கிரேக்கம்

 • எல்லாத் தீமைகளின் ஆதாரமும் குடி.
 • அவர்கள் உன்னைக் குடித்திருக்கிறாய் என்று சொல்லும்போது சுவரைப் பிடித்துக்கொள். போய்க்கொண்டே இரு.
 • உதாரணத்திலிருந்து பிறந்த தத்துவமே சரித்திரம்.
 • ஒவ்வொரு கல்லின் கீழும் ஒரு தேள் தூங்குகிறது.
 • எல்லா மக்களைப் பற்றியும் நல்லதாகப் பேசுவதே எப்போதும் நல்லது.
 • எதையும் விரும்பாதவன் உண்மையான செல்வந்தன். எல்லாவற்றையும் விரும்புவன் உண்மையன ஏழை.
 • குள்ளநரிகளைவிட மிகவும் உற்றுக் கவனிப்பது அண்டைவீட்டுக்காரரே.
 • முழு வாழ்வைவிடப் பாதி வாழ்வு எவளவு சிறந்தது என்பதை இளைஞர்கள் அறிய மாட்டார்கள்.
 • உண்மையின் கதை எளிதானது.
 • இழப்பு தரும் துன்பங்களின் அளவிற்கு ஆதாயங்கள்.
 • கேளாத இசை மதிப்பை அடையவில்லை.
 • பல காரியங்கள் அனுபவத்திற்கு மாறாகவே நடக்கின்றன.
 • அறிஞன் தன்னுடைய அதிர்ஷ்டத்தை தன்னுடனே எடுத்துச் செல்கிறான்.
 • அவதூறுக்கு சேதப்படுத்தும் வகையில் புகழ் நம்மை உருவாக்குகிறது.
 • அதிர்ஷ்டம் உள்ளவனுக்கு ஒவ்வொருவரும் உறவினர்.
 • குழல் ஊதுபவர்களிடையேகூட நாவிலிருந்து ஒரு ஓசை வர இயலும்.
 • குஷ்டரோகிக்கு மோதிரத்தை விற்க முயல்வது பயன்றறது.
 • அறிஞன் அனுமதிக்காவிட்டால் அது கெட்டது. ஒரு முட்டாள் புகழ்ந்தால் அது மோசமானது.
 • மௌனம் தீங்கு செய்வது அரிது.
 • இளமையில் மௌனம் சிறந்தது பேச்சைவிட.
 • எங்கே வலி இருக்கிறதோ அங்கே கை இருக்கிறது.
 • பள்ளிக்கூடத்திற்கு ஒருபோதும் செல்லாதபோதிலும் விலங்குகள் தங்களுடைய மோசமான எதிரிகளை எதிர்த்து இயல்பாகவே காத்துக்கொள்கின்றன.
 • உடல் சிறைபட்டுக் கிடந்தாலும் குறைந்த பட்சம் மனம் சுதந்திரமாக இருக்கிறது.
 • மனிதனுக்குச் சிறந்த நன்மையும் பெரிய நோயும் பெண்ணால் கிடைக்கின்றன.
 • பெண்ணின் ஆயும் கண்ணீர்.
 • அதிர்ஷ்டசாலிக்குச் சேவல்கூட முட்டையிடும்.
 • ஒரு விநாடி பொறுமை பத்து விநாடி சுகம்.
 • பொய்யன் உணைமையைச் சொல்லும்வரை அவனைப் பொய்கள் சொல்லவிடு.
 • இனிமையான குணநலன்கள் கொண்ட நல்ல மனிதன் தன்னைச் சுற்றியுள்ள மற்றவர்களையும் தன்னுடைய வாரிசுகளாவே ஆக்கிவிடுகிறான்.
 • முள்ளின் மேலிருந்து பாடினாலும் மலர் மீதிருந்து பாடினாலும் குயில் இன்மையாகவே பாடுகிறது.
 • காதல், அரசியல் இரண்டும் சூதாட்டம்; இரண்டிலும் பொய்யும் பித்தலாட்டமும் செய்வதால்தான் வெற்றிபெற முடியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *