மியான்மர்

 • துறவிகள் மெலிந்தால் அழகு
  விலங்குள் கொழுத்தால் அழகு
  மனிதர்கள் படித்தால் அழகு
  பெண்கள் மணந்தால் அழகு
 • உன் ஆண் குழந்தைகளையும், பெண் குழந்தையையும் நம்பியிருந்தால் உனக்கு இரு கண்களும் இல்லை.
 • நாய்களின் பிரார்த்தனைகள் எல்லாம் ஏற்றுக்கொள்ளப்பட்டால், வானம் எலும்பு மழை பொழியும்.
 • பள்ளிவாசல் எவ்வளவு பெரியதாகவும் இருக்கட்டும். இமாம் அவர்க்குத் தெரிந்ததைத்தான் போதனை செய்வார்.
 • பேசுகிறவனைவிடக் கேட்பவனுக்கு அதிகப் புத்தி வேண்டும்.
 • மனிதன் கல்லைவிடக் கடினமானவன். ரோஜா மலரைவிட மென்மையானவன்.
 • தவறான பாதையில் நீ எவ்வளவு தூரம் சென்றிருந்தாலும் சரி, திரும்பி வா.
 • மகிழ்ச்சியைக் காண்பதற்கு ஒருவன் களைக்கும்வரை நடக்க வேண்டும்.
 • மூன்று பொருட்கள் இந்த மண்ணில் விலை மதிப்பற்றதாக்க் கணக்கிடப்படுகின்றன. அவை – அறிவுடைமை, தானியம், நட்புடைமை.
 • உதய சூரியனின் வெயிலில் காய்வதும், கடும் பிணத்தின் புகையை சுவாசிப்பதும், வயதான மனைவியைப் பராமரிப்பதும், தயிர் உணவை இரவில் உண்பதும் எப்போதும் வாழ்வைச் சிதைக்கும்.
 • ஒரு மரத்தினுடைய நிழலில் தங்குபவன் அதனுடைய கிளைகளை உடைப்பது சரியல்ல.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *