அமெரிக்கா

 • ஆலயத்திற்கு அருகில் இருப்பவன்தான் தொழுகைக்குக் கடைசியாக வருவான்.
 • உன்னிடம் வம்பளப்பவன் உன்னைப்ப்ற்றியும் வம்பு அளப்பான்.
 • செயலே புகழ் பேசும்.
 • உடையவனின் பாதம் வயலுக்கு உரம்.
 • சிறு செலவுகள் முழுச் செல்வத்தையும் விழுங்குகின்றன
 • தோல்வி ஏற்படும் நேரத்தில்தான் மாவீர்ர்கள் உருவாகிறார்கள். ஆகவே, தொடர்ச்சியான பல பெரிய தோல்விகளே வெற்றி என்பதாக வர்ணிக்கப்படுகிறது.
 • தீயோர் நேசத்தைவிட தனிமை மேலானது.
 • வலிமை வாய்ந்த நண்பன் வலிமை மிகுந்த எதிரியாக மாறுவான்.
 • பல் இல்லாமல் இருந்தால்கூட ஒரு கலைமானால் சில காரியங்களைச் சாதித்துக் கொள்ள முடியும்.
 • ஒரு பொருளின் இன்றியமையாமை அது தேவைப்படும்போது தான் தெரியும்.
 • ஒரு மனிதனுக்கு உணவு மற்றவனுக்கு நஞ்சு
 • தள்ள முடியவில்லையென்றால் இழு; இழுக்க முடியவில்லை என்றால் வழியைவிட்டுப் போய்விடு.
 • ஆபத்து இல்லை; புகழும் இல்லை.
 • நம்முடைய அறிவுரையை ஏற்றுக்கொள்ளாதவர்களை நாம் வெறுக்கிறோம். நம்முடைய அறிவுரைப்படி நடக்கிறவரை நாம் வஞ்சிக்கிறோம்.
 • அதிர்ஷ்டம் தைரியத்திற்குச் சலுகை புரிகிறது.
 • ஒருவரைத் தண்டிப்பதைவிட தயவு காட்டுவது அதிக வல்லமை உள்ளதாகும்.
 • ஒரு பறவையும் ஒரு கூண்டையும் நீ விரும்பினால், நீ முதலில் கூண்டை வாங்கு.
 • மேதைத் தன்மை ஒரு பரம்பரை உரிமையன்று.
 • பொதுவான விதி ஒவ்வொன்றிற்கும் ஒரு விதி வில்கு உண்டு.
 • வெறுமையான பை நேராக நிற்க முடியாது.
 • ஒரு மனிதனை நீ மன்னிக்கும் ஒவ்வொரு நேரமும் நீ அவனை பலப்படுத்தி உன்னையும் பலப்படுத்திக் கொள்கிறாய்.
 • கோயிலுக்கு அருகாமை கடவுளுக்கு வெகுதூரம்.
 • இந்த வாழ்வில் நுழைவதற்கு ஒரு வழியைத்தவிர வேறு வழி இல்லை. ஆனால் மரணத்தின் வாயில்கள் எண்ணிலடங்காமல் இருக்கின்றன.
 • உண்மை எல்லாச் சமயங்களிலும் பேசப்படுவதற்கல்ல.
 • உடலையும் ஆன்மாவையும் ஒன்றாகவே வைத்திரு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *