அர்மீனியா

 • அச்சத்தைவிட மோசமானதொரு ஆலோசகர் இல்லை.
 • எதுவும் தெரியாதவனுக்கு எந்தச் சந்தேகமும் இல்லை.
 • ஏழைகள் இதயத்தால் உபசரிக்கிறார்கள்.
 • ஒன்றோடு ஒன்று சண்டைபோடும் நாய்கள் ஓநாய்க்கு எதிராக ஒன்றுபடுகின்றன.
 • ஓர் இரகசியத்தை அறிய விரும்புகிறாயா? ஒரு குழந்தை, ஒரு பைத்தியம், ஒரு குடிகாரன், ஒரு மனைவி இவர்களிடம் கேள்.
 • எப்படிப்பட்ட முட்டாளும் பணத்தை சம்பாதித்துவிடலாம். ஆனால், ஒரு புத்திசாலியால்தான் அதனைக் காப்பாற்ற முடியும்.
 • கள்வனிடத்திலிருந்து ஒருவன் திருடும்போது எல்லாம் வல்ல இறைவனே சிரிக்கிறான்.
 • குடுவையிலிருந்து வெளியே வந்ததும் மது மிக உரக்கப் பேசுகிறது.
 • சத்தியத்திற்கு மற்றொருபெயர் ‘மனசாட்சி’
 • பள்ளிக்கூடத்தில் போய் முட்டுவதால் மட்டும் படிப்பு வருவதில்லை.
 • பேசுகிறவன் விதைக்கிறான். கேட்பவன் அறுவடை செய்கிறான்.
 • தாயின் இதயம் குழந்தையின் பள்ளிக்கூடம்.
 • தொடக்கத்தைவிட முடிவைப்பற்றி அதிகமாகச் சிந்தனை செய்.
 • நம்பிக்கை உறுதியாக இருக்கும்போது பிரார்த்தனை நீண்டதாக இருக்கத் தேவையில்லை.
 • நீ யாரை நேசிக்கிறாய் என்பதை என்னிடம் சொல். நீ யார் என்பதை நான் உனக்குச் சொல்கிறேன்.
 • நொண்டியைவிடப் பொய்க்காலன் விரைவில் வீழ்வான்.
 • நம்பிக்கை செழிப்பைத் தராது. ஆனால், தாங்கி நிற்கும்.
 • யூதனைப்போல் கணக்குப் பார். சகோதரனைப்போல் ஏற்றுக்கொள்.
 • பேசுகிறவன் விதைக்கிறான். கேட்பவன் அறுவடை செய்கிறான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *