நைஜீரியா

 • ஆயிரம் தடைவை அளவு எடு. ஒரு தடவை வெட்டு.
 • இதயம்தான் ஒருவனை நரகத்திற்கு அல்லது சொர்க்கத்திற்குக் கொண்டு செல்கிறது.
 • உண்மையிலேயே அழகு வலிமை வாய்ந்தது.
 • உழைப்புத்தான் ஒரு மனிதனை மற்றொரு மனிதனைவிட முந்தச் செய்கிறது.
 • உயிர்கள் பல பிறவிகளை எடுப்பதற்குக் காரணம் அவை செய்த வினைகளின் பயனை அனுபவிப்பதற்கே ஆகும்.
 • உன் வாயிலிருந்து வரும் வார்த்தைகளை உன் காதுகள் கேட்கட்டும்.
 • உழைப்பு மதத்தில் பாதி.
 • ஏழைகளுக்குக் கொடுப்பவன் கடவுளுக்குக்கடன் கொடுக்கிறான்.
 • ஏழை தன் வயிற்றுக்கு உணவைத் தேடுகிறான். செல்வனோ தன் உணவிற்கு வயிற்றைத் தேடுகிறான்.
 • ஒரு கண் எவ்வளவு பெரியதாக இருந்தபோதிலும் இரு கண்களே மேலானவை.
 • கரடிக்கு ஒன்பது பாட்டுக்கள் தெரியும். எல்லாம் பேரிக்காய் பற்றி அல்லது தேனைப்பற்றி.
 • குறைந்த ஆசை இன்ப வாழ்க்கை.
 • சூரியன் நுழையாத இடத்தில் வைத்தியன் நுழைவான்.
 • சாவின் அருகில் சென்றவனுக்கு உயிரின் மதிப்பு தெரியும்.
 • தாங்க முடியாத அளவிற்கு நமக்கு ஒருபோதும் துன்பங்கள் ஏற்படுவதில்லை.
 • கடன் ஏழைக்குப் பிறக்கும் முதல் குழந்தை.
 • பச்சை இலைகளே எரிந்தால் காய்ந்த இலைகள் எம்மாத்திரம்?
 • பெண் குழந்தையை அடித்து வளர்க்காதவன் பின்னால் தனது மார்பிலே அடித்துக்கொள்ள நேரிடும்.
 • மலிவாக விற்பவன் கடனக்கு விற்கமாட்டான். கடனுக்கு விற்கிறவன் மலிவாக விற்கமாட்டான்.
 • மிகவும் உயரமான மரத்திற்குக்கூட அடியில் கோடரி காத்துக் கொண்டிருக்கிறது.
 • ஊழல் உயர் வட்டாரங்களில் ஆரம்பமாகிறது.
 • நல்ல சுகத்தோடு இருப்பவனுக்குத் தினமும் திருமணம்.
 • நாற்பது பெண்களில் ஒருபெண்ணின் சொற்களைக் கவனிப்பது நல்லது.
 • வாழ்க்கை என்பது வாழும் கலையில் ஒருபரீட்சை. ஆனால் அதன் முடிவுகளை அறிவதற்குள் நம் வாழ்க்கை முடிந்து விடுகிறது.
 • விழுகிறவனுக்கு நண்பர்கள் இல்லை. தடுக்கி விழுந்து பார்.
 • வியபாரம் வாழ்நாள் முழுவதற்கும் ஒரு சொத்து.
 • மெழுகுவர்த்தி தனக்கு வெளிச்சம் தருவதில்லை.
 • நீதிபதியிடமிருந்தும் வைத்தியனிடமிருந்தும் கடவுள் என்னைக் காப்பாற்றுவாராக!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *