ஐரிஷ்

 • எவ்வளவு காலம் நீ வீட்டைவிட்டு வெளியே இருந்தாலும் நீ உன்னைப்பற்றி ஒரு கெட்ட கதையை வீட்டுக்கு கொண்டு வராதே!
 • வாயிலே உறவு, மனதிலே பகை.
 • களிப்புற செய்வதற்கும் விருந்தோம்பலுக்கும் கெட்டவனாக இருக்கும் மனிதன் உன்குப் பாதையைக் காட்டுகிற நல்லவன்.
 • மூடிய வாய் அமைதி நிறைந்தது.
 • ஒரு வழக்கத்தை உடைத்து எறியாதே! புதிதாக ஒரு வழக்கத்தை கண்டுபிடிக்காதே!
 • எங்கே வரதட்சணை உள்ளதோ அங்கே ஆபத்தும் உள்ளது.
 • உன் சொந்த மூக்கு இன்னும் உனக்கு அறிவுரை கூறலாம்.
 • காலிப் பையினுள் கையை விடுவதால் ஒரு நன்மையும் இல்லை.
 • பாதை வளைந்திருக்கட்டும்; நேராக இருக்கட்டும் நெடுஞ்சாலை தான் குறுக்கு வழி.
 • தன்னைவிடச் சிறந்த தூதனை குள்ளநரி ஒருபோதும் அனுப்பாது.
 • அபூர்வம் என்பது எதற்கும் கடைசி. முதன்மையை விட சிறந்தது.
 • தனக்கு எதிராகச் சில விஷயங்கள் போகும்வரை ஒருவர் புத்திசாலி இல்லை.
 • இதயம் திருப்தியானால் கண்களுக்கும் திருப்தியே.
 • கப்பலின் ஆரம்பம் ஒரு ‘பலகை’. சூளையின் ஆரம்பம் ஒரு ‘கல்’ இளவரசரின் ஆட்சிக்கு ஆரம்பம் ‘வருக’ என ஒரு நல்வாழ்த்து உடல் நலத்தின் ஆரம்பம் ‘உறக்கம்’
 • நட்சத்திரங்கள் ஓசை இடுவதே இல்லை.
 • தனிமையைவிட வாக்குவாதமே மேல்.
 • சுமை ஏறிய சோளக் கதிர்தான் தன் தலையை மிகத் தாழ்த்தித் தொங்கப் போட்டுக்கொள்ளும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *