பாரசீகம்

 • ஒவ்வொரு வியாதிக்கும் இறைவன் ஒரு மூலிகையைப் படைத்திருக்கிறார்.
 • ஒரு பவுண்டு அறிவைப் பெறுவதற்கு, பத்துப் பவுண்டு பகுத்தறிவைப் பெற வேண்டியிருக்கிறது.
 • சட்டைப் பையிலுள்ள பூந்தோட்டத்தைப் போன்றது புத்தகம். முட்டை வேண்டுமென்பவன் கோழிகளின் சலசலப்பை பொறுத்துக்கொள்ளத்தான் வேண்டும்.
 • பாவத்தில் வாழ்கிறவன் உயிரோடு புதைகப்படுவான்.
 • நான்கு புத்தகங்களை வைத்திருப்பவனுக்கு நான்கு கண்கள்.
 • கணவன் இல்லாத பெண் கடிவாளம் இல்லாத குதிரை.
 • கடைசிப் பல் இருக்கும்வரை நரிக்கு பக்தி ஏற்படாது.
 • கதவைத் தட்டாத காரணத்தால் எத்தனையோ வாய்ப்புகள் இழக்கப்பட்டிருக்கின்றன.
 • கவலை இல்லாத தலை தோட்டத்தில் கிடக்கும் பூசணிக்காய் மாதிரி.
 • சகுமில்லாத எவனும் பணக்காரனல்ல.
 • எண்ணி ஒதுக்கி வைக்கப்பட்ட ஆடுகளையும் ஓநாய் தின்னும்.
 • நீண்ட நாட்கள் வாழ விரும்பினால், நீ உன் இதயத்தை திற.
 • கல்யாணத்திற்கு அழைப்பு வந்து செல்ல வேண்டும்; சாவிற்கு அழைக்காமலேயே செல்ல வேண்டும்.
 • முதல் மனைவி மனைவியாக இருப்பாள். இரண்டாம் மனைவி வீட்டு எஜமானியாய் இருப்பாள். மூன்றாமவள் சிலுவைபோல் கும்பிட வைப்பாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *