாக்க் கிடைத்ததும் அதனை அப்படியே திலகர் சுயராஜ்ய நிதியில் சேர்த்து விட்டார்.

காந்திஜியின் கையால் பெறுவதற்காகவும் அவருக்கு அளித்த பொருளைத் தாம் பெற்று அவரது நினைவாக வைத்திருக்கவும் மக்கள் விரும்பினார்கள். ஏலத்தில் அதிக தொகை கொடுத்து வாங்கினார்கள்.

காந்திஜிக்கு இதனால் பொதுநிதிக்கும் பணம் கிடைத்து வந்தது.

65. நகைகளை ஏன் சுமக்கிறீர்கள்?

காந்திஜி தமிழ்நாட்டுப் பெண்கள், கழுத்திலும் கைகளிலும் நிறைய தங்க நகைகளை அணிந்திருப்பதைப் பார்த்தார். அவரைக் காண வரும் பெண்மணிகளிடம், “உடம்பில் ஏன் இவ்வளவு தங்கத்தைச் சுமக்கிறீர்கள்? என்னிடம் தந்தால் நான் அதை நல்லபணிக்கு செலவு செய்வேனே” என்று கேட்டுவிடுவார்.

காந்திஜி ஈரோட்டிலிருந்து சேலத்திற்குச் சென்றார். சேலத்தில் காந்திஜி தங்கியிருந்தபோது அவரைக் காண சேலம் பிரமுகரும் காங்கிரஸ் தலைவருமான டாக்டர் வரதராஜூலு நாயுடு வந்தார்.

காந்திஜியைப் பார்க்கும் ஆவலுடன், அவருடன் அவருடைய குடும்பத்தாரும் வந்திருந்தார்கள்.

வரதராஜூலுநாயுடுவின் ஏழுவயது பெண் காந்திஜியின் அருகில் வந்து உட்கார்ந்தாள். அவள் கைகளில் தங்க வளையல்கள் இருந்ததை அவர் பார்த்தார்.

“பாப்பா, இந்த வளையல்கள் உனக்கு அழகாக இருக்கின்றன. ஆனால் இதை நீ எனக்குக் கொடுத்தால் ரொம்ப உபயோகமாக இருக்கும்; கொடுப்பாயா?” என்றார்.

காந்திஜியின் மென்மையான பேச்சும், கனிவும், அன்புப் பார்வையும் கண்ட அச்சிறுமி, அவருக்கு தன் வளையலைக்கொடுத்துவிட முன்வந்தாள்.

அவசர அவசரமாக வளையல்களைக்கழற்றி, “இந்தாருங்கள், எல்லா வளையல்களையும் நீங்களே வைத்துக்கொள்ளுங்கள்” என்று கொடுத்தாள்.

“பாப்பா, நான் சும்மா விளையாட்டுக்காக கேட்டேன். இதை நீ கையிலே போட்டுக்கொள்” என்று காந்திஜி அவளிடம் வளையல்களைத் திருப்பிக்கொடுத்தார்.

ஆனால் சிறுமியோ, பலமுறை காந்திஜி வறுபுறுத்திய பிறகும் வளையல்களை வாங்கிக்கொள்ள மறுத்தாள்.

காந்திஜி அவற்றையும் பொதுநிதிக்கு அளித்தார்.

66. அகிம்சை வீர்ர்களின் ஆயுதம்

ஒருநாள் மகன்வாடியில்காந்திஜி கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்தார். குளிர்கால இரவு நேரம். வெகுவிரைவில் சூரிய அஸ்தமனம் ஆனதால் விளக்குகள் ஏற்றப்பட்டன. ஆயினும் போதிய வெளிச்சமில்லை. மரத்தடியில் மேடை போடப்பட்டிருந்தது. அங்கே அமர்ந்து காந்திஜி பேசினார்.

குளிர் அதிகம் என்பதால் கஸ்தூரிபாய் ஒரு கதர் சால்வையைக் கொண்டுபோய் காந்திஜிக்கு போர்த்திவிட்டுச்சென்றார்.

அகிம்சைப்பற்றி காந்திஜி பேசிக்கொண்டிருந்தார். கேட்டுக்கொண்டிருந்த ஜனங்களிடையே திடீரென்று ஒரு பரபரப்பு.

என்னவென்று புரியாவிடினும் காந்திஜி பேசுவதை நிறுத்தவில்லை.

காந்திஜியின் எதிரில் இருந்தவரின் பார்வையில் பயம் இருந்தது.

“ராம், ராம்! தயவுசெய்து ஆடாமல் அசையாமல் உட்கார்ந்திருங்கள்” என்று அவர் கூறினார்.

“என்ன விஷயம்? ஏன் அப்படிப்பார்க்கிறீர்கள்? என்ன நடந்தது சொல்லுங்கள்?” என்று காந்திஜி அமைதியாகக் கேட்டார்.

“உங்கள் தலைமீது ஒரு நாகப்பாம்பு படமெடுத்து நிற்கிறது! அசையாதீர்கள். நாங்கள் எல்லோருமாக அதை அடித்துக் கொன்றுவிடுகிறோம்” என்றார்கள்.

“நண்பரே, நாம் இப்போது அகிம்சையைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறோம். அகிம்சை என்பது கோழைத்தனம் அல்ல. அது வீர்ர்களின் ஆயுதம். அகம்சை போதிக்கும் நான் இம்சை செய்ய ஒருக்காலும் அனுமதிக்க மாட்டேன். பாம்பை யாரும் அடிக்கக்கூடாது.” என்றார் காந்திஜி.

எல்லோரும் பயந்து நடுங்கினார்கள். பாம்பு காந்திஜியைத்தீண்டிவிடுமோ என்று அஞ்சினார்கள்.

ஒருசிலர் முன்னால் வந்து, “அசையாமல் இருங்கள், பாம்பை அடிக்காமல் அப்படியே போர்வையுடன் பிடித்து தூர எறிந்துவிடுகிறோம்” என்றார்கள்.

காந்திஜி இதற்கு இணங்கினார். ‘ராம், ராம்’ என்று உச்சரித்தப்படியே அசையாமல் இருந்தார். பாம்பை அப்படியே போர்வையால் சுற்றிப் பிடித்து தூர வீசி எறிந்தார்கள்.

அகிம்சையை ஏற்பவர்கள் அச்சத்தை உதற வேண்டும். என்று காந்திஜி எல்லோருக்கும் கூறினார்.

67. தினசரித் தாளின் பயன்

ஆகாகான் மாளிகையில் காந்திஜி இருந்த காலம் அப்போது தினசரி காலண்டரில், தாளைக் கிழிப்பது மீராபெஹனின் வேலை. அதை அவளைத் தவிர வேறு யாரும் செய்ய மாட்டார்கள். அவளுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டபோது, தினசரித் தாளை யாரும் கிழிக்கவில்லை. இதனை மனுபென் அறிது, தாளை அகற்றினார். அதற்குப்பிறகு, தினசரித் தாளை அகற்றுவது மனுபென்னின் வேலையாயிற்று.

தினசரி காலண்டரிலிருந்து எடுக்கும் தாள்களைச் சேர்த்து ஒரு சிறிய நோட்டுப்போல் தைத்து வைப்பது வழக்கம். காந்திஜி மௌன தினங்களில், இந்த நோட்டுத் தாள்களில் தமது குறிப்புகளை எழுதுவார். பல காலமாக இது நடைமுறையில் இருந்து வந்தது. ஆனால் மனுபென்னுக்கு இதைப்பற்றித் தெரியாது. ஆனால், மனுபென்னுக்கு இதைப்பற்றித் தெரியாது. அவள், தாளைக்கிழித்தும் கசக்கி எறிந்துவிட்டாள்.

காந்திஜி, தாள்கள் அடங்கிய நோட்டில் எழுதும்போது ஒருநாள் தாளை அதில் காணவில்லை. அது எங்கே என்று கேட்டார்.

மனுபென் “நான்தான் நாள்தாளைக் கிழித்தேன்” என்றதும், “அது எங்கே? என்றார் அவர். கடந்துபோன நாள்தாள் எதற்கு என்று மனுபென் யோசித்தாள். ஆயானும் காந்திஜி அதை எப்படியாவது தேடிக் கொண்ட வரச் சொன்னதும், மனுபென் திகைத்தாள்.

கசக்கி தூக்கி எறிந்துவிட்ட சிறிய தாளை, இவ்வளவு பெரிய மாளிகையில் எங்கே தேடுவது? தேடாவிட்டால் காந்திஜி விடமாட்டார். அவருடைய பிடிவாதம் தெரிந்ததுதானே!

மனுபென், மாளிகையின் பணியாட்கள், தோட்ட வேலை செய்யும் எரவாடா கைதிகள் அனைவரும் அந்த காணாமல் போன தினசரித்தாளைத் தேடினார்கள். வெகுநேரம் தேடியபிறகு, அத்தாள், சுருட்டி மடக்கிய நிலையில் மகாதேவ் தேசாயின் சமாதியின் அருகே கிடந்தது.

ஓடோடிச் சென்று அதனை எடுத்து, காந்திஜியிடம்,மனுபென் கொடுத்தாள். இழந்த சொத்து கிடைத்ததுபோல் அவர் மகிழ்ந்தார்.

அதை நோட்டில் உரிய இடத்தில் பொருத்தினார்.

தினசரித்தாள், மிகச்சிறிய காகிதம்தான். ஆனால் அதிலும் ஒரு பயன் இருக்கிறது. தாளின் பின்புறமுள்ள வெற்றுப்பகுதியில் குறிப்புகள் எழுதலாம் என்பதே அவர் கற்றுத்தந்த பாடம்.

சிறிய பொருளானாலும் அதனிலும் பயன் இருக்கிறது வீணக்கக்கூடாது என்று சொல்லாமல் விளங்க வைத்தார்.

68. மகாத்மா கோகலே

1896 ஆம் ஆண்டு முதல் கோகலேயை அரசியல் குருவாக்க்கொண்டு அவரது அரசியல் வாழ்வை லட்சியமாக எண்ணிப் பின்பற்றியவர் காந்திஜி.

கோபாலகிருஷ்ண கோகலேயை காந்திஜி, ‘மகாத்மா கோகலே’ என்றே கூறினார்.

“நீ எதைச்செய்தாலும் எதை உண்டாலும் எதை தியாகம் செய்தாலும் அவை அனைத்தையும் எனக்கே அர்ப்பணம் செய்துவிடு” என்று கீதையில் கண்ணன் அர்ஜூன்னுக்கு உபதேசம் செய்தார்.

மகாத்மா கோகலேயும் இதே உபதேசத்தின் வழி நிற்பவர்தாம் என்பார் காந்திஜி “கோகலே எதைச் செய்தாலும் எதை அனுபவித்தாலும் அவை எல்லாவற்றையும் தமது தாய்நாட்டுக்கே அர்ப்பணித்தார்.

கோகலேயே ‘குரு’ என்று கூறிவந்த காந்திஜி, அந்த வார்த்தையின் முழுப்பொருளும் உணர்ந்திருந்தார்.

தென்னாப்பிரிக்காவில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தபோது, தம்மிடம் சேர்ந்துள்ள நிதி விவரங்களையும் அதற்கான செலவையும் அவ்வப்போது கடிதம் மூலம் கோகலேயிடம் தெரிவித்து வந்துள்ளார். அவ்விஷயங்களில் அவருடைய ஆலோசனையையும் கேட்டு அதன்படி நடந்துவந்தார்.

காந்திஜியின் அழைப்பை ஏற்று கோகலே தென்னாப்பிரிக்காவில் இருந்த டால்ஸ்டாய் பண்ணைக்கு விஜயம் செய்தார். அவருக்கென்று தனியறையை காந்திஜி ஏற்பாடு செய்திருந்தார். கோகலேயின் ருசியும் பசியும் அறிந்து காந்திஜியே சமையல் செய்தார். கோகலேயின் உடைகளை சுத்தம் செய்து கொடுப்பதும் காந்திஜியே.

ஒருநாள் காந்திஜி கோகலேயின் துணிகளை சுத்தம் செய்யும்போது, கம்பளி ம்ப்ளரை சோப்பினால் தேய்த்து கசக்கினார். அதைப் பார்த்துக்கொண்டே வந்த கோகலே, “பார்த்து மெதுவாக்க் கசக்குங்கள். அது எனக்கு விலைமதிப்பற்ற பொக்கிஷம். கிழிந்துவிடாமல் கசக்குங்கள்” என்றார்.

அந்த ம்ப்ளர் கோகலேயின்தாயார் கொடுத்தது. அதை அரிய பொக்கிஷமாக அவர்பாதுகாத்து வந்தார். கோகலே 1915-ம் ஆண்டு பிப்ரவரி 19-ம் தேதி இறந்தபோது, “இந்தியா முழுவதிலும் ஒரே ஒரு வீரனைத்தான் கண்டேன். அவர்தான் கோகலே” என்றார் காந்திஜி.

கோகலேயின் மரணத்திற்கு துக்கம் தெரிவிக்க காந்திஜி ஓராண்டு காலம்காலனி அணியாமல் இருந்தார்.

69. தமிழர் மீது பெருமதிப்பு

தமிழர்களின்மீது பேரன்பு வைத்திருந்தார் காந்திஜி அவர் தென்னாப்பிரிக்காவில்போராட்டம் துவங்கிய போது, அதில் ஈடுபட்டவர்களுள் பெரும்பான்மையோர் தமிழர்கள்தான். வள்ளியம்மை என்னும் இளம் பெண்மணியின் தியாகம் காந்திஜியின் உள்ளத்தை உருக்குவதாக இருந்தது.

தென்னாப்பிரிக்காவில், டிரான்ஸ்வால் கிளர்ச்சியில் தமிழர்கள் செய்த தொண்டைப் பாராட்டி காந்திஜி”மார்டன் ரிவ்யூ” பத்திரிக்கையில் ஒரு கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறார்.

தமிழர்களின் மீது ஏற்பட்ட அன்பின் காரணமாக காந்திஜிக்கு தமிழ் மொழியின் மீது அன்பு ஏற்பட்டது. அவர் தமிழ் மொழியைக் கற்கலானார். தமிழ் மொழியின் அழகும் நேர்த்தியும் அவரைக்கவர்ந்தன. அமுதமொழி என்று புகழ்ந்துள்ளார்.

‘தமிழ் சுய பாட போதினி’யின் துணையோடு அம்மொழியைக் கற்றார். தென்னாப்பிரிக்காவில் நிறைய தமிழர்கள் இருந்தார்கள். ஆனால் அநேகம் பேருக்கு தமிழ் எழுதப்படிக்கத்தெரியாமல் இருந்தது.

எந்தத் தமழிரைக் கண்டாலும் காந்திஜிக்கு, தென்னாப்பிரிக்காவில் தம்முடன் போராட்டத்தில் கலந்து கொண்டு, உடல் பொருள் அனைத்தையும் அர்ப்பணித்துப்பணியாற்றிய தமிழர்களின் நினைவே எழும். தமிழ் கற்பது ஒன்றே அவர்களுக்குச் செய்யும் நன்றி என்று காந்திஜி நினைத்தார்.

தமிழர்களின் மீதுள்ள அன்பே, தமிழ்மொழிக் காதலாகவும் அவருள்ளத்தில் மலர்ந்தது எனலாம்.

தமிழ்நாட்டில் காந்திஜியின் உற்ற நண்பராக விளங்கியவர் திரு ஜி. ஏ. நடேசன் என்பவராவார். அவருக்கு ஒருமுறை காந்திஜி கடித்தத்தை முழுக்க முழுக்க தமிழிலேயே எழுதியிருந்தார்.

தமிழ்நாட்டிற்கு காந்திஜி 12 முறை விஜயம் செய்திருக்கிறார். விரிவான சுற்றுப்பயணமாக நான்கு முறை செய்துள்ளார்.

தமிழ் மொழியின் மீதும் தமிழர்களின் மீதும் அன்பு கொண்ட காந்திஜியின் மீது தமிழர்கள் பேரன்பும் பெருமதிப்பும் வைத்திருந்ததைக் கூறவும் வேண்டுமா?

பண்டிதை அசலாம்பிகை அம்மையார் காந்திஜியின் பேரில் ‘காந்தி புராணம்’ பாடியுள்ளார்.

70. பொதுவாழ்வில் சிக்கனம்.

ஒரு சமயம் வார்தா காந்தி ஆச்ரமத்திற்கு சாலை அமைக்க வேண்டியிருந்தது. முக்கிய சாலையிலிருந்து ஆச்ரம்ம் வருவதற்கு சரியான சாலை இல்லை. வண்டிகள் வந்து போவது சிரம்மாக இருந்தது.

“சாலை அமைக்க கற்கள் வாங்க வேண்டும். ஆனால் அதற்குக் குறைந்தது ஐந்து ரூபாயாவது செலவாகும். பொதுப் பணத்தில் செலவு செய்யும் முன் யோசிக்க வேண்டுமே. பொதுமக்கள் கொடுத்த பணம். அதை அனாவசியமாக செலவிட வேண்டாம்” என்று சொல்லிவிட வேண்டாம்” என்று காந்திஜி கூறினார்.

“சரி. ஆனால் ரோடு போட இரண்டு மூன்று வண்டி கற்கள் தேவைப்படுகிறதே. அதை வாங்காம் ரோடு போடமுடியாதே”-என்றார் காந்திஜியின் செயலாளராக இருந்த மகாதேவ தேசாய்.

“ஒரு வழி இருக்கிறது. ஆச்ரமத்தில் உள்ளவர்கள் முயன்றால் அது நடக்கும்” என்று காந்திஜி புன்னகையுடன் கூறினார்.

“அது என்ன வழி” என்றார் தேசாய்.

“சொல்கிறேன். இன்று இரவு பிரார்த்தனை முடிந்ததும் சொல்கிறேன்.” என்கிறார். இரவு நேர பிரார்த்தனை முடிந்தது. ஆச்ரமவாசிகள் அனைவரும் அமைதியாக உட்கார்ந்திருந்தார்கள்.

“ஆச்ரமத்துக்கு வர ஒரு சாலை அமைக்க வேண்டும். அதற்கான கல் வாங்க பணம் செலவாகும். வயல் வெளிகளில் நிறைய கூழாங்கற்கள் கிடக்கின்றன. தினமும் நாம் அவ்வழியே நடக்கிறோம் அல்லவா? நடந்து கொண்டே அந்தக் கற்களை பொறுக்கிப் போட்டுக்கொண்டு வந்தால், சுலபமாக சாலை போட்டுவிடலாம். செய்ய முடியுமா?”

“முடியும்” என்று எல்லோரும் ஒரே குரலில் கூறினார்கள்.

மறுநாள் உலாவப் போகும்போது, எல்லோரும் ஆளுக்கொரு கதர் பையைக் கொண்டு சென்றார்கள். நடந்து கொண்டே, கீழே இருக்கும் கற்களைப் பொறுக்கி பைக்குள் போட்டுக்கொண்டார்கள்.

ஆறடி உயரமும் பருமனுமுள்ள கான் அப்துல்கபர்கான் (எல்லைகாந்தி) கூட அவ்வாறு குனிந்து குனிந்து பொறுக்கினார்.

கை கனக்க, ஆச்ரம்ம் வந்ததும் எல்லோரும் அவரவர் கொண்டுவந்த கற்களைக் குவித்தார்கள். இரண்டே நாளில் சாலைக்குத் தேவையான கற்கள் அங்கே குவிந்துவிட்டன.

ஆச்ரமவாசிகளுக்கு அந்த இரு நாட்களும் நல்ல உடற்பயிற்சியாகவும் அமைந்தது. பொதுப் பணத்தைச்செலவு செய்ய, காந்திஜி யோசிப்பார். சிக்கனமாகவே நடந்து கொள்வார்.

71. சோதனையில் வென்ற மனு

பாட்னாவில் காந்திஜியும் அவரது நண்பர்களும் உதவியாளர்கும் டாக்டர் சையத் மொகம்மத் என்னும் நண்பரின் விருந்தினராகத்தங்கியிருந்தார்கள்.

ஹிந்து -முஸ்லிம் ஒற்றுமைக்காக காந்திஜியுடன் சையத் மொகம்மதும் பாடுபட்டு வந்தார். டாக்டர் சையத் மொகம்மதின் மகனுக்கு திருமணம் நடைபெற்றது. காந்திஜியிடம், மகனையும் மருமகளையும் ஆசி பெறுவதற்காக சையத் மொம்மமத் அழைத்துக்கொண்டு வந்தார்.

உடன் இருந்த மனுபெஹனை காந்திஜி அழைத்து, “உன் சகோதரனுக்கு திலகிமிட்டு வாழ்த்து” என்று காந்திஜி.

மனுபெஹன், மணமக்களின் நலனை வேண்டிப் பிரார்த்திக்கிறார்கள். பின்பு ஆரத்தி சுற்றி திலகமிட்டாள்.

இதைப்பார்த்த டாக்டர் சையத்மொகம்மத், “பெஹன், இது என் மகனை வாழ்த்திய சகோதரிக்கு நாங்கள் கொடுக்கும்பரிசு” என்று கூறி பல பொன் நகைகளை மனுபெஹனுக்கு அளித்தார்.

மனுபெஹன், நகைகளைக்கண்டதும் தயங்கினாள்.

வாங்குவது தவறு, காந்திஜி என்ன நினைப்பாரோ என்று எண்ணினான்.

ஆனால்காந்திஜியோ, “மனு, ஏன் தயங்குகிறாய். மணமகளை நீ உன் சகோதரனாக நினைத்து வாழ்த்தினாயே சற்றுமுன்பு . அதற்காக உன் சகோதரன் உன்களிக்கும் பரிசு இது. வாங்கிக்கொள்”என்றார்.

மனுபெஹன் நகைகளைப் பெற்றுக்கொண்டாள்.

மணமக்களும் டாக்டர் சையதும் அவருடன் வந்தவர்களும் சென்றபிறகு,மனுபெஹன் காந்திஜியிடம் வந்தாள்.

முஸ்லிம் நல நிதிக்கு இந்த நகைகளை நன்கொடையாகத் தருகிறேன்” என்று அவற்றைக் காந்திஜியிடம் அளித்துவிட்டாள்.

“மனு, என் சோதனையில் நீ வெற்றி பெற்றுவிட்டாய்” என்று சிரித்தார் காந்திஜி.

அவர், எப்போது எவ்விதம் சோதிப்பார் என்பதை அறியவே முடியாது.

72. காந்தியும் தேசபந்துவும்

உடல்நலம் சரியில்லாத்தால் ‘தேசபந்து’ சித்தரஞ்சன் தாஸ் ஓய்வு எடுத்துக்கொள்ள டார்ஜிலிங் சென்றிருந்தார். அப்பொழுது காந்திஜி வங்காளத்தில் சுற்றுப்பயணம் செய்ய வந்தார். உடனே காந்திக்கு சித்தரஞ்சன்தாஸ் தந்தியனுப்பினார்.

“நீங்கள் என்னுடைய மாகாணத்தில் இருக்கிறீர்கள். இங்கு நான்தான் தலைவன். சுற்றுப்பயணத்தின்போது, தாங்கள் டார்ஜிலிங் வரவேண்டும். இது என் அன்புக் கட்டளை” என்று தந்தியில் குறிப்பிட்டிருந்தார்.

“காங்கிரஸ் கமிட்டி கல்கத்தாவில் கூட இருக்கிறது. நிகழ்ச்சிகளும் தயாராகிக்கொண்டிருப்பதால் தங்கள் அன்புக் கட்டளையை ஏற்பதற்கில்லை” என்று காந்திஜி தாஸூக்கு பதில் தந்தியில் குறிப்பிட்டிருந்தார்.

“காரியக் கமிட்டியை டார்ஜிலிங்கில் வைத்துக்கொள்ளுங்கள். அதற்கான முழுச் செலவை வங்க மாகாண காங்கிரஸ் கமிட்டி ஏற்கும்” என்று மறுபடி தாஸ் தந்தி கொடுத்தார்.

அதன்படியே காந்திஜி டார்ஜிலிங் சென்றார். அவரைக் கண்டு தான் பெருமகிழ்ச்சியடைந்தார்.

இரண்டு நாட்கள் தங்குவதாக இருந்த காந்திஜி, டார்ஜிலிங்கில் ஐந்து நாட்கள் தங்கினார். தேசபந்து குடும்பத்தினரும் காந்திஜியும் தினமும் நூற்பு வேள்வியில் ஈடுபட்டார்கள். தாஸிற்கு ராட்டையில் நூல் நூற்க கற்றுக்கொடுப்பதற்காக ராஜேந்திர பிரசாத் பாட்னாவிலிருந்து ஒருவரை அனுப்பி வைத்திருந்தார்.

காந்திஜியும் தேசபந்துவின் மனைவி வசந்திதேவியும் நன்றாக நூல் நூற்பார்கள். ஆனால் தேசபந்து நூற்பது அடிக்கடி அறுந்துவிடும்.

“எனக்கென்னவோ இந்தக் கைவேலைகள் எல்லாம் சரியாக வருவதில்லை வசந்திதேவி சிறப்பாக நூற்கிறாள். என்றார் தேசபந்து.

“ஆமாம் பெண்கள் இத்துறையிலே கண்வன்மார்களை வெற்றி பெற்றுவிடுகிறார்கள்”.

லட்சக்கணக்கில் வருமானம் கிடைத்த வழக்கறிஞர் தொழிலைத் துறந்து ஒத்துழையாமை இயக்கத்தில் ஈடுபட்டு பலமுறை சிறை சென்றவர் தேசபந்து. அவரும் அவரது குடும்பத்தாரும் சுதந்திர வேள்வியில் தங்களுடைய உடல் பொருள் ஆவி அத்தனையையும் இழந்தார்கள்.

தேசபந்து தாஸின் அன்பு காந்தியடிகளின் நெஞ்சில் ஆழமாகப் பதிந்தது. தாஸின் தேசபக்தியை காந்திஜி போற்றினார்.

73. காந்திஜியும் நேதாஜியும்

1940 – ம் ஆண்டு கடைசி முறையாக காந்திஜியை, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சேவாகிராமத்தில் சந்தித்தார்.

நேதாஜி உலகப்போர் நடக்கும் இந்த நேரத்தில் இந்தியர்கள் தங்களுடைய உரிமைப் போரைத் துவங்க வேண்டும் என்பது நேதாஜியின் கருத்து. ஆனால் காந்திஜி அவ்வாறு எண்ணவில்லை.

“சுபாஷ், நீ இளைஞன், ஆவேசமானவன், நான் வயதானவன். பல அம்சங்களை சிந்திக்க வேண்டிய நிலையில் இருக்கிறவன். உனது தியாக உள்ளமும் நேர்மையும் மகத்தானது. இவற்றை பக்குவமான காலத்தில் பயன்படுத்தினால் நீ வெற்றியடையவாய்”.

“பாபுஜி, நீங்கள் ஒரு குரல் கொடுத்தால் போதும், இந்நாடே பொங்கி எழுந்துவிடுமே” என்றார் நேதாஜி.

“அது சரி சுபாஷ்! ஆனால் அதற்கு இது சரியான நேரமில்லை. அரசியல் ரீதியாகவும் சரி, தார்மீக ரீதியாகவும் சரி, இப்போது இயக்கத்தைத் துவங்குவது நல்லதல்ல. இதைவிடவும் இன்னும் சிறந்த வாய்ப்பு வரும் காலத்தில் வரும் என்று ஏன் நம்பக்கூடாது” என்பது காந்திஜியின் வாதம்.

“நான் துவங்க இருக்கும் இயக்கத்திற்கு உங்கள் வாழ்த்துக்களைத் தாருங்கள்” என்று வேண்டினார் சுபாஷ் சந்திரபோஸ்.

“புதிய இயக்கத்தைத் துவங்க இது சரியான காலம் இல்லை என்று நான் நினைக்கும்பொழுது, உனது இயக்கத்திற்கு என்னால் எப்படி வாழ்த்துக்கூற முடியும்? இதுதான் நல்ல நேரம் என்று உனக்குத் தோன்றினால் நீ தயங்காமல் துவக்கு. நீ வெற்றி பெற்றால் மகிழ்ச்சியடையும் முதல் நபர் நான்தான். மாபெரும் தலைவர்களுக்குத் தேவையான தகுதிகள் எல்லாவற்றையும் பெற்றிருக்கிறாய். அவசரப் படாதே. இதுவே நான் உனக்குச் சொல்லும் யோசனை. உன் செயல்களுக்கெல்லாம் என் அன்பு முழுமையாக உண்டு. உன்னிடத்திலும் உன் குடும்பத்தாரிடத்திலும் எனக்கு அன்பும் மதிப்பும் என்றும் உண்டு. நீ என் மகன் போன்றவன்.”

காந்திஜியின் அறிவுரைகளைக் கேட்டுக் கொண்டார் நேதாஜி. புதிய இயக்கத்தைத் துவக்கி இந்திய சுதந்திரப் போராட்டத்திலே அழியாப் பெயர் பெற்றார்.

74. காந்திஜியும் வல்லபாயும்

வல்லபாய் படேல் குஜராத்தி சங்கத்தின் செயலாளர் ஆனதும் காந்திஜி அவரிடம் ஒரு முக்கியமான பணியை ஒப்படைத்தார். அரசாங்க அதிகாரிகளுக்குத் தேவையான எல்லாவற்றையும் அந்தந்த ஊர் மக்கள் இலவசமாக வழங்க வேண்டும் என்பது எழுதப்படாத சட்டமாக இருந்தது. இனி அவ்வாறு நடக்காது என்பதை மக்களுக்கும் அதிகாரிகளுக்கும் அறிவிக்க வேண்டும் என்று படேலிடம் காந்திஜி கூறினார்.

குஜராத்தி சபையின் செயலாளரான படேல் அப்பகுதி அதிகாரிக்கு இது பற்றி எழுதினார். அதிகாரி கடித்த்தை குப்பைக் கூடையில் எறிந்தார். மறுமுறை படேல் எழுதிய கடித்த்திற்கும் இதே நிலைமை ஏற்பட்டது. காந்திஜியோ “படேல்! பொறுமையை இழக்க வேண்டாம், இன்னொரு முறை எழுதி அனுப்புங்கள்” என்று அறிவுறுத்தினார்.

மூன்றாவது முறையாக படேல், அதிகாரி பிராட்டுக்கு கடிதம் எழுதினார். அதில் சற்று கடுமையாகவே எழுதியிருந்தார். “இன்னும் இரு வார காலத்திற்குள் பதில் வரவில்லை என்றால் இலவசமாக எதுவும் வழங்கப்பட மாட்டாது” என்று கடித்தத்தில் இருந்தது.

படேலின் இக்கடிதங்களினால் அதிகாரி பிராட் ஆத்திரமடைந்தார். படேலை தன்னைக் காண வருமாறு கூறினார்.

ஆனால் படேல் அவரைக் காணச் செல்லவில்லை. கடிதங்களுக்கு பதில் எழுதாத அவரைக் காணுவதும் அவசியமற்றது என்றே நினைத்தார்.

அரசாங்க அதிகாரிக்கு, இலவசமாக உணவு தான்யங்கள் வழங்க வேண்டும்; வண்ணான் துணி துவைத்துத் தர வேண்டும். கடைக்கார்ர்கள் சாமான்களை இலவசமாக அளிக்க வேண்டும். வண்டி வைத்திருப்பவர்கள் அதிகாரிகளை ஏற்றிச் செல்ல பணம் வாங்கக்கூடாது. இவர்கள் தவிர இன்னும் மற்ற எல்லாத் தரப்பாரும் தங்கள் உழைப்பையும் பொருளையும் அதிகாரிகளுக்கு அளிக்க வேண்டும் என்றே அதுவரை இந்தியா எங்கிலும் இருந்த சட்டமாக இருந்து வந்தது.

இதை எதிர்த்து மக்கள் எதையும் இனி அரசாங்க அதிகாரிகளுக்குக் கொடுக்கக்கூடாது. என்று துண்டுப் பிரசுரங்களில் அச்சிட்டு ஊர்ஊராக கொடுக்க படேல் ஏற்பாடு செய்தார்.

காந்திஜியின் சொல்லை செயலாக மாற்றிய வீரர் வல்லபாய் படேல் ஆவார்.

76. காந்திஜியும் ஆஸாத்தும்

மௌலானா அபுல்கலாம் ஆஸாத், காந்திஜியின் சுதந்திரப் போராட்டத்தில் பெரும் பங்கு ஆற்றிய நண்பர். தெளிவான கருத்துக்களைக் கொண்டவர். காந்திஜியின் கொள்கைகளைக் கடைப்பிடித்து ஒழுகும் சீரிய பண்பாளர். தேசநலனும் மக்கள் நலனும் கருதும் நெறியாளர்.

ஆனால் அவர், அடிக்கடி புகை பிடிக்கும் வழக்கமுடையவராக இருந்தார். அவர் காந்திஜியைப் பார்க்க வருகிறார் என்றாரல், அவர்ருகே சிகரெட் சாம்பலை உதிர்க்க ஒரு சிறிய தட்டை வைத்துவிடுவது ஆசிரமவாசிகளின் வழக்கம்.

காந்திஜி டில்லியில் இருந்தபோது, அபுல்கலாம் ஆசாத் அவரைக் காண வந்தார். அப்போது, இந்தியா பாகிஸ்தான் பிரச்சினையில் தலைவர்கள் தீர்வு காண முயன்று கொண்டிருந்த நேரம்.

அபுல்கலாம் ஆஸாதும் காந்திஜியும் இதைப் பற்றியும் மற்றும் பல அரசியல் நிலைகளைப்பற்றியும் தீர்க்கமாக அலசி ஆராய்ந்தார்கள். அபுல்கலாம் ஆஸாத் சிகிரெட் புகைத்தவண்ணம் பேசினார்.

பேசிக்கொண்டிருக்கும் பொழுது, காந்திஜி திடும் மென்று எழுந்தார். எதற்காக எழுந்திருக்கிறார் என்று மற்றவர்களுக்கு புரியவில்லை.

ஜன்னலருகே இருந்த சிறிய தட்டை அபுல்கலாம் ஆஸாத்துக்கு அருகில் கொண்டு வந்து வைத்தார் காந்திஜி.

ஆஸாத் வந்ததுமே அந்தத் தட்டை அவர்ருகே வைக்க, காந்திஜியின் உதவியாளர்கள் மறந்துபோய் விட்டார்கள்.

காந்திஜியே, தட்டை எடுத்து வைத்ததும் ஆஸாத் வெட்கமடைந்தார். “மன்னியுங்கள்” என்றார் காந்திஜியிடம்.

“ஆஸாத், நீங்கள் என் இனிய நண்பர், உங்களுக்கு இச்சிறிய சேவையைச் செய்ய நான் இன்று கொடுத்து வைத்தேன்.” என்று காந்திஜி வேடிக்கையாகக் கூறினார்.

இக்கட்டான நிலைமை, சகஜமான சூழ்நிலையாயிற்று. மிகச்சிறிய சேவையைச் செய்ய நான் இன்று கொடுத்து வைத்தேன்.” என்று காந்திஜி வேடிக்கையாக்க் கூறினார்.

இக்கட்டான நிலைமை, சகஜமான சூழ்நிலையாயிற்று. மிகச்சிறிய செய்கைகளையும் மிகவும் கவனமாக்க் கையாளும் காந்திஜியின் பண்பு, ஆஸாத்துக்கு வியப்பையே தந்தது.

76. நாவுக்கு ருசி வயிற்றுக்குக் கேடு.

1919 – ம் ஆண்டில் இந்தூரில் ஹிந்தி சம்மேளன மகாநாடு நடைபெற்றது. மகாநாட்டுக்கு காந்திஜி தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். சம்பரானிலிருந்து இந்தூருக்கு காந்திஜி சென்றார். அவருடன் ராஜன் பாபு புருஷோத்தம தாஸ் தாண்டன் மற்றும் பலரும் சென்றார்கள்.

மகாநாடு மிகவும் பெரிய அளவில் நடைபெற்றது. அரச போகமான வரவேற்பு கிடைத்தது. எல்லோமும் தங்குவதற்கு வசதியான வீடுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. எல்லோருக்கும் குளிக்கும் வாளி முதல் எல்லாமே வெள்ளியால் ஆன பாத்திரங்களே. இந்தூர் சமஸ்தான அதிகார்கள்., அனைவரையும் நன்கு கவனித்துக் கொண்டார்கள்.

காந்திஜிகு அவருக்கு வழக்கமான வேர்க்கடலை பழங்கள் இவையே கொடுக்கப்பட்டன. ஆனால் காந்திஜியுடன் வந்த மற்ற நண்பர்களுக்கு அறுசுவை உணவு பரிமாறப்பட்டது.

வெள்ளித் தட்டுக்களில் விதம்விதமான இனிப்புக்கள்; உணவுகள்; பச்சடிகள்; கிச்சடிகள்; காய், கனிகள், பொரியல், வறுவல்.
காந்திஜி, சாப்பாடு பற்றி விசாரித்தார்.

மகாதேவ் தேசாய், அங்கே சாப்பிட்ட உணவு வகைகள் பற்றியும் அதன் சுவையைப்பற்றியும் கூறிக்கொண்டே சென்றார். அச்சமயம் இந்தூர் சமஸ்தான அதிகாரி அவ்வழியே சென்றதை காந்திஜி கவனித்து அவரை அழைத்தார்.

“இங்கே மிகவும் ஆடம்பரமாக உணவு பரிமாறப்படுகிறது. இனிமேல் அப்படி செய்ய வேண்டாம். இதெல்லாம் எங்களுக்குப் பழக்கமில்லாத்து. இப்படி ருசியாகச் சாப்பிட்டால், நோய் வந்தாலும் வந்துவிடும். எனவே நாளை முதல் சாதாரண சப்பாத்தியும் வெந்த காய்கறியும் பரிமாறினாலே போதும். முடிந்தால் பாலும் கொடுங்கள்.” என்று கூறிவிட்டார்.

மறுநாள் வெள்ளித்தட்டுகள் இல்லை. கிண்ணங்களில் தான் சாப்பாடு பரிமாறப்பட்டது. வறட்டு ரொட்டிகள், வெந்த காய்கறிகள், பால்,,, இவைதான் சாப்பிடும்போது காந்திஜி அங்கே வந்தார்..

“இதுதான் ஆரோக்கியமான ஆகாரம். நாவுக்கு ருசியாக இருப்பதெல்லாம் வயிற்றுக்குக் கேடுதான்” என்றார். அதென்னமோ உண்மைதான் என்று எல்லோரும் நினைத்தார்கள்.

77. அகிம்சையின் அர்த்தம்

முதல் உலக மகாயுத்தம் வந்தபோது, காந்திஜியை வைஸ்ராய் அழைத்தார். யுத்தத்தில் ஒத்துழைக்க வேண்டுமென்று கேட்டுக்கொண்டார்.

காந்திஜி, வல்லபாய் படேலுடன் ஊர் ஊராகச் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். யுத்தத்திற்கு ஆள் சேர்க்க முயன்றார்.

சத்தியாகிரகம் செய்தபோது ஆயிரக்கணக்கான பேர்கள் அதில் ஈடுபட முன் வந்தார்கள். ஆனால் யுத்தத்தில் சேர யாரும் முன் வரவில்லை. ஆயினும் காந்திஜி மனச்சோர்வு அடையாமல் கிராமம் கிராமமாக நடந்தார்.

பல கிராமங்களில் உண்பதற்கு ஏதாவது கிடைப்பது கூட அரிதாக இருந்தது. தனிப்பபட்டவர்களின் வீடுகளில் சாப்பிடுவதை காந்திஜி தவறு என்றே கருதினார்.

அவருக்கு வறுத்த வேர்க்கடலை, வெல்லம், பழங்கள், பழச்சாறு இவை போதுமானதாக இருந்தது. அவருடன் பயணம் செய்த படேலும் இவற்றையே உண்டு பசியாறப் பழகிக்கொண்டார்.

சில நாட்களில் காந்திஜி தம் கைப்பட சமைத்து, படேலுக்கும் கொடுப்பதுண்டு.

யுத்தத்திற்கு ஆள் சேர்க்கப் போனபோது, அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு, காந்திஜி தெளிவாகவும், ஏற்கும் வண்ணம் பதில் அளித்தார்.

“அகிம்சை வழியே சிறந்தது என்று கூறும் நீங்கள் யுத்தத்தில் சேருமாறு அழைக்கிறீர்களே! உங்களுடைய கொள்கைகளுக்கு இது விரோதமில்லையா? அரசாங்கத்தை எதிர்த்துப் பணி புரிவதற்குப் பதில் உதவி செய்யச் சொல்வது வினோதமாக இருக்கிறது!”

“இதில் வினோதம் எதுவும் இல்லை. நாம், ஆயுதம் தாங்கத் தெரியாதவர்களாக இருக்கிறோம். எந்தவித ஆயுதப் பயிற்சியும் பெறாத நமக்கு, இது ஒரு நல்ல வாய்ப்பு. ஆயுதப் பயிற்சியும் நாம் பெற முடியும். ஆயுதம் தரிக்கக்கூடாது என்று நமக்குள்ள கட்டுப்பாடும் விலகும். இச்சமயத்தில் நாம் செய்யும் உதவியினால் பிரிட்டிஷ் அரிசின் நம்பிக்கையையும் நாம் பெற முடியும். ராணுவத்தில் நாம் சேருவது அவர்களுக்கு உதவி செய்யுமோ இல்லையோ ஆனால் அதனால் நமக்கு மாபெரும் நன்மை விளையும் என்பதாலேயே கூறுகிறேன். அகிம்சைக்கு விரோதமானதல்ல இது. துன்பத்தில் இருப்பவனுக்கு உதவுவதும் அகிம்சையின் அங்கம்தான்.

காந்திஜியின் முயற்சிக்கு உரிய பலன் கிடைத்தது. பலர் ராணுவத்தில் சேர்ந்தார்கள்.

78. கொள்ளைக்கார வெள்ளையர்

சபர்மதி ஆச்ரமத்தில் காந்திஜி இருக்கும் காலத்தில் அவரைக்காண பலபேர் வருவார்கள். அரசியல் தலைவர்கள், காங்கிரஸ் தொண்டர்கள், சமூக சேவை அமைப்புகளின் நிர்வாகிக்கள், கதர் விற்பனையாளர்கள், விவசாயிகள் ஏன் அரசாங்க அதிகாரிகள்கூட வருவதுண்டு.

ஒருநாள் சிறையில் மருத்துவராகப்பணியாற்றும் நண்பர் ஒருவர் காந்திஜியைக் காண வந்தார்.

அக்காலத்தில் சுதந்திரப் போராட்டங்களிலும் ஊர்வலங்களிலும் சட்டமறுப்பு இயக்கங்களிலும் கலந்து கொண்டதற்காகவும் தேசிய உணர்வூட்டும் பேச்சில் ஈடுபட்டதற்காகவும் சிறை சென்றவர்கள் ஏராளமானவர்கள். நாட்டின் சிறைச்சாலைகள் எல்லாம் நிரம்பிக் கிடந்தன.

அதைப்பற்றிக் குறிப்பிட்ட அந்த மருத்துவர், “இந்தப் பிச்சைக்கார கும்பலுக்குச் சோறு போட தினம் தினம் 14 லட்ச ரூபாய்கள் வரை செலவாகின்றன என்று லார்ட் டீடிங் சொல்கிறார்” என்றார்.

தேசபக்தி நிறைந்த தாய்நாட்டு சுதந்திரப் போராட்ட வீர்ர்களை, சுதந்திர வேள்வியில் தங்கள் சொந்த நலனைத் தியாகம் செய்த இந்தியர்களை “பிச்சைக்கார்ர்கள்” என்று அந்த மருத்துவர் குறிப்பிட்டதைக் கேட்டதும் வல்லபாய் பட்டேலின் இரத்தம் கொதித்தது.

காந்திஜியைப் போல, அமைதியாக்க் கேட்டுக் கொண்டிருக்க அவரால் முடியவில்லை.

“ஆனால் உங்கள் ரீடிங்கிடம் போய்ச் சொல்லுங்கள். இதைவிட அதிகமாக்க் கோடி கோடியாக நாங்கள் கொள்ளைக்கார்களுக்காகச் செலவிடுகிறோம் என்று.”

படேலின் பேச்சு மருத்துவருக்குப்புரியவில்லை. “என்ன சொல்கிறீர்கள் நீங்கள்?” என்றார்.

“இந்தியாவில் பணியாற்றும் வெள்ளைக்கார்ர்கள் எல்லாம் நம்மைச் சுரண்டி கொள்ளையடிக்கிறார்கள் இல்லையா? அவர்களைத்தான் கொள்ளைக்கார்ர்கள் என்கிறார் படேல்” என்று காந்திஜி கூறியதும் அந்த மருத்துவர் தாம் பேசியதற்கு மன்னிப்புக் கோரினார்.

79. மறக்க முடியாத 15 மாதங்கள்

காந்திஜி வட்டமேஜை மகாநாட்டுக்கு, இங்கிலாந்து போய்விட்டுத திரும்பினார். இந்தியாவில் அவசரச் சட்டம் பிரகடன் செய்யப்பட்டது. நாடெங்கும் தலைவர்கள் கைது செய்யப்பட்டார்கள்.

1932 – ம் ஆண்டு ஜனவரி மாதம் காந்திஜியும் சர்தார் வல்லபாய் படேலும் கைது செய்யப்பட்டு எரவாடா சிறையில் ஒன்றாக இருந்தார்கள். 1933 – ம் ஆண்டு ஏப்ரல் வரையில் அந்த 15 மாதங்களும் தம்முடைய வாழ்க்கையில் மறக்க முடியாத நாட்கள் என்று காந்திஜி குறிப்பிட்டிருக்கிறார்.

எந்த நேரத்திலும் நிலைகுலையாத வீரமும் அளவில்லாத தேசபக்தியும் கொண்ட படேல் காந்திஜியின் வலது கரம்போல் விளங்கினார். அவருடைய அன்பையும் பரிவையும் நோக்கும்போது காந்திஜிக்கு மறைந்த தமது தாய் புத்லிபாயின் நினைவே வந்ததாகக் கூறினார்.

உடல் நலம் சிறிது குன்றினாலும், படேல், காந்திஜியின் அருகாமையிலேயே இருந்து கவனித்துக்கொள்வார். சிறை வாழ்வின் பல மாதங்களில் படேல் பல விஷயங்களை காந்திஜியிடமிருந்து கற்றுக்கொண்டார்.

காந்திஜி சமஸ்கிருத மொழியில் நன்கு புலமை பெற்றிருந்தார். இதையறிந்த படேல், சிறை வாழ்வில் சமஸ்கிருதத்தைக் கற்றுக்கொண்டார்.

காந்திஜி சமஸ்கிருத மொழியில் நன்கு புலமை பெற்றிருந்தார். இதையறிந்த படேல், சிறை வாழ்வில் சமஸ்கிருத்த்தைக் கற்றுக்கொண்டார்.

அஞ்சல் உறைகள் செய்வதையும் கற்று, சில நாட்களில் நிபுணரானார்.

ஒருநாள் இருவரும் சுதந்திர இந்தியாவைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தார்கள். அப்போது, காந்திஜி, ‘மோதிலாலும் சித்தரஞ்சன் தாஸூம் சுதந்திர இந்தியாவில் யார் யார் எந்தெந்த இலாகாவை நிர்வாகம் செய்ய வேண்டும் என்று சொன்னார்கள். முகமதலி, கல்வி மந்திரியாக விரும்புவரா என்றும், ஷௌகத் அலி ராணுவ மந்திரியாவதே சரி என்று பேசினார்கள். சர்தார், நீங்கள் எந்தப் பதவியை விரும்புகிறீர்கள்?” என்று காந்திஜி கேட்டார்.

படேல் எந்தப் பதவியிலும் தனக்கு விருப்பம் இல்லை என்பதைத் தெரிவிக்க விரும்பினார். “நான் பிச்சை எடுத்துப் பிழைத்துக்கொள்ள, திருவோடு தாருங்கள். அது போதும் எனக்கு.” என்றார்.

ஆனால் சுதந்திர இந்தியாவில், சர்தார் படேல் மந்தியானார், பதவியை விரும்பியவர்கள் காலமானர்கள்; விரும்பாத படேலுக்கு பதவி கிட்டியது.

80. ஆடம்பரத்தில் வெறுப்பு

காசியில் பண்டித மதன்மோகன் மாளவியா, ‘ஹிந்து சர்வகலாசாலை’யைக் கட்டினார். 1918 – ம் ஆண்டில் கலாசாலையின் திறப்பு விழாவுக்கு ஏற்பாடு செய்தார் மாளவியா. மைசூர் மகாராஜா, பல்கலைக்கழகத்தின் தலைவராகவும் மாளவியா உபதலைவராகவும் இருந்தார்கள்.

சுதேச சமஸ்தான மன்னர்களிடமிருந்து ராஜாக்களிடமிருந்தும் பெரும் தொகைகள் பெற்று, மாளவியா, ஹிந்து, சர்வ கலாசாலையைக் கட்டி முடித்தார்.

அந்த விழாவுக்கு இந்தியாவிலுள்ள அநேக மன்னர்களும் சமஸ்தான அதிகாரிகளும் வருகை புரிந்தார்கள். பலர் பேசினார்கள். காந்திஜியும் பேசினார்.

காந்திஜி என்றுமே மனத்தில் தோன்றியதை ஒளிக்காமல் பேசும் இயல்பு படைத்தவர். அவருடைய பேச்சில் உண்மையின் ஒளி இருக்கும்.

“ராஜாக்களும் மகாராஜாக்களும் கூடி இருக்கும் சபையிலே உங்கள்முன் நான் நிற்கிறேன். எனக்குத் தோன்றுவதை சொல்லிவிடுவேன். இந்திய நாட்டில் கோடிக்கணக்கான மக்கள் உண்ண உணவும் உடுக்க மாற்றுத் துணியும் இல்லாமல் இருப்பதைப் பார்த்திரக்கிறேன். ஆனால் இங்கே, என்முன்னே இருக்கும் உங்களைக் காணும்பொழுது என்னால் சொல்லாமல் இருக்க முடியவில்லை.

“கோடிக்கணக்கான ரூபாய்கள் மதிப்புள்ள நகைகளை அணிந்துகொண்டிருக்கிறீர்கள். ஆடம்பர வாழ்வு அவசியம் தானா? பொதுமக்களின் நலம் நாட வேண்டிய நீங்கள், சுயநலத்தை மட்டுமே நாடியிருக்கிறீர்கள். இப்படிச் செய்வது துரோகம் என்று அறிந்துகொள்ள வேண்டாமா? இது பாபமல்லவா?”

காந்திஜி, இவ்வாறு பேசியதைக் கேட்டும் ஆடம்பரம் மிக்க அந்த ராஜாக்களும் சமஸ்தான அதிகாரிகளும் திகைத்துப் போனார்கள்.

இப்பேச்சை பலர் விரும்பவில்லை என்றாலும், பொது மக்களிடமும் மன்னர்களிடமும் சமுதாய விழிப்புணர்வும், ஆடம்பரத்தில் வெறுப்பும் தோன்றியதை மறக்கமுடியாது.

இவ்வாறு பேசியதைக்கேட்டு, காந்திஜியை மகாபுருஷர் என்று கொண்டாடியவர்களும் உண்டு. அவர்களில் ஒருவர் நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளையாவார்.!

81. காந்தி காந்திதான்

காந்திஜி, தமிழ்நாட்டில் சுற்றுப்பயணம் செய்யும் போது, கரூருக்கு விஜயம் செய்ய வேண்டுமென்று, கரூர் காங்கிரஸ் தலைவர் நாமக்கல் ராமலிங்கம் பிளை கேட்டுக் கொண்டார். காந்திஜியின் பயணத திட்டத்தை தயார் செய்தவர்கள் கரூரையும் அதில் சேர்த்தார்கள். காந்திஜிக்கு விமரிசையான வரவேற்பு அளிக்க ஊர் மக்கள் உற்சாகமாக இருந்தார்கள்.

காந்திஜிக்கு பணமுடிப்பு கொடுக்கவும், வசூலித்தார்கள். காந்திஜியின் கரூர் பயணம் பற்றி பத்திரிகைகள் எழுதின. தேதியும் நேரமும் குறிக்கப்பட்டது. கடிதம் மூலம் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, கரூர் தாலுக்காவில் காந்திஜியின் விஜயம் பற்றிய பிரசாரத்தில் ஈடுபட்டார்கள். எல்லோரும் ஆவலுடன் காத்திருந்தார்கள். காந்திஜி கோவையில் தங்கியிருந்தார். கரூருக்கு வரவேண்டிய நாளுக்கு, சில தினங்கள் முன்பு, கரூர் காங்கிரஸ் கமிட்டிக்குதந்தி ஒன்று வந்தது.

“காந்திஜியின் உடல்நலம் கருதி, கரூர் வருவது ரத்து செய்யப்பட்டது” என்று இருந்தது. இதைப் பார்த்ததும், தொண்டர்களும் தலைவர்களும் அதிர்ச்சியடைந்தார்கள். உடனடியாக்க் கோவைக்குக் கிளம்பினார்கள்.

ராஜகோபாலாச்சாரியார்தான், காந்திஜியின் பயணத் திட்டத்தை தயார் செய்பவர் என்பதால் நேராக அவரைப் போய்ப் பார்த்தார்கள்.

“உடல்நிலை சரியில்லை, என்ன செய்வது பொறுத்துக்கொள்ளுங்கள். இன்னொரு முறை கண்டிப்பாக வருவார்” என்று அவர் கூறியதைக் கேட்டதும், கமிட்டி அங்கத்தினர்களுக்கு கோபம் பொங்கியது. செய்திருந்த ஏற்பாடுகள் அனைத்தும் வீணாகிவிட்டதே என்றும், மக்கள் இனி தங்களை எப்படி நம்புவார்கள் என்றும் கோபம்.

பிறகு காந்திஜியை நேரில் சந்திப்பது என்று முடிவு செய்தார்கள். காந்திஜி நூல் நூற்கும்போது சென்று பார்த்தார்கள். அவர் பொறுமையாக எல்லாவற்றையும் கேட்டார்.

“ராஜாஜி, கரூருக்கு வருவதாக வாக்களித்திருந்தீர்களா? என்றார்.

“வாக்குறுதி தந்தால் அதைக் காப்பாற்றியே தீர வேண்டும். கரூருக்கு நாம் போகவேண்டும். இதில் எந்த மாற்றமும் இல்லை” என்றார் உறுதியாக.

கரூர் காங்கிரஸ் கமிட்டித் தலைவர் நாமக்கல் ராமலிங்கம் பிள்ளையும் நண்பர்களும் மகிழ்ச்சியுடன் விடைபெற்றார்கள். “காந்தி காந்திதான்” என்று பாராட்டினார்கள்.

82. சத்தியத் திருமணம்

காந்திஜியின் புதல்வர் தேவதாஸ் காந்தி, இந்தி பிரசாரம் செய்து வந்தார். அப்போது தமிழ்நாட்டுக்கும் வந்தார் திருச்செங்கோட்டில் இருந்த காந்தி ஆச்ரமத்தில் அவர் தங்கினார். ராஜகோபாலாச்சாரியாரும் தமது குழந்தைகளுடன் அங்கே தங்கியிருந்தார். ஆச்சாரியாரின பெண் லஷ்மியும் தேவதாஸூம் சந்தித்துப் பழகினார்கள். இருவருடைய மனங்களும் ஒத்துப்போயின.

இதனை ஆச்சாரியார் அறிந்தார். சீர்திருத்தத்கொள்கைகளும் காந்தீய சிந்தனைகளும் உடைய அவர் , இருவருடைய மனநிலையையும் உணர்ந்தார். அவர்களுக்கு நல்லாசி கூற முன்வந்தார். சில நாட்களில் தேவதாஸ் ஊர் திரும்பினார். லஷ்மியிடம் பிரியா விடைப்பெற்றார்.

காந்திஜியிடம் தமது விருப்பத்தை தேவதாஸ் தெரிவித்தார். இதை காந்திஜி உண்மையான அன்புதானா என்று அறிய விரும்பினார். அதனால அவர்களுக்கு ஒரு நிபந்தனை விதித்தார். இன்னும் ஐந்தாண்டுகள் தேவதாஸூம் லஷ்மியும் ஒருவரையொருவர் பார்க்கோ பேசவோ ஏன் கடித்த் தொடர்போ வைத்துக்கொள்ளக் கூடாது. அதற்குப் பிறகும் ஒருவரை ஒருவர் விரும்புவதாக இருந்தால் திருமணம் செய்து வைப்பதாக காந்திஜி கூறினார்.

இந்த நிபந்தனையை இருவரும் ஏற்றார்கள். அதன்படியே காலம் கடத்தினார்கள். காந்திஜி சிறை சென்றார். ராஜகோபாலாச்சாரியார், தேவதாஸ் எல்லோரையும் அரசாங்கம் கைது செய்தது.லஷ்மி ஆச்ரமத்தில் இருந்தாள். 1933 – ம் வருடம் காந்திஜி விடுதலையானார்.

ஐந்தாண்டுகளுக்கு மேலாக ஆகியும் லஷ்மியும் தேவதாஸூம் ஒருவரை ஒருவர் விரும்பியதில் எந்த மாற்றமும் இல்லை என்பதறிந்து காந்திஜி மகிழ்ச்சியடைந்தார்.

1933- ம் வருடம் ஜூலை மாதம் 16- ம் தேதியன்று திருமணம் நடைபெற்றது. மிக எளிமையாக நடைபெற்ற இந்தத் திருமண வைபவத்திற்கு குறிப்பிட்ட சில பேர்கள் மட்டுமே அழைக்கப்பட்டிருந்தார்கள்.

மணமக்கள் கதராடை அணிந்து மேடையில் அமர்ந்திருந்தார்கள். வேத முறைப்படி மணம் செய்துத கதர் நூல் மாலைகளால் மாலை மாற்றி மாங்கல்ய தாரணமும் நடைபெற்றன. பஜனை கீதம் பாடப்பெற்றது.

காந்திஜி, தமது கரத்தால் நூற்கப்பட்ட நூல் மாலையையும் பகவத்கீதையையும் மணமக்களுக்கு பரிசாக அளித்தார். மணமக்களை திரு. கேல்கர், திரு. ஜம்னாலால் பஜாஜ், திரு பிர்லா, திருமதி சரோஜினி தேவி, மாகனம் சீனிவாச சாஸ்திரியார் போன்றோர் வாழ்த்தினார்கள். படேலும் நேருவும் சிறையில் இருந்ததால் வாழ்த்துத் தந்தி அனுப்பியிருந்தார்கள்.

83. துண்டுகள் எங்கே?

காந்திஜி பலமுறைகள் உண்ணாவிரதம் இருந்திருக்கிறார். உண்ணாவிரத்த்தால் நடைபெற முடியாத செயல்களைக்கூட நடத்திக் காட்டினார். சத்யாக்கிரக முறையிலான அகிம்சைப்போர் வழிகளிலே உண்ணாவிரதமும் ஒன்று என்பதில் அவர் அசைக்கமுடியாத நம்பிக்கை வைத்திருந்தார்.

ஒருமுறை ஹரிஜனங்களின் நலன்களுக்காக காந்திஊஇ உண்ணாவிரதமிருந்தார். அவர் உடல் நலிவுற்றிருந்தார். வெந்நீரில் ஒரு சிறிய துண்டை நனைத்து, துடைத்து விடுவது வல்லபாய் படேலின் பணியாக இருந்தது.

அவ்வாறு பயன்படுத்துவதற்கு பல துண்டுகள் பயன்படுத்தப்பட்டன. காந்திஜியின் உண்ணாவிரதம் முடிந்தது.

எல்லா விஷயங்களிலும் கவனமும், கணக்கும் வைத்திருப்பது காந்திஜியின் சிறப்பு இயல்பு. உண்ணாவிரதம் காலத்தில் பட்டேல பல துண்டுகளைப் பயன்படுத்தி தமது உடம்பைத் துடைத்ததை அவர் அறிவார். எனவே படேலிடம் “அந்தத் துண்டுகள் எல்லாம் எங்கே?” என்று கேட்டார்.

“எந்தத் துண்டுகள்?” என்றார் படேல்.

“என் உடம்பைத் துடைக்கப்பபயன்படுத்தினாயே, அவைதான்”

“நன்றாக இருக்கிறது. உங்களுக்கு என்ன ஆகுமோ ஏதாகும என்ற கவலையில் இருந்தேன். துண்டைப்பற்றி யார் நினைத்தார்கள்.”

“படேல் எனக்கு இப்போதே தெரிய வேண்டும்”

“நான் என்ன செய்வது? உண்ணாவிரத்த்தோடு உங்கள் வாழ்க்கையே முடிந்துவிடும் என்று நினைத்தேன். நீங்கள் பிழைத்து வந்து, இப்படித் துண்டு கணக்கு கேட்பீர்கள் என்று தெரிந்தால், எல்லாவற்றையும் எண்ணிவைத்திருப்பேனே” என்று படேல் கேலியாக்க்கூறினார்.

பின்பு அன்னை கஸ்தூரிபாயைப் பார்த்து, பார்த்தீர்களா அம்மா, என்னைப் பார்த்து இவர் துண்டு கணக்குக்கேட்கிறார். ரொம்பவும் கொடுமையானவர். மாளவியாஜியை என்ன பாடுபடுத்தி இருக்கிறார் தெரியுமோ? கதர் உடுக்கச் செய்தார். சிறை செல்ல வைத்தார். இங்கிலாந்துக்கு அழைத்துச் சென்றார். தீண்டத்தகாதவர்களோடு திருமண சம்பந்தமும் செய்து வைத்தால்தான் பாபுஜி திருப்பி அடைவார் போலும்” என்றார்.

படேல் சிரித்து சமாளித்தாலும் காந்திஜி அவரை விடவில்லை. கஷ்டப்பட்டு, நூல் நூற்று, தயாரித்த துண்டுகளை இழக்க எளிதில் அவர் சம்மதிக்கவில்லை. தேடித் தரச் சொன்னார்.

84. வினோபா யார்?

இரண்டாவது உலகப்போர் துவங்கிய காலம். பிரிட்டன், இந்தியாவும் தங்களுடன் போரில் கலந்து கொண்டதாக அறிவித்தது. இதை எதிர்த்து நாடே கொந்தளிப்பில் ஆழ்ந்தது. தேசத் தலைவர்கள் இந்த அநீதியை எதிர்த்துக் குரல் கொடுத்தார்கள். மந்திரி பதவிகளைத் துறந்தார்கள்.

காந்திஜி தனி நபர் சத்யாக்கிரகத்தைத துவக்கினார். இந்த வேள்வியில் முதல் நபராக இறங்குவதற்குத் தகுந்தவரைத் தேர்ந்தெடுக்க விரும்பினார். ஜவஹர்லால் நேரு, ராஜேந்திர பிரசாத் போன்ற பெரும் தலைவர்களுள் ஒருவரை காந்திஊஇ தேர்ந்தெடுப்பார் என்று பலரும் கூறினார்கள்.

ஆனால் காந்திஜி வினோபா பாவேயை முதல் சத்தியாக்கிரகியாகத் தேர்ந்தெடுத்தார். இச்செயல் அனைவருக்கும் வியப்பை அளித்து யார் அந்த வினோபா பாவே என்று கேட்கலானார்கள்.

‘ஹரிஜன சேவக்’ என்ற பத்திரிகையில் காந்திஜி அறிக்கை விடுத்தார்.

“வினோபா யார்? அவரை நான் ஏன் முதல் சத்யாக்கிரகியாகத் தேர்ந்தெடுத்தேன்? ஆச்ரம்ம் ஆரம்பித்த நாளில் இருந்தே வினோபா வந்து சேர்ந்தார். சமையல் செய்வது முதல் கழிப்பறை சுத்தம் செய்வது வரை, எல்லா வேலைகளிலும் ஈடுபட்டார். நூற்கும் கலையில் நிபுணர், நம் நாட்டின் வறுமைய நூற்புக்கலையால்தான் பகும் என்பதிலே நம்பிக்கையுடையவர். அகிம்சையில் ஈடுபாடும், நிர்மாணத்திட்டங்களில் பெருவிருப்பமும் உடையவர்.

அவருடைய மனத்தில் தீண்டாமை என்ற எண்ணம் ஒரு சிறிதும் இருந்ததில்லை. நல்ல படிப்பாளி; பேச்சாற்றல் மிகுந்தவர், அமைதியாகப்பணிகளில் மூழ்குவது அவர் இயல்பு. எதைச் செய்தாலும் முழு மனத்துடன் ஒன்றிச் செய்யும் இயல்புடையவர்.

யுத்தத்தை வெறுப்பவர். தேசியத்தையும் தெய்வீகத்தையும் வாழ்க்கை நெறியாகக்கொண்ட அவரைவிடத் தகுந்த சத்யாக்கிரகி வேறு யாரேனும் இருக்கமுடியுமோ?”

காந்திஜி பல காலம் வினோபா பாவேயைப் பற்றித் தாம் கொண்ட கருத்துக்களை உலகுக்கு அறிவிக்க விரும்பினார். கர்மயோகியாய் வாழ்ந்து புற உலகம் அறியாமல் சேவைகள் பல செய்த மகத்தான சீடரை காந்திஜி உலகுக்கு அடையாளம் காட்ட இதுவே நல்ல தருணம் என்று எண்ணினார்.

காந்திஜி முதல் சத்யாக்கிரகியாக வினோபா பாவேயைத் தேர்ந்தெடுத்தது சரியானதுதான் என்று உலகோர் போற்றினார்கள்.

85. செருப்புத் தைக்கக் கற்றார்.

ஆகாகான் மாநிலத்தில் காந்திஜி சிறைவாசம் அனுபவித்த நாட்களில், அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அரசாங்கம் அவரை விடுதலை செய்ய உத்தரவிட்டது. காந்திஜியின் பயணத்திற்கான ஏற்பாடு களைச் செய்தபோது அவருடைய செருப்பு பிய்ந்து இருப்பதை மனுபென் கவனித்தாள்.

அதைத் தைத்துக்கொண்டு வருவதற்காக அவசரமாகக் கிளம்பினாள். காந்திஜி செருப்பைத் தேடினார். மனுபென் அதை தைப்பதற்குக் கொடுத்திருப்பதாகக் கூறினாள்.

“அதற்கு எவ்வளவு கூலி?” என்றார் காந்திஜி. “எட்டனா இருக்கலாம்” என்றாள் மனுபென். “யார் அந்த எட்டணாவைத் தருவார்கள். நீயோ, நானோ சம்பாதிக்கிறோமா?” என்றார் காந்திஜி, வெகு சாதாரணமாகத்தான் கேட்டார். ஆனாலும் மனுபென் அன் பொருளை உணர்ந்து கொண்டாள். பாபுஜியிடம் கேட்காமல் தைக்கக்கொடுத்தது தவறு என்று உணர்ந்தாள்.

சக்கிலியிடம் ஓடி செருப்பைக் கேட்டாள். ஆனால் அவனோ பாபுஜியின் செருப்பைத் தைக்கக்கொடுத்து வைத்திருக்க வேண்டாமா? காசாவது பணமாவது ஒன்றும் வேண்டாம்.” என்றான்.

செருப்பை எடுத்துக்கொண்டு அவனே வந்து காந்திஜியிடம் கொடுத்தான்.

அச்சமயம் ஆங்கிலேய நண்பர்கள் பலர் காந்திஜியைக்காண ஆகாகான் மாளிகைக்கு வந்திருந்தார்கள்.

காந்திஜி, அந்த சக்கிலியனிடம் “எனக்குத் செருப்புத் தைக்கும் வித்தையைச் சொல்லித் தருவதாயிருந்தால் மட்டுமே உன் இலவச செயலை ஏற்பேன்” என்றார்.

அவன் ஒப்புக்கொண்டான். உடனே அவனைத் தமது இருக்கையில் அமரச் சொன்னார். செருப்பை தைப்பதைப் பற்றி அவன் கூற இவர் செயலாக்கினார்.

ஆங்கிலேய நண்பர்களுடன் உரையாடிக்கொண்டே செருப்பைத்தைக்கும் கலையையும் கற்றார்.

ஆங்கிலேய நண்பர்களுக்கு காந்திஜியின் நட்த்தையின் உட்கருத்து என்னவென்று புரியவில்லை.

“மனுபென் எனைக் கேளாமல் செருப்பைத்த்தைக்கக் கொடுத்தள். அவளுக்கு ஒரு பாடம் புகட்டவே இவ்வாறு செய்தேன். எனக்கம் செருப்பு தைக்கும் வித்தை கற்றது போலாயிற்று” என்று நண்பர்களுக்கு விளக்கம் கூறினார்.

காந்திஜி தைத்த செருப்புக்களை மனுபென் பல காலம் பொக்கிஷம்போல் பாதுகாத்து வந்தாள்.

86. நவகாளி அனுபவம்

காந்திஜி நவகாளி யாத்திரை மேற்கொண்டிருந்தத சமயம். ஒரு கிராமத்தில் காந்திஜியும் அவருடன் தொண்டர்கள் பலரும் நடந்து வந்தபோது, ஒரு வீட்டின் முன்னால், கட்டிலில் ஒரு சிறுமி படுத்திருப்பதைப் பார்த்தார்கள்.

இவர்களைக் கண்டதும், வீட்டிலுள்ளவர்கள் கதவைச் சாத்திக் கொண்டார்கள். சிறுமியின் அருகில் எவருமில்லை. “காந்திஜி உங்களைக் காண விரும்புகிறார்.” என்று கூறிவிட்டுக்கதவைத் தட்டியபோதும் யாரும் திறக்கவில்லை.

சிறுமி குளிரினால் நடு நடுங்கினாள். ஜூரம் இருந்தது. காந்திஊஇ தாம் போர்த்தியிருந்த போர்வையை அவளுக்குப் போர்த்தினார். மூக்கில் வழிந்த சளியைத் துடைத்து, முகத்தை சுத்தம் செய்தார்.

அதன்பிறகு இரண்டு மூன்று முறை அவர் நமது தொண்டர்களை அனுப்பி அச்சிறுமிக்கு வெந்நீரில் தேன் கலந்து கொடுக்கச் சொன்னார். ஜூரம் குறைவதற்காக தலையில் களிமண் பூச்சு போடவும் ஏற்பாடு செய்தார்.

இரவு வந்ததும், சிறுமியின் ஜூரம் தனிந்துவிட்டது. வீட்டிலுள்ளோர் காந்திஜியை தமது பகைவர் என்றே கருதி அவரைக் காண மறுத்தவர்கள், இப்போது தம்முடைய குழந்தையை அவர் குணப்படுத்தியதும் காண விழைந்தார்கள்.

“கடவுளே நேரில் வந்தது போல, எங்கள் செல்வத்தைக்காப்பாற்றினீர்கள்” என்று கண்ணீர் உகுத்தார்கள்.

“நான் கடவுள் இல்லை. சாதாரண ஊழியன் இவளுக்கு உடல் வலுவடைய உணவும், ஆரோக்கியமான சூழலும் இருந்தாலே போதும்-நோயின்றி இருப்பாள்”

“உங்களுக்கு ஏதாவது கொடுக்க வேண்டும். என்ன கொடுப்பது என்று தெரியவில்லை.” என்றார். அக்குடும்பத்தலைவர்.

“எதற்கும் யாருக்கும் பயப்படாமல் வாழப் பழகுங்கள். அச்சமே எல்லா நோய்க்கும் அடிப்படை, நாம் எல்லோரும் சகோதரர்கள். சம உரிமை பெற்றவர்கள். ஜாதி மத பேதம் இல்லாமல் வாழுங்கள் அதுதான் நீங்கள் எனக்குத் தரும் பரிசு.

அவர்கள் அப்படியே செய்வதாக வாக்களித்தார்கள். காந்திஜியின் வழி, அகிம்சை வழி என்பதை உணர்ந்து அதன்வழி நடந்தார்கள்.

87. இறகுப் பேனா

பவுண்டன் பேனா ஒன்றை காந்திஜி சில காலம் வைத்திருந்தார். அது ஒரு நாள் திருடு போய்விட்டது. அதற்குப்ப பதிலாக ஒரு பவுண்டன் பேனாவை காந்திஜிக்கு வாங்கிக்கொடுத்தார்கள். ஆயினும் அவர், தம்மிடமிருந்து காணாமற்போன பேனாவையே நினைத்திருந்தார். அழகாக இருந்ததால்தானே அது காணாமல் போயிற்று இனி திருட்டுக்கு துணைநிற்கும் அழகிய பொருள் எதையும் பயன்படுத்துவதில்லை என்று தனக்குள் சபதம் செய்து கொண்டார்.

அதற்குப்பிறகு பேனா குச்சியையும் அலகையும் எழுதுவதற்குப் பயன்படுத்தினார். ஒருநாள் அந்த அலகின் நுனி மடங்கிவிட்டது. வேறு ஒரு அலகு கொண்டுவர , ஆச்ரமத் தொண்டர் சென்றார். பத்து நிமிடங்கள் ஆகியும் அவர் வரவில்லை.

காந்திஜியின், நேரம் பொன்னானது. அவர் ஒரு விநாடியைக்கூட வீணாக்கமாட்டார். பத்து நிமிடங்கள் அவர் காத்திருப்பாரா? தோட்டத்தில் இருந்து ஒரு இறகைக் கொண்டு வந்தார். அதை வைத்து எழதலானார்.

தொண்டர் அலகுடன் வந்தபோது, காந்திஜி எழுதுவதைக் கண்டார்.

“இனிமேல் இந்த இறகினால் எழுதப்போகிறேன். முன்காலத்தில் பேனாக்களையா பயன்படுத்தினார்கள். இறகுகள்தானே அவர்களுடைய எழுதுகோல். பேனா வாங்கவும் அலகுகள் வாங்குவும் செலவழிப்பது வீண். அது திருடு போய்விடுகிறது. இதை யாரும் திருடிச் செல்லமாட்டார்கள் அல்லவா. இனி இறகுகள்தான் என்னுடைய எழுதுகோல்.”

அது முதல் காந்திஜி இறகுப் பேனாவால் எழுத்த் தொடங்கினார். அவர் இறகுப் பேனாவால் முதல் முதலில் எழுதிய கடிதம் மௌண்ட் பாட்டன் பிரபுவுக்கு எழுதியதாகும்.

பேனாவைத் தேடும் நேரமும், அதற்கான உபகரணங்களை வாங்கும் பணமும் மிச்சம் என்பது காந்திஜியின் எண்ணம். நேரத்தையும் பணத்தையும் செலவிடுவதில் காந்திஜி மிகவும் சிக்கனமானவர். அவற்றின் மதிப்பை அவர் அறிந்திருந்ததோடு, பிறரும் அறியச் செய்தவர்.

இறகுப் பேனாவைப் பயன்படுத்தி அவர் எழுதிக் குவித்தவை ஏராளம் ஏராளம்!

88. கஸ்தூரிபா ஜெயிலுக்குத தயார்.

கஸ்தூரிபாய் சமையலையில் இருந்தார். காந்திஜி அவரைத் தேடிவந்து “உனக்கு ஒரு விஷயம் தெரியுமோ?” என்றார். “என்ன” என்றார் பா.

“நீ என் மனைவி இல்லையாம். ஜெனரல் ஸ்மட்ஸ் சொல்கிறார்”.

“இது என்ன புதிது புதிதாக ஏதோ சொல்கிறீர்களே!”

“ஆமாம். ஸமட்ஸ் சொல்கிறார் அரசாங்கத்தில் பதிவாகாத காரணத்தால சட்டரீதியாக என் மனைவி இல்லை” என்கிறார்.

“இதென்ன முட்டாள் தனம்”.

“சரி, உங்களைப் போன்ற பெண்கள் இப்போது என்ன செய்வீர்கள்?”

“எனக்கு ஒன்றும் தோன்றவில்லை. நீங்களே சொல்லுங்கள்.” இதற்காகவே காத்திருந்தவர்போல காந்திஜி, “நாங்கள் ஆண்கள் எப்படி அரசாங்கத்தோடு போராடுகிறோமோ அதுபோல நீங்களும் எதிர்த்து நிற்க வேண்டும். சத்யாக்கிரகம் செய்து ஜெயிலுக்குப் போக வேண்டும்” என்று கூறினார்.

“ஜெயிலுக்கு போவதா? பெண்கள் ஜெயிலுக்குப் போகலாமா?”

“ஏன் போக்க்கூடாது, கணவனும் மனைவியும் சரி சம்ம் இல்லையா? ஆண்கள் அனுபவிக்கும் சுகதுக்கங்களில் அவர்களுக்கும் பங்கு உண்டு. ராமனுடன் சீதையும் அரிச்சந்திரனுடன் சந்திமதியும் நளனுடன் தமயந்தியும் வனம் சென்று கணவரின் துன்பங்களில் பங்கு பெறவில்லையா?”

“அவர்கள் தெய்வீகத் தன்மை நிறைந்தவர்கள். நான் அப்படி இல்லையே.”

“நாமும் அவர்களைப்போல வாழ்ந்தால் தெய்வத்தன்மையை அடைய முடியும். அவர்கள், கணவரோடு கஷ்டங்களையும் அனுபவித்ததால்தானே கற்பரசிகள் என்று போற்றப்பட்டார்கள்”.

“சரி அப்படியானால் நான் ஜெயிலுக்குப் போகிறேன். அங்கே கொடுக்கும் உணவு மோசமானதாக இருந்தால்…”

“பழங்கள் சாப்பிடு”

“அரசாங்கம் எனக்கு பழங்கள் கொடுக்காவிட்டால்?”

“உபவாசம் இரு”

“சிறை சென்று பட்டினி கிடந்து சாகு என்று சொல்லாமல் சொல்கிறீர்கள். அப்படித்தானே”.

“அப்படி நீ இறந்தால் உன்னையே ஜகதம்பாவாக பூஜிப்பேன்.”

“சரி, நான் ஜெயிலுக்குப் போகத் தாயர்!” என்றார் கஸ்தூரிபாய்.

89. கிழிசல் சட்டை

ஒரு நாள் பிற்பகல் வேளை. காந்திஜி கடிதங்களுக்கு பதில் கூறிக்கொண்டிருந்தார். அப்போது, ராம நாராயண சௌத்ரி அங்கே வந்தார். அவர் உடுத்தியிருந்த கதர் சட்டையின் தோள்பட்டையில் கிழிசல் இருந்தது.

“ராம் நாராயணன், சட்டையைப் பார்த்தீரா?”

“ஆமாம் பாத்துத்தான் அணிந்துகொண்டேன்” என்றார் ராம் நாராயணன் சௌத்ரி.

“நான் அதைக் கேட்கவில்லை. சட்டையில் கிழிசல் இருக்கிறதே, அதை நீங்கள் கவனிக்கவில்லையா?”

“கவனித்தேன் கவனித்தேன்”.

“கவனித்துவிட்டு அப்படியே போட்டுக்கொண்டீரா? கிழிசல் சட்டையைத் தைத்துப்போட்டுக்கொள்ளக்கூடாதா?”

போட்டுக்கொள்ளலாம். கிழிசலை என் மனைவிதான் தைக்க வேண்டும். அவளுக்கு உடல்நலம் சரியில்லை. அதனால் தைக்காமலே அப்படியே போட்டுக்கொண்டு வந்தேன். வேறு என்ன செய்வது?”

“உடை அணிந்து கொள்வதில் கவனம் வேண்டும். சட்டை அணிந்து கொள்வது அவசியமே இல்லை. அணிந்து கொள்ள விரும்பினால் வெளுப்பானதை அணிய வேண்டும். கிழிசல் சட்டையும் அழுக்குச் சட்டையும் அணிவது சோம்பேறித்தனத்திற்கும் அறியாமைக்கும் அடையாளம். தேசத்தொண்டர்கள் ஒவ்வொருவனுக்கும் தன்னுடைய வசதிகளைத் தானே செய்துகொள்ளும் திறமை வேண்டும். சட்டை தைத்துக்கொள்ளும் அளவுக்கு தையல் தெரியாவிட்டாலம் கிழிசலை தைத்துப் போட்டுக்கொள்ளும் அளவுக்காவது தையல் தெரிய வேண்டும்.” என்று சொன்னார்.

அத்துடன் விட்டாரா! ஊசியும் நூலும் எடுத்துவரச் செய்து அவருக்குக் கிழிசைத் தைக்கக் கற்றுக்கொடுத்தார்.

ராம்நாராயணன் பிறகு தன் சட்டையைத் தைத்துப் போட்டுக்கொண்டார். சொல் ஒன்று செயல் ஒன்று கிடையாது காந்திஜியிடம் என்பதை நிரூபித்தார்.

90. பெருமிதம் அடைந்த பேரன்

வார்தா ஆச்ரமத்தில் காந்திஜியுடன் அவருடைய பேரன் காந்தியும் உடன் இருந்தான். பதினைந்து வயதான அந்த இளைஞனுக்கு ஆச்ரம வாழ்க்கையில் பிடிப்பு இல்லை. இளம் பருவத்திற்கே உரிய கனவுகளோடு வாழ்ந்தான். “தேச தேவை செய்’ என்று உபதேசித்த காந்திஜியிடம் தன் மனத்தைத் திறந்து வெளியிட்டான்.

“நான் வாழ்க்கையில் நிரம்ப படித்து முன்னேற விரும்புகிறேன். கதர் அணிந்து தேச சேவை செய்வதில் எனக்கு ஈடுபாடு இல்லை” என்றான்.

பேரனின் முடிவில் இருந்த உறுதியை காந்திஜி மெச்சி, அவனை ஆச்ரமத்திலிருந்து போக அனுமதியளித்தார்.

“நான் பம்பாய் போக வேண்டும். அதற்குப் பணம் கொடுங்கள்” என்று பேரன் காந்திஜியைக் கேட்டான்.

“பணமா? ஆச்ரமத்தில் உள்ளது பொதுப்பணம். அதிலிருந்து தர முடியாது. நீ இங்கு இருந்தவரை ஆச்ரமத்தில் வேலை செய்தாய். சாப்பிட்டாய். ஆனால் நீ உன் சொந்த வாழ்க்கைக்காக கேட்கிறாய் இதிலிருந்து எப்படித் தர முடியும்? அது சரியல்ல”.

“ஆனால் பம்பாய்க்கு நான் போக வேண்டும் ரயில் டிக்கெட் வாங்குவதற்குக்கூட என்னிடம் பணம் இல்லை. உங்களுடைய பணத்திலிருந்து கொடுங்கள்” என்றான் பேரன்.

காந்திஜி நகைத்தார். “எனக்கென்று பணம் ஒன்றுமே கிடையதே. நான் எப்படித் தருவேன்” என்றார்.

“நான் பம்பாய் போவதற்கு வழி…”

காந்திஜியும் பேரனும் பேசிக்கொண்டிருந்ததை மகாதேவதேசாய் கேட்டுக்கொண்டே வந்தார்.

“என்னுடைய பணத்திலிருந்து தருகிறேன்” என்று இருபது ரூபாயை காந்திஜியின் பேரனிடம் கொடுத்தார்.

காந்திஜியின் நேர்மையும் பொதுப்பணத்தை அவர் கையாளும் நாணமும் தெரிந்துகொண்ட அவருடைய பேரன், தனக்கு தாத்தா பணம் தரவில்லையே என்று வருந்தவில்லை. மாறாக அவரது இயல்பை அறிந்து பெருமிதமே அடைந்தான்.

91. நேரு என் வாரிசு.

பஞ்சாபில் அடக்குமுறை தாண்டவமாடிய காலம். அம்ருதசரஸ் காங்கிரசுக்கு மோதிலால் நேரு தலைமை தாங்கினார். அது முதல் ‘காந்தி காங்கிரஸ்’ ஆயிற்று. அந்நாள் முதலே ஜவஹர்லால் நேரு காந்திஜியை தமது தலைவராக ஏற்றார்.

இத்தாலிய மாவீரன் கரிபால்டியைப் போல தாமும் தமது தாயகத்தின் விடுதலைக்காகப் போராட வேண்டும் என்று துடிப்பு ஜவஹரிடம் இருந்தது. மகாத்மா காந்திஜியின் தலைமையில், பணிபுரிவதுத இரட்டை அதிர்ஷ்டம என்றே நேரு கருதினார்.

“காங்கிரஸ் கிரீடத்தில் இப்போது முட்களே உள்ளன. ரோஜா இதழ்கள் இல்லை. இந்தக் கிரீடத்தை யார் அணிய விரும்புவார்கள்? முட்களே நிறைந்த கிரீடத்தை ஜவஹர்தான் அணிய வேண்டும் என்பதற்கு ஆயிரம் காரணங்கள் உண்டு.

“படேல் தலைமை ஏற்கலாம் அல்லவா'” என்றொரு குரல் எழுந்தது.

“ஏற்கலாம். ஆனால் அவருடைய எண்ணம் பர்தோலியில் இருக்க வேண்டும். வேறு எதிலும் அவர் திரும்பக் கடாது” என்றார் காந்திஜி.

“ஜவஹரை தலைமைப் பொறுப்பேற்கவும் போரின் தளபதியாக இருக்கவும் பல காரணங்கள் உள்ளன என்றேன். அதைச் சொல்கிறேன். முதல் காரணம் ஐவஹர் மிகுந்த துணிச்சல் நிறைந்தவர். தாளாள மனம் கொண்டவர்,. அவரை முஸ்லிம்பகள் தங்களுடைய நண்பராகக் கருதுகிறார்கள். அவர் எல்லாத் தரப்பினரின் நம்பிக்கையையும் பெற்றிருக்கிறார். தமது பேச்சுத் திறனல் எல்லோரையும் தன்புறம் இழுத்துக் கொள்கிறார். கண்ணியமான சமரசம் விரும்பும் நாட்டின் சரியான தூதர் அவர்தான். நான் போனபிறகும் என்னுடைய வார்த்தைகளையே அவர் பேசுவார்.

தம்முடைய த்த்துவத்தை பிரதிபலிக்கக்கூடிய சரியான மனப்பாங்கு ஜவஹர்லால் நேருவுக்கு மட்டுமே இருப்பதாக காந்திஜி நம்பினார். அதனாலேயே, “இவரை நம்பி நாட்டை ஒப்படைக்கலாம்” என்றார். காந்திஜியின் வாரிசாக இருந்தார் நேருஜி.

92. மகாதேவ தேசாய் மறைவு

பேரும் புகழும் தேடும் வயதில் 25 – ம் வயதில் காந்திஜியின் மந்திரச் சொற்களில் ஆர்வம் கொண்டு அவருடைய காலடி பற்றி நடந்தார். இளமைக்காலம், லட்சியம், அபூர்வமான இலக்கிய ஆற்றல், தேசபக்தி அனைத்தையும் காந்திஜியின் காலடியில் சமர்ப்பணம் செய்தார். 25 வருட காலம் குருவுக்கு சேவை செய்தார்.

காந்திஜியின் உதவியாளராக காந்திஜியின் எண்ணங்களை எழுத்து வடிவிலே ஆக்குபவராக, அரசியல் தூதராக, வைசிராயைக் காணச் செல்பவராக, வெளிநாடுகளுக்கு காந்திஜி செல்லும்போதெல்லாம் அவருக்கு எல்லாமாக இருந்தவர் மகாதேவ தேசாய்.

ஆகாகான் மாளிகையில் ஆகஸ்ட் 9-ம் நாளன்று காந்திஜியுடன் கைது செய்யப்பட்டு சென்றபோது தேசாய் மிகவும் அச்சமுற்றவராக இருந்தார்.

ஆகஸ்ட் 14-ம் தேதி இரவு என்ன தோன்றியதோ, தேசாய் தமது வாழ்க்கை பற்றி வெகுநேரம் பேசினார். மகாத்மா காந்திஜியைப் பற்றி பேச்சு திரும்பியது. அவர் நலமாக வாழவேண்டும் என்று தமது எண்ணத்தை வெளிப்படுத்தினார்.

மறுநாள் காலையில் வழக்கம்போல் எழுந்தார். காந்திஜியுடன் உலாவப்போனார. அலுவல்களில் மூழ்கினார். அவரைக்காண வந்த டாக்டருடன் வேடிக்கையாகப் பேசினார். பேசும்பொழுதே “தலை சுழல்கின்றதே” என்றார். அப்படியே சாய்ந்தவர்தான், யார் அழைத்தும் அவர் எழுந்திருக்கவேயில்லை.

காந்திஜி அடைந்த துக்கத்துக்கு அழவே இல்லை. இனிய மகனைப்போல வாழ்ந்தவரை இழந்த சோகம் ஆட்கொண்டது.

காந்திஜி குளிர்ந்துபோன மகாதேவ தேசாயின் உடலைத் தாமே குளிப்பாட்டினார். அவருடைய கைகள் நடுங்கின. சந்தனம் பூசினார். புஷ்பங்களால் அலங்கரித்தா, “மகாதேவ், இதையெல்லாம் நீ எனக்குச் செய்வாய் என்று எண்ணினேனே! இப்பொழுது உனக்கு நான் செய்ய வேண்டியவனாய் இருக்கிறேனே” என்று தழுதழுத்த குரலில் கூறினார்.

காலையில் ஜீவனுள்ள ஜோதியாக இருந்தவர் மாலையில் நீறுபூத்த நெருப்பானதை எண்ணி, எல்லோருமே நம்ப முடியாதவர்களாக இருந்தார்கள்.

காந்திஜி மகாதேவ் தேசாயை தமது நெஞ்சில் நிலைத்துக்கொண்டார். மகாதேவ தேசாய் மறைந்து 1944 – ம் ஆண்டு ஆக்ஸ்ட் 14 -ந்தேதி. அந்த ஆகஸ்ட் 14-ந்தேதி காந்திஜியால் மறக்கமுடியாத நாள்.

93. செய் அல்லது செத்து மடி

1942 -ம் வருடம் ஆகஸ்ட் 8-ம் நாள்.

‘வெள்ளையனே வெளியேறு’ என்ற தீர்மானத்தை பம்பாய் காங்கிரஸ் கூட்டத்தில் தீர்மானித்தபோது, தலைவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டார்கள் எல்லோரையும் பூனாவுக்கு அழைத்து வருவதாகச் செய்தி வந்ததும், பூனா ரயில் நிலையத்தில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

காந்திஜியையும் நேருஜியைமு இன்னும்பல தலைவர்களையும் காண்த்துடித்த தொண்டர்கள் காத்திருந்தார்கள்.

ரயில் வந்ததும் கூட்டத்தை விலகிச்செல்லும்படி, தடியால் அடித்தார்கள். ரயிலில் ஜன்னல் ஓரத்தில் அமர்ந்திருந்த ஜவஹர்லால் நேரு இதைப் பார்த்ததும் கொதித்தார். கீழே குதித்து வந்தார்.

‘நேருஜி நேருஜி’ என்று கூவிய கூட்டத்தார் அவரை நோக்கிச் சென்றார்கள்.

“இந்தக் கழுதைகளை யார் உள்ளே வர அனுமதியளித்தது? அடித்து விரட்டுங்கள்” என்று ஒரு அதிகாரி கூறியதும், லாத்தியால் அடிக்கலானார்கள்.

முகம் சிவக்க, நேருஜி, அந்த அதிகாரியை அடிக்கக் கையை ஓங்கினார்.

நேருஜியின் பின்னாலேயே ஓடிவந்த சங்கர்ராவும் நரேந்திர்ராவும் நேருஜியின் கைகளைப் பற்றிக்கொண்டார்கள்.

“காந்திஜியின் ஆப்த சீடரான நீர் இவ்வாறு கை ஓங்கலாமா?” என்று கூறி, மறுபடி ரயிலுக்கு அழைத்துச் சென்றார்கள்.

ரயில் நிலையத்துக்கு வருவதற்கு அவர்களுக்கு உரிமை இருக்கிறது. இவர்களை அடிக்க இவனுக்கு என்ன உரிமை” என்று நேருஜி கர்ஜித்தார்.

ஆகாகான் மாளிகைக்குத்தான் எல்லோரையும் அழைத்துச் செல்கிறார்கள் என்று அறிந்துகொண்ட தொண்டர்கள், அங்கே தலைவர்களைக்காண விரைந்தார்கள்.

காலர்கள் வரிசையாக வந்து நின்றன. தலைவர்கள் ஒவ்வொருவராக இறங்கி மாளிகைக்குள் சென்றார்கள்.

திரும்பி நின்று தொண்டர்களை நோக்கினார்.

வலக்கரத்தை உயர்தினார். “செய்யுங்கள் அல்லது செத்து மடியுங்கள்” என்று முழக்கமிட்டார்.

தொண்டர் திருக்கூட்டம் தலைவரின் விர முழக்கத்தைக்கேட்டு தேசத்திற்காக உயிரை அர்ப்பணம் செய்யவும் தயாரானார்கள்.

94. உ.வே. சாவிடம் தமிழ் கற்க ஆசை

1937- ம் ஆண்டு மார்ச் மாதம் 27-ம் தேதி சென்னையில் ‘பாரத பாஷா சாகித்ய பரிஷத்’தின் முதல் மாநாடு கூடுவதாக இருந்தது. அதன் தலைவராக காந்திஜி இருக்க வேண்டுமென்று விரும்பினார்கள். மகாநாடு சென்னையில் கூடுவதால் அதற்கான வரவேற்புக்குழுவில் சென்னையில் உள்ளவர்களே இருக்க வேண்டும் என்று தீர்மானித்தார்கள்.

மகாத்மா காந்தி தலைமை தாங்கும் மகாநாட்டிற்கு வரவேற்பு நல்க தகுதியும் சிறப்பும் வாய்ந்த ஒருவர் வேண்டுமே என்று யோசித்தார்கள்.

“மகாமகோபாத்யாய டாக்டர் உ.வே. சாமிநாதய்யரைக் கேட்கலாம்” என்று ஒருவர் யோசனை கூற, “அவர் சம்மதித்தால் மாநாடு சிறப்பாக அமையும் என்பதில் சந்தேகமே இல்லை” என்று நினைத்தார்கள்த

மறுநாளே கல்கி கிருஷ்ணமூர்த்தியும் ஹரிஹர சர்மாவும் தமிழ்த்தாத்தா உவே. சாமிநாதய்யரைச் சென்று பார்த்தார்கள். செய்தியை விளக்கிக் கூறினார்கள்.

“மகாத்மா காந்தி எந்த மொழியில் பேசுவார்?” என்று ஐயர் கேட்டார்.

“அவர் ஹிந்தியில்தான் பேசுவார். மற்றவர்களுக்கும் அந்த மொழியிலேதான் பேசுவார்கள்.” என்றார் கல்கி.

“ஆனால் எனக்கு ஹிந்தி தெரியாதே” என்றார் உ.வே.சா.

“நீங்க் வரவேற்பை தமிழின் தொன்மை, சங்ககாலப் பெருமை, பிற மொழியோடு தமிழுக்கு இருக்கும் தொடர்பு இவற்றைப் பற்றியும், காந்திஜியின் வருகையைப் பற்றியும் பேசினார். இதனை கா.ஸ்ரீ.ஸ்ரீ மொழிப்பெயர்த்து வாசித்தார்.

நெடிதுயர்ந்த உருவமும் அறிவொளி துதும்பும் கண்களும் உடைய ஐயர் அவர்களை மிகுந்த மரியாடையுடன் காந்திஜி வரவேற்றார்.

“இவருடைய சிறந்த தமிழ் உரையைக் கேட்டபிறகு, இவருடைய நிழலில் இருந்து தமிழ் கற்க வேண்டுமென்ற ஆர்வம் எனக்கு உண்டாகிறது” என்றார். அவரது இதயத்தின் அடித்தளத்திலிருந்து எழுந்த சொல் அது.

வாழ்க்கையில் சத்தியசோதனை செய்துவரும் மகாத்மா காந்திஜியும் தமிழ் இலக்கியத்தில் சத்திய சோதனைகள் பல புரிந்த மகாமகோபாத்யாய டாக்டர் சாமிநாதய்யர் அவர்களும் சந்தித்த காட்சியாது பாரத்த் தாயும் தமிழ்ச் சேயும் சந்தித்ததுபோல இருந்தது.

95. சைக்கிளில் சென்ற காந்திஜி.

குஜராத்தி சபையில் காந்திஜியைப் பேச அழைத்திருந்தார்கள். மாலை நேரமாயிற்று. காந்திஜி தமது இடையில் தொங்கிய கடிகாரத்தில் மணி பார்த்தார். ஆறு மணியாகியிருந்தது.

“மகாதேவ்! கூட்டம் எத்தனை மணிக்கு?”

“மாலை ஆறரை மணிக்கு தங்களை மோட்டார் காரில் வந்து அழைத்துப்போவதாகச் சொல்லியிருக்கிறார்கள்.”

“இன்னும் வரவில்லையே. இங்கிருந்து குஜராத்தி சபா எவ்வளவு தொலையில் உள்ளது?”

“சுமார் இரண்டரை மைல் தொலையில் உள்ளது.” மகாதேவதேசாய் காந்திஜியை உற்றுப்பார்த்தார். என்ன செய்யப்போகிறார்?

“அந்த சபா நிர்வாகிகளுக்கு என்ன நேர்ந்ததோ என்னவோ, வர இயலாமல் போயிருக்கலாம். ஆனால் நாம் காலம் தாழ்ந்து போகலாமா? கூடாது. நாம் செய்வதாக ஏற்றுக்கொண்ட கடமையை அதற்குரிய நேரத்தில் செய்ய வேண்டும். ஆகையால் அவசியம் நான் போக வேண்டும்” என்று காந்திஜி கிளம்பிவிட்டார்.

காந்திஜியின் வேக நடையைத் தொடர்ந்து மகாதேவ தேசாயும் ஓட்டமும் நடையுமாகச் சென்றார்.

கூட்டம் தொடங்க இன்னும் பத்து நிமிடங்களே இருக்கின்றன என்ற நிலையில் பாதி வழியைக் கடந்திருந்தார்களக்.

எதிரில் காகாசாகேப் கலேல்கர் சைக்கிளில் வந்து கொண்டிருந்தை காந்திஜி பார்த்தார்.

“தம்பி சைக்கிளை எனக்குக் கொடுப்பாயா? நான் அவசரமாக குஜராத்தி சபைகுப் போக வேண்டும்” என்றதும், அந்த இளைஞர் காந்திஜியிடம் சைக்கிளைக்கொடுத்தார்.

“ரொம்ப நன்றி. சபாகார்ரிடம் உன் சைக்கிளை ஒப்படைக்கிறேன். போய் வாங்கிக்கொள்.

வேகமாக சைக்கிளை மிதித்துக்கொண்டு காந்திஜி சென்றார். சரியான நேரத்திற்குக் கூட்டத்தில் பேசச் சென்றுவிட்டார்.

தாம் செய்வதாக ஏற்றுக்கொண்டதை காலம் தாழ்த்தாமல் செய்து முடிப்பதில் வெற்றி கண்டவர் காந்திஜி.

96. சுயமரியாதை ஆடுகள்.

“மதப்பற்றே என்னை அரசியலில் ஈடுபட வைத்தது” என்று தேசபந்து சித்தரஞ்சன்தாஸ் அடிக்கடி கூறுவதுண்டு. அவர் டார்ஜிலிங்கில் ஓய்வு எடுத்துக்கொள்வதற்காகச் சென்றபொழுது அவரைக்காண காந்திஜி டார்ஜிலிங் சென்றார்.

காந்திஜி, வெள்ளாட்டுப் பால்தான் அருந்தவார் என்று தேச பந்துவுக்குத் தெரியும். எனவே காந்திஜிக்கு ஆட்டுப்பால் அளிப்பதற்காக ஐந்து வெள்ளாடுகளை தேபந்து விலைக்கு வாங்கினார்.

காந்திஜியிடம் ஒருநாள் தேசபந்து கேட்டார்.

“ஆட்டுப்பால் சரியாக கிடைக்கிறதா?” என்றார்.

காந்திஜி பதில் சொல்வதறகு முன்னனால், காந்திஜிக்கு உணவு தயார் செய்யும் கோஸ்வாமி என்பவர் தேசபந்துவுக்கு பதிலளித்தார்.

“இங்கே உள்ள ஐந்து வெள்ளாடுகளில் இரண்டு ஆடுகள்தான் பால் தருகின்றன. மற்ற மூன்று வெள்ளாடுகளும் சரியாக கறப்பதில்லை”

இதைக்கேட்டு தமக்கே இயல்பான நகைச்சுவையுடன் “ஓகோ, மூன்று ஆடுகள் சரியாக கறப்பதில்லையா! நான் நினைக்கிறேன். அந்த மூன்று வெள்ளாடுகளும் சுயமரியாதை உள்ள ஆடுகள் என்று.”

“காந்திஜி அவை சுயமரியாதை உள்ளவை மட்டுமல்ல; இவையும் காந்திஜியின் வழியைப் பின்பற்றும் ஆடுகள். அவைகள் ஒத்துழையாமை இயக்கத்தில் ஈடுபாடு கொண்டதால்தான் பால் கறக்கவில்லை போலும்! வசந்தி, ஒத்துழைக்காத இந்த மூன்று ஆடுகளையும் சிறையில் தள்ள ஏற்பாடு செய்” என்று தேசபந்து கூறியதும் அங்கே இருந்தவர்கள் குலுங்கக் குலுங்கச் சிரித்தார்கள்.

“சரி, அவைகளை சிறையில் அடைத்துவிடுகிறேன். பால் கறக்கும் மற்ற இரண்டு வெள்ளாடுகளைப் பற்றி எதுவும் சொல்லவில்லையே!” என்று வசந்திதேவி கேட்டார்.

“அவற்றிக்கு ‘மகாத்மா’ என்று பட்டம் சூட்ட வேண்டும்” என்று தேசபந்து கூறியதைக் கேட்டதும் மகாத்மா காந்தியே சிரித்துவிட்டார். நண்பர்களின் பேச்சு அனைவரையும் குதூகலத்தில் ஆழ்த்தியது.

97. துடைப்பத்ததால் பெருக்கினார்.

சம்பரானில் காந்திஜி தங்கியிருந்த வீடு, மிகவும் சிறியதாக இருந்தது, வேறு இடம் பார்த்து, ராஜன்பாபுவும் மற்ற நண்பர்களகும் அவருடனே தங்குவதா ஏற்பாடு செய்தார்கள். வீடும் பார்த்தார்கள். அதை சுத்தம் செய்வதில் தாமதம் ஏற்பட்டது. புதிய வீட்டிற்கு அன்றே போவதாக முதலில் காந்திஜியிடம் கூறியிருந்தார்கள்.

இரவு எட்டுமணி ஆயிற்று. “எப்போது புது இடம் போகப்போகிறோம்?” என்று நண்பர்கள் கூறினார்கள்.

“அது எப்படி? ஒன்றைச்செய்வதென்று முடிவுக்கு வந்துவிட்டால், அதை எப்படியும் நிறைவேற்றியே தீர வேண்டும். அதிலிருந்து மாறவே கூடாது.” என்று கூறிக்கொண்டு தன்னுடைய படுக்கையை எடுத்தார்.

காந்திஜியின் மூட்டை சிறியது. படுக்கையிலேயே துணிகளைச் சுற்றி வைப்பார். விரித்தால் படுக்கை, இன்னுமொரு தகரப்பெட்டி. அவ்வளவே, இரண்டையும் தூக்கிக்கொண்டு கிளம்பிவிட்டார்.

“நான் போகிறேன். இன்று இரவு அங்கேதான் தூங்கப் போகிறேன்.”

“நாங்களும் வருகிறோம்” என்றதும் சிறிதுநேரம் நின்றார், தங்களுக்கிருந்த சாமான்களில் சிலவற்றை மட்டும் எடுத்துக்கொண்டு அந்த நண்பர்களும் காந்திஜியுடன் கிளம்பினார்கள்.

புது வீட்டிற்கு வந்ததும் காந்திஜி துடைப்பத்தை எடுத்து சுத்தம் செய்யலானார். மற்றவர்கள் அதை வாங்கி பெருக்கி சுத்தப்படுத்தினார்கள்.

“துடைப்பத்தால் பெருக்குவது ஒரு கஷ்டமா? நாம் தங்குமிடத்தை நாமே சுத்தம் செய்துகொள்வதில் தவறு ஒன்றுமில்லை. இதற்கு பிறர் கையை எதிர்பாத்துக் கொண்டு இருந்தால்தானே தாமதம் ஏற்படுகிறது.!”

காந்திஜி இவ்வாறு கூறியதைக் கேட்டதும் ராஜன்பாபுவும் நண்பர்களும் காந்திஜியிடம் மன்னிப்பு கேட்டார்கள்.

இனிமேல் ஒரு முடிவுக்கு வந்துவிட்டால், அதை எக்காரணம் கொண்டும் கைவிடுவது என்பது கூடாது என்று உணர்ந்துகொண்டார்கள்.

98. சத்திய சோதனையில் தேறிய மனு

நலகாளியில் இந்து முஸ்லிம் ஒற்றுமையை நிலைநாட்ட கிராம்மாக காந்திஜி நடந்து சென்றார். அவருடன் குறிப்பிட்ட சில தொண்டர்கள் மட்டுமே உடன் சென்றனர்.

எரிந்து சாம்பலாகிப் போன வீடுகளும் அழுகை ஒலியும் வேதனையுடன் கூடிய கூக்குரல்களுமே எங்கும் நிறைந்திருந்தன. இவற்றின் நடுவே காந்திஜி சமாதானத்தூதுவராக, வேதனைகளுக்கு மருந்தளிக்கும் மருத்துவராகச் சென்றார். அன்பையும் ஒற்றுமையையும் ஒவ்வொரு மனித உள்ளத்திலும் விதைத்தார். வாழ்வில் நம்பிக்கையை வேரூன்றச் செய்தார். ஒரு சிற்றூரிலிருந்து எல்லோம் நடந்து சென்று ஓரிடத்தில் தங்கினார்கள்.

காந்திஜி கிராம மக்களைச் சந்தித்து பேசினார். பிறகு குளிப்பதற்காகச் சென்றார். சிறிது நேரத்தில் “மனு” என்று அழைத்தார்.

“பாபுஜி” என்று கூவிக்கொண்டே மனுபென் வந்தாள்.

“நான் உடம்பு தேய்த்துக்கொள்ளும் கல் எங்கேம்மா?”
மனு… அப்போதுதான் அதைப் பற்றிய நினைவு வந்தது போலப் பார்த்தாள்.

“பாபுஜி, நான் கல்லை எடுத்துவர மறந்துவிட்டேன்”

“கல்தானே, அது எதற்கு என்று அலட்சியமாக எண்ணிவிட்டாயா மனூ?அது என் மீது அன்பைப் பொழிந்த ஒரு தாய் பரிசாகத் தந்த கல். அதை இழக்க ஒருபோதும் சம்மதிக்க மாட்டேன். போய் எடுத்துக்கொண்டு வந்துவிடு”.

“பாபுஜி, நான் தனியாகப் போக பயமாக இருக்கிறது, துணைக்கு யாரையாவது அனுப்புங்கள்”.

“துணைக்கு யாரையாவது அனுப்புங்கள்”.

“துணையா? பகவான் துணையிருப்பார் போ. ராமா ராமா என்று சொல்லிக்கொண்டே போ. நீ அகிம்சாவாதி தானே! அகிம்சாவாதிகளுக்கு அச்சம் இருக்கக்கூடாது.

வேறு வழியின்றி மனு பயந்து கொண்டே அந்த கிராமத்தை நோக்கி நடந்தாள். கற்பழிப்பும்,கொலையும், கொள்ளையும் நடந்த ஊராயிற்றே என்று அஞ்சியவாறே சென்றாள்.

அவள் திரும்பி வரும் வரையிலும் காந்திஜி பச்சைத் தண்ணீர்க்கூடப் பருகாமல் பிரார்த்தனையில் இருந்தார்.

அவளைக்கண்ட பிறகே எழுந்தார். “மனு நீ சத்திய சோதனையில் தேறிவிட்டாய் அம்மா!” என்றார்.

இருவருக்கும் கண்ணீர் பெருகி வழிந்தது.

99. அன்றாட நடைமுறை வாழ்க்கை

காந்திஜியின் வாழ்வு எளிமையானதும் தூய்மை யானதும் ஆகும். விடியற்காலை மூன்று மணிக்கே அவர் எழுந்துகொள்வார். ஒவ்வொரு வேலையையும் அதற்குரிய நேரப்படி தவறாமல் நடத்தி வந்தார்.

காலை எழுந்ததும் நான்றாகப்பல் தேய்த்து, பின்பு காலைக்கடன்கள் கழித்தபிறகு, இளம் வெந்நீரில் சிறிதளவு தேன் கலந்து அருந்துவார். பின்பு உலாவச் செல்வார்.

காலை ஆறுமணிக்கு நன்றாகக் காய்ச்சிய ஆட்டுப்பாலும் மூன்று ஆரஞ்சுப் பழங்ககளும் அவருடைய காலைச் சிற்றுண்டியாகும்.

சிற்றுண்டிக்குப் பிறகு எழுதுவது, காங்கிரஸ் பணிகளில் ஈடுபடுவது, ஆச்ரமத்துக்கு வருபவர்களைக் காண்பது, கடிதங்கள் எழுதுவது என்று ஓய்வில்லாமல் பணிகள் தொடர்ந்து வரும்.

10-30 ஆனதும் பகல் உணவை உண்ணச் செல்வார். சமைத்த, உப்பில்லாத கீரை, ரொட்டி, தேன், தயிர், பழம் இவைதான் அவருடைய பகல் உணவாகும்.

பகலில் ஒருமணி நேரம் சற்று ஓய்வெடுப்பார். எழுந்ததும் இளம் சூடான வெந்நீர் பருகுவார். பின்பு பழமும் பாலும் அருந்துவார்.

குளிர்காலமோ வெய்யிற்காலமோ எதுவானாலும் காந்திஜி திறந்த வெளியில்தான் படுத்துக்கொள்வார்.

காலையும் மாலையும் உலாவச் செல்லுவார். அப்போது அவருடன் ஆச்ரமவாசிகள் உடன் நடப்பார்கள். காந்திஜியின் நடை சாதாரண நடையல்ல, ஓட்ட நடை, அவருடன் நடை பயில்வதற்கு தனிப்பயிற்சி வேண்டும்.

காலை எட்டுமணிக்கு தினமும் துளசி ராமாயண பாராயணம் நடைபெறும். பிரார்த்தைனை கீதங்களும் பாடுவார்கள்.

பகல்பன்னிரண்டு மணிக்கு ஆச்ரமத்தில் உள்ள அனைவரும் ஒரே இடத்தில் கூடி, சர்க்காவிலோ தக்ளியிலோ நூல் நூற்பார்கள். குறைந்தது அரைமணி நேரமாவது நூற்க வேண்டும் என்பது காந்திஜியின் கட்டளை.

காலையில் 4-30மணிக்கு பிரார்த்தனைக் கூட்டத்திற்கு ஆச்ரமத்தில் உள்ளவர்கள் கட்டாயம் கலந்துகொள்ள வேண்டும் என்பதில் காந்திஜி கண்டிப்பானவர்.

இரவு நேரப் பிரார்த்தனைக்குப் பிறகு, அவரவர் நூற்ற நூல் ‘சிட்டம்’ எவ்வளவு என்று கணக்குக் கொடுக்க வேண்டும்.

இயற்கையோடு இயைந்த ஆச்ரம வாழ்வுச் சம்பவங்களும் பிற நிகழ்வுகள்ம் சுவையானவை மட்டுமல்ல, வழிகாட்டுபவையும் ஆகும்.

100. காந்திஜியின் கட்டளை

காந்திஜியின் வாழ்க்கையே ஒரு திறந்த புத்தகமாக இருந்தது. காந்திஜி பிறருக்கு வழிகாட்டுவதாக அந்த வழியிலேயே வாழ்ந்தார். அறிவுரை சொல்ல அவர் விரும்பியதே இல்லை. சில வழிமுறைகளை அவர் வலியுறுத்தி வந்தார் எனலாம்.

கொள்கை இல்லாத அரசியல்,
உழைத்துப் பெறாத செல்வம்
ஒழுக்கம் இல்லாத வாணிபம்
பண்பாடு இல்லாத கல்வி
மனச்சாட்சிக்குப் புறம்பான இன்பம்
மனித்த் தன்மையற்ற விஞ்ஞானம்
தியாக உணர்வற்ற வழிபாடு

என்ற இந்த ஏழும் நமக்கு இருக்க வேண்டாதவை என்பார்.

யார் அவரிடம் வந்து அறிவுரை கேட்டாலும் “உரிமை களைக் கேட்கும்போது கடமைகளை மறந்துவிடாதீர்கள்” என்று கூறுவார்.

ஜமன்லால் பஜாஜ் மகன் கமல நயன பஜாஜ் மேற்படிப்புக்காக வெளிநாடு செல்லுமுன் காந்திஜியிடம் ஆசி பெற வந்தார். அவ்வமயம் அவருக்குக் காந்திஊஇ கூறியவை;

ஜம்னாலால் பஜாஜ் மகன் கமலநயன பஜாஜ் மேற்படிப்புக்காக வெளிநாடு செல்லுமுன் காந்திஜி கூறியவை;

அளவோடு உரையாடு;

எவர் சொல்வதையும் கேள்; ஆனால் நேர்மை யானதைச் செய்.

நேரத்தை வீணாக்காமல் ஒவ்வொன்றையும் உரிய காலத்தில் செய்.

எளிய வாழ்க்கை மேற்கொண்டு வாழு.

செலவழிக்கும் ஒவ்வொரு பைசாவுக்கும் கணக்கு வைத்திரு.

ஊன்றி கவனித்துக் கற்றுக்கொள்.

ஒழுங்காக உடற்பயிற்சி செய்.

அன்றாடம் நிகழ்வதை நாட்குறிப்பில் பதித்துக்கொள்.

இந்த அறிவுரைகள், என்றைக்கும் மாணவர்களுக்கு பயனுள்ளவையாக அமைந்திருக்கின்றன.

முற்றும்